ஜெயலட்சுமி, உசிலம்பட்டி,
தனது மகன் அபினேஷ் திருமணம், வேலை பற்றி கேட்டுள்ளார்.
அபினேஷ்: 11-6-1993-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கும்ப ராசி. சதய நட்சத்திரம். இவருக்கு, சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், இவர் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொள்வார். லக்னத்துக்கு 2-ல் கேது. 8-ல் ராகு மற்றும் 4-ல் செவ்வாய். எனவே நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளது.நடப்பு சனி தசையில் புதன் புக்தி ஓட்டம். இது 2027 ஜூலைவரை உள்ளது. இதில் 2026 மே மாதத்திற்குள் திருமணம் முடிந்துவிடும்.இவருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இவர் கும்ப ராசி. ஆதலால், ஏழரைச்சனி நடப்பு. சனீஸ்வரரையும், ஆஞ்சனேயரையும் வணங்குவது சிறப்பு.
காயத்ரி, புதுக்கோட்டை 19-10-1999-ல் பிறந்தவர். அரசு வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
மகர லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். ராசியில் குரு, செவ்வாய் பரிவர்த்தனை. மற்றும் சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனை. சனி நீசபங்கம் பெற்றுள்ளார். சனி தனது 10-ஆம் பார்வையால் சந்திரனை பார்க்கிறார். எனவே உங்களுக்கு முன்பே ஒரு திருமணம் நடக்கும் அளவிற்கு வந்து தடைப்பட்டிருக்கும். நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. இது 2028 வரை உள்ளது. இதில் 2026, பிப்ரவரிக்குள் திருமணம் நடக்கும். 2028-க்குள் அரசு வேலை கிடைத்து விடும். அதற்கு கொஞ்சம் செலவு மற்றும் இடமாறுதலும் ஆகும்.இவ்விதம் சனி, சந்திரன் சம்பந்தம் உள்ளவர்கள், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர் என ஏதோ ஒரு திரவ சம்பந்தப் பொருளை காணிக்கையாக்கி வணங்கவும்.
வி.பி. சுப்பிரமணியன், விக்ரமசிங்கபுரம். தனது மகனின் திருமணம் மற்றும் வரப்போகும் பெண் விவரம் பற்றிக் கேட்டிருக்கிறார்.
பிரவீண்குமார்: 17-11-1996-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்தில் ராகு- 7-ல் கேது. நாக தோஷம். லக்னத்திற்கு 12-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம். இவருடைய ஜாகத்தில் 5, 7-ஆம் அதிபதிகள் சமபந்தம். எனவே விருப்பத்திருமணம் நடக்கும். பெண் வடக்குத் திசையில் இருந்து அமைவாள். பையனுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் நீச வர்க்கோத்தமம் பெற்று, பலவீனமாக உள்ளார். பையனும் பெண்ணும் ஒற்றுமை யாக இருப்பார்கள். மற்றபடி எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.நடப்பு ராகு தசையில் சந்திரன் புக்தி 2026 அக்டோபர்வரை. அதற்குள் பையன் அவன் நினைத்ததை சாதித்துக்கொள்வான்.ராகு தசை நடப்பதால், உங்கள் குலதெய்வத்துக்கு, தண்ணீர் பம்ப் அல்லது போர் போட்டுகொடுப்பது என இந்த மாதிரி வேண்டி கொள்ளுங்கள். ரமேஷ்: இவரது திருமணம் பற்றி, இவரது சகோதரர் வினவியிருக்கி றார். 21-11-1974-ல் பிறந்தவர். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் 8-ல் மறைவு. 7-ஆம் அதிபதி சனி 12-ல் மறைவு. 3-ஆம் அதிபதி புதன், செவ்வாயுடன் ஒரே நட்சத்திரம் பெற்று கிரக யுத்தம் நிலை அடைந்துள்ளார். இவருடைய 5-ஆம் வீட்டில் நின்ற சூரியன், ராகு, சுக்கிரன் என இந்த மூன்று கிரகங்களும் ஒரே நட்சத்திர சாரத்தில் உள்ளனர்.நடப்பு சனி தசையில் ராகு புக்தி 2027 ஏப்ரல் வரை. இதில் 2026, பிப்ரவரி மாதம், இவரது தாயார் நிலை கவனிக்கப்பட வேண்டும். அதன் பின்வரும் காலகட்டத்தில், ஒன்று, இவர் வேறு மதப் பெண்ணை இழுத்துக்கொண்டு செல்வார். அல்லது இவருக்கு உடம்பு பலவீனம் ஏற்பட்டு மருத்துவ உதவி எடுத்துக்கொள்வார்.இவருக்கு ஏழரைச்சனி மற்றும் சனி தசை நடக்கிறது. சிவனையும், ஆஞ்சனேரையும் வணங்குவது நல்லது.
