குமரேசன், எடப்பாடி
23-11-1983-ல் பிறந்தவர். ரிஷப லக்னம். மிதுன ராசி.
உங்கள் லக்னாதிபதி சுக்கிரன் நீசம் என்றாலும், சந்திரனுக்கு கேந்திரம் பெற்றதால், நல் யோகம் தருவார்.புதன், செவ்வாய் பரிவர்த்தனை. நடப்பு புதன் தசை. இந்த தசை வியாபாரத்தில் மேன்மை தரும்.உங்கள் ஜாதகத்தில், குரு, புதன், கேது என மூன்று கிரகங்களும் புதன் சாரத்தில் நின்று, கிரக யுத்தம் பெறுகின்றனர். எனினும் புதன், செவ்வாய் பரிவர்த்தனை இந்த தோஷத்தை, நீர்த்துப் போகச் செய்துவிடும்.எனவே, நடப்பு புதன் தசை நீங்கள், கொஞ்சமும் எதிர்பாராத நன்மைகளை, தனது சுய புக்திக்குபிறகு செய்து தருவார்.நிறைய கிரக சேர்க்கைக்கு, கோளறு பதிக பாராயணமும், புதன் தசைக்கு சற்றே குகைமாதிரி இடத்தில் அமைந்த பெருமாளை வணங்குவதும் ஏற்புடையது.
கே. நாகலட்சுமி, கோவில்பட்டி
30-7-1967-ல் பிறந்தவர். துலா லக்னம். கும்ப ராசி. சதய நட்சத்திரம்.
தற்போது கேது தசை நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில், 5, 6-ஆம் அதிபதிகள் சேர்க்கை. எனவே உங்களுக்கு எப்போதும் ஆரோக்கிய குறைவு என்பது இருந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த 5, 6-ஆம் அதிபதிகளான குருவும், சனியும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். இது கிரக யுத்தம் பெறுவதைக் குறிக்கிறது. எனவே நீங்கள், ஞாயிற்றுக்கிழமைதோறும், சிவனை வணங்குவதும், முடிந்தால் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் கூறுவதும், கேட்பதும் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை, சனீஸ்வர சன்னிதி அர்ச்சகருக்கு, 100 கிராம் அளவில் நல்லெண்ணெய் பாக்கெட் வாங்கிக் கொடுங்கள். இது உங்களின் மூன்றாவது சனி சுற்றுக்கான பரிகாரமும் ஆகும்.2026-ஆம் வருடத்திற்குள் வீடு மாற்றம் உண்டு. உள்ளூரில் வீடு மாறுவீர்கள்.உங்கள், 4-ஆமிடத்தில், குரு நீசபங்கம். எனவே உங்களுக்கு, சற்று இடர்பாடான வீடுதான் அமையும். வீட்டில் துளசி வளர்ப்பதும், வெள்ளெருக்கு விநாயகர் வைத்துகொள்வதும் வாஸ்து தோஷம் நீங்க எளிய வழியாகும்.நடப்பு கேது தசைக்கு, அங்காரக சதுர்த்தி விரதமிருந்து, விநாயகரை வணங்குவது சிறப்பு.
சந்தான கிருஷ்ணன், திருச்சி
30-10-1982-ல் பிறந்தவர். மகர லக்னம். மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்.
இவர், தனக்கு திருமணம் ஆகுமா- ஆகாதா எனக் கேட்டுள்ளார். இவரது லக்னத்துக்கு 10-ஆமிடத்தில் ஐந்து கிரகங்களின் கூட்டணி உள்ளது. இது சன்யாச யோகம் எனப்படும். எனினும் இவரது 7-ஆம் அதிபதி சந்திரன், இவரது லக்ன சாரத்தில் உள்ளதால், காலம் கடந்த திருமணம் உள்ளது. இவர் வேலை செய்யுமிடத்தில், பிற மொழி பேசும் பெண்ணை திருமணம் செய்வார்.நடப்பு சுக்கிர தசையில், சனி புக்தி. இந்த வருட கடைசிக்குள் இவருக்கு திருமணம் நடந்துவிடும்.வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும், குலதெய்வத்திற்கு இனிப்புடன், விளக்கேற்றி வணங்கவும். உங்கள் இஷ்டதெய்வக் கோவிலுக்கு இரும்பு கேட்மாதிரி, இரும்பு அல்லது எவர்சில்வர் பொருள் வாங்கிக் கொடுக்கவும்.
M.செல்வம், செங்கம்
9-5-1972-ல் பிறந்தவர். துலா லக்னம். மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்.
நடப்பு தொழில் வாய்ப்புகள் பற்றி கேட்டிருக்கிறார்.தற்போது, சுக்கிர தசையில், குரு புக்தி நடப்பு. இப்போது உங்கள் தொழில் முன்னேற்றத்திற்காக, கடன் வாங்க வேண்டியிருக்கும். அது நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவது, ரியல் எஸ்டேட், குத்தகை எடுப்பது என இந்த இனங்களில் முதலீடு செய்ய, கடன் வாங்குவீர்கள். எனினும் இந்த கடனை அடைத்துவிட முடியும். நிறைய பணியாளர் களை வேலைக்கு அமர்த்தி, சம்பளம் கொடுக்கும் வாய்ப்புண்டு.மீன ராசிக்கு, ஏழரைச்சனி ஓடிக்கொண்டிருக்கிறது. அது சிற்சில இடையூறுகள் தரக் கூடும்.துர்க்கையையும், நரசிம்மரையும் வணங்குவது நல்லது. ஏழரைச்சனிக்கு சனீஸ்வரரை வணங்கவும். குலதெய்வத்துக்கு நல்ல வெளிச்சம் கிடைக்குமாறு ஆவன செய்யவும்.