விருச்சிக லக்னம்

நெருப்பு கிரகம் செவ்வாய் உங்கள் லக்ன மற்றும் 6-ஆம் அதிபதி. அவர் உங்களின் 3-ஆமிடத்தில் உச்சமடைவார். இவ்வித அமைப்புள்ளவர்கள், சமையல் வேலை சார்ந்த கான்ட்ராக்ட் எடுத்துச் செய்வீர்கள். இந்த சமையல் தொழில் முன்னேற்றத்திற்கு, நீங்கள் கடும் உழைப்பும், பெரிய முயற்சியும் எடுத்துக்கொண்டே இருப்பீர்கள். இதன்கூடவே உங்களின் இளைய சகோதரம், உங்களின் தாய்மாமா என அனைவரின் ஒத்துழைப்பும் தொழிலில் இருக்கும். இந்த சமையல் ஒப்பந்தம் காரணமாக, அடிக்கடி இடமாற்றம் இருக்கும். உங்களில் சிலர் சிறு வண்டி சாப்பாட்டு கடை, ரோட்டோரக் கடை, வேனில் சமையல் செய்து வியாபாரம் செய்துவிட்டு, பின் அந்த வேனை ஓட்டிக்கொண்டு செல்வது என இம்மாதிரி அமையும். இந்தக் காலத்தில், கைபேசிமூலம் சமையல் சொல்லிக்கொடுப்பது அல்லது கைபேசியுடன் வெவ்வேறு உணவகங்களுக்குப் போய் சாப்பிட்டு கருத்து சொல்வது, எங்க வீட்ல இன்னிக்கு இந்த சமையல் என்று பதிவிடுவது என இந்தமாதிரி, இன்ன பிற செயல்களை கைபேசியில் பதிவிடுவதை வேலையாக வைத்திருப்பார்கள்.இவர்களின் சமையல் ஸ்தான அதிபதி புதன் ஆவார். இவர் 11-ஆமிடத்திலேயே உச்சம்பெறுவது சிறப்பு என்றாலும், அவரே 8-ஆம் அதிபதியும் ஆவதால் அவ்வப்போது, இன்னலும் இம்சையும் தோன்றும்.எனவே விருச்சிக லக்னத்தார் உணவு தொழிலை மேற்கொள்ளும்போது, அவ்வப்போது அசம்பாவிதங்களை எதிர் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.விருச்சிக லக்ன உச்ச செவ்வாய் உத்திராட நட்சத்திரம் பெற்றால், நீங்கள் முதலில் ஏதோ ஒரு ஓட்டலில் வேலை செய்து, பின் வேலை பழகி, சொந்த உணவகம் ஆரம்பித்துவிடுவீர்கள்.திருவோண நட்சத்திரத்தில் நின்றால் கோவில் சார்ந்த பிரசாத தயாரிப்பு, தர்ம ஸ்தாபனத்தில் உணவு தயாரிக்கும் ஒப்பந்தம், தந்தையின் உணவு தொழிலை தொடர்வது, கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ்க்ரீம் கான்ட்ராக்ட் எடுப்பீர்கள். சொந்த உழைப்பில் சமையல் ஒப்பந்தம் பெற்று நடத்துவீர்கள்.

Advertisment

குகையில் குடிகொண்டுள்ள முருகரை வணங்கவேண்டும்.

தனுசு லக்னம்

நெருப்புக் கிரகம் செவ்வாய், உங்கள் லக்னத்தின் 2-ஆமிடத்தில் உச்சம் பெறுவார். அவர் உங்கள் 5, 12-ன் அதிபதி. நீங்கள் உங்கள் பூர்வீக இடத்தைவிட்டு, விலகிவந்து, வேறு இடத்தில் உணவு தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். இது உங்கள் பரம்பரை சார்ந்த உணவாக அமையும். உணவு என்பது தர்மம் சார்ந்தது எனினும், பண விஷயத்திலும் கறாராக இருப்பீர்கள். அவ்வப்போது தர்ம புண்ணியமாக உணவு பரிமாறுவீர்கள். அது குழந்தைகளுக்கு அல்லது கோவிலில் இலவச சாப்பாடாக அமையும். உங்கள் சமையல் ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆவார். அவர் உங்களின் 4-ஆம் வீட்டில் உச்சமடைவார். இதிலிருந்தும் உங்கள் உணவு தயாரிப்பு, பிறந்த இடம் சார்ந்ததாக இருக்கும் என உறுதி ஆகிறது. இந்தமாதிரி சுக்கிரன் உச்சம்பெற்ற தனுசு லக்னத்தார், இனிப்பு வகைகள் செய்வதில் வெகு பிரசித்தம் பெற்றவர்களாக இருப்பார். உங்களின் செவ்வாய், சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்..செவ்வாய் உச்சமாகி, உத்திராட நட்சத்திரத்தில் நின்றால், முக்கிய பண்டிகை சார்ந்த, பிரசாத பேக்கேஜ் வழங்குவீர்கள். கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங் களை, உங்கள் கடைகளில் சிறப்பு விற்பனை செய்வீர்கள். உதாரணமாக, திருப்பதி லட்டு அமைப்பில் உங்கள் கடையிலும் லட்டு தயாரித்து விற்பனைக்கு வைப்பீர்கள்.திருவோண நட்சத்திரத்தில் நின்றால் அனேகமாக மோர், லஸ்லி, ஜிகிர்தண்டா மாதிரி, பாலை திரித்து கடைந்து செய்யும் உணவு விற்பனை செய்வீர்கள். இந்த நட்சத்திர அதிபதி, 8-ஆமிடக்காரராக அமைவதால், உங்கள் விற்பனை பண்டம் அடிக்கடி, சீக்கிரமாக கெட்டு போகும் வாய்ப்புண்டு. செவ்வாய் அவிட்டத்தில் இருந்தால், நல்ல வீட்டுச் சாப்பாடு மாதிரி, கட்டுப்பாடாக, வண்ணம் கலக்காமல் இயற்கையாக செய்கிறோம் என்பீர்கள்.