உண்ணாமலை நாச்சியப்பன். தனது பெண் திருமணம் பற்றி கேட்டுள் ளார்.
பெண்: 5-7-1996-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. மற்றும் ராசிக்கு 4-ல் செவ்வாய். மேலும் லக்னத்துக்கு 8-ல் செவ்வாய். எனவே நாக தோஷமும் செவ்வாய் தோஷமும் உள்ளது.நடப்பு சனி தசையில் சந்திர புக்தி. கும்ப ராசிக்கு ஏழரைச்சனியும் நடக்கிறது. இது 2027 வரை நடக்கிறது. அதற்குள் திருமணம் நடந்துவிடும். என்ன ஒன்று நீங்கள் எத்தனை உசத்தியாக மாப்பிள்ளைகளை காட்டினா லும், அவருக்கு யாரை பிடிக்கிறதோ, அந்தப் பையனைத்தான் கட்டிகொள்வாள். இதனை லவ் மேரேஜ் என்றும் முழுமையாகக் கூறமுடியாது. எனினும் திருமண விஷயத்தை பெண்ணின் விருப்பத்தை கேட்டு செய்யவும்.உங்கள் ஊர் அம்மனுக்கு, அம்மன் தாலி, சேலை, மாலை சார்ற்றிவிட்டு இந்தப் பெண்ணிற்கு திருமணம் முடிக்கவும். சனி தசை, சந்திர புக்தியின்போது இந்த பரிகாரம் செய்துவிட்டு, திருமணம் முடித்தால் நல்லது.கே. மணிகண்டன்: 11-4-1987-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். சென்ற இதழில் கேட்ட கேள்வியின் பதிலில், மறுபடியும் கேள்வி கேட்டுள்ளார்.நடப்பு ராகு தசையில், புதன் புக்தி 2027 ஏப்ரல்வரை உள்ளது. கிரகண நிலையின் பரிகாரத்துக்கு சுருட்டப்பள்ளி சென்று வணங்க வேண்டும். ராகு தசை 2035 ஏப்ரல் வரை உள்ளது.இனிமேல், உங்களுக்கு தொழில் வாய்ப்பு களில், உங்கள் மனைவியை பங்குதாராக சேர்த்துக்கொள்ளவும். ஓரளவு நன்றாக நடக்கும்.அஷ்டாமாதிபதி அதிர்ஷ்டம் தருவாரா எனும் கட்டுரை வரப்போகிறது. படித்து தெரிந்துகொள்ளவும்.
பத்மா, திருநெல்வேலியில் இருந்து தனது மகனின் வேலை மாற்றம் பற்றி கேட்டுள்ளார்.
மகன்: 27-2-2001-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம்.இவருக்கு 6-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் மற்றும் குருவுடன் பரிவர்த்தனை. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி, 2026 மார்ச்வரை. எனவே இந்த காலகட்டத்தைத் தவிர்த்துவிடவும்.அடுத்துவரும் குரு புக்தியில் நினைத்த நல்ல வேலை, இடமாற்றத்துடன் கிடைக்கும். உங்கள் ஊரில், பெருமாளும் தாயாரும் சேர்ந்துள்ள கோவிலில் தீபமேற்றியும், இனிப்பு விநியோகம் செய்தும் வணங்கவும்.