ஆதிகால மனிதன் தன் பசியாறுவதற்கு பச்சை இலை தழைகள், பச்சை மாமிசம் என இதை மட்டுமே சாப்பிட்டு, நதி நீரை குடித்து வாழ்ந்தான். ஒருசமயம் தீப்பிடித்து, அதில் காய்கறிகள், மாமிசம் எல்லாம் உள்ளே விழுந்து, தீயில் வெந்துவிட்டது. இதனை உண்ட ஆதிமனிதன், அட இது எவ்வளவு ருசியாக இருக்கிறது என்று யோசித்தான்.
ஆக, மனிதனின் முதல் சமையல் என்பது, ஒரு விபத்திலிருந்து, எதிர்பாராத தருணத்தில் தோன்றியது தான். தீ உண்டாக்க, கற்களை உரசி, தீப்பொறி உண்டாக்கி, அதையே நெருப்பாக பயன்படுத்தினான்.
தேவைகளே, கண்டுபிடிப்புகளின் தாய் என்பர். அதுபோல் ருசியான உணவு தேவைதான், சமையல் என்ற செயலை கண்டுபிடித்தது.
ஜோதிடம், நெருப்பு காரகமாக செவ்வாயைக் குறிப்பிடுகிறது. எனவே சமையல் என்றால் செவ்வாய்தான்.
ராசிகளை நெருப்பு, பூமி, காற்று, நீர் என பிரித்திருக்கிறார்கள். இதில் நெருப்பு ராசிகள் மேஷம், சிம்மம், தனுசு இவையாகும்.
ஜோதிடத்தில் 12 பாவங்கள் உண்டு. ஒவ்வொரு பாவமும் நிறைய காரக பலன் கொண்டது. இதில் 11-ஆம் பாவம் சமையலைக் குறிக்கிறது.
சமையலும் கிரக பாத்திரங்களும்
செவ்வாய், செம்பு பாத்திரங்களை குறிப்பார். ஆனால் செவ்வாய் பூமிகாரகன். எனவே சமையலுக்கு மிகவும் ஏற்புடையது மண் பாத்திரங்கள்தான்.
செவ்வாய் சுபத்தன்மையுடன் சூரியன்கூட சேர்ந்து இருந்தால், தாமிரம் பூசிய பாத்திரங்களை பயன்படுத்துங்கள். செவ்வாய்+சந்திரன்=ஈய பாத்திரம். இந்நாட்களில் குக்கர் பாத்திரம் நல்லது. செவ்வாய்+புதன்= பித்தனை பாத்திரம் நல்லது. இதில் ஈயம் எனும் சந்திரனை கலந்து பயன்படுத்தவேண்டும். செவ்வாய்+சனி= இரும்பு வாண- ஏற்புடையது.
செவ

செவ்வாய்+ராகு=கருங்கல் பாத்திரம் பயன்படுத்தலாம்.
குரு+ தங்கம் =சுக்கிரன் வெள்ளிப் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்து வதில்லை.
செவ்வாய், புதன் வெகு பகை ஆதலால், கூடியமட்டும் பச்சை வண்ணமுடைய பாத்திரங்களை அடுப்பில் ஏற்றாதீர்கள்.
செவ்வாய் உச்சமும் நீசமும் சமையலும்
செவ்வாய், காலபுருசனின் 10-ஆமிடமான மகரத்தில் உச்சமடைகிறார். இடம் கொடுத்த சனி, இவர் வீடான மேஷத்தில் நீசமடைகிறார். செவ்வாய் கடுமையான உழைப்பு, சுறுசுறுப்பு, முதன்மை இவற்றின் காரகர். ஆனால் இடம் கொடுத்த சனி சோம்பேறித்தனம், கடைசியில் நிற்றல், மக்குத்தனம் இவற்றின் காரகர். எனவே செவ்வாய் சூடான, அசைவ உணவைக் குறிக்க, சனி, பழங்கஞ்சியை குறிப்பார்.
இதனால் மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று, மேஷத்தில் சனி நின்றால், செவ்வாயும், சனியும் பரிவர்த்தனையால், நீசபங்க ராஜயோகம் பெற்றுவிடுவர். இந்த அமைப்பு பெற்ற ஜாதகர்கள், தங்களுடைய கடுமையான உழைப்புமூலம் நல்ல சூடான, ருசியான, காரமான உணவை உண்பார்கள்.
