பிரசாந்த், கரூர்.
ரொம்ப பயமாக இருக்கிறது, எதிலும் நாட்டமில்லை என்று எழுதியிருக்கிறார்.
இவர் 21-6-1995-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ஒருவரின் தைரியம் பற்றி அறிய அவரின் 3-ஆம் வீட்டை பார்க்கவேண்டும். இவரின் ஜாதக அமைப்புபடி, இவருக்கு ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று மிகவும் அஞ்சுகிறார். இவருக்கு கொஞ்சம் தோல் நோய் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் எங்காவது போய்விடலாமா எனும் யோசனையும் உள்ளது. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி. எனவே இவருக்கு கற்பனை பயம் அதிகமாக உள்ளது. இதில் மீன ராசிக்கு ஏழரைச்சனியும் ஓடுகிறது.தினமும் அருகிலுள்ள ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, சிறிது துளசி தீர்த்தம் அருந்தவும். மாதம் ஒருமுறை ரேவதி நட்சத்திரமன்று ஆஞ்சனேயருக்கு, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
தண்டபாணி, கோயம்புத்தூர்.
தன் மகளின் படிப்பு, வேலை, திருமணம் பற்
பிரசாந்த், கரூர்.
ரொம்ப பயமாக இருக்கிறது, எதிலும் நாட்டமில்லை என்று எழுதியிருக்கிறார்.
இவர் 21-6-1995-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ஒருவரின் தைரியம் பற்றி அறிய அவரின் 3-ஆம் வீட்டை பார்க்கவேண்டும். இவரின் ஜாதக அமைப்புபடி, இவருக்கு ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று மிகவும் அஞ்சுகிறார். இவருக்கு கொஞ்சம் தோல் நோய் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் எங்காவது போய்விடலாமா எனும் யோசனையும் உள்ளது. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி. எனவே இவருக்கு கற்பனை பயம் அதிகமாக உள்ளது. இதில் மீன ராசிக்கு ஏழரைச்சனியும் ஓடுகிறது.தினமும் அருகிலுள்ள ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, சிறிது துளசி தீர்த்தம் அருந்தவும். மாதம் ஒருமுறை ரேவதி நட்சத்திரமன்று ஆஞ்சனேயருக்கு, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
தண்டபாணி, கோயம்புத்தூர்.
தன் மகளின் படிப்பு, வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
மைதி-: 25-10-2006-ல் பிறந்தவர். கும்ப லக்னம், விருச்சிக ராசி. அனுச நட்சத்திரம். இந்தப் பெண்ணின் 9-ஆமிடத்தில் சுக்கிரன், குரு, சூரியன், செவ்வாய் என நான்கு கிரகங்களின் சேர்க்கை உள்ளது. லக்னத்தில் ராகு. 7-ல் கேது நாக தோஷம் உள்ளது. ராசிக்கு 12-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம் உள்ளது. படிப்பில் சில தடைகளுடன் படித்து முடித்துவிடுவாள். வேலையில் சேர்ந்தாலும், அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பாள்.திருமண விஷயத்தில், கவனமாக வரனின் ஜாதகத்தை பொருத்தவும். புதன் தசை 2028-ல் ஜூலை மாதம் பூர்த்தியாகும். அதன்பின் வரும் கேது தசையில் திருமணம் நடக்கும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு வில்வ தளம் கொண்டு, தொடர்ந்து வழிபடுங்கள்.
அ.செல்லையா, குறுக்குச்சாலை.
உடலிலுள்ள நோய் எப்பொழுது குணமாகும்?
