பிரவின்குமார், சேலம். 

திருமணம் மற்றும் அரசு வேலை பற்றி கேட்டுள்ளார்.

28-3-2002-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். இந்த ஜாதகருக்கு 6-ஆமிட சந்திரன், இருபுறமும் கிரகங்களின்றி, கேமத் துருவ யோகம் பெற்றுள்ளார். மேலும் 6-ஆமிடத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்த்து கெடுக்கின்றனர். எனவே இவர் ஒரு வேலை கிடைத்தால், அதைவிட்டு விலகவே கூடாது. நடப்பு ராகு தசையில், குரு புக்தி 2008 பிப்ரவரிவரை. அதுவரையில் வேலை சுமாராகவும், அடிக்கடி மாற்றும்படியும் அமையும். அடுத்துவரும் சனி புக்தி, இவரை வெளியூர், வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லும். இவருடைய ஜாதகப்படி, உங்கள் பூர்வீக இடத்தில், பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொள்வார்.ஏகாதசிதோறும் ஸ்ரீகிருஷ்ண ருக்கு அவல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வணங்கவும்.

Advertisment

அசோக், திருவனந்தபுரம்.

தனது மகனின் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

மகன் அஸ்வின் 19-11-1995-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. எனவே நாக தோஷமுடைய ஜாதகம். இதுபோல் ராசிக்கும் உள்ளது. இந்த ஜாதகத்தில் விருச்சிக ராசியில், சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், குரு என ஐந்து கிரக கூட்டணி உள்ளது. இதில் கிரக யுத்தமும் உள்ளது. செவ்வாயும் சனியும் ஒருவரையொருவர் சம்பந்தம் கொள்கிறார்கள்.இந்த ஜாதகர் தனக்கு பிடித்த பெண்ணை, விரும்பி திருமணம் செய்வார். அவ்வாறு நடக்கவில்லை என்றால், அவர் பாட்டுக்கு சன்யாசியாக போய்விடுவார். நடப்பு குரு தசை, குரு புக்தி 2026 ஜனவரிவரை. பின்வரும் சனி புக்தி, இவரைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்ய சொல்லும்.தினமும் சிவனை குறித்த கோளறு பதிகம் பாராயணத்தை, ஜாதகர் அல்லது அவரது குடும்பத்தார் கூறுவது நல்லது.

Advertisment

பாஸ்கர் கணேசன், கும்பகோணம்

தனது உறவினரின் வேலை பற்றி கேட்டுள்ளார்.

கர்பிதா: 29-10-2002-ல் பிறந்தவர். துலா லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இந்தப் பெண்ணிற்கு 5-ஆம் அதிபதி 9-ல் உள்ளார். 6-ஆம் அதிபதி 10-ல் உச்சம். எனவே உயர் கல்விமூலம் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நடப்பு புதன் தசை குரு புக்தி 2027 பிப்ரவரிவரை. இதில் படிப்பும், வேலையும் சேர்ந்திருக்கும். அடுத்து வரும் சனி புக்தியில் வெளியூர், வெளிநாடு செல்லமுடியும். உங்கள் ஊரிலுள்ள நரசிம்மர் சன்னதிக்கு தீபமேற்றி வணங்கவும்.

சு. பாலகிருஷ்ணன், தென்காசி.

தனது ஆயுள் மற்றும் எழுத்துதுறை பற்றி கேட்டுள்ளார்.

30-1-1955-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். உங்களின் லக்னாதிபதி சனி உச்சம் மற்றும் குரு பார்வையுடன் உள்ளார். எனவே தீர்க்காயுள் ஜாதகம்.நடப்பு குரு தசையில் சனி புக்தி 2026 அக்டோபர்வரை. இது ஒருமாதிரி ஓடிவிடும். குரு தசையில் புதன் புக்தி யின்போது, சற்று கவனமாக இருங்கள்.எழுதுவது பற்றி கேட்டுள்ளார். எழுதுவதற்குரிய இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். ஆனால் அவரை சனி பார்ப்பதால், அங்கு புனர்பூ யோகம் உண்டாகிவிடுகிறது. எனவே எழுதியதை, சரியாக வரவில்லை என்று கிழித்துவிடுவீர்கள். சிந்தனை ஓட்டம் வேகம் கொடுக்க எழுத்து நடை வெகு தடை, தாமதமாகும். ஆன்மிகம் பற்றி எழுத முயற்சி செய்யுங்கள்.உங்கள் ஊரிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.

Advertisment

அஸ்வினி. என் 

அரசு பதவி, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

28-9-2000-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் புதன் புக்தி 2027 ஜனவரிவரை. அதற்குள் திருமணம் முடிந்துவிடும். அரசு பதவி, 2028-க்குள் அல்லது இந்தப் பெண்ணின் 31 வயதில் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கவும்.

விவேக் டத 

தனது மனைவியின் அரசு வேலை, உடல்நலம் பற்றி கேட்டுள்ளார்.

பிறந்த தேதி 25-10-1997-ல் பிறந்தவர். மகர லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். அரசுப் பணி பற்றி கேட்டுள்ளார். இவரின் 6-ஆம் அதிபதியும், 8-ஆம் அதிபதியும் சேர்ந்துள்ளனர். இருவரும் ஒரே நட்சத்திரக் கா-ல் உள்ளனர். சாரநாதர் 8-ல் மறைவு. எனவே இந்த ஜாதகருக்கு அரசுப் பணி என்பது கனவாகவே இருக்கும்.மனைவியின் உடல்நலம் பற்றி கேட்டுள்ளார். சூரிய தசையில் ராகு புக்தி 2026 பிப்ரவரிவரை. உடல்நிலையில் சற்று பின்னடைவும், மருத்துவச் செலவும் வரும். மேலும் இவரின் ஆரோக்கியத்துக்குரிய 5-ஆமிடத்தை, சனியும், செவ்வாயும் பார்த்து கெடுக்க, குருவும் தன் பார்வையால் பாதுகாக்கி றார். எனவே இவருக்கு எப்போதும் மருந்துச் செலவு இருந்து, பின் மருந்து மாத்திரைகளால் சரியாகும்.இது ஒரு சகடயோக ஜாதகம். இவர் திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும்.