வேதத்தின் கண் ஜோதிடம் என்று, ஜோதிடத்தை மூன்று பெரும் பிரிவுகளாக நம் மகரிஷிகள் அமைத்துள்ளனர். இதில் "சம்ஹிதா ஸ்கந்தம்' என்ற ஒன்றே வாஸ்து சாஸ்திரம். ஜோதிடம் வேத காலத்திற்கு முன், பின் மற்றும் இன்றுவரையிலான ஃ.ட. முறை வரை எவ்வாறு விரிவடைந்துள்ளதோ, அது போல் வாஸ்து சாஸ்திரத்திலும் உண்டு. வேத காலத்திற்கு முன் உள்ள  விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரமும், வேத காலத்திற்குப் பின்வந்த விஸ்வகர்ம பிரகாசமும் அடிப்படை ஒன்றே என்றாலும், இவை கட்டடக் கலையின் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. எந்தக் கலையும் கால மாற்றத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

Advertisment

​ஜோதிடத்தில் நான்காமிடம், நான்காமிடத்திலுள்ள கிரகம், நான்காமதிபதி, நான்காமதிபதி நின்ற நட்சத்திராதிபதி, சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்களின் நிலை நன்கு இருந்தால் மட்டுமே வாஸ்து தோஷம் இல்லாத சொந்த வீடோ அல்லது வாடகை வீடோ அமையும். இதற்கென பிரத்யேகமாக ஜோதிட சாஸ்திரத்தில் சில விதிகளும் உள்ளன.

Advertisment

​ செவ்வாயுடன் ராகு அல்லது புதனுடன் ராகு இணைவுள்ள ஜாதகருக்கு பெரும்பாலும் 90 சதவிகிதம் வரை வாஸ்து குறைபாடு உள்ள  வீடோ, நிலமோதான் அமையும்.

​நான்காமிடத்தில் பாப கிரகம் இருந்தாலோ, நான்காமதிபதி பகை, நீசம் அஸ்தங்கமடைந் தாலோ அல்லது நான்காமதிபதி நின்ற நட்சத்திராதிபதி பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று 6, 8, 12-ல் இருந்தாலோ என்பது சதவிகிதம் இவர்களுக்கு வாஸ்து தோஷத்துடன்தான் சொந்தவீடோ அல்லது வாடகைவீடோ அமைகிறது.

Advertisment

​விவசாய நிலம் எனில் புதனும், மனை  எனில் செவ்வாயும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

 இல்லங்களுக்கும், வியாபார ஸ்தலங்களுக் கும், ஆலயங்களுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் வேறுபாடு உண்டு.

​மனையைத் தேர்ந்தெடுக்கும்போதே ஜாதகரீதியிலும் வாஸ்து சாஸ்திரப்படியும் மனை அமைந்துள்ளதா என்பதனை ஆய்ந்து தேர்ந்தெடுப்பதே நன்று. மனையின் நான்கு திசைகளையும் ஒன்பது பாகங்களாகப் பிரித்து உச்ச நீச பாகங்களை அளவிட்டு அதற்கேற்ப வரைபடம் தயாரிப்பதே முறையானது.

​வீடு விரைவாகவும் நல்ல முறையிலும் கட்டி முடிப்பதற்கு ஜாதகருக்கு குரு பலம் தேவை.

​திசைகாட்டி (Compass) கொண்டு திசை களைக் குறித்தும், உச்ச நீச பாகங்கள் அமையும் இடங்களைக் குறித்துக்கொண்டு தலைவாசல் அமைப்பதும் சிறப்பு.

அவசியமான வாஸ்து குறிப்புகள் மனையின் அமைப்பு:

ப் மனையானது கிழக்கிலும் மேற்கிலும் நீண்டு, வடக்கிலும் தெற்கிலும் குறுகியோ அல்லது சர்ப்பம் படம் எடுப்பதுபோல் முன்புறம் அகன்று பின்புறம் குறுகியோ இருப்பின், இத்தகைய மனைகளைத் தவிர்ப்பது நலம்.

மனையின் அருகில் முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்கள் இருப்பின், ஆலய நுழைவாயிலின் இருபுறமும் இருப்பின் தவிர்ப்பது நலம். இல்லையேல் நிம்மதி குறையும், பொருளாதார நஷ்டமும் ஏற்படும். (குறிப்பாக 750 மீட்டருக்குள் இருப்பின் கவனம் தேவை).

ப் மனையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் தாழ்ந்தும், மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் உயர்ந்தும் இருப்பது சிறப்பு.

ப் வடகிழக்கு பகுதியில் மனையானது சிறிது வளர்ந்திருப்பின், அதில் வீடு கட்டி வாழ்வோர் செல்வம் மற்றும் செல்வாக்கோடு வாழ்வார்.