25-3-1939-ல் பிறந்தவர். மகர லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். உங்கள் மேஷ ராசிக்கு, தற்போது ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. இது மூன்றாவது சனி சுற்று ஆகும். கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் நோய் எப்போது குணமாகும் என்று கேட்டுள்ளீர்கள். அனேகமாக உங்களுக்கு காதில் சீழ் பிடித்துக்கொள்ளும். அல்லது வாத நோயால் ஒரு புறம் முடங்கி இருக்க நேரிடும். தற்போது மருத்துவமனையில் இருப்பீர்கள் என்று தெரிகிறது.எது எப்படியிருப்பினும் எப்போதும் ராம நாமம் ஜெபித்துக் கொண்டிருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களை, பைரவரை வணங்கச் சொல்லவும்.
சுப்ரராஜன், மதுரை.
தன் மகளின் திருமணம் பற்றிக் கேட்டுள்ளார்.
மகள் வனிதா: 29-10-1996-ல் பிறந்தவர் மகர லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய் தோஷம் உள்ளது. இவரின் 7-ஆம் அதிபதி. 5-ஆமிடத்தில் உச்ச வர்கோத்தமம். களஸ்திரகாரகன் சுக்கிரன் நீசபங்கம். நடப்பு ராகு தசையில் சந்திர புக்தி. 2026 மார்ச் வரை. இந்த கால கட்டத்துக்குள். விரும்பிய பையனை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்.சனி, சந்திரன் தொடர்பு இருப்பதால் குல தெய்வத்துக்கு, தாலியும், சேலையும் மாலையும் வாங்கி, காணிக்கை செலுத்தி விட்டு, திருமணம் ஏற்பாடுகளை செய்யவும்.
சுதா, விருதுநகர்.
எல்.எல்.பி. தற்போது படிக்கலாமா? ப்ளுட், டான்ஸ் கற்றுக்கொள்ளலாமா பொருளாதார மேன்மை பற்றி கேட்டுள்ளார்.
11-6-1977-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். மேஷ ராசிக்கு ஏழரைச்சனி உள்ளது. நடப்பு செவ்வாய் தசையில் சந்திர புக்தி. இது 2026. மார்ச் வரை உள்ளது. இதில் கல்வி கற்க ஆரம்பித்து விடுவீர்கள். அதுபோல் கலை சார்ந்தும், ஏதேனும் ஆரம்பித்து விடுவீர்கள். அடுத்து 2026 மார்ச் மாதத்திற்கு பிறகு ராகு தசை ஆரம்பித்து விடும். எனவே அதற்குள் உங்களுக்கு விருப்பமானதை ஆரம்பிப்பது உத்தமம். ராகு தசையில் அதனை அப்படியே தொடர்ந்து கொள்ளலாம். உங்கள் பொருளாதாரம் எப்போதும் ஏற்ற- இறக்கமாகவே இருக்கும்.அருகிலுள்ள பெருமாளுக்கு, சனிக் கிழமை தோறும் துளசி மாலை கொண்டு வணங்குங்கள். அங்காரக சதுர்த்தி அன்று விநாயகரை வணங்கவும்.
நரேந்திரன், சென்னை.
வேலை வாய்ப்பு பற்றி கேட்டுள்ளார்.
25-6-1999-ல் பிறந்தவர். மகர லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். இவரின் 6-ஆம் அதிபதி புதன், இவரின் சாரநாதர் சனி, ராசியில் நீசமாக உள்ளார். இவரின் ஜாதக அமைப்புபடி, வேலை என்று கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் நடப்பு புதன் தசையில், சந்திரன் புக்தி, சந்திரன் நீசம். எனவே வேலை சார்ந்து எதை செய்தாலும் அது நடக்காது. எனவே 2026 ஏப்ரல் மாதம் வரை சற்று பொறுமையாக இருங்கள். அதன்பின் வரும். செவ்வாய் புக்தி, நீங்கள் எண்ணியது போல், தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாங்கி கொடுக்கும்.வேலை நன்கு கிடைக்க, இவர் அவ்வப்போது, ஸ்ரீரங்கநாத பெருமாளை சேவித்து, காணிக்கை செலுத்துவது நல்லது.
Follow Us