சுமதி, வேலூர் tylerdurden7859@gmail.com, sumathisozhan@gmail.com
தன் எதிர்காலம், ஆரோக்கியம், தொழில், அரசியல் வாழ்க்கை என்பது பற்றி கேட்டுள்ளார்.
7-6-1973-ல் பிறந்தவர். துலா லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். தொழில்: இவருக்கு சந்திர மங்கள யோகம் உள்ளது. எனவே இவர் மனை, வீடு வாங்கி விற்கும் தொழில் செய்யலாம். அதிலும் இவரது ஜாதகப்படி, புதுவீடு இல்லாமல், பழைய வீடுகளை வாங்க, விற்கும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில் சரிவரும்.இவருக்கு நீர் சார்ந்த நோய்கள் இருந்துகொண்டே இருக்கும். நீரழிவு நோய் இருக்க வாய்ப்பு தெரிகிறது. ஆங்கில மருந்தோடு, சித்தா மருந்தையும் எடுத்துக்கொள்ளவும்.உங்களுக்கு அரசியல் ஈடுபாடு அதிகமிருக்கும். அது உங்களின் விருப்பத் தொழிலாளராகவும் இருக்கும். எனினும் உங்கள் ஜாதகப்படி, அரசிய-ல் மிகப்பெரிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. உங்கள் பகுதி அளவில் ஒரு பதவி கிடைக்கும். அதுவும் வேறு மத மக்கள்
சுமதி, வேலூர் tylerdurden7859@gmail.com, sumathisozhan@gmail.com
தன் எதிர்காலம், ஆரோக்கியம், தொழில், அரசியல் வாழ்க்கை என்பது பற்றி கேட்டுள்ளார்.
7-6-1973-ல் பிறந்தவர். துலா லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். தொழில்: இவருக்கு சந்திர மங்கள யோகம் உள்ளது. எனவே இவர் மனை, வீடு வாங்கி விற்கும் தொழில் செய்யலாம். அதிலும் இவரது ஜாதகப்படி, புதுவீடு இல்லாமல், பழைய வீடுகளை வாங்க, விற்கும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில் சரிவரும்.இவருக்கு நீர் சார்ந்த நோய்கள் இருந்துகொண்டே இருக்கும். நீரழிவு நோய் இருக்க வாய்ப்பு தெரிகிறது. ஆங்கில மருந்தோடு, சித்தா மருந்தையும் எடுத்துக்கொள்ளவும்.உங்களுக்கு அரசியல் ஈடுபாடு அதிகமிருக்கும். அது உங்களின் விருப்பத் தொழிலாளராகவும் இருக்கும். எனினும் உங்கள் ஜாதகப்படி, அரசிய-ல் மிகப்பெரிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. உங்கள் பகுதி அளவில் ஒரு பதவி கிடைக்கும். அதுவும் வேறு மத மக்கள் இருக்கும் இடமாக இருந்தால் நல்லது.நடப்பு ராகு தசையில் சூரிய புக்தி 2026 ஏப்ரல்வரை. அதன்பிறகு ஒரு வருடம் சந்திர புக்தி. அதில் அரசியல் பதவிக்கு போட்டியிடுங்கள்.உங்களுக்கு ராகு தசை 2028 நவம்பர் வரை. அதன்பிறகு ஆரம்பிக்கும் குரு தசை நீச தசையாகும். அதில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.குகைக்குள் அமர்ந்துள்ள லட்சுமி நாராயணரை வணங்குவது மிக சிறப்பு.
வி. அருணாசலம், திருவண்ணாமலை. vijayalakshmiarunachalam96@gmail.com
சொந்த வீடு, ஆயுள் பற்றி கேட்டுள்ளார்.
6-4-1959-ல் பிறந்தவர். மகர லக்னம், கும்ப ராசி. உங்கள் ஜாதகப்படி, நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி 2026 ஜனவரிவரை. அடுத்துவரும் புதன் புக்தியில், உங்கள் வாரிசுகள் கடன்மூலம் வீடு வாங்குவர். குரு, 8-ஆம் அதிபதியை பார்ப்பதால் நல்ல ஆயுள் உண்டு.தற்போதைய ஏழரைச்சனிக்கு சனீஸ்வர பகவானை வணங்கவும். சுக்கிர தசையின் மேன்மைக்கு மகாலட்சுமியை வணங்கவும்.