இதன் மறுபுறமாக, இவர்களின் தொழில் சமையல் சார்ந்து அமையும். அதில் கடுமையாக உழைத்து, சூடான, ருசியான அசைவ உணவு விடுதி தொடங்கி ஓஹோவென்று வந்துவிடுவர்.
இதற்கு இன்னொரு காரணம். கால புருசனின் 11-ஆம் அதிபதி சனியுடன் பரிவர்த்த னையாலும் உண்டாகும்.
உங்கள் ஜாதகத்தில் இவ்வமைப்பு இருந்தால், சமையல் தொழிலை முயன்று பாருங்கள்.
செவ்வாய் நீசமும் சமையலும்
செவ்வாய் கடக ராசியில் நீசம் அடைவார். ஒரு நீர் ராசியில், நெருப்புக் கிரகம் நீசமாவதால் அங்கு சமையல் எனும் வினை அடிபடுகிறது. இதுவே செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாவார். தன் வீடுகளை பரிவர்த்தனை ஆக்கி, நீச நிலையில் இருக்கும்போது, அங்கு இரு கிரகமும் நீச நிலையில் இருந்து விடுபடுகின்றனர். நீசபங்க செவ்வாயும் சமையல் கலையில் மிளிரச் செய்வார். ஆம், இந்தமாதிரி ஜாதகர்கள் பழச்சாறு கடை, ஐஸ்க்ரீம் தயாரிப்பு கம்பெனி, கூல்ட்ரிங்ஸ் டீலர்ஷிப், ராகியை கூழாக்கி விற்பது, கரும்புச் சாறு கடை, பழைய சாதம் தயாரித்து விற்பது என இவ்விதமாக திரவம் சார்ந்த உணவுக் கடையை நடத்துவர்.
இம்மாதிரி அமைப்புள்ள ஜாதகர்கள், உங்கள் ஜாதக 11-ஆம் அதிபதி சுபமாக, இந்த செவ்வாயுடன் சம்பந்தமும் பெற்றால் மேற்கண்ட உணவு சார்ந்த சமையல் கடை தொடங்கலாம். செவ்வாய் நீசபங்கம் பெற்றாலும், நெருப்பு வேகம் குறையும். அதனால் மேற்கண்ட சமையலில் நெருப்பு பயன்பாடு குறைவதை கவனியுங்கள்.
12 லக்னத்தாரில், எந்த அமைப்பு சமையல் சார்ந்த தொழில் தரும்
மேஷ லக்னம்
நெருப்புக் கிரகம் செவ்வாய் உங்கள் லக்னாதிபதி மற்றும் 8-ஆம் அதிபதி. சமையலைக் குறிக்கும். பாவாதிபதி, 11-ஆமிட சனி. எனவே இந்த செவ்வாய், சனி பரிவர்த்தனை இருந்தால் தாராளமாகச் சமையல் தொழில் தொடங்கலாம். செவ்வாய், மேஷ லக்னத்துக்கு 8-ஆம் அதிபதியாகி, 10-ல் உச்சமடைவதால், உங்கள் உணவு விடுதி, பளிச்சென்று இல்லாமல் ஒருமாதிரி டல்லான இடத்தில் அமைந்திருக்கும். சில வேளைகளில், அது டாஸ்மாக் அருகே இருப்பதாலும் இருக்கலாம். அல்லது இடப்பற்றாக் குறையாகவும் அமையலாம். உங்கள் சமையல் ஸ்தானாதிபதி சனி என்பதால், அதுவும் ஒரு டல்லான ஓட்ட லைக் கொடுக்கும்.
உச்ச செவ்வாய், மேஷ லக்னத்துக்கு உத்திராட நட்சத்திரத்தில் உச்சம்பெற்று அமர்ந்தால், உங்களின் சமையல் அரசு குழந்தைகளுக்கு உணவளிப்பதாக அமையும். அல்லது ஆரோக்கியம் சார்ந்த சமையல் தயாரிப்பில் ஈடுபடுவீர்கள்.
செவ்வாய் திருவோண நட்சத்திரம் பெற்றால், பள்ளிக் குழந்தைகளின் பசியாற்றும் பணியில், சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். செவ்வாய் அவிட்ட நட்சத்திரம் பெற்றால், சிறைச்சாலையில் சமையல் செய்யும் காண்ட்ராக்ட் அல்லது மருத்துவமனை அல்லது அனாதை இல்லம், அல்லது அகதிகள் முகாம், இயற்கை பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடுவது என இவ்வித சமையல் வேலை இருக்கும்.
