விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். [email protected]
என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்த வீடு கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.
23-5-1955-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். ஒருவருக்கு சொந்த வீடு ப்ராப்தம் உள்ளதா என அறிய, அவரின் 4-ஆமிடம் பார்க்கப் படவேண்டும். இவரின் லக்ன 4-ஆம் அதிபதி சூரியன். இவர் உச்ச சந்திரனோடு லக்னத்தில் உள்ளார். இவர் ஏற்கெனவே வீடு இருந்து, விற்றிருக்கக்கூடும். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2027 மார்ச்வரை. அதன்பின் வரும். குரு புக்தியில் வீடு வாங்கமுடியும்.குலதெய்வத்துக்கு கட்டுமான பணிக்கு ஏதாவது இயன்ற பணம் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளவும்.
ரிஷி தேவன், மதுரை.
[email protected]
தொழில் பிரச்சினை எப்போது தீரும் என கேட்டுள்ளார்.
18-01-1996-ல் பிறந்தவர். தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசையில் கேது புக்தி. இந்த சுக்கிர தசையில் அக்டோபரில் பூர்த்தியடையும். இது மன குழப்பத்தை கொடுக்கும். அதனால்
தொழி-ல் கருத்தாக ஈடுபட இயலாது. அடுத்துவரும் சூரிய தசை, தொழில் மேன்மை அடையும். இவருக்கு கால சர்ப்ப யோக ஜாதகமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும், 32 வயதிற்குமேல், தனது சுய முயற்சியில் தொழில் முன்னேற்றம் அடைந்துவிடுவர்.இவர் எப்போதும் விஷ்ணு- துர்க்கையை வணங்குவது நல்லது.
சௌந்தர பாண்டியன் [email protected]
தனது தம்பிக்கு திருமணப் பொருத்தம் பற்றி கேட்டுள்ளார்.
தம்பி பூபாலன் 3-3-1991-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம்.பெண்: 28-5-2006. மேஷ லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பெண்ணின் ரோகிணிக்கும், பையனின் அஸ்த நட்சத்திரத்திற்கும், தினப் பொருத்தம் இல்லை. பெண்ணின் ரோகிணி நட்சத் திரத்தை தொட்டு, எண்ணினால் பையனின் அஸ்த நட்சத்திரம், 10-ஆவது நட்சத்திரமாக வருகிறது. எனவே தினப் பொருத்தம் இல்லை. சேர்க்கக் கூடாது.
மணிவண்ணன், திருவாரூர். [email protected]
தனது திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
20-12-1983-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். ராசிக்கு 4-ல் செவ்வாய் தோஷம் உள்ளது. நடப்பு சனி தசையில் சுக்கிர புக்தி 2026 ஜூலை வரையில். அதற்குள் திருமணம் நடந்துவிடும். திருமணம் முடிந்தவுடன், உங்கள் குலதெய்வத்துக்கு, நிறைய வெல்லம், நெய் ஊற்றி, இனிப்பான சர்க்கரைப் பொங்கல், மாலை, சேலையுடன் வணங்குவதாக வேண்டிக்கொள்ளவும்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
தன் மகள் குழந்தைகளுடன், பெற்றோருடன் வந்துவிட்டார். மருமகன் தனது ஊரில் வசிக்கிறார். இனிமேல் இவர்கள் சேர்வார்களா குழந்தைகளை வளர்க்க பண உதவி செய்வாரா எனக் கேட்டுள்ளார்.
