பொதுவாகவே மனிதனின் வாழ்வில் பாதகம் என்பது ஏற்கத்தக்க ஒன்றல்ல.
இயல்பாக நடைபெறும் ஒரு சூழலை, கடினமாகவும், இணக்கமற்றதாகவும் வடிவமைக்கும் தன்மைதான் பாதகமாகக் கருதப் படுகின்றது.
அப்படி கருதப்படும் பாதகம், நம் ஜாதகத்தில் பாதகஸ்தானமாக வடிவமைத்து வழங்கப்படுகின்றது.
பாதகஸ்தானம் சரம், ஸ்திரம், உபயம் என்று லக்னங்களுக்கு ஏற்றார்போல் மாறுபடும்.
அதாவது- சரத்திற்கு 11, ஸ்திரத்திற்கு 9, உபயத்திற்கு 7 என்று வகுத்து அளிக்கப்பட்டுள்ளது நமது ஜோதிடவியலில்.
பாதகாதிபதி அமரும் பாவகத்தினால் அவமானமும், அந்த பாவகம் சார்ந்த காரகம் கிடைக்காத தன்மையும், பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகத்தினால் பிரச்சினைகளும், பாதகங்களும், ஏற்படும் என்பது உண்மை. ஆனாலும் இது எல்லா ஜாதகங்களிலும் நிகழ்கின்றதா என்றால் இல்லை.
வாழ்வின் முக்கியமான தருணங்களை, நிகழ்வுகளை, இந்த பாதகாதிபதி கையில் எடுக் கின்றார் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் காணலாம்.
1983-ல் பிறந்த ஜாதகம், மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஜனித்த இந்த ஜாதகத்தை, பாதகாதிபதியின் ஓட்டத்தை வைத்து கணக்கிடலாம்.
ஆரம்ப தசை 21-1-1983 முதல் 10-3-1985 வரை புதன் தசை.
அடுத்ததாக கேதுவின் ஏழு வருடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்க, 10-3-1985 முதல் 10-3-1992 வரை கேதுவின் தசையும், அடுத்ததாக சுக்கிரனின் 20 வருட தசையும் தொடர்கின்றது.
10-3-1992 முதல் 10-3-2012 வரையிலான சுக்கிர தசையில், குரு புக்தி, 11-5-2002 முதல் 9-1-2005 வரை நிகழும்.
இதில் சுக்கிரனின் அந்திரம் 1-9-2003 முதல் 11-2-2004 வரை நிகழும் தருவாயில் இந்த ஜாதகருக்கு 1-9-2003-ல் திருமணம் நடைபெற்றது.
இங்கே பாதகாதிபதி என்று கருதக்கூடிய குரு வின் புக்தியில் திருமணம் நிகழ்ந்தது.
குரு, சுக்கிரன், சனி ஆகிய கூட்டுகளில் நிகழ்ந்த இந்த திருமணமும், இந்த ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ஆறில் மறைந்து அஷ்டமாதிபதி சாரத்துடன் விளங்குவதால், ஒரு சிறப்பான திருமண வாழ்க்கை இல்லையென்றாலும், பாதகாதிபதியான குருவின் புக்தியில் நிகழ்ந்ததனால் இந்த உறவை விடுவித்து வெளியில் வராமல் இந்த வாழ்க்கை யை இந்த ஜாதகி தொடர்ந்தாள்.
அடுத்ததாக வந்த சூரியனின் தசை 10-3-2012 முதல் 11-3-2018 வரை இதில் சூரிய தசையில் குரு புக்தி 29-3-2014 முதல் 15-1-2015 வரை இந்த காலகட்டத்தில் 11 வருடங்கள் கழித்து இந்த ஜாதகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந் தது. இந்த அற்புதத்தையும் நிகழ்த்தியது பாதகாதிபதியான குருதான்.
பத்து வருடங்கள் ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லையென்கின்ற வலியை சுமந்தவள் மட்டுமே அறியமுடியும்.
அவ்வளவு வலிக்கும். வலி நிவாரணியாக இந்த குழந்தை வரத்தை அளித்தது இந்த பாதகாதிபதியாக கருதப்படும் குரு மட்டுமே.
அடுத்ததாக இந்த ஜாதகத்திற்கு சந்திரனின் தசை 11-3-2018 முதல் 10-3-2028 வரை நிகழும் தன்மையை இந்த தசை அளிக்கும்.
இதில் 8-2-2021 முதல் 10-6-2022 வரையிலான குரு புக்தி அதாவது- சந்திர தசையில் குரு புக்தியில் சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகியோர் எட்டில் இருந்தும் இவர்களுக்கு அரசியல் சார்ந்த ஒரு பதவி கிடைத்து, வெகு ஜனங்கள் இடையிலான பெரும் அறிமுகங்களையும் இந்த குரு புக்தியே வழங்கியது.
ஆக, ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதியின் நிலையை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை என்பதை இந்த ஜாதகத்தின் வாயிலாக அறிந்திருக்க முடியும்.
பாதகாதிபதியால் பெற்ற யோகங்கள் சிலவற்றை இந்த ஜாதகத்தின் வாயிலாக காண நேர்ந்தது. இதிலிருந்து பாதகாதிபதி வெறும் பாதகத்தை மட்டும் அளிப்பவர் அல்ல; யோகங்களையும் இணைந்தே அளிப்பவர் என்பதை மனதில் கொள்வோம்.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/pathayogam-2026-02-06-15-35-59.jpg)