ஜி. பாஸ்கர், கும்பகோணம்.
வேலையில் பதவி உயர்வு, இன்க்ரிமெண்ட், வேலை மாற்றம் எப்பொழுது?.
8-3-1970-ல் பிறந்தவர். மீன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி ராசியில் 8-ல் அம்சத்தில் நீசம். சனி நீசபங்கம். வேலைக்குரிய 6-ஆம் அதிபதி 12-ல் நிறைய கிரகத்துடன்; கிரக யுதத்தில் உள்ளார். ஏதோ புண்ணியத்தில், விபரீத ராஜயோகம் மற்றும் குரு பார்வையால் வேலை கிடைத்துள்ளது. இதுவே பெரிய விஷயம். தற்போது ஏழரைச் சனி உள்ளது. நடப்பு சுக்கிர தசை. இது 8-ஆமிட தசை உச்சமாகி உள்ளது. சுக்கிர தசையில், செவ்வாய் புக்தி, 2026 ஜனவரி முடிய உள்ளது. இதில் நல்லது நடந்தாலும் சரியாக இருக்காது. 2026 பிப்ரவரியில் ஆரம்பிக்கும், ராகு புக்தி உங்களை கண்டிப்பாக, வெளிநாடு, வெளிமாநிலத்திற்கு அழைத் துச் செல்லும். உங்களின் லக்ன தோஷத்திற்கு இராமேஸ்வரம், நடப்பு சுக்கிர தசைக்கு, தாயாரும் பெருமாளும் சேர்ந்த ஸ்தலத்தில் துளசி மாலை, நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.
அண்ணா அன்பழகன், சென்னை- 93.
25 வயதி-ருந்து போராட்ட வாழ்க்கை. வரும் கடைசி தசையான சனி தசை எப்படியிருக்கும்?
7-1-1961-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். இவருடைய லக்னாதிபதி சனி, கூடவே குரு, புதன், சூரியன் ஆகியோர் உள்ளனர். இந்த கிரக யுத்தநிலை, ஜாதகர் ஒரு படி முன்னே போனால், பல படி பின்னே இழுத்துவிடும். இவருக்கு சனி- செவ்வாய் பார்வை உள்ளது. இதுவும் வாழ்வு தடை உண்டாக்கும். இதற்கு சிவ- விஷ்ணு ஆலயத்தை கூட்டி சுத்தப்படுத்த வேண்டும். நடப்பு குரு தசை 2027 செப்டம்பர்வரை. அதன்பின் வரும் சனி தசையில், சனி புக்திக்குபிறகு, இவர் தன் குடும்பத்தைவிட்டு வேறிடம் சென்று, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடத்தில் செட்டில் ஆகிவிடுவார். சனி தசையை கடைசி தசை என்று எழுதியுள் ளார். இவருக்கு ஆயுள் விருத்தி ஜாதகம். சனி தசை, இடமாற்றம், பொது ஜனங் களின் பழக்கம் என ஏற்படுத்தி தரும். குலதெய்வத்தை நன்கு வணங்கவும்.
ரிஷப், அருப்புக்கோட்டை.
வேலை, ஆயுள், ஆரோக்கியம், எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார்.
26-11-2007-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி 5-ஆமிடத்தில் நீசமாகி, புதனின் பரிவர்த்தனையால், நீசபங்க யோகம் பெற்றுள்ளார். இந்த நீச சுக்கிரன், இவருக்கு எப்போதும் அடிவயிற்று வலியை கொடுப்பார். அதனால் அவ்வப்போது, மருந்து எடுக்கும் நிலையுண்டு. 8-ல் அமர்ந்த, லாபாதிபதி குரு, ஆயுள் பெருக்கும் தருவார்.நடப்பு ராகு தசை 2025 நவம்பர்வரை. அதன்பிறகு ஆரம்பிக்கும் குரு தசை, சுய புக்திக்குபிறகு 2028 ஜனவரிக்குபிறகு, மேல் படிப்புக்கு வேறிடம் நகர்ந்துவிடுவார். எதிர்காலத்தில் அடிக்கடி வேலை, வேலையிடங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்.உங்கள் ஊரிலுள்ள வள்ளி, சேனாதிபதி சமேத முருகரை வணங்கவும். கண்டிப்பாக குலதெய்வத்திற்கு, வருடத் துக்கு ஒருமுறையாவது, சிறப்பான வழிபாடு செய்யவேண்டும்.
