ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.
[email protected]
பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு மற்றும் கடன், நிதி சுமைக்கான தீர்வு பற்றியும் கேட்டுள்ளார்.
21-2-1997-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி ஓடுகிறது. நடப்பு சந்திர தசை. இதில் தற்போது கேது புக்தி. இதில் ஏதாவது திருட்டு போகும் வாய்ப்புண்டு. அடுத்து 2026-ஜூன் மாதம்முதல் சுக்கிர புக்தி ஆரம்பம். அதில் உங்கள் வழக்கில் வெற்றி கிடைக்கும்.உங்கள், பணம் தரும் அதிபதி 8-ல் மறைவு. 2-ல் நீசபங்க செவ்வாய். எனவேதான் உங்களுக்கு பண வரவு என்பது ரொம்ப செலவோடு இருக்கும். எனவே பணம் வந்தால் எதிலாவது முதலீடாக போட்டு விடுங்கள். கையில் பணம் வைத்திருக்கக் கூடாது.உங்கள் ஜாதகப்படி, கடன் வாங்குவது கூடாது. கடன் பெருகி விடும். 6-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம். எனவே கடன், வழக்கு இது விஷயங்களில் தள்ளி இருக்கவும். குலதெய்வ காணிக்கை, பிரார்த்தனையை மறந்துவிட்டதாக தெரிகிறது. ஞாபகப்படுத்தி நிறைவேற்றவும்.
ஆனந்தகிரி, மயிலாடுதுறை
சிறுநீரக பிரச்சினை உள்ளது. எப்போது சரியாகும்? பரிகாரம் என்ன எனவும் கேட்டுள்ளார்.
15-5-1985-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டுள்ளது. இவருக்கு நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி. முன்பு குருபுக்தி ஆரம்பித்த-ருந்தே சிறுநீரகக் கோளாறு ஆரம்பித்திருக்கும். இந்த சனி புக்தி 2028 ஏப்ரல் வரை. அதற்குள் வேறிடம் சென்று, மருந்துகள் உட்கொண்டு, ஓரளவு தெம்பாகி விடுவீர்கள்.ஏழரைச்சனியும் நடந்து, அப்போது சனி புக்தியும் நடந்தால், நோய்கள் சற்று மெதுவாகத்தான் குணமாகும். குலதெய்வக் கோவிலில், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யவும்.
பி. பாலாஜி, விருதுநகர்.
([email protected])
வேலை எதுவும் அமையவில்லை. எப்போது வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்குமா?
18-6-2002-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் வேலைக்குரிய சனிபகவான், ராகுவுடன் ஒரே நட்சத்திரத்தில் நிற்கிறார். உங்கள் ஜாதகம் கால சர்ப்ப தோஷ ஜாதகமாகும். முன்னேற்றம் என்பது மெதுவாகத் தான் நடக்கும். நடப்பு ராகு- தசையில் சனி புக்தி 2025 நவம்பரிலிருந்து ஆரம்பித்துள்ளது. வெளியூர், வெளிமாநிலத்தில், சற்று கடுமையான வேலைதான் கிடைக்கும். சமாளித் துக்கொள்ளுங்கள். அடுத்து வரும் புதன் புக்தி, நீங்கள் நினைத்த வேலையை கொடுக்கும். அரசு வேலைக்கான வாய்ப்பே இல்லை.உங்களுக்கு இஷ்டமான காளி அல்லது துர்க்கையை வணங்குங்கள்.
குமரேசன், சேலம்.
[email protected]
தனது பெண்ணின் ஜாதகம் பற்றி நிறைய கேள்விகள் அனுப்பியுள்ளார்.
கே. வர்ஷினி 1-9-2023-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். ஏழரைச்சனி நடக்கிறது.நடப்பு குரு தசை பாதகாதிபதி தசை. இதனால், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அல்லது பள்ளிக்கூடம் மாற வேண்டியது இருக்கும். ஆரோக்கியம் சார்ந்து செலவும், அலைச்சலும் உண்டு.அடுத்து சனி தசை ஆரம்பம் ஆகும். சனி+சந்திரன் இணைவு. புனர்பூதோஷம் உள்ளது. அது 28 வயது வரை இருக்கும். அப்போது உயர்கல்வி வேறிடத்தில் கற்பார். ஆனால் ஒரு காதல் தோல்வியும், மறுமணமும் உண்டு.5-ல் கேது- குலதெய்வ குற்றம் உள்ளது. குலதெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். சற்று மருத்துவ செலவுடன் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதாத்ய யோகம். வெளி இடத்தில் புகழ் கிடைக்கும்.2-ஆமிட சுக்கிரன் வக்ரம். நிறைய பணசெலவு செய்வார். 12 வயதுக்கு உட்பட்டு. குழந்தைக்கு ஜாதகம் பார்க்கக்கூடாது என்று எழுதியுள்ளீர்கள். இப்போதைய கால கட்டத்தில், பிறந்த உடனேயே சுட சுட ஜாதகம் ரெடியாகி விடுகிறது. ஒரு வருடம் வரை ஜாதகம் பார்க்கக்கூடாது என்பது விதி. குலதெய்வத்தை வணங்கவும்.
நடராஜ பிள்ளை, சிதம்பரம்.
என் உடல் நிலை சரியில்லாமல் போய் விடுமோ எனும் அச்ச உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது?
29-10-1971-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இப்போது ஏழரைச்சனி ஓடிக்கொண்டிருக்கிறது. நடப்பு புதன் தசை ஆரம்பித்துள்ளது. புதன் தசையில் புதன் புக்தி. உங்கள் ஜாதகத்தில் புதன் அமைந்த அமைப்பின்படி, உங்கள் பய உணர்வு உண்மைதான். உங்களுக்கு இடமாற்றம் மற்றும் உடல்நலக்குறைவு உண்டாகும்.கால் நரம்பு இழுத்தலும், வீக்கமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்கள் ஊரில் உள்ள ஆஞ்சநேயருக்கு, விளக்கேற்றி வணங்குங்கள். அச்ச உணர்வு அகலும். ப்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/qa-2025-12-18-15-14-18.jpg)