நந்தினி, திருச்சி.
20-6-2003-ல் பிறந்தவர். எப்போது திருமணம், எப்படிப்பட்ட வரன் அமையும் எனக் கேட்டுள்ளார்.
மேஷ லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். நடப்பு கும்ப ராசிக்கு ஏழரைச்சனி மற்றும் குரு தசையில் ராகு புக்தி நடக்கிறது. இந்த குரு தசை 2026 ஆகஸ்ட் மாதம் முடியும். எனவே இது சற்று தசா சந்தி காலம். உங்களுக்கு 22 வயதுதான் நடக்கிறது. சற்று காதல் விஷயம் ஓடும். ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது அவசரப் பட்டு, எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; பொறுமை தேவை. 26 வயதிற்குமேல், சனி தசை, புதன் புக்தியில் உங்களின் விருப்பத் திருமணம் நடக்கும். ரெங்கநாதப் பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.
சௌந்தர், சென்னை.
என்னுடைய லக்னம், ராசி, நட்சத்திரம் விவரம் கூறுங்கள்?
6-2-1999-ல் பிறந்தவர். கடக லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரத்தில் பிறந் துள்ளீர்கள்.
எஸ். ராஜன், விழுப்புரம்.
தனது மகன் பிரவினுக்கு மறுமணம் எப்போது நடக்கும் என்று கேட்டுள்ளார். 2022-ல், மிதுன ராசிக்கு ஏழரைச்சனி நடந்ததால், விவாகரத்து நடந்ததா என்றும் கேட்டுள்ளார்.
பிரவின்: 8-11-1990-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். முதலில் இவருக்கு 2022-ல் மிதுன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கவில்லை.
இவர் ராசியில் சனி, சந்திரன் பார்வை. எனவே இது ஒரு இருதார யோக ஜாதகம் ஆகும். எனவே விவாகரத்து நடந்துள்ளது. நடப்பு புதன் தசை. இதில் 2026 வரை ராகு புக்தி. இதை விட்டுவிடுங்கள். பின் 2026 ஜனவரி புதன் தசை, குரு புக்தியில் நல்ல படித்த பெண்ணுடன் இவருக்கு மறுமணம் நடக்கும்.
புதன் தசை மேன்மைக்கு சிவா- விஷ்ணுவை வணங்கவும். ஒரு முறை சங்கரன்
கோவில் சென்று வணங்கவும்.
பாலு, திருப்பூர்.
இவரது மகளுக்கு சொத்து கிடைக் குமா? இவரது மகளுக்கு மாமியாரின் சொத்து எழுதி வைக்கும்போது, திடீரென்று மாமனாரின் மூத்த தாரம் என்று ஒருவர் வந்து, சொத்து கிடைக்க விடாமல் செய்கிறார். இந்த பிரச்சினை எப்போது தீரும்?
மகள் வனிதா: 30-12-1986-ல் பிறந்தவர். கும்ப லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். நடப்பு சந்திர தசை. இதில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இது பூர்வீக சொத்து பற்றிய மனக்கவலை கொடுத்துள்ளது. இப்போது இந்த சொத்து பற்றிய வழக்கை ஆரம்பித்துவிடுவீர்கள். இது உங்களுக்கு, சந்திர தசை, சுக்கிர புக்தியில், அதாவது 2027-க்கு பிறகுதான் கிடைக்கும்.மருமகன் சுப்பிரமணி: 16-8-1986-ல் பிறந்தவர். கடக லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். திருக்கணிப்படி ஏழரைச் சனி நடக்கிறது. நடப்பு சனி தசையில், சனி புக்தி. இதில் சொத்து சம்பந்தமான வழக்குகள் ஆரம்பித்து, 2027-க்குபிறகுதான் கைக்கு கிடைக்கும்.
பேரன்: 18-7-2006-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். நடப்பு சூரிய தசை. இதில் 2027-க்குபிறகு, வரும் குருபுக்தி, எதிர்பாராத சொத்துகளை தரும்.பொதுவாக பூமி, மனை சம்பந்த பிரச்சினைகளுக்கு செவலூர் புதுக்கோட்டை சென்று வழிபடுவது வழக்கம்.சங்கீதா: மதுரை. தனது கணவர் சுந்தர பாண்டியன். அவரின் உத்தியோக உயர்வு மற்றும் சொத்து வரவு பற்றி கேட்டுள்ளார்.சுந்தரபாண்டியன்: 9-10-1988-ல் பிறந்த வர். விருச்சிக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் சந்திர புக்தி 2026 ஆகஸ்ட் வரை. அதற்குள் பதவி உயர்வு மற்றும் சொத்தும் கிடைத்துவிடும். அருகிலுள்ள துர்க்கையை வணங்கவும்.