எல். சூரியா, மதுரை.
பி.ஈ. முடித்துள்ளதாகவும், இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றும் நிறைய நோய் தாக்கம் உள்ளதாகவும் இவை எப்போது சரியாகும் என்றும் கேட்டுள்ளார்.
7-7-2001-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். நடப்பு ராகு தசை உங்களுக்கு ராகு- 12-ல் இருந்து தசை நடத்துவதால், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். ராகு தசையில் சனி புக்தி. இதில் 2026 பிப்ரவரிக்குள், நீங்கள் நினைத்த வேலை இடமாற்றத்துடன் கிடைக்கும்.உங்கள் ஆரோக்கிய ஸ்தானாதிபதி செவ்வாய், வக்ரமாகி, புதன் சராம் பெற்றுள்ளார். எனவே உங்கள் உடல்நிலையை இந்த கிரக அமைப்பு மிக சிரமப்படுத்துகிறது. இதற்கு நரசிம்மருக்கு நெய் விளக்கேற்றி, பானகம் வைத்து வழிபட்டு, வினியோகம் செய்யவும்.ராகு தசை உங்களுக்கு 36 வயதுவரை உள்ளது. கொஞ்சம் சிரமம் தரத்தான் செய்யும். உங்கள் ஊர் காளியை பாதம் பற்றிக் கொள்ளவும். உங்கள் குலதெய்வத்துக்கு, பித்தளை விளக்கு காணிக்கை செலுத்தவும்; உடல்நிலை சீராகும்.
செல்வம், வேலூர்.
இவர் இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரம்மச்சாரியாக இருக்கிறேன். தொடர்ந்து கடனாளியாக இருக்கிறேன். இந்த ஜென்மம் எதற்காக படைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பதில் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.
26-1-1973-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. லக்னத்தில் கேது. 7-ல் ராகு, சுக்கிரன். ராசிக்கு 2-ல் செவ்வாய். நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன், ராகுவுடன், 7-ஆமிடத்தில், ராகு+சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் நின்று, களஸ்திர தோஷம் கொடுக் கின்றனர்.இவருடைய 7-ஆம் அதிபதி குரு, 8-ஆம் வீட்டில் நீச வர்க்கோத்தமம். ராசி, அம்சம் இரண்டிலும் நீசம்பெறுவது, நீச வர்க்கோத்தமம் ஆகும்.ஆண்களுக்குரிய 3-ஆம் அதிபதி 8-ல் மறைவு. ஆனால் அம்சத்தில் உச்சம். லக்னாதிபதி, 7-ஆம் அதிபதி, 3-ஆம் அதிபதி 8-ல் மறைவு. ஊருக்கு பிரம்மச்சாரியாக தெரிந்தாலும், இரகசிய தொடர்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. 5-ஆம் அதிபதி 7-ல் இருப்பது இதனை உறுதி செய்கிறது. சனி, செவ்வாய் பார்வை விருப்பத் திருமணம் தரும்.ரைட்டு, நடப்பு புதன் தசை. ராகு புக்தி 2026 ஜூலைவரை. இந்த காலகட்டத்தில் வேறு மதப் பெண், உங்களை வலுக்கட்டாயமாக, அறையில் வைத்து, ஒருத்தருக்கும் தெரியாமல் தா- கட்டவைத்து விடுவாள். அப்புறம், உங்கள் கடன் பிரச்சினையை அவளே பார்த்துக்கொள்வார்.என் ஜென்மம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டது என்று கேட்டுள்ளார். என்றைக்காவது, இவர் ஒழுங்காக இருப்பாரா என்று டெஸ்ட் பண்ணத்தான் இந்த பிறவி படைக்கப்பட்டுள்ளது.
