கடக லக்னம்
உங்கள் கடக லக்னத்துக்கு நெருப்பு கிரகம், உங்களின் 7-ஆமிடத்தில் உச்சமடை வார். உங்களின் சமையலைக் குறிக்கும் பாவாதிபதி 11-ஆமிடம் சுக்கிரன் ஆவார்.
உங்கள் கடக லக்னம் சற்று சிறப்பு வேறுபாடுடையது. உங்கள் லக்னத்திலேயே, செவ்வாய் நீசமசாகும் நிலையுண்டு.
உங்கள் 11-ஆம் அதிபதி வீட்டில் உங்கள் லக்னாதிபதி சந்திரன் உச்சமடை யும் வாய்ப்பும் உண்டு.
நெருப்பு கிரகம் செவ்வாய் உச்சமாகி, உத்திராட நட்சத்திரம் பெற்றால், குடும்பங்களில் நடக்கும் சிறு சிறு விழாக்களுக்கு சமையல் தொழில் செய்துகொடுக்கலாம். திருவோண நட்சத்திரத்தில் நின்றால் கல்யாண சமையல் ஆர்டர் எடுத்து செய்யலாம். அவிட்ட நட்சத்திரம் பெற்றால், சமையலை தொழிலாகவே விரிவுபடுத்தலாம். மேலும் இவர்கள் சமையல், குறிப்பாக குழந்தைகள் ஆரோக்கியம் சம்பந்தமாக இருப்பது உகந்தது.
செவ்வாயும், சந்திரனும் உச்சம்பெற்று, சுக்கிரனும் கெடாமல் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக, சமையல் தொழிலில் முதன்மையாக இருப்பீர்கள்.
கடக லக்னத்தை சேர்ந்தவர்கள், செவ்வாய் நீசமாகாமல் இருந்தால், உங்களால் முடிந்த அளவு, சமையல் தொழிலை தொடங்கிவிடுங்கள். சிறப்பாக வரும். நீங்கள் தினப்படி சமையலை யும் சிறப்பாக செய்யும் திறமை பெற்றிருப் பீர்கள்.
திருச்செந்தூர் முருகரை வணங்

திருச்செந்தூர் முருகரை வணங்க வேண்டும். ஓட்டல் வைத்திருப்போர் தங்கள் தொழில் மேன்மையடைய அவ்வப்போது திருச்செந்தூர் சென்று வழிபட வேண்டும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்துக்கு நெருப்பு கிரகம் செவ்வாய் 6-ஆமிடத்தில் உச்சமடைவார். சிம்ம லக்ன 12-ஆமிடத்தில் நீசமடைவார்.
உங்களின் சமையலுக்குரிய 11-ஆம் அதிபதி புதன். இந்த சமையல் ஸ்தான புதன் உங்களின் உணவு ஸ்தானமான 2-ஆமிடத்தில் உச்சமாவார். செவ்வாய் உச்சம், ஆட்சி அல்லது சுபத்தன்மையோடு இருந்தால் உங்கள் பெற்றோர் கண்டிப்பாக ஓட்டல் நடத்தி இருப்பார்கள். அல்லது நடத்துவார்கள். உணவு சார்ந்த தொழில் சற்று பரம் பரையாக தொடர்ந்து வந்திருக்கும்.
செவ்வாய் உச்சமாகி, உத்திராட நட்சத்திரம் எடுத்திருந்தால், நீங்களே சுய உழைப்புடன் அரசு உதவியுடன் உணவு கடை நடத்த இயலும்.
திருவோண நட்சத்திரத்தில் அமர்ந் தால், அலைந்து, அலைந்து உணவு விற்பனை இருக்கும். உதாரணமாக, இடியாப்பம் என கூவி விட்டு மறையும் விற்பனை, ஐஸ்கீர்மை, வேர்கடலையை வண்டியில் வைத்து, மணியோசையுடன் விற்பனை செய்வது என இவ்வகையில் அமையும். செவ்வாய், சிம்ம ராசிக்கும் 6-ல் உச்சமடைந்து, அவிட்ட நட்சத்திரம் எடுத்தால் உணவை, விற்பனையுடன் அதனை சேவையாகவும் நடத்துவர். சிலர் மருத்துவமனையில் உணவு தயாரிப்பர். உணவு, தயாரிப்பு, ஓட்டல் வகையில் நற்சான்றிதழ், பதக்கம் பெருமளவிற்கு வெற்றிக்கொடி நாட்ட இயலும்.
இவர்கள் ஜாதகத்தில் செவ்வாயும், புதனும் சம்பந்தம் இல்லாமல், ஆனால் தனித்தனிமையே சுபத்தன்மையோடு இருப்பது, சமையல் தொழிலில் ஏற்றத்தைத் தரும்.
மலைமீதுள்ள முருகரை வணங்கவும்.
கன்னி லக்னம்
நெருப்பு கிரகம் செவ்வாய் உங்களின் 5-ஆம் வீட்டில் உச்சமடைவார். உங்களுக்கு சமையல் தொழிலை பொருத்தவரை இரண்டு மைனஸ் உள்ளது.
ஒன்று செவ்வாய், உங்கள் கன்னி லக்னத்துக்கு 3 மற்றும் 8-ன் அதிபதி.
இன்னொன்று சமையல் ஸ்தானமான 11-ஆமிடத்தில், நெருப்புக் கிரகம் செவ்வாய் நீசமாவார்.