மணிவண்ணன், திருவாரூர்.
தனது திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டுள்ளார்.
மணிவண்ணன் 21-12-1983-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு சனி தசையில் குருபுக்தி 2027 வரை சனி தசை உள்ளது. இதற்குள் உங்கள் வேலை செய்யும் இடத்தில், உங்கள் விருப்பப்படி, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணுடன் திருமணம் நடக்கும்.
அருகிலுள்ள பெருமாளையும் தாயாரை யும், சனிக்கிழமைதோறும் துளசி மாலை மற்றும் ஜாதிமலர் சரம்கொண்டு வணங்கவும்.
எல். உமா, மகேஸ்வரி, ஹார்விபட்டி திருப்பரங்குன்றம், மதுரை.
தனது இரு மகன்களின் வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
எல். புவனேஸ்வரன்: 16-5-1998-ல் பிறந்தவர். மிதுன லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இவருடைய 6-ஆம் அதிபதி செவ்வாயும், சூரியனும், 12-ஆம் வீட்டில் ஒரே கிரக சாரத்தில் உள்ளனர். சந்திரனும் கேமத் துருவ யோகம் பெற்று அமர்ந்துள்ளார்.
எனவே, இவர் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார். நடப்பு செவ்வாய் தசை. இதில் மாதத்துக்கு ஒரு வேலை மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. செவ்வாய் தசையில், சூரிய புக்தி. இந்த வருடம் கடைசிக்குள் அஞ்சாறு வேலை மாற்றிவிடுவார்.
2026 ஜூன் மாதம்வரை செவ்வாய் தசை யில் சந்திர புக்தி. அதற்குள் திருமணம் முடிந்துவிடும். அடுத்து ஆரம்பிக்கும் (2026 ஜூன் மாதம்) ராகு தசை இவரை வெளியூர், வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லும்.
உங்கள் ஊர், முருகர் கோவிலில் ஞாயிறு தோறும் விளக்கேற்றவும்.
எல். ப்ரவீன்குமார்: 20-11-2000-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்தி ரம். லக்னம், ராசி இரண்டிற்கும் செவ்வாய் தோஷமுள்ளது. சனி, குரு சேர்க்கை ப்ரம்மஹத்தி தோஷம் உள்ளது. அதனால் ஒருமுறை திருவிடைமருதூர் சென்றுவர வேண்டும். நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி 2026 ஏப்ரல்வரை. இதில் இடமாற்றம் வீடு மாற்றம் உண்டாகும். சந்திர தசையில் சுக்கிர புக்தி 2028 ஜூன் மாசம்வரை உள்ளது. அதில் இவருக்கு விருப்பத் திருமணம் நடக்கும். 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை. அதனால் விருப்பத் திருமணம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. அருகிலுள்ள சாந்தமான அம்பாளை வணங்கவும். நெய் விளக்கு ஏற்றி வணங்குவது சிறப்பு.
ஜே. பிரவின் பாலாஜி, விருதுநகர்.
Phd டட்க் பட்டம்பெற்று வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது எனக் கேட்டுள்ளார்.
7-3-1997-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். இவருடைய ஜாதகம் கால ஸர்ப்ப யோக ஜாதகம். குரு, சனி பரிவர்த்தனையால் குரு நீசபங்கம் ஆகியுள்ளார். புதன் கேது இணைவு. எனவே விருப்பத் திருமணம் நடக்கும். தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி ஓடுகிறது. இதில் ஆராய்ச்சி படிப்பை முடித்து விடலாம். இது 2027 ஏப்ரல்வரை உள்ளது. இதற்குள் திருமணமும் ஆகிவிடும். குரு தசை, சூரிய புக்தி 2027 ஏப்ரல் மாதத்திற்குபிறகு தொடங்கும். அப்போது வெளியூர், வெளிநாட்டு வேலை கிடைக்கும். இவருக்கு எந்த விஷயமும் எளிதில் நடக்காது. ரொம்ப சிரமப்பட்ட பின்தான் கைகூடும். இவர் தினமும் சிவனை வணங்கவேண்டும். மேலும் குலதெய்வத்தையும் நன்கு வணங்கவேண்டும்.