சுபா, கோயம்புத்தூர்.

தனது மகளின் திருமணம் பற்றி கேட்டுள்ளார். 

மகள் 29-6-2000-ல் பிறந்தவர். கன்னி லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் ரிஷப ராசியில், குரு, சந்திரன், சனி உள்ளது. மிதுன ராசியில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் என உள்ளது. ஆக, அனைத்து கிரகங்களும் இரண்டே கட்டத்தில் அமைந்து, கிரக யுக்த ஜாதகமாக உள்ளது. ராசிக்கு 2-ல் செவ்வாய் தோஷமுண்டு. இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 5+7-ஆம் அதிபதிகள் இணைவு. எனவே கண்டிப்பாக இஷ்ட திருமணம்தான் நடக்கும். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. இப்போது இவள் ஒரு பையனை விரும்பி, பழகி கொண்டிருக்கிறாள். ராகு தசை, சனி புக்தி 2026 ஏப்ரல்வரை. அதன்பிறகு திருமணம் செய்ய சொல்லவும்.இந்தப் பெண்ணிற்கு, மாங்கல்யம் சார்ந்த, நிறைய பரிகாரம் செய்துவிட்டு பின் திருமணம் செய்வது நல்லது. 

Advertisment

கந்த சுப்பிரமணியன், சுரண்டை.

தனது ஆயுள். தொழில், தந்தைக்கு செய்ய வேண்டிய கர்மம் பற்றி கேட்டுள்ளார்.

இவர் 23-5-1988-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவரது 8-ஆமிடத்தையும், 8-ஆம் அதிபதியையும் சனி பார்ப்பதால், ஆயுள் விருத்தி ஜாதகம்.இவருடைய தொழில் எப்போதும் ஒன்றுபோல தொடர்ச்சியாக நன்றாக நடக்க இயலாது. ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வந்து போகும்.நடப்பு சந்திர தசை. இதில் புதன் புக்தி 2026 மேவரை. அது வரையில் உங்கள் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. 2026-ஆம் வருட கடைசிவரை, தந்தையை நன்கு கவனித்துக் கொள்ளவும்.அங்காரக சதுர்த்தியன்று, விநாயகர் வழிபாடு நல்லது.

Advertisment

என். உஷா.  

உடல்நலம், ஆயுள் பலம் பற்றி கேட்டுள்ளார்.

20-6-1956-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், விருச்சிக ராசி, அனுச நட்சத்திரம். நடப்பு செவ்வாய் தசை ஆரம்பம். இதில் செவ்வாய் தசை சுயபுக்தி சென்று, ராகு புக்தி 2026 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு கொழுப்பு சம்பந்தமான பிரச்சினை அல்லது வாதம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். மருத்துவச் செலவும் அலைச்சலும் இருக்கும். எனினும் இந்த செவ்வாய், குருபார்வையில் இருப்பதால், ஆயுள் பற்றிய கவலை வேண்டாம்.உடல்நலம் சீராக செவ்வாய்க் கிழமைதோறும் நாக சுப்பிரமணி யரை வணங்கவும்.

ஆர்.மோகன், கடலூர்.

இவரும் உடல்நலம், ஆயுள் பற்றி கேட்டுள்ளார்.

6-2-1958-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி. பூர நட்சத்திரம். சிம்ம ராசிக்கு அஷ்டம சனி ஓடிக்கொண்டிருக்கிறது. நடப்பு குரு தசையில் ராகு புக்தி 2026 ஆகஸ்ட்வரை. குரு அம்சத்தில் நீசம். குருவும், ராகுவும் ஒரே நட்சத்திர சாரத்தில் நிற்கின்றனர். எனவே இவர் எங்காவது, விழுந்துவிடாமல் பத்திரமாக இருக்கவேண்டும். பயணங்களின்போது கவனமாக இருக்கவும்.வியாழக்கிழமைதோறும் சிவனையும், சாய்பாபா, காஞ்சி பெரியவர் போன்ற சித்தர்களை வணங்கவும். 

Advertisment


மகேஸ்வரி, விழுப்புரம்.

ஒரு வருடமாக உடம்பு சரியில்லை. நிறைய வைத்தியம் செய்துவிட்டேன். பயமாக இருக்கிறது. எப்போது சரியாகும்?

12-3-1978-ல் பிறந்தவர். துலா லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். உங்களுக்கு ராகு தசை ஆரம்பித்து ராகு புக்தி நடந்துகொண்டிருக்கிறது. எனவே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள். பிரதோஷ காலத்தில் சிவனையும் அம்பாளையும் வழிபடுங்கள்.