புஷ்பராஜ், 2-11-1962-ல் பிறந்தவர். பெங்களூரில் இருந்து கேள்வி கேட்டுள்ளார்.
எனக்கு தற்போது என்ன தசை நடக்கிறது?
கம்ப்யூட்டரில் உங்களின் பிறந்த விவரம் பதிவிட்டு பார்த்ததில், நடப்பு குரு தசை. உங்கள் லக்னம் தனுசு. ராசி தனுசு. பூராட நட்சத்திரம். இந்த குரு தசை, சுமாரான பலன்களை கொடுக்கும். உங்கள் ஊரிலுள்ள சிவனை தினமும் வணங்கவும்.
பெயர் வெளியிட விரும்பாத ஜாதகர்: திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
6-12-1994-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி. உத்திராட நட்சத்திரம். லக்னத்தில், சூரியன், புதன், குரு சேர்க்கை. இது ஒருவித சன்யாசி யோகம்தான். எனினும், குரு ஜாதகரின் 5, 7, 9-ஆமிடங்களைப் பார்ப்பதால், ஜாதகருக்கு கல்யாண ப்ராப்தம் கண்டிப்பாக உண்டு. இவரின் 7-ஆம் அதிபதி சுக்கிரன், ராகுவுடன் ஒரே நட்சத்திர சாரத்தில் 12-ல் மறைவு. முன்பே திருமணமாகி இருப்பின், அது விரயமாகியிருக்கும்.
நடப்பு ராகு தசை, புதன் புக்தி. 2026 ஏப்ரல்வரை. இதற்குள் இவருக்கு திருமணம் நடந்துவிடும். வரும் வரன் ஏதோ ஒரு குறையுள்ளவராக அமைவார். இவருக்கு சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், இத்திருமணம் இவர் விருப்பப்படி நடக்கும்.
ராகு தசை நடப்பதால், அருகி லுள்ள துர்க்கையை வழிபடுவது சிறப்பு.
வாசகி ஒருவர் 2-1-1977-ல் பிறந்தவர். தற்போது நான் வாகனம் வாங்கலாமா என்று கேட்டுள்ளார்.
தனுசு லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். இவருக்கு குரு, செவ்வாய் பரிவர்த்தனை உள்ளது. நடப்பு குரு தசையில், செவ்வாய் புக்தி. தாராளமாக வாகனம் வாங்கலாம். கண்டிப்பாக வாகனம் வாங்குவீர்கள். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டிக்கொள்ளவும்.
ராமன்: திருநெல்வேலி தனது மகன் வேலை மாற்றம், திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
மகன்: 12-4-1999-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கும்ப ராசி. சதய நட்சத்திரம். இவருக்கு புதன், சனி நீசபங்கம் பெற்றுள்ளனர். நடப்பு குரு தசை. இது 8-ஆம் அதிபதி தசை. மற்றும் கும்ப ராசிக்கு ஏழரைச்சனி. குரு தசையில், சுக்கிர புக்தி ஓடுகிறது. இதில் 2026 ஜனவரியில் வெளியூர், வெளிநாட்டு வாய்ப்பு வரும். குரு தசை, சூரிய புக்தி 2027 ஜூன் மாதத்தில் திருமணம் நடத்தலாம். சக்கர நாராயணரையும், குலதெய்வத்தையும் வணங்க, வாழ்வு மேன்மை பெறும்.
எம். திருவேங்கடம்: சென்னை தன் மகனின் உடல்நிலை பற்றி கேள்வி கேட்டுள்ளார்.
டி. சந்திரசேகர் 15-7-1979. துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். சனியின் பார்வை, 8-ஆமிடத்தில் விழுவதால் ஆயுள் பற்றிய பயம் தேவையில்லை. சனி பார்வை தீர்க்காயுள் கொடுக்கும்.நடப்பு சுக்கிர தசை. 8-ஆமிட அதிபதி தசை. அதில் புதன் புக்தி ஓடுகிறது. இவருக்கு 6-ஆம் அதிபதி குரு உச்சம். அதனால் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த குருவுடன், புதன் சேர்ந்து, அவரின் புக்தி நடப்பதால், ஜாதகர் மிகவும் சிரமப்படுகிறார். மெதுவான உடல் முன்னேற்றம் காணலாம். உங்கள் குலதெய்வத்திற்கு, இரும்பு சம்பந்தப் பொருட்களை தானம் செய்யவும். மக நட்சத்திரமன்று, எருமை மாட்டிற்கு, எள் பிண்ணாக்கு கொடுக்கவும்.
சண்முகம்: ஈரோடு
இவர் செருப்பு பைகள் விற்பனை செய்யும் கடைகள் வைத்துள்ளார். ஆனாலும் முன்னேற்றம் இல்லை. செழிப்பான வாழ்வு எப்போது எனக் கேட்டுள்ளார்.
5-5-1967-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்.
இவரின் லக்னாதிபதி சூரியன் உச்சம். இந்த சூரியன் ராகுவுடன் ஒரே நட்சத்திரக்கா-ல் நின்று கிரகண நிலை பெறுகிறார். எனவேதான், சூரியன் உச்சமாகி, இவரை முதலாளி ஆக்கினாலும், இந்த கிரகண நிலை, இவரது வாழ்வை பொ-வு, செழிப்பு இல்லாமல் ஆக்கிவிட்டது.காசு, பணவரவு பற்றி கேட்டுள்ளார். இவரது 2-ஆமிடத்தை சனி பார்ப்ப தால், பணவரவு ரொம்ப குறைவாக இருக்கும். நல்ல சேல்ஸ்மேன் கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளார். நீங்கள் திருமண மான பெண் பணியாளர்களை, வேலை உதவிக்கு அமர்த்தி கொள்ளவும். இது உங்கள் ஜாதக அமைப்புக்கு சரிப்பட்டு வரும்.நடப்பு சுக்கிர தசை. இதில் புதன் புக்தி 2027 ஜூன்வரை. இந்த காலகட்டம் உங்களுக்கு, நல்ல பணபலன் கிடைக்கும் நேரமாகும். அதற்கு நீங்கள் உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். உங்கள் ஊழியர்களின் சாப்பாட்டுச் செலவை, நீங்கள் ஏற்றுக்கொண்டால், அது அசைவமாக இருப்பது சிறப்பு. உங்கள் பணவரவு அதிகமாகும்.ஞாயிற்றுக்கிழமைதோறும் விஷ்ணு தாயாருக்கு, நெய் விளக்கு ஏற்றி வணங்க, லக்னாதிபதி சூரியனின் மறைவு தோஷம் நீங்கி, வாழ்வில் வெளிச்சம் ஏற்படும்.