Advertisment

ஜோதிடமும் கர்மாவும்! -கோவை தனம்

jothidam

ஜோதிடம் என்பது மனிதன் பிறக்கும் நேரத்தில் வானில் நிகழும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவனுடைய வாழ்க்கையின் பாதையை புரிந்துகொள்ள உதவும் ஓர் அறிவியல். இது வெறும் எதிர்காலத்தை சொல்லும் கலை மட்டும் அல்ல; மனிதன் தன்னைத்தானே அறிந்து வாழ்க்கையை சரியான திசையில் நடத்திக்கொள்ள உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

Advertisment

கர்ம ஜோதிடம் என்பது விதியும் முயற்சியும் சந்திக்கும் இடம் என்று கூறலாம். கர்ம ஜோதிடம் மனிதன் கடந்த பிறவியில் செய்த செயல்கள்தான் கர்மா. இப்பிறவியில் எவ்வாறு பலன்களாக மாறுகின்றன என்பதை ஜாதகத்தின்மூலம் விளங்கும் உயர்ந்த ஒரு ஜோதிட தத்துவமாகும். ஜோதிடம் வெறும் எதிர்கால கணிப்பு அல்ல; அது கர்மாவின் கணிதம் ஆகும். கர்மா என்பது என்ன என்று பார்த்தால் கர்மா என்பது செயல். ஒரு மனிதன் நினைப்பதும் பேசுவதும் செய்வதும் எல்லாமே கர்மாவாக பதிவு ஆகிறது. இந்த கர்மாவின் பலன்கள் உடனடியாகவோ- காலதாமதாகவோ அல்லது பிறவியாகவோ கிடைக்கலாம். 

Advertisment

கர்மா மூன்று வகை உள்ளது. 

சஞ்சித கர்மா பல பிறவிகளையே சேர்க்கப்பட்ட கர்மா. இரண்டாவதா

ஜோதிடம் என்பது மனிதன் பிறக்கும் நேரத்தில் வானில் நிகழும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவனுடைய வாழ்க்கையின் பாதையை புரிந்துகொள்ள உதவும் ஓர் அறிவியல். இது வெறும் எதிர்காலத்தை சொல்லும் கலை மட்டும் அல்ல; மனிதன் தன்னைத்தானே அறிந்து வாழ்க்கையை சரியான திசையில் நடத்திக்கொள்ள உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

Advertisment

கர்ம ஜோதிடம் என்பது விதியும் முயற்சியும் சந்திக்கும் இடம் என்று கூறலாம். கர்ம ஜோதிடம் மனிதன் கடந்த பிறவியில் செய்த செயல்கள்தான் கர்மா. இப்பிறவியில் எவ்வாறு பலன்களாக மாறுகின்றன என்பதை ஜாதகத்தின்மூலம் விளங்கும் உயர்ந்த ஒரு ஜோதிட தத்துவமாகும். ஜோதிடம் வெறும் எதிர்கால கணிப்பு அல்ல; அது கர்மாவின் கணிதம் ஆகும். கர்மா என்பது என்ன என்று பார்த்தால் கர்மா என்பது செயல். ஒரு மனிதன் நினைப்பதும் பேசுவதும் செய்வதும் எல்லாமே கர்மாவாக பதிவு ஆகிறது. இந்த கர்மாவின் பலன்கள் உடனடியாகவோ- காலதாமதாகவோ அல்லது பிறவியாகவோ கிடைக்கலாம். 

Advertisment

கர்மா மூன்று வகை உள்ளது. 

சஞ்சித கர்மா பல பிறவிகளையே சேர்க்கப்பட்ட கர்மா. இரண்டாவதாக பிராப்த கர்மா. இப்பிறவிலேயே அனுபவிக்க வேண்டிய கர்மா. மூன்றாவதாக ஆகாமி கர்மா. இப் பிறவியில் இப்போது உருவாகும் கர்மாவாகும். ஜாதகம் அவன் அனுபவிக்க வேண்டிய பிரார்த்த கர்மாவின் வரைபடம் என்று கூறலாம்.

லக்னமும், கிரக நிலைகள் மற்றும் தசாபுக்திகள் ஆகியவை கர்மாவை எந்த காலத்தில் வெளிப்படுத்தும் என்பதை காட்டுகின்றன.

லக்னம் உயிர் வாழ்க்கையின் பாதையைக் காட்டுகிறது. சந்திரன் உடல் மற்றும் மனநிலை கர்மா‌. சனி கடினமான கர்மா மற்றும் கடமை தண்டனை. குரு புண்ணிய கர்மா மற்றும் ஆசீர்வாதம். ராகு- கேது பூர்வ ஜென்ம கர்மா மற்றும் ஆன்மிகம், தசாபுக்தி கர்மா செயல்படும் காலம் எல்லா கர்மாவும் ஒரே நேரத்தில் வெளிப்படாது. தசாபுக்தி காலங்களின் மூலமாகவே எந்த கர்மா எப்போது செயல்பட வேண்டும் என்பதை ஜோதிடம் விளக்குகிறது. அதனால்தான் சில நேரங்களில் நாம் ஒரு செயலுக்காக பல போராட்டங்களை சந்தித்தாலும்  கடுமையான உழைப்பு, முயற்சி, நேர்மையான சிந்தனை, எல்லாம் இருந்தும்கூட வெற்றியை அடைய முடிவதில்லை. ஒருசிலருக்கு அவர்கள் எந்தவிதமான முயற்சியும் இல்லாமலும்கூட தகுதிகளும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைக்கின்றது. ஜோதிடத்தில் கர்மாவை சொல்லி மனிதர்களை பயமுறுத்துவதற்காக அல்ல ஏன் இப்படி சம்பவிக்கிறது என்பதை புரியவைப்பதற்காக ஒரு பிரச்சினை வந்தால் அது தண்டனை அல்ல; அது ஒரு பாடம். ஒவ்வொரு செயல்களில் இருந்து ஏதோ ஒன்றை பெறுகிறோம் அல்லது ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறோம். அதை உணர்ந்தால் கர்மா மெதுவாக மாறும். 

