S.சுபாஷினி.
subhaphykkc@gmail.com
பரணி நட்சத்திரம் 4ஆம் பாகம், லக்னாதிபதி சனி, 6,9 உடைய புதன், சனி ஒரே நட்சத் திரத்தில் உள்ளது. முடக்கு தோஷம் உண்டா என்று கேட்டுள்ளார்?
பரணி நட்சத்திரம் 4-ஆம் பாதம் எனில் சந்திரன் அம்சத்தில் நீசம் அடைவார். உங்கள் மகர லக்னத்துக்கு, அவர் 7-ஆம் அதிபதி. எனவே இந்த அமைப்பு உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை நன்றாக நடக்கவிட்டு, கடைசியில் காலை வாரி விட்டுவிடும். உங்கள் லக்னாதிபதி சனியும் 6, 9-ஆம் அதிபதி புதனும், ஒரே சாரத்தில் நிற்பதால், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காது.
விக்னேஷ்வரி நாசியப்பன்
vigneshwari579@gmail.com
5-7-1996-ல் பிறந்துள்ளார். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவருடைய ராசியில் சனி தனது 10-ஆம் பார்வையால் குருவைப் பார்க்கிறார். இது சன்யாச யோகமா, மனதுக்கு பிடித்தது அமையாமல் ப
S.சுபாஷினி.
subhaphykkc@gmail.com
பரணி நட்சத்திரம் 4ஆம் பாகம், லக்னாதிபதி சனி, 6,9 உடைய புதன், சனி ஒரே நட்சத் திரத்தில் உள்ளது. முடக்கு தோஷம் உண்டா என்று கேட்டுள்ளார்?
பரணி நட்சத்திரம் 4-ஆம் பாதம் எனில் சந்திரன் அம்சத்தில் நீசம் அடைவார். உங்கள் மகர லக்னத்துக்கு, அவர் 7-ஆம் அதிபதி. எனவே இந்த அமைப்பு உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலை நன்றாக நடக்கவிட்டு, கடைசியில் காலை வாரி விட்டுவிடும். உங்கள் லக்னாதிபதி சனியும் 6, 9-ஆம் அதிபதி புதனும், ஒரே சாரத்தில் நிற்பதால், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காது.
விக்னேஷ்வரி நாசியப்பன்
vigneshwari579@gmail.com
5-7-1996-ல் பிறந்துள்ளார். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவருடைய ராசியில் சனி தனது 10-ஆம் பார்வையால் குருவைப் பார்க்கிறார். இது சன்யாச யோகமா, மனதுக்கு பிடித்தது அமையாமல் போகுமா என்று கேட்டுள்ளார்.
சனி, குரு பார்வை சம்பந்தம் ப்ரம்மஹத்தி தோஷம் எனப்படும். இது சென்ற ஜென்மத்தில் அந்தணரை பழித்த பாவமாக கருதப்படுகிறது. இதனால் வருவாய் குறைவும், நிம்மதி இன்மையும் ஜாதகருக்கு உண்டாகும். ப்ரம்மஹத்தி தோஷத்திற்கு பொதுவாக திருவிடைமருதூர், மகா-ங்க சுவாமியை சென்று வணங்குவது வழக்கம்.நடப்பு சனி தசையில் சந்திர புக்தி 2027 வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு. கலப்புத் திருமணம் நடக்கும். வரும் வரன், பூர்வீக தொழில்புரிபவராக இருப்பார்.நடப்பு சனி தசைக்கு, சனீஸ்வர பகவானையும். ஆஞ்சனேயரையும் வணங்கவும்.
ஏ. குமரேசன்.
auditor@gmail.com
குரு 11-ஆமிடத்தில் இருந்தால் சிறப்பு என்று சொல்லுகின்றனர்.குரு பார்வை கோடி நன்மை, குற்றம் நிவர்த்தி?வக்ரம்பெற்ற கிரகம், ராகு- கேது சாரம் வாங்கினால் யோகம் என்கின்றனர். இந்த விதி விலக்கு உண்மையா?