கன்னி லக்ன அதிபதி புதன். எனவே புதனுக்கும், செவ்வாய்க்கும் எப்போதும் வாய்க்கா வரப்பு தகராறுதான். இதில் எங்கிருந்து சமையல் தொழிலான ஓட்டல் திறப்பது என்று தெரியவில்லை.
உங்கள் பூர்வீகமாக, சமையல் தொழிலில் இருந்தால் மட்டும், இத்தொழிலை கையிலெடுங்கள் அல்லது சமையல் தொழிலில் ஏஜென்சி, ஒப்பந்தம் மாதிரி போட்டுக்கொள்ளலாம். அல்லது உணவு சார்ந்த, கலப்பட நெய், கெட்டுப்போன பொருட்களை உணவாக்குவது, சாப்பிட்டால் வாந்தி, பேதி வருவது என இம்மாதிரி தொழிலில் ஈடுபடுவர்.
செவ்வாய் உச்சமாகி, உத்திராட நட்சத்திரம் எடுத்தால், அரசு சார்ந்த குழந்தைகளுக்கு, ஓரிடத்தில் மொத்தமாக தயாரித்து, அதனை பள்ளி, பள்ளியாக வினியோகம் செய்வது போன்ற உணவு தயாரிப்பு வேலை கிடைக்கும். இது அனேகமாக சத்துணவு, காலை டிபன், அங்கன்வாடி இவை சார்ந்ததாக அமையும்.
செவ்வாய் திருவோண நட்சத்திரத்தில் நின்றால், இவர்களின் சமையல், ஓட்டல் தொழிலில் இவர்கள், இவர்களின் வாரிசு, இவர்களின் மருமகன், மருமகள் என குடும்பமே சமையல் பணிபுரிவர். இவர்கள் அனேகமாக, அரசியல் மாநாடு, கட்சி கூட்டம், அரசியல் தலைவர்கள் வீட்டு விசேஷம் என தூள் கிளப்புவர்.
செவ்வாய் சுய சாரமான அவிட்ட நட்சத்திரம் எடுத்தால், மிக விசேஷமாக சொல்ல முடியாது. உணவு டெலிவரி வேலை செய்யக்கூடும். சத்துமாவு சம்பந்த வேலை செய்யக்கூடும். 11-ஆம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்றால் அல்லது ஆட்சி பெற்றால், அப்போது தைரியமாக சமையல் தொழில் தொடங்கலாம் எனினும், மற்றய லக்னத்தாரோடு ஒப்பிடும்போது, ஒரு மாற்று கம்மிதான். யோசித்து ஓட்டல் தொழில் தொடங்கவும் .
சுவாமிமலை முருகப் பெருமானை வணங்கவும்.
துலா லக்னம்
துலா லக்னத்துக்கு நெருப்பு கிரகமான செவ்வாய், 4-ஆமிடத்தில் உச்சமடைவார். செவ்வாய் துலா லக்னத்துக்கு 2 மற்றும் 7-ஆம் அதிபதி ஆவார்.
துலா லக்ன சமையல் ஸ்தான 11-ஆம் அதிபதி சூரியன். இந்த லக்ன பாதகாதிபதி மேலும் துலா லக்னத்தில் சூரியன் நீசமடைவார் என்பதும் கவனிக்கத் தக்கது. செவ்வாய் உச்சமாகி உத்திராட நட்சத்திரத்தில் நின்றால், நீங்கள் ஓட்டலில் சென்று சாப்பிடலாமே தவிர, சொந்தமக உணவு விடுதி ஆரம்பிக்கக்கூடாது. சுத்தமாக சரிப்பட்டு வராது.
செவ்வாய் உச்சமாகி, திருவோண நட்சத்திரம் பெற்றால் அது உங்களின் சொந்த தொழிலாக மாறிவிடும். நீங்கள் நடத்தும் ஓட்டல், உங்களுக்கு கௌரவமும், பண பலமும், ஆட்கள் பழக்கத்தையும் பெருக்கும்.
செவ்வாய், அவிட்ட நட்சத்திரத்தில் சென்றால், நீங்கள் நடத்தும் உணவு விடுதியை, நீங்கள், உங்கள் தாயார், உங்கள் வாழ்க்கைத்துணை என அனைவரும் சேர்ந்து நடத்துவர். அவ்வளவு ஏன்? வீட்டில் ஒரு பகுதி அல்லது முன்பகுதியை சாப்பாட்டுக் கடையாக மாற்றி, பண வரவுக்கு வழிவகுத்ததுக் கொள்வர்.
உங்கள் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய அம்சம், சயைல் ஸ்தான அதிபதி, சூரியன் உச்சம், நீசமாகாமல், சாதாரண சுபநிலையில் இருக்க வேண்டும். இது எதற்காக கூறப்பட்டது எனில், செவ்வாய், சூரியன் இரண்டும் உச்சமானால், உச்ச செவ்வாய், தனது 4-ஆம் பார்வையால், உச்ச சூரியனை பார்த்து, நீசமாக்கிவிடுவார் எனில் சமையல் ஸ்தான அதிபதி பைசா பிரயோசனமில்லாமல் ஆகிவிட்டார் என்றாகிறது. எனவே உங்கள் லக்ன அமைப்புபடி, செவ்வாய் அல்லது சூரியன் இருவரில் ஒருவர் உச்சம், ஒருவர் ஆட்சி என இருந்தால் உணவு விடுதி ஒப்பேறிவிடும்.
வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும்.
தொடர்ச்சி வரும் இதழில்...
செல்: 94449 61845