முருகபாரதி, சிவகங்கை.
[email protected]

தனது மகனின் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டிருக்கிறார்.

அபிஷேக் 13-6-1996-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். இவருடைய 7-ஆமிடத்தில் செவ்வாய்+ சூரியன்+சுக்கிரன்+புதன் என நான்கு கிரகங்கள் சேர்க்கை. கிரக யுத்த ஜாதகம். இவர்களை சனியும் பார்க்கிறார். சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், விருப்பத் திருமணம் நடைபெறும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் உள்ளது.நடப்பு ராகு தசையில் சனிபுக்தி. இது 2026, மார்ச்வரை உள்ளது. இதற்குள் இவரது விருப்பம் வீட்டிற்கு தெரியவரும். பின்வரும் ராகு தசை புதன் புக்தியில் திருமணம் நடக்கும். குலதெய்வத்தையும், நவகிரகத்தை யும் வழிபடுவது நல்லது.இவ்விதம், 7-ஆமிடத்தில், கிரக யுத்தம் அமைந்த ஜாதகர்களுக்கு திருமணம் அமைவது என்பது பெரும்பாடாகிவிடும். எனவே, ஆரம்பித்திலேயே எந்த ஜாதகம் ஓரளவிற்கு ஒத்துவருகிறதோ, அதை ரொம்ப அலசி ஆராயாமல், திருமணம் முடித்துவிடவேண்டும். இல்லையெனில் திருமணம் கூடிவருவது ரொம்ப சிரமம் ஆகிவிடும்.

Advertisment

க.பாலகிருஷ்ணன். சுரண்டை.
[email protected]

கிரகங்கள் இல்லாத கட்டங்களில் பலன்களை தெரிந்துகொள்வது எப்படி?

நீங்கள் கேட்பது சரியானதுதான். இருக்கும் ராசி கட்டங்கள் 12 ஆகும். கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு- கேது என ஒன்பது கிரகங்கள்தான். எப்போதும் ராகுவும், கேதுவும் எதிர்- எதிர் கட்டங்களில்தான் இருப்பர். அப்படியானால் காலி கட்டங்கள் இருப்பது இயல்புதானே?கட்டங்கள் காலியாக இருக்குமே ஒழிய, அந்த ராசி அதிபதி, வேறு ஒரு கட்டத்தில் நிற்பார் அல்லவா? அதைவைத்து பலன் சொல்லவேண்டும். மேலும் அந்த காலி கட்டத்தை பார்க்கும் கிரகங்களின் பலனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.பொதுவாக, ஒரு ஜாதகம் எனில், அதில் கிரகங்கள் பரவலாக, வரிசையாக, பார்க்கவே மாலைபோல் அருமையாக அமையவேண்டும். மேலும் லக்னம் முதல் வரிசையாக அமைந்தாலும், சரி, மாறுபாடாக வரிசையாக அமைந்தாலும் சரி, அது மேன்மையான, நல்ல பலன்கள் தரும். மாறாக, அனைத்துக் கிரகங்களும் இரண்டு, மூன்று கட்டத்திற்குள் அடைசலாக, ஒன்றையொன்று நெருக்கிக்கொண்டு, அமைந்திருந்தால், அந்த ஜாதகரின் வாழ்க்கை, அத்தனை அளவு விருத்தியாக இல்லை. இது நடைமுறையில் தெரிகிறது. இதனை கிரக யுத்தம் என்று பெயரிட்டு அழைப்பார்கள்.இந்த கிரக யுத்தத்தில் அகப்பட்ட கிரகங்கள், ஒன்றையொன்று,  காலை பிடித்து கீழே இருக்கும். அதனால் எல்லா கிரகங்களும், முன்னேற்ற பாதையில் செல்ல முடியாமல், சுணங்கிவிடும். இதனால், ஜாதகரின் வாழ்வு செழிப்பின்றி முடங்கிவிடும்.எனவே, கூடியமட்டும், நிறைய ராசி கட்டம், கிரகங்களின்றி காலியாக இருப்பது நல்லது கிடையாது. 

Advertisment

க. கார்த்திக், இராஜபாளையம்.
[email protected]

திருமணம் எப்போது, அரசு வேலை கிடைக்குமா?

4-7-1996-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். ராசியில் 5+7-ஆம் அதிபதிகள், செவ்வாய், சனி பார்வை. எனினும், ஒரு திருமண விருப்பம் இருந்து, அது தோல்வி அடைந்திருக்கும். நடப்பு குரு தசையில், சுக்கிர புக்தி. 2028 ஜூன் மாதம் வரை. இதில் திருமணம் நடந்துவிடும். இதில் 2026 மே மாதத்திற்குள், அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், அரசு பணி கிடைக்க ரொம்ப செலவாகும். வெகு தூரத்தில் பணி கிடைக்கும்.குலதெய்வத்தையும், துர்க்கையையும் வணங்கவும்.இவ்விதம், 6-ஆமிடத்தில் குரு அமர்ந்து, அவர் 12-ல் உள்ள சூரியனை பார்க்கும்போது, அரசு பணி கொடுப்பார். எனினும் அதிக செலவை இழுத்து விட்டுவிடுவார். மேலும் வெகு தூர இடத்தில் அரசு பணி தருவார்.

ராணி, மதுரை.

வீடு கட்ட ஆரம்பித்தோம். ஆனால் அது முடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது. இதனால் கடனும் உள்ளது. வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். எப்போது நடக்கும்?

Advertisment

26-7-1997-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். உங்கள் 4-ஆம் அதிபதி சுக்கிரன், மனை தோஷத்துடன் உள்ளார். எனவே, நீங்கள் உங்கள் பெயரில் வீடு கட்ட ஆரம்பித்ததால், அது முழுமையடையாமல் உள்ளது. உங்கள் 6-ஆமிடத்திற்கு, நீச குரு பார்வை உள்ளது. இதனால் கடன் பெருக்கம் ஏற்படும்.நடப்பு சூரிய தசையில் சுக்கிர புக்தி. இந்த சூரிய தசை 2026 ஜூன் வரை உள்ளது. அடுத்து ஆரம்பிக்கும் சந்திர தசை, உங்கள் வீட்டை விற்க வைத்து, கடனை அடைத்துவிடும்.அருகிலுள்ள துர்க்கையை வணங்கவும். இவ்விதம் 4-ஆம் அதிபதி ராகு மற்றும் 8-ஆம் அதிபதியுடன் இருப்பவர்கள், வீடு கட்ட ஆரம்பிக்குமுன் ஒரு ஜோதிடரை கலந்து, ஆலோசித்து, பின் உங்கள் குடும்பத் திலுள்ள வேறு ஒருவரின் பெயரில் வீடு கட்ட ஆரம்பிக்கவும்.

[email protected]