Advertisment

திருச்செந்தூர் முருகனை வணங்கவும். 

மகர லக்னம்

நெருப்புக் கிரகம் செவ்வாய். உங்கள் லக்னத்திலேயே உச்சம் அடைவார். இதில் இன்னொரு விசேஷம், செவ்வாய் சமையல் ஸ்தான அதிபதியும் ஆவார். இந்த ஒரு லக்னத்துக்குத்தான் இந்த அமைப்பு உள்ளது. இந்த அமைப்புடையவர்கள், தன் பிறந்த இடத்தில் பெரிய உணவக வர்த்தகம் செய்வர். இதில் இவரது தாயார், மூத்த சகோதரன் அனுசரணை மட்டுமல்ல, பின் காலத்தில், மருமகனின் உதவியும் பெருமளவில் கிடைக்கும். இவர்கள் தன்னிச்சையாக, முன் முனைப்புடன் சுயமாக வியாபாரத்தை பெருக்குவர். இதற்கு இவர்களது மிக தைரியமும் ஒரு காரணமாகும்.இவர்கள் பள்ளி விடுதிகளில், சமையல் கண்காணிப்பாளராக இருப்பர். சிலர் அரசியலில், மாநாடுகளுக்கு சமையல் செய்து அசத்துவர்.இந்த அமைப்புள்ள மகர லக்னத்தார், துணிந்து, சமையல் உணவகம் ஆரம்பித்து நடத்தலாம். உச்சமான செவ்வாய், உத்திராட நட்சத்திரம் பெற்றால், சமையல் தொழில் அவ்வளவு சிறப்பாக அமையும் என்று சொல்ல முடியாது. மேலும் உங்களின் கலப்பட கெட்டுப்போன உணவு தயாரிப்புக்காக, அரசு அதிகாரிகள், காவல் துறையின் தண்டனையை பெற நேரிடும்.செவ்வாய், திருவோண நட்சத்திரத்தில் நின்றால், இவர்கள் பெரும்பாலும், திருமண சமையல் செய்வார்கள். அதிலும் குறிப்பாக சூப், ஜூஸ், குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் தயாரிப்பில் சிறப்பான தகுதி பெற்று புகழ் பெறுவர். செவ்வாய் அவிட்ட நட்சத்திரம் பெற்றால், சமையல் உலகில் முடிசூடா மன்னராக, சமையலின் குறிப்பிடத்தகுந்த மனிதராக வெகு புகழ்பெறுவர். இவர்கள் பிறந்த ஊர், இவர்களின் சமையல் திறமையால் உலகெங்கும் அறியப்படும்.

வயலூர் முருகனை வணங்குவது சிறப்பு. 

கும்ப லக்னம்

நெருப்பு கிரகமான செவ்வாய் உங்களின் 12-ஆமிடத்தில் உச்சமடைவார். அவர் உங்களின் 3 மற்றும் 10-ஆம் அதிபதி ஆவார்.

