Advertisment

ஜோதிட சந்தேகங்கள்! -முனைவர் ஆர். மகாலட்சுமி 03.01.26

Q&A


ஜி. ராஜேந்திரன் kovailee@rediffmail.com

ஆயுள், மற்றும் எதிர்காலம் பற்றிக் கேட்டுள்ளார்.

13-8-1952-ல் பிறந்தவர். நடப்பு சனி தசையில் குரு புக்தி 2026 ஆகஸ்ட் வரை. இப்போதே இவர் கால்களில் வீக்கம் ஏற்பட்டு சற்று சிரமத்துடன் இருப்பார் என்றே தோன்றுகிறது.அடுத்து, புதன் தசை ஆரம்பிக்கும். அப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். சூரியன், புதன், கேது மூன்று கிரகங்களும், ஒரே நட்சத்திர சாரத்தில் 2-ஆமிடத்தில் நின்று உள்ளனர். உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்கி வரவும்.

Advertisment

ள்.சுபாஷினி. subhaphykkc@gmail.com

புதன் தசை, புக்தி கால அளவுகள் பற்றி கேட்டுள்ளார். இதற்கு ஒரு பஞ்சாங்கத்தைப் பார்க்கவும். தெளிவாக தெரிந்துவிடும்.சுபாஷினி இவருடைய அண்ணன் இவரின் நடப்பு வாழ்வு நிலை பற்றி கவலையுடன் கேட்டுள்ளார்.

Advertisment

ஜாதகி பிறந்த தேதி 12-5-1955. ரிஷ


ஜி. ராஜேந்திரன் kovailee@rediffmail.com

ஆயுள், மற்றும் எதிர்காலம் பற்றிக் கேட்டுள்ளார்.

13-8-1952-ல் பிறந்தவர். நடப்பு சனி தசையில் குரு புக்தி 2026 ஆகஸ்ட் வரை. இப்போதே இவர் கால்களில் வீக்கம் ஏற்பட்டு சற்று சிரமத்துடன் இருப்பார் என்றே தோன்றுகிறது.அடுத்து, புதன் தசை ஆரம்பிக்கும். அப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். சூரியன், புதன், கேது மூன்று கிரகங்களும், ஒரே நட்சத்திர சாரத்தில் 2-ஆமிடத்தில் நின்று உள்ளனர். உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்கி வரவும்.

Advertisment

ள்.சுபாஷினி. subhaphykkc@gmail.com

புதன் தசை, புக்தி கால அளவுகள் பற்றி கேட்டுள்ளார். இதற்கு ஒரு பஞ்சாங்கத்தைப் பார்க்கவும். தெளிவாக தெரிந்துவிடும்.சுபாஷினி இவருடைய அண்ணன் இவரின் நடப்பு வாழ்வு நிலை பற்றி கவலையுடன் கேட்டுள்ளார்.

Advertisment

ஜாதகி பிறந்த தேதி 12-5-1955. ரிஷப லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இந்த ஜாத கத்தை கவனியுங்கள்.மேற்கண்ட ஜாதகத்தில் சுக்கிரன், சூரியன், குரு, சனி என நான்கு கிரகங்கள் உச்சம். எனினும் இவர் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.சனி, சூரியன் இரண்டும் உச்சமாக ஒருவரையொருவர் பார்த்த காரணத்தால் இரண்டு கிரகமும் நீசமாகி விட்டனர். உச்ச சனி, உச்ச குருவை பார்த்து அவரை நீசமாக்கி விட்டார். உச்ச குரு, உச்ச சுக்கிர னைப் பார்த்து சுக்கிரனும் நீச மாகி விட்டார்.ஆக, உச்சமான அனைத்து கிரகங்களும், நீசமாகிவிட்ட னர். இதனால், ஜாதகியின் வாழ்வு சற்று தனிமையில் வாழும்படி ஆகிவிட்டது.நடப்பு சனி தசை, அதில் சுக்கிர புக்தி நடப்பு. அவர் தனியாக இருப்பதால், அவரைக் கூட அழைத்து சென்று கவனிக்கும் காலம் பற்றி கேட்டுள்ளீர்கள். வரும் 2026 ஆரம்பித்தவுடன், அவர்மேல் கவனம் இருக்கட்டும்.குறிப்பாக, 2026 ஜூன் மாதத்தில் இருந்து, அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும்.திருச்சி, ஸ்ரீரங்கம், பெரிய கருடனுக்கு நெய் விளக்கேற்றி வணங்கவும். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்.