ஆம்; குரு 11-ஆமிடத்தில், லாப குரு ஆவார். சிறப்பு; வெகு சிறப்பு.ஆம்; குரு பார்வைபட்ட இடம் செழிக்கும்; வளரும். வக்ரம் பெற்ற கிரகம், ராகு- கேது சாரம் வாங்குவது, விதி விலக்கு என்றோ, யோகம் என்றோ எந்த மூல ஜோதிட நூல்களிலும் காணக் கிடைக்கவில்லை.
வி. தனா, கடலூர்.
v.subu75400@gmail.com
தற்போதைய தசாபுக்தி, ஆயுள், திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
5-9-1985-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். நடப்பு குரு தசை, குருபுக்தி நடக்கிறது. சனி ஆயுள்காரகன். அவர் ஆயுள் ஸ்தானத்தில் உச்சம். மற்றும் 8-ஆம் அதிபதியை பார்க்கிறார். எனவே ஆயுள் தீர்க்க ஜாதகம்.ராசிக்கு நாகதோஷம் உள்ளது. தற்போது மேஷ ராசிக்கு திருக்கணிதப்படி ஏழரைச்சனி ஓடுகிறது. நடப்பு குரு தசை, குரு புக்திக்குள் திருமணம் நடந்துவிடும். உங்கள் இனத்தில், வேறு மொழி பேசுபவருடன் திருமணம் நடக்கும். அல்லது திருமண வாழ்வில் ஏற்கெனவே பாதிப்பு ஏற்பட்டவருடன் திருமணம் நடக்கும்.குரு தசை, நல்ல பலன் கொடுக்க, பௌர்ணமிதோறும் ஈசனையும், அம்பாளையும் வணங்குங்கள்.
யோகேஷ்பாலா, உசிலம்பட்டி, மதுரை.
75300yogi@gmail.com
தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், வேலை கிடைத்தாலும் உடனே போய்விடுகிறது என்றும், நல்ல காலம் உண்டா என்று நொந்துபோய் புலம்பியிருக்கிறார்.
30-7-2001-ல் பிறந்தவர். கும்ப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். இவருடைய லக்னாதிபதி சனி, அம்சத்தில் நீசம். வேலைக்குரிய 6-ஆம் அதிபதி சந்திரன், நீசபங்கம். சூரியனுடன் ராகுவும், எதிரில் கேதுவும். சற்று கிரகண தோஷமும் உள்ளது. நிறைய கிரகங்கள் ஒரே நட்சத்திர சாரத்தில் நின்று, கிரக யுத்தம் பெறுகின்றனர். உங்கள் லக்னத்தை, சனி, செவ்வாய், குரு மூவரும் பார்க்கிறார்கள். குழப்பம் கும்மியடிக்கும் ஜாதகம்.நடப்பு சுக்கிர தசை. இதில் குரு புக்தி நடக்கிறது. இனிவரும் காலம் நன்றாகவே இருக்கும். உங்கள் பூர்வீக இடம் சார்ந்த, ஒரு அரசியல்வாதியிடம், உதவியாளராக சேர்ந்துவிட வாய்ப்பு தெரிகிறது. முயற்சி செய்யுங்கள்.உங்கள் குலதெய்வத்தையும், சூரியனையும் நன்கு வணங்குங்கள். அமாவாசைதோறும், யாராவது முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்.
ஊ. ஸ்ரீ லட்சுமி
aruninfoservice2020@gmail.com)
திருமணம் மற்றும் வேலை பற்றிக் கேட்டுள்ளார்.
27-9-2001-ல் பிறந்தவர். மகர லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். ராசி, லக்னம் இரண்டுக்கும் 12-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம்.நடப்பு ராகு தசையில் புதன் புக்தி. 2027 செப்டம்பர் வரை. இதற்குள் திருமணம் நடந்துவிடும். அரசு சார்புடைய வேலையும், இக்கால கட்டத்திற்குள் கிடைத்துவிடும்.ராகு தசை நல்ல பலன்கள் கிடைப்பதற்கு, செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வணங்கவும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us