சிவராம்குமார், திருச்சி. [email protected]

நிலையான வேலை மற்றும் திருமணம் பற்றி கேட்டுள்ளார். 

6-9-2001-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம்.  இவருடைய ஜாதகத்தில் சந்திரன் கேமத் துருவ நிலையில் உள்ளார். மேலும், 6-ஆமிடத்தில், விரயாதிபதி இருக்கிறார். எனவே ஒரு வேலையில் சேர்ந்தோம். அதில் நிலையாக வேலை பார்த்தோம் என்ற கதையே இவருக்கு கிடையாது. இதற்கு வளர்பிறை ஏகாதசியன்று, கிருஷ்ணருக்கு அவல் பாயசம் வைத்து நிவேதனம் செய்து விநியோகம் செய்யவேண்டும்.மீன ராசிக்கு ஏழரைச்சனி ஓடுகிறது. இவருக்கு நடப்பு சுக்கிர தசையில், புதன் புக்தி 2028 ஜூலைவரை. அதற்குள் பெரிய செல்வாக்கான இடத்தில் பெண் அமைந்துவிடும். 5-ஆம் அதிபதி 7-ல். எனவே கொஞ்சம் விருப்பத் திருமணமாக இருக்கும். அருகிலுள்ள பெரு மாள்- தாயார் உள்ள கோவில்களில், துளசி மாலை கொண்டு வணங்கி வரவேண்டும்.சனி, 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், திருமண தாமதம் ஏற்படும். 

Advertisment

பாரதி, மதுரை.  [email protected]

சென்னையில் வேலை கிடைக்குமா, கேது, சுக்கிர தசை எப்படி இருக்கும் என கேட்டுள் ளார்.

Advertisment

11-7-1963-ல் பிறந்துள்ளார். மேஷ லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். தற்போது ஏழரைச்சனி ஓடுகிறது. நடப்பு கேது தசை, சுயபுக்தி நடக்கிறது. தற்போது, நிறைய ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். 2026 பிப்ரவரி மாதம் கேது தசையில், சுக்கிர புக்தி ஆரம்பம். அப்போது, நிச்சயமாக இடமாற்றம் ஏற்படும்.நடப்பு கேது தசை, நீங்கள் நிறைய ஆன்மிக ஸ்தலம் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.முடிந்தபோதெல்லாம், பிள்ளையாருக்கு தீபமேற்றி வழிபடுங்கள். 

என். சாரங்கன், சென்னை.  [email protected] 

இவர் போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து, பின் அதிலிருந்து விலக்கிவிட்டதாகவும், எப்போது அந்த அரசு வேலை திரும்ப கிடைக்கும் எனவும் கேட்டுள்ளார்.

Advertisment

26-5-1972-ல் பிறந்தவர். விசாக நட்சத்திரம். துலா ராசி.இவருடைய ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி சனியும், சூரியனும். ஒரே நட்சத்திரக்காலில் நிற்கின்றனர். சூரியன் விரயாதிபதி. சனி, சந்திரன் காலில் நின்று புனர்பூச யோகம் பெறுகிறார். இந்தவகை அமைப்பு இவருக்கு, அரசு பணி கொடுத்து, பின் அதிலிருந்து விலக்கியும்விட்டது.நடப்பு குரு தசையில் சனி புக்தி, 2026 ஜூலைவரை பின்வரும் புதன் புக்தி, உங்களுக்கு மறுபடியும் அரசு பணி தரும்.நீங்களும், பனங்காட்டீஸ்வரர்- சென்னை, விழுப்புரம் சாலை- ஞாயிற்றுக்கிழமை, உங்ளுடன் வழக்கில் உள்ளவர்களும் சென்று வழிபடுங்கள்.


ஆர். தாரிணி. [email protected] 

இந்த ஜாதகிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

23-9-1993-ல் பிறந்தவர். மிதுன லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இவருக்கு லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் ஒரே நட்சத்திரத்தில் நின்று கிரக யுத்தம் பெறுவதால் திருமணம், எளிதாக கைகூடி வரவில்லை.நடப்பு செவ்வாய் தசையில் புதன் புக்தி 2026 செப்டம்பர்வரை. அதற்குள் திருமணம் முடிந்துவிடும். சனிபகவான் களஸ்திரகாரகன் சுக்கிரனை பார்ப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.திருமணம் முடிந்தவுடன், தம்பதியாக திருச்செந்தூர் வருவதாக வேண்டிக் கொள்ளவும்.

