Advertisment
"நெய்யோடு பால் விரும்பும் நிரம்பிய கல்வி கற்கும் 
வெய்ய சொல் உடையவனாகும் வேதியர் தம்மைப் பேணும் 
கையது கடியனாகும் கடு நடையுடைனாகும் 
Advertisment
பொய்யுரை என்றும் சொல்லான் புனர்பூச நாளினானே.''                                                                                                
-விரும கண்டிகை 
பொருள்: புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர், பொய் பேசமாட்டார். ஆனாலும் பேச்சு கடுமையாக இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகமுண்டு. 
 ஒரு அரசர் போரில் இரஜோ குணத்தையும் (வீரம்), தன்னை நாடிவரும் புலவருக்கு, உதவும்போது சத்துவ குணத்தையும் (கருணை), திருடர்களை தண்டிக்கும்போது தமோ குணத்தையும் (இரக்கமில்லாத செயல்) வெளிப்படுத்துவார். கிரகமும், பாவமும், அவை நிற்கும், நட்சத்திரங்களின் முக்குணங்களுக்கு ஏற்றவாறே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கின்றன. ஒன்பது கிரகங்களும், இந்த மூன்று குணங்களையும் பிரதிபலிப்பதால், 27 நட்சத்திரங்களின் தொகுதியாகிறது.

7- புனர்பூசம்   

பொதுவான குணம் 

புனர்பூச நட்சத்திரம், "புனர்வசு' என்ற வடமொழிச் சொல்லால் அறியப்படுகிறது "புனர்' என்றால் மீண்டும், "வசு' என்றால் பிரகாசம் என்று பொருள். 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எல்லாருடனும் நட்புடன் பழகும் குணமும், பொய்பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.                                                                                                

புனர்பூச நட்சத்திரம் (ஆண்)        

* குணம்: புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உண்மையானவர்கள் மற்றும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். 
* குடும்பம்: புனர்பூச நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை பொதுவாகத் தொல்லை நிறைந்ததாக இருக்கும். ஆனாலும், குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மதிப்பு தருவார்கள். 
* கல்வி: படிப்பறிவைவிட அனுபவ அறிவை அதிகம் கொண்டிருப்பார்கள். 
* தொழில்: வங்கி, நீதித்துறை, பேராசிரி யர் ஆகிய வேலைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். 37 வயதிற்குபிறகு, செல்வம், செல்வாக்குடன் வாழும் யோகமுண்டு.
* திருமணப் பொருத் தம்: திருவாதிரை, ஸ்வாதி, கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். 
* ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்லநிலையிலிருக்கும். 
ஆனால், புதன் தசை நடக்கும் காலத்தில் முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உருவாகும்.

lalgudi1

புனர்பூச நட்சத்திரம் (பெண்)

v குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள். கஷ்டங்களை சகித்துக்கொள்ளும் பொறுமை இவர்களிடமுண்டு.
* குடும்பம்: இந்த நட்சத்திர பெண்கள் தன் கணவனிடம் மிகவும் அன்பாக அக்கறையுடன் இருப்பார்கள். ஆனாலும் அடிக்கடி சண்டைகளும் போடுவார்கள்.
* திருமணப் பொருத்தம்: கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி, ஆயில்யம், பூரம், நீங்கலாக மற்ற நட்சத்திரக் காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
* ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் புதன் தசையில், ஞாபக மறதி, மனச் சோர்வு போன்ற கோளாறு களால் பாதிக்கப்படுவார்.