ப் மனைக்கு கிழக்கு, வடக்கு, வடகிழக்கில், குறிப்பாக வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் மின்கம்பம், மின்தூக்கி, மின்கடத்தி, மரம், சாக்கடை, குப்பைத் தொட்டி போன்றவை இருக்கக்கூடாது. இருப்பின் கடுமையான பொருளாதார நலிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ப் மனையின் தெற்கு பகுதி வளர்ந்திருந்தால், அதில் வாழும் பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும்.

ப் மனையின் தென்கிழக்கு பகுதி வளர்ந்திருந்தால், ஜாதகத்தின் ஆறாம் பாவக காரகத்துவங்களான கடன், நோய், எதிரி தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

கட்டுமான விதிகள்:

ப் கிழக்கு திசையில் வாசல் உள்ள வீட்டிற்கு, படிக்கட்டு ஈசானியம் எனப்படும் வடகிழக்கில் கண்டிப்பாக அமையக்கூடாது. வடமேற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசைகளில் அமையலாம்.

ப் அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கில் ஆரம்பித்து, தென்கிழக்கு வரையிலும், பின் வடகிழக்கில் ஆரம்பித்து வடமேற்கு வரையிலும், பின் தென்கிழக்கில் ஆரம்பித்து தென்மேற்கு வரையிலும், இறுதியாக வடமேற்கில் ஆரம்பித்து தென்மேற்கு வரையிலும் பள்ளம் ஏற்படுத்தி, பின் தென்மேற்கிலிருந்து அஸ்திவாரத்தை எழுப்ப வேண்டும்.

ப் சுவரில் "லாப்ட்' (கர்ச்ற்)களை மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும்.

ப் மேற்கு மற்றும் தெற்கில் கதவு அல்லது ஜன்னல் இருப்பின், அங்கு அடர்த்தியான நிறமுடைய  திரைச் சீலைகளையும், கிழக்கு மற்றும் வடக்கில் லேசான நிறமுடைய திரைச் சீலைகளையும் பயன்படுத்துவது நலம்.

ப் தெற்கு பார்த்த மனைக்குத் தலைவாசல், தெற்கு திசையில் இருப்பதில் தவறு ஏதுமில்லை. இருப்பினும், அது தென் கிழக்கு அல்லது தென்மேற்கில் கண்டிப்பாக அமையக்கூடாது.

(உச்ச பகுதியில் மட்டுமே அமைய வேண்டும்).

ப் வீட்டின் வடகிழக்கு (ஈசானியம்) பகுதி மிக முக்கியமானது. இங்கு நெருப்பு, துடைப்பம், குப்பைத் தொட்டி, அழுக்குத் துணிகள் போன்றவை இருக்கக்கூடாது.

ப் வடகிழக்கு திசையில் கதவு இருப்பின், அது வடக்கு நோக்கியதாகவும், கதவைத் திறக்கும்போது அது வீட்டின் உட்புறம் வரும் வகையிலும் அமைய வேண்டும்.

ப் வடகிழக்கில் எடைகூடிய கனமான பொருட்களை வைக்கக்கூடாது.

ப் வடகிழக்கில் சமையலறை கண்டிப்பாக இருக்கக்கூடாது. இருப்பின் உடல்நலம் அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் விபரீதச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும். கழிவறையும் இருக்கக்கூடாது.

ப் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே சமையல் மேடை அமைய வேண்டும். கிழக்கு நோக்கி சமையல் செய்வது மிகவும் சிறப்பு.

ப் சமையலறையின் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் எடைக்கூடிய பொருட்களான பிரிட்ஜ், கிரைண்டர் போன்றவை இருப்பது நலம்.

ப் சமையலறையில் காய்கறி கழுவும் தொட்டி (நண்ய்ந்), வடகிழக்கில் அமைவது சிறப்பு.

ப் எரிவாயு சிலிண்டர்களைச் சமையலறையின் தென்கிழக்கு மூலையில் வைப்பது நன்று.

ப் தென்மேற்கில் கழிவறை இருப்பது உடல்நலம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

ப் கட்டடத்தின் தென்மேற்கில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Overhead Tank) அமைவது சிறப்பு.

ப் கட்டடம் தென்மேற்கு பகுதியில் உயர்ந்தும், கனமானதாகவும் இருக்க வேண்டும்.

ப் வீட்டிற்குள் ஒரே நேர்க்கோட்டில் மூன்று கதவுகள் அமையக்கூடாது.

ப் தலைவாசலுக்கு எதிரில் சிலர் "வாஸ்து' என்ற பெயரில் கண்ணாடி வைக்கிறார்கள். இது மிகமிகத் தவறு; இது வீட்டிற்குள் வரும் நேர்மறை ஆற்றலைத் (Positive Energy) தடுக்கும்.

பொதுவாக, வாஸ்து சாஸ்திரத்தின் அனைத்து விதிகளையும் தற்காலத்தில் பின்பற்ற முடியாது என்றா லும், குறைந்தது 60 முதல் 70 சதவிகிதம் விதிகளைப் பின்பற்றுவது சிறப்பு. தவிர்க்க வேண்டியவற்றை உறுதியாகத் தவிர்த்துவிட வேண்டும்.


செல்: 63824 12545