வி.பி. சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம்.
([email protected])

Advertisment

எஞ்சிய வாழ்க்கை இப்போதுபோல் இருக்குமா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் எப்போது?

Advertisment

12-6-1965-ல் பிறந்தவர். கும்ப லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை, இதில் சனி புக்தி ஓடுகிறது. பின்வரும் புதன் புக்தியும் நன்றாகவே அமையும். அதன்பின் 2029, அக்டோபரில் வரும் சுக்கிர தசை, கேது புக்தியில் சற்று கவனமாக இருங்கள்.சுக்கிரன் 5-ஆமிடத்தில் இருந்து தசை நடத்திக்கொண்டிருக்கிறார். இவ்விதம் 5-ஆமிடத்தில் இருந்து தசை நடந்தால், குல தெய்வத்தை வணங்குவது மிகவும் நல்லது.

ராஜூ சுப்ரமணியன், அந்தமான்.
([email protected])

தனது பெண் திருமணம் எப்போது எனக் கேட்டுள்ளார். காதல் திருமணமா? பெற்றோர் அமைக்கும் திருமணமா என்று கேட்டுள்ளார்.

Advertisment

பெண்: எஸ். லட்சுமி, 30-11-1999-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். பெண்ணிற்கு சனி, செவ்வாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே கண்டிப்பாக இஷ்ட திருமணம் தான் நடக்கும். தற்போது 2026, ஜனவரியில் சந்திர தசை ஆரம்பித்துள்ளது. இதில் திருமணம் நடக்கும்.இந்தப் பெண்ணிற்கு சனி, சுக்கிரன் இரண்டும் நீச பங்கம் பெற்றுள்ளது. லக்னாதிபதி செவ்வாய் உச்சம். எனவே இந்தப் பெண் ரொம்ப பிடிவாத மாக தான் நினைத்ததை முடித்துக் கொள்வாள்.இவ்விதம் சந்திர தசை நடந்து, அதுவும் கேதுவுடன் சார பரிவர்த்தனையில் இருப்பவர்கள், துர்க்கையை நன்கு வணங்க வேண்டும்.

துரைப்பாண்டியன், பெரம்பூர், சென்னை-11.
([email protected])

ஆயுட்காலம், உடல்நலம் சரியாகுமா? என்ன தொழில் செய்யலாம்? செல்வாக்கு எப்படியிருக்கும் என கேட்டுள்ளார்.

24-2-1956-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். கடக ராசியின் அஷ்டமச்சனி விலகிவிட்டது. நடப்பு ராகு தசையில் சனி புக்தி. எந்த ஜாதகத்துக்குமே ராகு தசை- சனி புக்தி நல்லது செய்ய முடியாது. இது 2026 அக்டோபர்வரை உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பைரவரை வணங்கவேண்டும்.மேலும் உங்களுக்கு ராகு தசை 7-ஆவது தசையாக வருகிறது. இது விபத்தார தசை எனப்படும். எனவே நீங்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் எங்காவது அடிபட்டுக் கொள்ளலாம் அல்லது திருட்டு போகும் நிலை ஏற்படும். இவ்விதம் விபத்தார தசை நடப்பவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவனின் அபிஷேகத் துக்கு பால், பன்னீர், இளநீர் என இவற்றில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு வாரமும் வாங்கிக் கொடுங்கள். கூடவே நெய்தீபமேற்றி வழிபடவும்.

எம்.பி.கே. வள்ளிநாயகம், திருநெல்வேலி.
([email protected])

இப்பிறவியில் மோட்சம் கிட்டுமா? ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு, வருமானம் தேட முடியுமா?

16-6-1955-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். ராசியில் குரு உச்சம். அவரை உச்ச சனி பார்த்து, பாழாக்கிவிட்டார். உங்கள் 4-ஆமிடத்தில், சூரியன், புதன், கேது என இந்த கிரகங்கள், ஒரே நட்சத்திரக் காலில் நின்று கிரகயுத்தம் பெறுகிறார்கள். உங்கள் வாழ்வு, "இருண்டு ஆனா இல்லை' என்கிற மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது.இப்போதே வேறு வேலையிலிருந்து கொண்டு, பொழுது போக்காக ஜோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.மேஷ ராசிக்கு, ஏழரைச்சனி ஓடுகிறது, நடப்பு குரு தசையில் சனி புக்தி என்னவெனில் சனி உச்சம். எனவே ஜோதிடத்தைத் தொடரலாம்.

கணேசமூர்த்தி, இராமநாதபுரம்.
([email protected])

பூர்வீக சொத்து கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

7-2-1967-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம்.

பூர்வீக சொத்தைக் குறிக்கும். 5-ஆம் அதிபதி அதற்குரிய விரய ஸ்தானத்தில், அதாவது 4-ஆம் வீட்டில், கேதுவுடன் அமர்ந்துள்ளார். 4-ஆம் வீட்டில், கேதுவுடன் அமர்ந்துள்ளார். 4-ஆம் வீட்டில் பாபர் அமர்வது மனை தோஷமாகும். மேலும் 4-ஆம் அதிபதி 8-ல் மறைவு. இவருக்கு பூர்வீக சொத்து மட்டுமல்ல, சுய சம்பாத்திய வீடும் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.

இவருக்கு 5-ஆம் அதிபதி செவ்வாயாகி, அவர் கேதுவுடன் இருப்பவர்கள், அங்காரக சதுர்த்தியன்று, விநாயகரை வழிபட்டால், ஏதாவது வழி பிறக்கும்.

இசக்கிமுத்து என்பவர், மிக நீண்ட கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பிறந்த நேரம், ஊர் குறிப்பிட மறந்துவிட்டார். பதில் தர இயலாது.