எல். உமாமகேஸ்வரி, மதுரை, திருப்பரங்குன்றம்
இவர், வேலை பார்க்கும் இடத்தில் எவ்வளவு நன்றாக பழகினாலும், அவ மானப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். பொருளாதார பிரச்சினை தீருமா, மன நிம்மதிக்கு என்ன வழி எனக் கேட்டுள்ளார்.
6-12-1969-ல் பிறந்தவர். தனுசு லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். எல்லாரும் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் இவருடையது தனுசு லக்னம். அது ஒரு உபய ராசி. உபய ராசிக்கு 7-ஆம் அதிபதி பாதகாதிபதியாக வருவார். இந்த பாதகாதிபதி புதன், இவருடைய லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். இவ்விதம், பாதகாதிபதி லக்னத்தில் அமர்ந்த ஜாதகர்கள், எப்போதும் ஏதோ ஒருவித எரிச்சலான துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். மண்டையில் வரிசையாக வந்து குட்டிவிட்டு, மண்டை, வீங்குவதை பார்த்து மகிழ்வார்கள். இதற்கு இந்த ஜாதக அமைப்புப்படி, விநாயகருக்கு முடிந்தபோதெல்லாம், அருகம்புல் வாங்கிக் கொடுக்கவும்; அவமானம் குறையும். உங்கள் தனஸ்தானம் எனும் 2-ஆம் வீட்டில், செவ்வாய் உச்சம். ஆனால் அவர் விரயாதிபதி ஆவார். அதனால் இவருக்கு எவ்வளவு பணம் வந்தாலும், அதைவிட அதிகமாக செலவழியும். இவரின் 2-ஆம் அதிபதி நீசபங்கம். பணவரவு சுமார் நிலையில்தான் அமையும்.நீங்கள் மன நிம்மதியில்லாமல் இருப் பதற்கு, உங்கள் லக்னாதிபதியும், 8-ஆம் அதிபதியும் சேர்ந்திருப்பது மற்றும் 5-ஆமிடத்தில் சனி நீசமாகி இருப்பதும் காரணம். இதற்கு பூர்வ ஜென்மத்தில், மூத்த சகோதரியை விரட்டிவிட
எல். உமாமகேஸ்வரி, மதுரை, திருப்பரங்குன்றம்
இவர், வேலை பார்க்கும் இடத்தில் எவ்வளவு நன்றாக பழகினாலும், அவ மானப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். பொருளாதார பிரச்சினை தீருமா, மன நிம்மதிக்கு என்ன வழி எனக் கேட்டுள்ளார்.
6-12-1969-ல் பிறந்தவர். தனுசு லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். எல்லாரும் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் இவருடையது தனுசு லக்னம். அது ஒரு உபய ராசி. உபய ராசிக்கு 7-ஆம் அதிபதி பாதகாதிபதியாக வருவார். இந்த பாதகாதிபதி புதன், இவருடைய லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். இவ்விதம், பாதகாதிபதி லக்னத்தில் அமர்ந்த ஜாதகர்கள், எப்போதும் ஏதோ ஒருவித எரிச்சலான துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். மண்டையில் வரிசையாக வந்து குட்டிவிட்டு, மண்டை, வீங்குவதை பார்த்து மகிழ்வார்கள். இதற்கு இந்த ஜாதக அமைப்புப்படி, விநாயகருக்கு முடிந்தபோதெல்லாம், அருகம்புல் வாங்கிக் கொடுக்கவும்; அவமானம் குறையும். உங்கள் தனஸ்தானம் எனும் 2-ஆம் வீட்டில், செவ்வாய் உச்சம். ஆனால் அவர் விரயாதிபதி ஆவார். அதனால் இவருக்கு எவ்வளவு பணம் வந்தாலும், அதைவிட அதிகமாக செலவழியும். இவரின் 2-ஆம் அதிபதி நீசபங்கம். பணவரவு சுமார் நிலையில்தான் அமையும்.நீங்கள் மன நிம்மதியில்லாமல் இருப் பதற்கு, உங்கள் லக்னாதிபதியும், 8-ஆம் அதிபதியும் சேர்ந்திருப்பது மற்றும் 5-ஆமிடத்தில் சனி நீசமாகி இருப்பதும் காரணம். இதற்கு பூர்வ ஜென்மத்தில், மூத்த சகோதரியை விரட்டிவிட்ட பாவத்தினால் இந்த அமைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இப்போது, வயது முதிர்ந்த பெண்களுக்கு முடிந்த அளவில் உணவு வாங்கிக் கொடுங் கள். நடப்பு புதன் தசையில் சுக்கிர புக்தி ஆரம்பம். வேலை மாறுதல் உண்டு.மதுரை மீனாட்சியின் பாதத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.