பெண்ணின் திருமணம் பற்றிய கேள்வி? kavithakrishna1976@gmail.com

பெண் பிறந்த தேதி 2-6-2003-ல் பிறந்தவர். கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். 

பெண் ஜாதகத்தின் சனியும் சந்திரனும் ஒரே கட்டத்தில் நின்று புனர்பூச யோகம் எனும் இருமண யோகம் தருகின்றனர். 5-ஆம் அதிபதி செவ்வாய் 7-ல் காதல் தோல்வி உண்டு. குரு, செவ்வாய் உச்சமாகி, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், நீசமாகி பலமிழந்து விட்டனர்.நடப்பு சனி தசை, சனி புக்தி. சுய புக்தியில் எந்த விஷயமும் செய்ய வேண்டாம். 2026 ஜூலைவரை சனி தசை, தசை புக்தி. எனவே அதன்பிறகு வரும் புதன் புக்தியில் திருமணத்தை நடத்திவிடவும்.திருமணத்திற்குமுன் தாலி தானமும், குலதெய்வக் கோவிலுக்கு, பித்தளை விளக்கு வாங்கிக் கொடுப்பதாகவும் நன்கு வேண்டிக்கொள்ளவும்.

ஆறுமுகம், வீரவ நல்லூர், திருநெல்வேலி மாவட்டம். halalxerox@gmail.com

இவரின் மனைவி மனநலம் சரியில்லாமல் உள்ளதாகவும் விவாகரத்து கிடைக்குமா? கணவரின் இரண்டாம் துணை பற்றியும் கேட்டுள்ளார்.

மனைவி: 1-4-1976-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். ஜாதகியின் ராசியில் லக்னாதிபதி நீச வர்க்கோத்தமம். மற்றும் 8-ஆமிடத்தில் குரு+சந்திரன்+கேது. எனவே இவருக்கு மன பிறழ்வு இருக்க வாய்ப்புள்ளது.நடப்பு ஏழரைச்சனி மற்றும் ராகு தசையில் குரு புக்தி 2027 ஏப்ரல்வரை. அதற்குள் இவருக்கு உடல்நிலை மிகவும் கெடுதலாக வாய்ப்புள்ளது.எனவே, தயவுசெய்து, இந்தப் பெண்மணியை, உங்கள் பராமரிப்பில் பாதுகாக்கவும். அனேகமாக இவர் ஒரு மருத்துவமனையில் இருக்க வாய்ப்புள்ளது. இவரின் நலம் விரும்பிகள், துர்க்கையை வணங்கவும்.

ஜாதகி, திருநெல்வேலி. sharmasara150@gmail.com

திருமணம் சொந்தமா? அன்னியமா! குழந்தை பாக்கியம் பற்றி கேட்டுள்ளார். 

14-9-1996-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. ராசிக்கு ராகு- கேது சம்பந்தம். அதனால் நாக தோஷ ஜாதகம். மற்றும் லக்னத்துக்கு 8-ல் செவ்வாய் நீசம். எனவே கடுமையான செவ்வாய் தோஷமுண்டு. சற்று கலப்பு மணமாக அமையும். விருப்பத் திருமணமாகவும் இருக்கும். சற்று மருத்துவ ஆலோசனைக்குபிறகு வாரிசு யோகம் கிடைக்கும்.இவர் இன்னொரு கேள்வியும் கேட்டுள்ளார். நவரத்தின கற்களை பதித்த மோதிரம் அணியலாமா என்று கேட்டுள்ளார்.எனக்குத் தெரிந்து, சூரியன் மட்டும்தான் உருப்படியாக உள்ளார். எனவே மாணிக்க கல்லை, தாமிரத்தில் பொதிந்து போடலாம்.மற்றபடி, முழு, அணைத்து நவரத்தின மோதிரம் அணிவது சரிப்பட்டு வருமா என்று சந்தேகமாக உள்ளது.

bala030126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe