நல்ல ஒரு உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது தான் இன்றைய சூழ்நிலையில் ஒரு மிகச்சிறந்த செல்வமாகும். ஆரோக்கிய விஷயத்தில் ஜோதிடரீதியாக பார்க்கின்றபொழுது நிறைய கருத்துகள் இருக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய நோயாக இருப்பது நீரிழிவு நோய் என்ற சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை வியாதி என்பது ஒருவருக்கு இருக்கிறது என தெரியாமலே பலர் வாழ்ந்து வருகிறார்கள். சர்க்கரை வியாதி உணவு பழக்க வழக்கத்தாலும் ஒருசிலருக்கு பரம்பரை நோயாக ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி ஏற்பட்டால் ஒருவருக்கு உடல் உறுப்புகள் படிப்ப
நல்ல ஒரு உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது தான் இன்றைய சூழ்நிலையில் ஒரு மிகச்சிறந்த செல்வமாகும். ஆரோக்கிய விஷயத்தில் ஜோதிடரீதியாக பார்க்கின்றபொழுது நிறைய கருத்துகள் இருக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய நோயாக இருப்பது நீரிழிவு நோய் என்ற சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை வியாதி என்பது ஒருவருக்கு இருக்கிறது என தெரியாமலே பலர் வாழ்ந்து வருகிறார்கள். சர்க்கரை வியாதி உணவு பழக்க வழக்கத்தாலும் ஒருசிலருக்கு பரம்பரை நோயாக ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி ஏற்பட்டால் ஒருவருக்கு உடல் உறுப்புகள் படிப்படியாக பாதிக்கக் கூடிய நிலை உண்டாகிறது. கட்டுப்பாடோடு இருந்தால் மட்டுமே ஆரோக்கியத்தை பேணிக்காக்க முடியும்.
யார் ஜாதகத்தில் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என பார்க்கின்றபொழுது, ஒருவர் ஜாதகத்தில் லக்ன பாவத்திற்கு 4, 6-ஆமிடங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் நல்ல ஜீரண சக்தி ஏற்பட்டு நோயில்லா வாழ்க்கை ஏற்படும். நவகிரகங்களில் சுக்கிரன் சர்க்கரை வியாதிக்கு மிக முக்கிய காரகராக விளங்குகிறார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் நல்ல ஆரோக்கியம் இருக்கும். சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் பலவீனமாக இருப்பதும், பாவ கிரக சேர்க்கையோடு இருப்பதும் வக்ரகதியில் இருப்பதும் நல்ல அமைப்பு அல்ல. பொதுவாக சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்திருந்து சுக்கிரன் பலவீனமாக இருக்கின்ற சமயங்களில் சுக்கிரனின் தசை, புக்தி நடைபெற்றாலும், சுக்கிரனுடன் சேர்க்கைபெற்ற பாவ கிரகங்கள் தசை, புக்தி நடைபெற்றாலும் சர்க்கரை வியாதியின் உக்கிரம் சற்று அதிகரிக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜல ராசி என வர்ணிக்கக்கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் 2 அல்லது 3 பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் ஒருவருக்கு சர்க்கரை வியாதி எளிதில் ஏற்படுகிறது. அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப்பெற்றாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.
காலபுருஷ தத்துவப்படி 7-ஆவது ராசி என வர்ணிக்கக்கூடிய துலா ராசியில் அதிக பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுப கிரக பார்வையின்றி இருந்தால் சிறுநீரக சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதன்காரணமாக சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவகிரகங்களில் உஷ்ண கிரகம் என வர்ணிக்கக்கூடிய சூரியன், செவ்வாய் இணைந்து ஜல ராசியில் அமையப்பெற்றாலும், சூரியன், செவ்வாய்- சுக்கிரனை வலுவாக பார்த்தாலும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.
பொதுவாக ஜல கிரகமான சுக்கிரன், சந்திரன் அதிக பாவ கிரகங்களோடு இணைகின்றபொழுது சக்கரை வியாதி ஒருவரை எளிதில் தாக்குகிறது. ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி 6-ல் அமைந்து பாவ கிரக பார்வையோடு இருந்தாலும், 8-ஆம் அதிபதி 6-ல் அமைந்து பாவ கிரக பார்வையோடு இருந்தாலும் அவர்களுக்கு சர்க்கரை வியாதி உண்டாகி றது. இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் பலவீனமான கிரகங்களுடைய தசை, புக்தி நடக்கின்ற பொழுது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதன்மூலமாக நீண்ட ஆயுளோடு வாழமுடியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.