துரை ராஜூலு, பண்ரூட்டி.
வேலை மாறலாமா? அரசு வேலை கிடைக்குமா எனக் கேட்டுள்ளார்.
6-4-1989-ல் பிறந்தவர். மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி ஓடுகிறது. உங்கள் லக்னத்தில், லக்னம், சூரியன், சந்திரன், சுக்கிரன் என அனைத்து கிரகமும் ஒரே நட்சத்திர சாரம் வாங்கி நிற்கிறார்கள். கிரக யுத்த ஜாதகம். உங்கள் வேலைக்குரிய 6-ஆம் அதிபதி சூரியன் லக்னத்தில் உள்ளார். நடப்பு சுக்கிர தசையில் புதன் புக்தி. 2027 ஜனவரிவரை. இதில் அரசு வேலை இடமாற்றத் துடன் கிடைக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் சிவனுக்கு நெய்தீபமேற்றி வணங்கவும்.
மரு, ஷாஜஹான், சென்னை.
தனது மகனின் மறுமணம் பற்றி கேள்வி கேட்டுள்ளார்.
ஏற்கெனவே பதில் "பாலஜோதிட'த்தில் வந்துவிட்டது.
சதீஷ், கள்ளக்குறிச்சி.
திருமணம் எப்போது? வேலைக்கு வெளிநாடுகளில் முயற்சி செய்யலாமா எனக் கேட்டுள்ளார்.
2-1-1990-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு. 8-ல் கேது. எனவே நாக தோஷம் உள்ளது. லக்னத்துக்கு 12-ல் செவ்வாய் ஆட்சி. பரிகார செவ்வாய் தோஷ ஜாதகம். உங்கள் ஜாதகத்தில், சனி லக்னத்தில் அமர்ந்து, நேர் ஏழாம் பார்வையாக, 7-ஆமிடத்தை மற்றும் அதில் அமர்ந்துள்ள குருவையும் பார்க்கிறார். உங்களுக்கு எல்லா விஷயமும் தடை, தாமதமாகவே நடக்கும். திருமணமும் தாமதமாக நடக்கும். ஏழரைச்சனி உள்ளது. நடப்பு சனி தசையில் ராகு புக்தி நடக்கிறது. இது 2027, பிப்ரவரி வரை உள்ளது. இதில் உங்கள் வகுப்பில், வேறு பிரிவில் திருமணம் நடக்கும். சனி தசை, குரு புக்தி, உங்களையும், மனைவியையும் வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லும். சனி- சந்திரன் தொடர்பு இருப்பதால், குலதெய்வத்துக்கு, தா- தானம் செய்துவிட்டு திருமணம் செய்யவும். தினமும் சிவனை வணங்க வேண்டும்.
ரம்யா, உமாமகேஸ்வரி.
இரு ஜாதகர்களும், பிறந்த நேரம், இடம் குறிப்பிடவில்லை. எனவே ஜாதகம் கணிக்க இயலவில்லை.
அபர்ணா, திருவிடைமருதூர்.
வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம் பற்றி கேட்டுள்ளார்.
மகர லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். நடப்பு புதன் தசையில் சனி புக்தி 2026 ஏப்ரல்வரை. அதற்குள் பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். இதற்கு நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நேரிடையாக இன்றி மறைமுகமாக கொடுக்க வேண்டி இருக்கும். சங்கர நாராயணரை வணங்கவும். இவருக்கு தசா சந்தி கால கட்டம். ஒரு முறை விசாரித்து செயலாற்றவும்.
சுந்தரம், திண்டுக்கல்.
எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
29-8-1955-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். தற்போது சாப்பாட்டிற்கே சிரமமாக உள்ளது எனக் கூறியுள்ளார். நடப்பு சனி தசையில் ராகு புக்தி ஆரம்பித்து உள்ளது. தற்போதைய கிரக அமைப்புபடி, இஸ்லாமிய பெருமக்கள் அல்லது வெளிநாட்டு வணிகம் சார்ந்து, உங்கள் எல்.ஐ.சி வேலையை தொடருங்கள். ஓரளவு நன்றாக இருக்கும். உங்கள் தெய்வ வழிபாடு, குலதெய்வம் சார்ந்ததாக அமையட்டும். ஏனெனில், உங்களுக்கு குரு, சந்திரன் பரிவர்த்தனை. குலதெய்வத்துக்கு முடிந்தபோதெல்லாம் விளக்கேற்றி வணங்கவும்.அருகிலுள்ள சிவனையும் அம்பாளையும் வணங்கவும்.
ஜனனி,
திருமணம் எப்போது? அரசு வேலை கிடைக்குமா?
24-8-1999-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மகர ராசி. இவருக்கு கண்டிப்பாக இஷ்ட திருமணம்தான் நடக்கும். இதற்கு காரணம் 5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை மற்றும் புதன், கேது பார்வை.இவருக்கு ராசியில் கேது, 7-ல் ராகு. எனவே, கலப்பு மணமாக நடக்க வாய்ப்புள்ளது.இவருடைய 6-ஆம் அதிபதி, ராகுவுடன் உள்ளதால், அரசு வேலை என்பது நிறைய பரீட்சைகள் எழுதி, சற்று இடையூறுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு நெய்விளக்கு ஏற்றுவதும், குலதெய்வக் கோவிலுக்கு, பித்தளை விளக்கும், விளக்கேற்ற நெய்யும் வாங்கிக் கொடுக்கவும்.
லட்சுமி, மதுரை.
கடந்த ஐந்து வருடங்களாக உடல் நிலை பிரச்சினையாக உள்ளது என்றும், இதற்காக மிக நிறைய பணம் செலவழித்து, தற்போது பண பிரச்சினை உள்ளது. இது எப்போது தீரும் என்றும் கேட்டுள்ளார்.
19-9-1970-ல் பிறந்தவர். கடக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். திருக்கணிதப்படி, இவரின் மேஷ ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது.நடப்பு குரு தசை. இவர் 6-ஆம் அதிபதி. இவரின் சாரநாதர் ராகு 8-ஆமிடத்தில் உள்ளார். மேலும் குரு அம்சத்தில் நீசம். இந்த குரு இருப்பது லக்னத்துக்கு 4-ஆமிடத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே நட்சத்திர சாரத்தில் நிற்கின்றனர். இம்மாதிரி நிலையில் குருவால் எவ்விதம் நல்ல பலன் கொடுக்க முடியும். எல்லாவற்றையும்விட, அனைவருக்குமே 6-ஆவது குரு தசை என்பது விபத்தார தசை என்பதாகும். உங்களுக்கு ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு, படுக்கையில் இருக்க வேண்டிய கால கட்டமிது. நீங்கள் நிறைய தெய்வ வழிபாடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த தெய்வ வழிபாடுகள். விபத்தை நோயாக மடை மாற்றியுள்ளது போலும். இவ்விதம் விபத்தார தசை நடக்கும் போது, திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் கொடுப்பது, நெய் தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது என இதனை முறையாக செய்வது நல்லது. நடப்பு குரு தசையில் சனி புக்தி. 10-ஆமிடத்தில் சனி நீச வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். இது 2027 பிப்ரவரிவரை உள்ளது. உடல்நிலையில் கவனம் தேவை. நீங்கள் நித்தியப்படி செய்யும் சகஸ்ரநாம பாராயணமே போதும்.
பழனி முனுசாமி, திருவண்ணாமலை
ஆயுள் பற்றி எடுத்துரைக்கவும் எனக் கேட்டுள்ளார்.
26-3-1954-ல் பிறந்தவர். கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நடப்பு குரு தசை, சனி புக்தி. குரு உங்களின் 7-ஆம் அதிபதி. சனி உங்களின் 6-ஆம் அதிபதியாகி, 2-ல் உள்ளார். 2028 பிப்ரவரிவரை சனி புக்தி ஓடுகிறது. உடல்நிலையில் கவனம் தேவை.திருக்கடையூர் சென்று சேவிப்பது சிறப்பு.