சர்மா சாரா (sharmasara150@gmail.com)
இதுவரையில் பெயர் குறிப்பிடாமல் இரண்டுமுறை கேள்வி- பதிலில் இடம் பெற்றுள்ளார். தற்போதைய கேள்வி 2025 டிசம் பருக்குள் தனியார் வேலை கிடைக்குமா எத்துறையில் கிடைக்கும்?
14-9-1996-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். உங்களுக்கு சந்திரன்+ராகு இருப்பதால் ஆயிரத்தெட்டு சந்தேகம் உண்டாகிறது. உங்களுக்கு 2027 ஏப்ரல் மாதத்திற்குள் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவரையில் உடைந்த கட்டடம் சீர் செய்வது, இடிந்த பள்ளிகள் வேலை என இம்மாதிரி முழுமை இல்லாத வேலை பார்க்க வேண்டும். இவர் ஜாதகப்படி, இவருடைய வேலை யின் தன்மை, பெருமையாக, கெத்தாக நாலு பேரிடம் சொல்லும் அளவிற்கு அமையாது. குலதெய்வத்தை நன்கு வணங்கவும்.
ஆறுமுகம், வீரவநல்லூர், திருநெல்வே- மாவட்டம். (ashokdigital50@gmail.com)
தன் மகன் ஜாதகப்படி, ஐ.ஏ.எஸ் போன்ற படிப்பு படிக்க இயலுமா? இளைய சகோதர வாய்ப்பு உள்ளதா?
மகன் 10-9-2008-ல் பிறந்தவர். தனுசு லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இவருக்கு கால சர்ப்ப யோக ஜாதகம். இவரது சொந்த முயற்சியில் முன்னேறுவார். இவருக்கு புதன் உச்சம். இவருக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் மூன்றும் ஒரே நட்சத்திரம் சாரத்தில் நிற்கின்றனர். எனவே மிக உயர்ந்த படிப்பான ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுகளில் மிக தடைகளை சந்திப்பார். எனவே இவர் ஐ.ஏ.எஸ் எனும் தேர்வில் அதன் கீழ் அடுத்துள்ள பெரிய அரசு பதவியை வகிக்க இயலும். செவ்வாய் இவருக்கு அம்சத்தில் நீசம். எனவே காவல்துறை சம்பந்த பணிக்கு முயற்சிக்க வேண்டாம். குலதெய்வத்தை நன்கு வணங்கி, வேண்டிக்கொள்ளவும்.ஜாதகப்படி, இளைய சகோதரத்துக்கு வாய்ப்பில்லை.
ராஜ்குமார்.
தனது உடல்நிலை பற்றி கேட்டுள்ளார்.
3-8-1988-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு, ஏழரைச்சனி நடந்துவருகிறது. நடப்பு சந்திர தசை. அது 8-ஆமிட அதிபதி தசை. இதன் சாரநாதரும் 8-ல் உள்ளார். எனவே சற்று மருத்துவச் செலவு இருக்கும். விஷ்ணு துர்க்கையை ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வணங்கவும். குருபகவான் சனியை பார்ப்பதால் ஆயுள் பலமுண்டு.விஷ்ணு துர்க்கை அபிஷேகத்திற்கு பாலும், அர்ச்சனைக்கு குங்குமம் மற்றும் பச்சைக் கதிர் வாங்கிக் கொடுங்கள்.ஏழரைச்சனிக்கு, சனீஸ்வர பகவானை வணங்கவும்.
பெயர் வெளியிட விரும்பாதவர்.
அரசியலில் தனது எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார்.
14-1-1980-ல் பிறந்தவர். துலா லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். கால சர்ப்ப தோஷ ஜாதகம். குரு- சூரியன் பரிவர்த்தனை. நடப்பு சுக்கிர தசை. இதில் ராகு புக்தி 2026 ஏப்ரல்வரை. இதில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும், அரசிய-ல் நல்ல நிலையை எட்டி பிடிக்க முடியாது. அடுத்துவரும் குருபுக்தி உங்களுக்கு கண்டிப்பாக அரசிய-ல் நல்ல பதவியை கொடுக்கும். உங்கள் ஜாதக அமைப்புபடி, முடிந்தபோது, சூரியனார் கோவில் தஞ்சாவூர்- சென்று வணங்கி, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை செல்வது சிறப்பு.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us