நவீனா. [email protected]

வேலைவாய்ப்பு, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

நவீனா 30-3-2005 அன்று பிறந்தவர். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். இவருக்கு, 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம் உள்ளது. அதனால் இஷ்ட திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. எனினும் சந்திரன், சனி சாரம் வாங்கி, புனர்பூ யோகத்தில் இருக்கிறார். எனவே இவள் விரும்பிய திருமணம் முடிந்து, பின் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.நடப்பு கேது தசையில் ராகு புக்தி. 2026 நவம்பர்வரை உள்ளது. இப்போது, வேலை, திருமணம் சம்பந்த முடிவுகளை எடுக்க வேண்டாம்.பின்வரும் குரு புக்தி இவருக்கு வேலையும், திருமணமும் கொடுக்கும். அதுவரையில் பொறுத்திருக்கவும்.குலதெய்வத்துக்கு மாலையும், சேலையும், கொடுத்து, நெய் விளக்கேற்றி வணங்கவும். சீருடை சார்ந்த பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவள் விரும்புகிற பையனை பற்றி நன்கு விசாரிக்கவும். ஏதேனும் வில்லங்கம் ஏற்படுவதுபோல் தெரிகிறது.அங்காரக சதுர்த்தியன்று, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள்.

ராதா, மும்பை.

ரொம்ப காலமாக உடம்பு சரியில்லாமல் இருக்கிறது. நடக்க முடியாமல், ஒரே இடத்தில் அமர்ந்துள்ளேன். என் வியாதி குணமாகுமா?

1-10-1966-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். உங்களுக்கு ராகு தசை, 8-ல் இருந்து நடத்திக்கொண்டுள்ளது. ராகு தசை என்றாலே, ஜாதகரை படாதபாடு படுத்தும். அதிலும், 8-ஆமிடத்தில் இருந்து ராகு தசை நடத்தும்போது, ஜாதகரை முடக்கிவிடுகிறது.உங்கள் மீன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நடப்பு ராகு தசையில் சனி புக்தி அதிலும் 2025 அக்டோபர் மாதத்திலிருந்து 2026 ஏப்ரல்வரை ராகு அந்தரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே கொஞ்சம் சமாளித்துக்கொள்ளவும்.உங்கள் வீட்டிலுள்ளவர்கள், பைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவும். தெய்வம் மட்டுமே காத்து ரட்சிக்க இயலும்.

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.

தன் கணவர் சுத்தமாக சரியில்லை என்றும் அவர் ஜாதகத்தில் ராசியில் குரு நீசமாகவும், அம்சத்தில் குரு உச்சமாகவும் உள்ளார். எனவே அதன் பலன் என்ன என்றும் கேட்டுள்ளார்?

கணவர் 29-12-1973-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். இவருடைய 3-ஆமிடத்தில், சுக்கிரனும் கூடவே நீச குருவும். எனவே 3-ஆமிட பலன்களை, ஓவராக செயல்படுத்தி இருப்பார். இந்த நீச குரு, இவரது ஒழுக்கத்தை சீர்கேடு பண்ணிவிட்டார். அம்சத்தில் குரு உச்சம். அவருக்கு வாரிசை கொடுத்திருக்கிறது.நடப்பு சனி தசையில் ராகு புக்தி. அவர் ரொம்ப உடல்ரீதியாக சிரமப்பட நேரிடும். மருத்துவமனை செல்லவேண்டிய கால கட்டமிது.சனிக்கிழமை தோறும் பைரவரை வணங்குவது நல்லது. நீங்கள் உங்கள் கணவரிடமிருந்து சற்று விலகி இருப்பது உங்களுக்கு நல்லது.

கணேசன். ஆர் [email protected]

மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் இவருடைய கேள்வியில் வருடம் தவறாக தெரிகிறது. அதனால் சரியான பதிலை அüக்க முடியவில்லை. 

கேள்விகளை அனுப்பும்போது பெயர், பிறந்த தேதி மற்றும் வருடம், பிறந்த ஊர் இவற்றை சரியாகக் குறிப்பிடவும். நன்றி.