பெண்: 6-8-1991-ல் பிறந்தவர். மகர லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். இவர் ஜாதகத்தில் குருவும், சூரியனும், பாபகர்த்தாரி யோகம் பெற்று, பலமிழந்து உள்ளனர். நடப்பு குரு தசை செவ்வாய் புக்தி 2026 ஜூன்வரை. அடுத்துவரும் குரு தசை, ராகு தசையில் கணவர், மனைவி குழந்தைகளை பார்க்கவருவதும் போவதுமாக இருப்பார்.அடுத்துவரும், சனி தசை, இந்தப் பெண்ணை பெற்றோரிடம் இருந்து பிரித்து, கணவருடன் சேர்த்து வைக்கும்.இந்தப் பெண் ஜாதகத்தில், 7-ஆம் அதிபதி சந்திரன் கேதுவுடன் இருப்பது, 7-ஆம் வீட்டில் விரயாதிபதி குரு உச்சம் அடைவதும், 8-ஆம் வீட்டிலுள்ள செவ்வாய், கடுமையான செவ்வாய் தோஷம் தருவதும், இவளின் மணவாழ்க்கையை, மகிழ்ச்சியாக வைக்கவில்லை. வியாழக்கிழமைதோறும் சிவன் கோவி-ல், நந்தியம் பெருமாளுக்கு விளக்கேற்றி வரவேண்டும்.கணவர்: 7-4-1986-ல் பிறந்தவர். மகர லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். இவருக்கு செவ்வாய் தோஷம் மட்டும் உள்ளது. நாகதோஷம் கிடையாது. (பெண்ணிற்கு நாகதோஷம் உள்ளது). நடப்பு புதன் தசை. ராகு புக்தி, 2026 ஏப்ரல்வரை. அது வரை மனைவியை, அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு போவார். பிறகு வரும் புதன் தசை, குரு புக்தியில் குடும்பத்தோடு, வேறிடம் செல்வார்.இவர்கள் இருவரின் ஜாதக தசாபுக்திகள், திருமண வாழ்வில் சிரமத்தைத் தருகிறது. எனினும், இருவருக்கும் ஒரே மகர லக்னம். எனவே அது ஒன்றுதான் இவர்கள் இருவரையும், பிரிக்கவிடாமல், சேர்த்து வைக்கிறது. அருகிலுள்ள சிவன் கோவி-ல் விளக்கு ஏற்றுவதும், வில்வ பத்திரம் கொண்டு வணங்குவதும் நல்லது.
கௌதம், சேலம். [email protected]
இவருடைய தாத்தா இவருடைய திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
5-04-1998-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னம், ராசி இரண்டுக்கும் நாகதோஷம் உள்ளது. மேலும் ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கியுள்ளது. எனவே கால சர்ப்ப தோஷ ஜாதகம். நடப்பு கேது தசையில் சூரிய புக்தி. அடுத்து சந்திர புக்தி. எனவே அடுத்த வருடம், 2026 அக்டோபருக்குள் திருமணம் முடிந்துவிடும். இந்த ஜாதருக்கு 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. எனவே வேலை செய்யும் இடத்தில் கைபேசியில் பேசி, பேசியே திருமணத்தை நடத்திக்கொள்வார்.நடப்பு கேது தசைக்கு, விநாயகரை வணங்குவது சிறப்பு.
பாஸ்கர் கணேசன், சென்னை. [email protected]
தனது தங்கையின் வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
சுருதி: 26-12-1998-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் கேது, 7-ல் ராகு. எனவே சர்ப்ப தோஷம் உள்ளது. லக்னத்துக்கு 8-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம் உள்ளது.இந்தப் பெண்ணின் வேலைக்குரிய அதிபதி சந்திரன். அவர் கேது மற்றும் சனிக்கு இடையில் மாட்டிக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெறுகிறார். எனவே ஒரு வேலை கிடைத்தால், அதனை பிடிக்கவில்லை என்று, விட்டுவிடக்கூடாது. இந்தப் பெண் வேலையில் எப்போதும் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டே இருப்பார்.நடப்பு புதன் தசையில் குரு புக்தி 2026 ஏப்ரல்வரை. அதற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஒரு திருமண ஏற்பாடு நடக்க இருந்து, தட்டிப் போகும் வாய்ப்பும் உண்டு.குலதெய்வத்துக்கு, மாங்கல்யம் காணிக்கை செய்வதாக வேண்டிக்கொள்ளவும்.
லட்சுமி, விழுப்புரம். [email protected]
தனது மகளின் திருமண வாழ்க்கை, குழந்தைகள் பற்றி கேட்டுள்ளார்.
இந்தப் பெண்ணிற்கு, 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை என்பதால், இஷ்ட திருமணம் என்று கூறப்பட்டது. இந்த இரு கிரகங்களும், ஒரே கிரக சாரத்தில் உள்ளனர். எனவே இந்தப் பெண், பொறுமையாக விட்டுக் கொடுத்துச் சென்றால், திருமண வாழ்வு நன்றாக இருக்கும். குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு நன்றாகவே உள்ளது.
பி. சுதா, மதுரை. [email protected]
மகனின் திருமணம் சம்பந்தமாக என்ன பரிகாரம் செய்யவேண்டும் எனக் கேட்டுள்ளார்.
மகன் 29-6-2000-ல் பிறந்துள்ளார். கன்னி லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். நடப்பு ராகு தசை சனி புக்தி. 2026 ஏப்ரல் வரை உள்ளது. அதுவரையில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும். திருமணம் நல்லபடியாக நடக்க, பௌர்ணமிதோறும் அருகிலுள்ள சிவன், அம்பாளுக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/qa-2025-11-07-17-53-01.jpg)