Advertisment

ஜோதிட சந்தேகங்கள்!

JA

ஆர். தங்கவேலு, பரமக்குடி. 

மகள் சரண்யாவிற்கு 15-12-2025-ல் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த எண்ணில் பெயர் அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

Advertisment

குழந்தை பிறந்த தேதி 15-12-2025. விதி எண்: 18= 1+8=9 இது செவ்வாயைக் குறிக்கும்.பிறப்பு எண்: 15 = 1+5 = 6 இது சுக்கிரனைக் குறிக்கும்.குழந்தையின் ஜாதகப்படி, சுக்கிரன் சுமார் நிலையில் உள்ளார். எனவே பெயர் 6-ஆம் எண்ணில் வருமாறு அமைத்துக்கொள்ளவும்.குழந்தையை, கோவி-ல் தத்து கொடுத்து வாங்கச் சொல்-யிருக்கிறார்கள். ஆனால், சந்திரன் பாபகர்த்தாரி இருந்தால் மட்டுமே இவ்விதம் செய்ய வேண்டும். இந்த குழந்தைக்கு சந்திரன், குரு பார்வையில் உள்ளார். எனவே தத்து பரிகாரம் தேவையில்லை. குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு காணிக்கை செலுத்தவும். 

Advertisment

ஜி. குமரேசன

ஆர். தங்கவேலு, பரமக்குடி. 

மகள் சரண்யாவிற்கு 15-12-2025-ல் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த எண்ணில் பெயர் அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

Advertisment

குழந்தை பிறந்த தேதி 15-12-2025. விதி எண்: 18= 1+8=9 இது செவ்வாயைக் குறிக்கும்.பிறப்பு எண்: 15 = 1+5 = 6 இது சுக்கிரனைக் குறிக்கும்.குழந்தையின் ஜாதகப்படி, சுக்கிரன் சுமார் நிலையில் உள்ளார். எனவே பெயர் 6-ஆம் எண்ணில் வருமாறு அமைத்துக்கொள்ளவும்.குழந்தையை, கோவி-ல் தத்து கொடுத்து வாங்கச் சொல்-யிருக்கிறார்கள். ஆனால், சந்திரன் பாபகர்த்தாரி இருந்தால் மட்டுமே இவ்விதம் செய்ய வேண்டும். இந்த குழந்தைக்கு சந்திரன், குரு பார்வையில் உள்ளார். எனவே தத்து பரிகாரம் தேவையில்லை. குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு காணிக்கை செலுத்தவும். 

Advertisment

ஜி. குமரேசன், சேலம். 

அவருடைய பெண் குழந்தை பற்றி கேட்டுள்ளார். 3-6-2015-ல் பிறந்த குழந்தை.குரு+சுக்கிரன் = 12-ஆமிடத்தில் மறைந்து இருக்கிறதே. இது நல்லதா எனக் கேட்டுள்ளார். 

சுக்கிரன் 12-ஆமிடத்தில் இருப்பது ஏற்கக் கூடியது. குரு 12-ஆமிடத்தில் உச்சம். கெட்டது கிடையாது. 2028-ல் சுக்கிர தசை ஆரம்பிக்கும். அப்போது கல்வி சார்ந்து இடம் மாறுதல் இருக்கும்.சிம்ம லக்னத்திற்கு 4-ஆமிடத்தில் சனி+சந்திரன்= புனர்பூச தோஷ பாதிப்பு உண்டு.லக்னத்திற்கு 2-ல் ராகு, 8-ல் கேது. நாக தோஷம் மற்றும் ராசிக்கு 7-ல் செவ்வாய். திருமண வாழ்வில் சற்று சலசலப்பு இருக்கும்.
நடப்பு கேது தசை- விநாயகரை வணங்கவும்.

கோபி, பெங்களூர். 

திருமணம் எப்போது நடைபெறும்? 

25-12-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். கால சர்ப்ப தோஷ ஜாதகம். இவருக்கு ஏற்கெனவே ஒரு விருப்பத் திருமணம் நடந்து பிரிந்திருக்கக் கூடும். நடப்பு சனி தசையில் சூரிய புக்தி 2027 பிப்ரவரி வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். வரும் பெண் திருமண வாழ்வில் தோல்வி அடைந்த வராக இருப்பார்.இவருடைய ஜாதகப்படி, புனர்பூ தோஷம் இருப்பதால் இருதார திருமணம் நடக்கிறது.நடப்பு சனி தசை நல்ல பலன் தர, முனீஸ்வரன் போன்ற தெய்வங் களையும், குலதெய்வத்தையும் வணங்க வேண்டும். கும்ப ராசிக்கு, ஏழரைச்சனி ஓடுவதால், சனிக்கிழமைகளில்  சனீஸ் வரரை வணங்கவேண்டும். 

சுப்பிரமணியன், மதுரை.

தன் மகளின் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

மகள்: தேவி: 4-1-1997-ல் பிறந்த வர். மிதுன லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னத்துக்கு 4-லும், ராசிக்கு 12-லும் செவ்வாய் அமர்ந்துள்ளார். எனவே இரு வகையிலும் செவ்வாய் தோஷம் உள்ளது.நடப்பு சனி தசையில் செவ்வாய் புக்தி 2026 மேவரை. அதற்குள் இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடந்துவிடும். இந்தப் பெண்ணின் மாங்கல்ய ஸ்தானத்தில், குரு நீசமாகி இருப்பதால் தா- தானம் செய்த பிறகு திருமணம் நடத்தவும்.

அன்பு, மேலூர்.

வேலை, பணவரவு பற்றிக் கேட்டுள்ளார். 

23-12-1984-ல் பிறந்தவர். கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் 6-ஆமதிபதி சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை. மேலும் 8-ஆமதிபதி செவ்வாய் 6-ல் மறைவு. இதுவொரு யோகத்தைக் குறிக்கும். வேலையில் ஏற்படும் தடங்கல்கள் அதுவாகவே நீங்கிவிடும். எனவே சிறு சங்கடம் வந்தாலும், அதனை சமாளித்துத் தொடருங்கள். உங்களுக்குப் பண வரவு, "வரும்; ஆனா வராது' என்ற நிலையில் மெதுவாக வரும். நடப்பு செவ்வாய் தசை ராகு புக்தி. வேலை மாறுதல் உண்டு. 2024 வரை ராகு புக்தி; கவனம்தேவை. நிரந்தர வேலை வேண்டுபவர்கள் முசிறி- திருத்தலையூர் சென்று வணங்கவும்.

சந்திரசேகர், விழுப்புரம்

குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர் எப்போது ஒன்று சேர்வோம் என கேட்டுள் ளார்?

31-8-1977-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன், சனியுடன் சேர்க்கை. உங்கள் ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் ராகுவுடன் சம்பந்தம். சந்திரன் கேதுவுடன் ராகு பார்வையில். எனவே உங்கள் சிந்தனைகள் ஒரு நிலையில் இருக்காது. 2023, நவம்பரில் சுக்கிர தசை ஆரம்பம். அப்போது உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். சுக்கிர தசையில் மனைவி, மகனுடன் சேரும் பாக்கியம் ஏற்படும்.மண வாழ்க்கை சிறப்படைய, திருமருகல் எனும் தலத்திற்குச் சென்று வணங்கவும்.

bala100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe