காமாட்சி, மதுரை. [email protected]
தனது தங்கையின் உயர்கல்வி, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
சகானா: 24-7-2008-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி ஓடுகிறது. நடப்பு கேது தசையில், புதன் புக்தி நடக்கிறது. இது 2026 ஆகஸ்ட்வரை இருக்கும். பின் சுக்கிர தசை ஆரம்பம். சுக்கிர தசையில், இந்தப் பெண் கல்வி சார்ந்து வேறிடம் சென்று விடுவாள். உயர் கல்வி, மக்கள் தொடர்பு+ வணிகம்+ கணினி என இந்த மூன்றும் சேர்ந்ததாக அமையும். இந்த சுக்கிர தசையில் நன்கு படிப்பாள். முத-ல் படிப்பு முடியட்டும். அப்புறம் திருமணம் பற்றி யோசிக்கலாம். ஹயக்ரீவரை வணங்க கல்வி மேம்படும்.
ஈசானமூர்த்தி.
இவர் தனது வேலையைப் பற்றியும், வெளிநாடு செல்ல முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
22-9-2000-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். சனி தசையில் ராகு புக்தி 2026 ஜனவரிவரை நடக்கிறது. அதனால் எந்த முடிவு எடுப்பது என மனம் குழப்பம் அடைகிறது. அடுத்து வரும், குரு புக்தியில் வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். அடுத்துவரும் புதன் தசை நல்ல பலன்கள் கொடுக்கும். புதன் உங்களுக்கு உச்சம்.உங்கள் லக்னாதிபதி, கேது சாரத்தில் இருப்பதால், அங்காரக சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுங்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் பிள்ளையார் வழிபாடு சிறப்பு.
திருமுருகன், சென்னை.
உடல்நலம் மற்றும், பணவரவு பற்றி கேட்டுள்ளார்.
9-12-1999-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். இவருக்கு இப்போது, 6-ஆமிட தசை நடந்துகொண்டிருக்கிறது. இதில் இவருக்கு வேலையும் கிடைத்திருக்கும். கூடவே நிற்கும் பாதகாதிபதி, வேலையில் தொல்லை அல்லது உடல்நலக் குறைவை கொடுக்கிறார்.இவரது தன ஸ்தானத்தில், சனி நீசபங்கம். எனவே பணவரவு என்பது சற்று தடைபட்டு கிடைக்கும். எனினும் பணத் தட்டுப்பாடு கிடையாது. ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய பகவானுக்கு, விளக்கேற்றி வழிபட்டால் உடல்நலம் சீரடையும்.
பெயர், ஊர் வெளியிடவில்லை.
இவர் சண்டை குணம் உடையவராக இருக்கிறார். தனது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது இவரது கேள்வி?
5-5-2005-ல் பிறந்துள்ளார். கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவருக்கு லக்னாதிபதியும், பாதகாதிபதியும் பரிவர்த்தனை. லக்னாதிபதி நீசம்- நீசபங்கம். கூடவே சந்திரனும் ராகுவும். மேலும் சூரியன் 8-ஆமிடத்தில் உச்சம். 6-ஆமிடத்தில் செவ்வாய். இந்த ஜாதகர் சண்டையிடாமல் இருந்தால்தான் ஆச்சரியம். நடப்பு கேது தசை. அவர் செவ்வாய் சாரத்தில் நிற்கிறார். இந்த அமைப்புபடி, இவருக்கு நோய், சண்டை எதிரிகள் அதிகமாகும். இந்த ஜாதகர் 26 வயதுவரை இப்படித்தான் இருப்பார். அதன் பிறகுவரும் சுக்கிர தசை எதிர்பாராதவிதத்தில் நல்ல வாழ்வைக் கொடுக்கும்.கேது தசை, அதிக பாதிப்புக்கள் கொடுக்காமல் இருக்க, அருகிலுள்ள துர்க்கையை, செவ்வாய்க்கிழமைதோறும் வணங்கவும்.
சௌந்தரராஜன், சேலம்.
இப்போது மறுமணத்திற்கு முயன்று கொண்டிருக்கிறேன். எப்போது நடக்கும்?
4-6-1986-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் ராகு புக்தி. இதில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள், ஏற்கெனவே விவாகரத்தான பெண்ணுடன் திருமணம் நடக்கும். மறுமணம் சிறக்க, அரச மரத்தடியிலுள்ள, இரு பாம்புகள் இணைந்த சிலைக்கு, பாலாபிஷேகம், திங்கட்கிழமை செய்யவும். மறுமணம் முடியும்வரை செய்தால் போதுமானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/jothidamanswer-2025-12-05-10-57-25.jpg)