Advertisment

உங்கள் சமையல் வேலை ஓரிடத்தில் தயாரித்து, அதனை நிறைய இடங்களுக்கு கேரியரில் சாப்பாடு அனுப்பும்வகையில் அமையும். அது வயதானவர்களுக்கான சமையல், குழம்பு, காய் கொடுப்பது, அலுவலகம் செல்வோருக்கு கொடுத்து அனுப்புவது, கைபேசியில் ஆர்டர் செய்தால், வீட்டுச் சாப்பாடு டெலிவரி செய்வது, உணவு டெலிவரி மனிதர்கள் என உணவு வணிகம், காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும். இவர்களில் சிலர் கர்மவீடுகள், தெவச சமையல் செய்பவராக, கூப்பிட்ட வீட்டிற்கு சென்று செய்து கொடுத்துவிட்டு வருவர்.சமையல் ஸ்தான அதிபதி குரு, இவர்களின் 6-ஆமிடத்தில் உச்சமடைவார். இதனால் தலைமை சமையல்காரர், சமையல் கண்காணிப்பாளர், சமையல் ஒருங்கிணைப்பாளர், வேலையாட்களை விரட்டி வேலை வாங்குபவர், சமையல் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பவர் என இம்மாதிரி சமையல் சம்பந்த வேலை அமையும். உச்ச செவ்வாய், உத்திராட நட்சத்திரம் எடுத்தால், திருமணம், அரசு விழா, அரசியல் நிகழ்வுகள், அரசியல் வீட்டு சுப நிகழ்வுகள் என அதிக முதலீடு தேவைப்படும் சமையல் வேலை கிடைக்கும். சேவை சார்ந்து உணவு தொழில் அமையும். அதுவும் ஓரிடத்தில் இன்றி அலைந்து செய்வர். இவர்கள் தான் பசியோடு இருக்கும் ஆட்கள், மருத்துவமனையில் தங்கி நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் உறவினர், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லம், உறவினர்களால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என இவர்கள் இருக்குமிடம் தேடிப்போய் உணவு வழங்குபவர். செவ்வாய் அவிட்டத்தில் நின்றால், சமையல் காண்ட்ராக்ட்டுகளை, கைபேசி மூலமே பெருமளவில் நிறைவேற்றிவிடுவர். இளைய சகோதரர் உதவி கிடைக்கும்.கைபேசி வழியாக சமையல் சொல்லிக் கொடுக்கும் நிபுணராக இருப்பர். தொழிலாளர்கள், பணியாளர்கள், தினக்கூலிகள் என இவர்களுக்கு உணவிடும் தொழில் கொண்டிருப்பர்.
வீரபத்திரரை வணங்கவும்.

மீன லக்னம் 

நெருப்புக் கிரகம் செவ்வாய், உங்களின் 11-ஆமிடத்தில் உச்சமடைவார். இவர் உங்களின் 2 மற்றும் 9-ஆம் அதிபதி ஆவார். ஒரு நெருப்புக் கிரகம் செவ்வாய், ஒரு சமையல் ஸ்தான இடத்தில் உச்சமடைவது சிறப்பு; வெகு சிறப்பு.

எனினும், அந்த சமையல் ஸ்தான அதிபதி சனி, உங்களின் 8-ஆமிடத்தில் உச்சமடைந்து அமர்வார்.

நீங்கள் உங்கள் ஊர் மட்டுமல்ல, போன இடமெல்லாம், உணவு விடுதி கிளைகளை திறந்து விடுவீர்கள். செவ்வாய் உங்களின் யோகாதிபதி. எனவே எங்கு எத்தனை ஓட்டல் திறந்தாலும், அத்தனையும் பணமாக கொட்டும். செவ்வாய் உங்களின் 2-ஆம் அதிபதியாகி, 11-ல் உச்சமடையும்போது, உங்களின் பெயர், மிகப்பெரிய ப்ராண்ட் நேம் ஆகிவிடும். எனவே இந்த பெயரை பயன்படுத்தி, அவரவர் ப்ரான்சிஸ் எனும் உரிமை வணிகம் ஆரம்பித்துவிடுவர். இது வெளிநாட்டுவரை தொடரும். செவ்வாய் உச்சமாகி, உத்திராட நட்சத்திரம் பெற்றால், மாத சம்பளம் பெறுவோருக்கு ரெகுலராக உணவு அனுப்புவீர்கள். இன்னும் மருத்துவ மனை, சேவை செய்யும் ஆட்கள், பணி யாளர்கள் என இவர்களுக்கு உணவு கொடுப்பீர்கள்.திருவோண நட்சத்திரம் பெற்றால், அது குழந்தைகள் நலம் சார்ந்த உணவு தயாரிப்பாக இருக்கும். வயதான பெண்களுக்கு உணவு கொடுப்பீர்கள். பழங்கால உணவை, இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி தயாரிப்பீர்கள். முக்கியமாக உணவு தயாரிப்பு ஆரோக்கியம் சம்பந்தமாக அமையும். அவிட்ட நட்சத்திரம் பெற்றால், மிகச் சிறப்பான செயின் ஓட்டல்கள் என்றும், மோட்டல்கள் என்றும் மேன்மையான தொழிலாளாக நடத்துவீர்கள். உங்கள் தகப்பனார், குடும்பம், மருமகன் என தொழிலில் ஈடுபடுவீர்கள். சிலர் சமையல் கலையை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியராக இருப்பர்.

திருச்செந்தூர் முருகனை வணங்கவும்.

செல்: 94449 61845