செவ்வாய், சனி நீசமாகி, நீசபங்கம் அடையாவிட்டால் சமையல் தொழில் தொடங்கக்கூடாது. இதுபோல் செவ்வாய் நீசபங்கம் ஆகாமலிருந்தாலும், கடை திறக்கக்கூடாது. செவ்வாய், சனி கெட்டுப்போயிருந் தால் உணவு சாப்பிடலாமே தவிர, கடை பேச்சே கூடாது. அட வீட்டிலேயே ஒழுங் காக சமைக்க வராது.
ரிஷப லக்னம்
உங்கள் லக்னத்துக்கு செவ்வாய் 12 மற்றும் 7-ஆம் அதிபதி. செவ்வாய் உச்சமானால், உங்கள் ரிஷபத்துக்கு, 9-ல் உச்சமடைவார். இதனால் அனேகமாக கோவில் மடப்பள்ளி பிரசாத தயாரிப்பு அல்லது கோவிலில் பிரசாத ஸ்டால் தயாரிக்கும் சமையல் வேலையில் ஈடுபடுவீர்கள். மேலும் பெரிய திருமணம், அரசாங்க விருந்து, சமபந்தி போஜனம், அன்னதான தயாரிப்பு என இவ்வகை சமையல் தொழில் தொடங்குவீர்கள். இதில் செவ்வாய் உத்திராட நட்சத்திரத்தில் நின்றால் பள்ளி கல்வி சம்பந்த சமையல், திருவோண நட்சத்திரத்தில் நின்றால் சமையல் தயாரிப்பு ஒப்பந்தம், அவிட்ட நட்சத்திரத்தில் இருந்தால், கல்யாண சமையல் என உணவு தயாரிப்பில் அசத்துவீர்கள்.
செவ்வாய் நீசமாகி இருப்பின் உணவு சமையல் ஒப்பந்தம் செய்யக்கூடாது.
உங்கள் சமையல் தொழில் செழிக்க எப்போதும் கல்யாணக் கோல முருகரை தரிசிக்க வேண்டும். மேலும், உங்கள் ஜாதகத்தில் 11-ஆம் அதிபதி நீசம் ஆனாலும், உச்ச செவ்வாயோடு சேர்ந்து, யோக பங்கம் தருவார்.
நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், குரு இருவரும் உச்சம் ஆகக்கூடாது. அப்படி அமைப்பு இருப்பின் சரி இருக்காது. அதை மட்டும் கொஞ்சம் கவனித்தில் வைத்துக்கொள்ளவும்.
மிதுன லக்னம்
உங்கள் மிதுன லக்னத்துக்கு நெருப்பு கிரகமான செவ்வாய்தான் 11-ஆம் அதிபதி. ஆனால் பரிதாபம், அவர் உச்சமாவது உங்களின் 8-ஆமிடத்தில். எனவே இது ரொம்ப நல்ல அமைப்பாக இருக்குமா என நூறு சதவிகிதம் உறுதியாக கூற இயல வில்லை. ஆனால் செவ்வாய் மேஷத்தில், 11-ஆமிடத்தில் ஆட்சியாக இருந்தால், சமையல் தொழிலை மிக தாராளமாக செய்யலாம். உங்களின் 6-ஆமிடமான விருச்சிகத்தில் ஆட்சியாக இருந்தாலும், சமையல் பணியாளராக இருக்கமுடியும்.
செவ்வாய் உச்சமாக இருந்து உத்திராட நட்சத்திரத்தில் நின்றால் சமையல் செய்து, வேறு ஒருவரின் பிராண்ட் பெயரில் விற்க ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவேண்டும். திருவோண நட்சத்திரத்தில் நின்றால் சிறிய அளவில் குடும்பங்களுக்கு செய்து கொடுப் பது நல்லது.
அவிட்ட நட்சத்திரத்தில், செவ்வாய் நின்றால், சமையல் செய்யும் வேலை ஆட்களை, பாத்திரங்களை மட்டும் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பது சிறப்பு.
கூடியமட்டும் மிதுன லக்னத்தார் சமையல் தொழில் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம். உங்கள் மிதுன லக்னாதிபதி புதனுக்கும், நெருப்புக் கிரகம் செவ்வாய்க்கும் ஆகவே ஆகாது. எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும். யோசித்து சமையல் தொழிலில் ஈடுபட வேண்டும். அருகிலுள்ள வேலுடன் உள்ள முருகரை வழிபடவேண்டும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845