பரிகாரம் ஒன்றும் வேண்டாம். சாமி பாவம்; விட்டுவிடுங்கள்.
மணிவண்ணன், திருவாரூர்.
திருமணம் எப்போது நடக்கும் எனக் கேட்டுள்ளார்.
21-12-1983-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம்.உங்கள் லக்னாதிபதி குரு, கேதுவுடன், விரய ஸ்தானத்தில், ஒரே நட்சத்திரத்தில் நிற்கிறார். இதனால் எந்த ஒரு விஷயமும் கைக்கூடி வராது. உங்கள் திருமணத்துக்கு உரிய 7-ஆம் அதிபதி புதனை, செவ்வாயும் சனியும் பார்க்கிறார்கள். இதனால் உங்கள் திருமணம் தாமதமாகிறது. ராசிக்கு 4-ல் செவ்வாய் தோஷம். உங்கள் ராசியில் 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம். எனவே விருப்பத் திருமணம் நடக்கும். வரும் பெண், திருமண வாழ்வில் சோதனையை அனுபவித்து, மீண்டு வந்திருப்பாள். நடப்பு சனி தசையில் குரு புக்தி 2026 நவம்பர்வரை. அதற்குள் உங்கள் திருமணம் நடந்து, நீங்களும் மனைவி இருக்கும் இடத்திற்கு நகர்ந்துவிடுவீர்கள்.நீங்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு சித்தரை, சீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், இராகவேந்திரர், ரமண மகரிஷி என தொடர்ந்து வணங்கவேண்டும்.
சங்கீதா, பரமக்குடி.
அரசு வேலை எப்போது கிடைக்கும். பூர்வீக சொத்து, சொந்த வீடு பற்றி கேட்டுள்ளார்.
8-6-1999-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். உங்கள் ஜாதக அமைப்புப்படி, எந்த விஷயமும் உடனே நடந்துவிடாது. ரொம்ப போராட்டத்திற்கு பிறகே நடக்கும். இப்போது மீன ராசிக்கு ஏழரைச்சனி ஓடுகிறது. நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2026 அக்டோபர்வரை. இதில் அரசு வேலை, ரொம்ப செலவு, நிறைய ஏமாற்றத்திற்குபிறகு கிடைக்கக்கூடும். அதுவும் ரொம்ப தூரம் தள்ளி கிடைக்கும்.புதன் தசை- குரு புக்தியில் பூர்வீக சொத்து வழக்கு தொடர்ந்து பெறுவீர்கள். முழுமையாக கிடைக்காது; பாதிதான் கிடைக்கும்.கடன் வாங்கி, சொந்த வீடு வாங்கமுடியும்.ஞாயிற்றுக்கிழமைதோறும், சிவனுக்கும் சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றவும்.
ரமேஷ், சென்னை.
தன் தாயாரின் உடல்நிலை பற்றி கேட்டுள்ளார். தாயார் 28-2-1953-ல் பிறந்துள்ளார்.
மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவருடைய ஜாதகத்தில், 8-ஆம் அதிபதி சனி உச்சம். எனவே தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு குரு தசை, சூரிய புக்தி. இப்போதைய காலத்தில், உடல்நிலை காரணமாக அவ்வப்போது, மருத்துவமனை சென்று திரும்புவார். அடுத்துவரும் சந்திர புக்தியில் கவனம் தேவை. நீங்கள் வீட்டில் விளக்கேற்றும்போது நெய் ஊற்றி, நெய் விளக்காக ஏற்றவும். பைரவருக்கு, சனிக்கிழமைதோறும் விளக்கேற்றி வணங்கவேண்டும்.