கர்மா ஜோதிடம் மனிதனுக்கு பொறுப்புணர்வை கற்றுத்தருகிறது. என் வாழ்க்கை என் கையில் என்ற எண்ணத்தை மாற்றி என் செயல்தான் என் எதிர்காலம் என்ற உண்மையை உணர வைக்கிறது. ஜோதிடம் விதியை காட்டுகிறது. கர்மா அதற்கு காரணமாக இருக்கிறது. முயற்சி அதற்கு வழி வகுக்கிறது. ஜோதிடத்தில் பரிகாரம் என்ற சொல்லை கேட்டவுடனே பலர் உடனடியாக தீர்வு உடனடியான மாற்றம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கர்ம ஜோதிடத்தின் பார்வையில் பரிகாரம் என்பது விதியை அளிப்பது அல்லவிதியை அனுபவிக்கும் வலிமையை அதிகரிப்பது. எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். பரிகாரத்தினால் நமது கர்மாவை மாற்ற முடியுமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லமுடியும். ஜோதிடத்தில் கிரகங்கள் தண்டனை வழங்குபவர் அல்ல. அவை கர்மாவின் கடிதம் கொடுக்கும் தூதுவர்கள் என்று சொல்லலாம். இந்த சஞ்சித கர்மாவையும் ப்ராப்த கர்மாவையும் முழுமையாக பரிகாரத்தி னால் மாற்ற முடியாது ஏனெனில் அவை ஏற்கெனவே விதியாக அனுபவிக்கதான் நாம் பிறவி எடுத்து வந்துள்ளோம். ஆனால் கர்மாவின் கடுமையை குறைக்க முடியும். நாம் அனுபவிக்கும் வேதனையை குறைக்க முடியும். மன உறுதியை அதிகரிக்க இந்த பரிகாரம் உதவுகிறது என்று கூறலாம். 

உண்மையான பரிகாரம் என்பது வெளிப்புற செயல் மட்டுமல்ல; உள்ளார்ந்த மாற்றம்தான் வேண்டும். வெறுமனே பூஜை ஹோமம் தானம் மட்டும் பரிகாரம் அல்ல அந்த செயலின் உள்ள பாவனை உள்ளார்ந்த நோக்கம்தான் பரிகாரத்துக்கு உயிர் என்றே கூறலாம். உதாரணம் சொல்லவேண்டுமென்றால் அன்னையைக் அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு வந்து தன் வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைப்பதுபோல மற்றும் அன்னமிட்ட அன்னையை அனதையாக விட்டுவிட்டு அனாதை இல்லத்துக்கு சென்று ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வது என்பது வெளிப்புற செயலாக மட்டும் இருக்கும். 

ஜோதிடத்தில் சக்திவாய்ந்த பரிகாரங்கள் எது என்று பார்த்தால் நம்முடைய நடத்தையில் கோபமும் பொய்யும் அகந்தையும் குறைத்து அன்பையும் நேர்மையையும் கருணையும் காட்டுவது. கடமை உணர்வு எது என்று தெரிந்து பொறுப்புகளை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது. தானம் என்று சொன்னால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு பயனுள்ள உதவிகளை செய்வது, சரியான முறையில் வழிகாட்டுவது, பெரியோர்களை மதிப்பது, விட்டுக்கொடுத்து செல்வது, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது இது எல்லாம் மிகப்பெரிய கர்மா சுத்திகரிப்பு என்று சொல்லலாம்.

இதுபோக ஆன்மிக சிந்தனை மனதை ஒருநிலைப்படுத்தி மனதையும் உடம்பையும் சுத்தமாக வைத்து இறைவழிபாடு செய்வது. இதுபோலதான் கர்மாவின் தன்மையை குறைத்துக் கொள்ளமுடியும் கர்மாவுக்கு விலை இல்லை. கர்மாவுக்கு குறுக்கு வழியும் இல்லை.  பரிகாரம் மந்திரம்போல் அல்ல; நம்மிடம் ஏற்படும் மாற்றம்போல வேலை செய்யும் விதியைப் புரிந்து கொண்டு சிந்தனை மாற்றமும் அதை நேர்மையுடன் அணுகும் முறையும் ஆகும். கர்மாவை  நல்லதாக உருவாக்கினால் சிறப்பான பலனை அடையமுடியும்.

bala210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe