Advertisment

தவறான வாழ்வைத் தேர்வு செய்ய ஜோதிட ரீதியான காரணங்கள்! -முனைவர் முருகு பாலமுருகன்

exam


ன்றைய நிலையில் நல்ல ஒரு ஆரோக்கியத்துடன் வாழ்வதுதான் மிக முக்கியம். ஒருசிலர் தனது உணவு பழக்க வழக்கத்தால் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்கிறார்கள். ஒருசிலர் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மது பழக்கத்தால் தங்களது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஒருசிலர் தனது மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் மது போன்ற தவறான பழக்க வழக்கத்திற்கு சென்று தனது வாழ்க்கை பாதையை தவறான நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். 

Advertisment

ஜோதிடத்தில் இதற்கான கிரக அமைப்புகளை பார்க்கின்ற பொழுது பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களில் தலையாய கிரகமான சந்திரன் பலமாக இருந்தால் நல்ல மனோ தைரியத்துடனும் நல்ல பழக்க வழக்கத்துடனும் அந்த ஜாதகர் இருக்க முடியும். நவகிரகங்களில் சந்த


ன்றைய நிலையில் நல்ல ஒரு ஆரோக்கியத்துடன் வாழ்வதுதான் மிக முக்கியம். ஒருசிலர் தனது உணவு பழக்க வழக்கத்தால் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்கிறார்கள். ஒருசிலர் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மது பழக்கத்தால் தங்களது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஒருசிலர் தனது மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் மது போன்ற தவறான பழக்க வழக்கத்திற்கு சென்று தனது வாழ்க்கை பாதையை தவறான நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். 

Advertisment

ஜோதிடத்தில் இதற்கான கிரக அமைப்புகளை பார்க்கின்ற பொழுது பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களில் தலையாய கிரகமான சந்திரன் பலமாக இருந்தால் நல்ல மனோ தைரியத்துடனும் நல்ல பழக்க வழக்கத்துடனும் அந்த ஜாதகர் இருக்க முடியும். நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன் ஆகும். மனோகாரகன் சந்திரன் சுப கிரக தொடர்போடு இருந்து சுப கிரக நட்சத்திரத்தோடு இருந்தால் அவருக்கு நல்ல பழக்க வழக்கங்களும், நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவழக்கக்கூடிய உணவுப் பழக்க வழக்கங்களும் கிடைக்கிறது. 

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக அமைய பெற்றிருந்தாலும் சந்திரன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரக சேர்க்கை பெற்று இருந்தாலும், பாவ கிரக நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு மன உறுதியற்ற நிலை மன தெளிவற்ற நிலை மது போன்ற தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.

பொதுவாக சந்திரன் பாவ கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், பலவீனமாக இருந்து அதன் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது அந்த ஜாதகருக்கு மது போன்ற தவறான பழக்க வழக்கங்கள் ஏற்படுகிறது. 

அதுபோல ஒருவருக்கு நவகிரங்களில் குரு சனி போன்ற கிரகங்கள் மிக முக்கிய கிரகமாகும். குரு நல்ல கிரக தொடர்போடு இருந்தால் நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும். குரு- தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சனி, ராகு போன்ற பாவ கிரக தொடர்போடு இருந்து சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலும் தவறான பழக்கவழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். 

அதுபோல நீண்ட ஆயுளுக்கும் சிறப்பான ஆரோக்கியத்திற்கும் காரக கிரகமாக விளங்கக்கூடிய கிரகமான சனி ஒருவர் ஜாதகத்தில் ராகு சேர்க்கை பெற்றாலும், ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும், கேது சேர்க்கை பெற்றாலும், கேது நட்சத்திரங்களில் சனி அமையப்பெறுகின்றபொழுதும் தன்நிலை மறந்து தேவையற்ற தவறான பழக்க வழக்கங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு, சந்திரன் போன்ற கிரகங்களுக்கு பாவ கிரக தொடர்புகள் ஏற்படுகின்றபொழுது அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடிய ஒரு அனுகூல மட்டும் நிலையானது உண்டாகிறது. 

பாவ கிரக தசாபுக்தி நடைபெறுகின்றபொழுது தேவையற்ற பழக்க பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகிறது. அந்த நேரங்களில் மனதை ஒருநிலைப்படுத்தி இறை வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலமாகவும், உடனிருப்பவர்கள் அவர்களுக்கு சரியான ஒரு வழி காட்டுதலை ஏற்படுத்துவதன் மூலமாகவும் தேவையற்ற பழக்க வழக்கங்களை குறைத்துக்கொள்ள முடியும். 

சில நாட்களுக்குமுன்பு ஒரு பெரிய பதவியில் இருக்கக்கூடிய நபர் சந்திரன் கேது சேர்க்கை பெற்று, கேது தசையில் சந்திர புக்தி நடக்கும் தருவாயில் அந்த ஜாதகருக்கு மனைவியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் கடுமையான மது பழக்கத்திற்கு அடிமையானது மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக பல லட்சத்தை இழந்துவிட்டார். பொதுவாக கேது தசை நடைபெற்றால் இல்லற வாழ்க்கையில் ஒரு ஈடுபாடு இல்லாத நிலையும், அதிலும் குறிப்பாக சந்திர புக்தி நடக்கின்றபொழுது மனது ஒருநிலைப்படுத்த முடியாத நிலை உண்டாகி தேவையற்ற பழக்க வழக்கங்களால் கடுமையான இழப்புகளை அந்த ஜாதகர் சந்திக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகியது. பொதுவாக இதுபோன்ற தசைபுக்தி நடைபெறுகின்றபொழுது உடனிருப்பவர்கள் சற்று அனுசரிமையாக நடந்து கொள்கின்றபொழுது வீண் இழப்பு களிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.

செல்: 7200163001

bala041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe