க. ராஜேந்திரன், மதுரை.
உடல்நலம், கல்லீரல், வயிற்றுக் கோளாறு எப்போது குணமடையும். சம்பள பாக்கி எப்போது வரும் என கேட்டுள்ளார்.
20-12-1951-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். ஒருவரின் ஆரோக்கியத்தை கூறுமிடம் 5-ஆம் ஸ்தானம். உங்களின் 5-ஆம் அதிபதி புதன், சனியின் பார்வையில் உள்ளார். மேலும் அம்சத்தில் நீசம். மேலும் செவ்வாயுடன் பரிவர்த்தனை. நடப்பு சனி தசை. சனி, 8-ஆமிடத்தில் இருந்து தசை நடத்துகிறார். அவர் 5-ஆம் அதிபதியையும், 5-ஆம் வீட்டையும் பார்க்கிறார். சனி தசையில், சுக்கிர புக்தி. உங்களுக்கு சுக்கிரன் பாதகாதிபதி. எனவே சுக்கிர புக்தி 2027 மார்ச் மாதம் முடியும்வரை. ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதன்பின் ஓரளவு சமாளித்துவிடலாம். சனி பார்வை இருப்பதால், ஆயுர்வேத சிகிச்சை சரிப்படும்.இவ்விதம் 5-ஆமிடம் மோசமாக உள்ள ஜாதகர்கள், தன்வந்திரி பகவான் கோவில்சென்று அல்லது படமாக வாங்கி தினமும் வணங்கவும். சம்பள பாக்கி பற்றியும் கேட்டுள்ளார். அது சனி தசை, சுக்கிர புக்தி முடிவதற்குள் கிடைத்துவிடும். ஏகாதசிதோறும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கவும்.
ரா. மங்கையர்கரசி, மதுரை.
நீரிழிவு நோயால் சிரமப்படுகிறேன். எப்போது குணமாகும்?
25-7-1967-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். தற்போது மேஷ ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. மேலும் உங்களுக்கு சனி தசை யும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விதம் ஏழரைச்சனியும், சனி தசையும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, ஜாதகர் ரொம்ப திண்டாடி விடுகிறார்கள்.சனியும், கேதுவும் ஒரே நட்சத்திரக்கா-ல் நிற்பதால் நீர் சம்பந்தமான நோயால் அவஸ்தைப்படுகிறார்கள். இவ்விதம் கிரக அமைப்புள்ளவர்கள் குலதெய்வம், சனீஸ்வரன், காளி என தெய்வங்களை வணங்கவேண்டும். இதனால் நோய் மட்டுப்படும். பூரண சுகம் கிடைப் பது சற்று காலதாமதமாகும்.
மு. பழனிகுமார், இராமநாதபுரம். [email protected]
அரசு வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
9-8-1995-ல் பிறந்தவர். மேஷ லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 7-ல் ராகு. எனவே நாகதோஷ ஜாதகம். இவருடைய ஜாதக அமைப்புப்படி, அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மேலும் திருமணம் விருப்பத் திருமணமாக நடக்கும்.நடப்பு ராகு தசை. இதில் குருபுக்தி 2026 நவம்பர்வரை. அதுவரையில் கைக் கெட்டியது வாய்க்கு எட்டாதது மாதிரி, நிறைய நல்வாய்ப்புகள் உண்டாகி, பின் கைகூடாமல் போய்விடும். பின்வரும் புதன் புக்தி நிறைய நல்ல பலன்களைத் தரும்.இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் துர்க்கையை செவ்வரளி மலர்களால் வணங்கவேண்டும்.
ஏ.டி. சற்குருநாதன். [email protected]
திருமணம் எப்போது எனக் கேட்டிருக்கிறார்.
18-7-1992-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய். அவர் சூரிய சாரம் எடுத்துள் ளார். எனவே கடுமையான செவ்வாய் தோஷமுள்ளது. சனி, சந்திர சாரத்தில் நிற்கிறார். எனவே இரு தார தோஷமாக உள்ளது.நடப்பு சனி தசை. இதில் புதன் புக்தி 2026 செப்டம்பர்வரை. இதற்குள் திருமணம் முடிந்துவிடும். தா-தானம் செய்துவிட்டு திருமணம் முடிக்கலாம். அல்லது ஒரு கோவி-ல் திருமணம் செய்வது நல்லது.இவ்விதம் சனி தசை நடந்து, அவரும் சந்திர சாரத்தில் சென்றால், அம்மன் கோவில்களில் நிறைய மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் சேர்த்து கொடுப்பது நல்லது.
சரண்யா. [email protected]
தனது மகளுக்காக கேள்வி கேட்டுள்ளார். தனது பெண் அவரது சித்தப்பா பையனை அதாவது- தம்பி முறை வருபவரை திருமணம் செய்துகொள்ள விரும்பு வதாகவும், என்ன செய்யலாம் எனவும் கேட்டுள்ளார்.பெண் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
2-2-2003-ல் பிறந்த பெண். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். பெண்ணின் லக்னத்தில் குரு உச்சம். லக்னாதிபதி 8-ல் மறைவு. இந்த லக்னாதிபதி சந்திரனை செவ்வாய் மற்றும் சனி பார்க்கிறார்கள். எனவே பெண்ணிற்கு சிந்தனை சிதறல் ஏற்பட்டு உள்ளது. புனர்பூ யோக ஜாதகம்.5, 7-ஆம் அதிபதிகள் பார்வை. 5-ஆம் அதிபதியுடன் கேது உள்ளார். 7-ஆம் அதிபதியுடன் ராகு அமர்ந்துள்ளார். வாஸ்தவத்தில் இந்தப் பெண், ஒரு கிறிஸ்துவ அல்லது முஸ்லீம் பையனை காத-க்கும் அமைப்புத்தான் காணப்படுகிறது. இந்த ஜாதகி, தன்னைப்போல ஒரு பெண்ணையோ அல்லது இரு பிறப்பாளர்களில் ஒருவரையோ விரும்பக்கூடிய நிலை உள்ளது.நடப்பு குருதசையில் சனி புக்தி 2028 மார்ச்வரை. இந்த காலகட்டத்திற்குள், இஷ்ட திருமணம் பண்ணிக்கொள்வாள். கூடவே ஒரு விபத்தை சந்திக்கும் வாய்ப்பும் வரும். இப்போது ரொம்ப பிடிவாதமாக இருப்பாள். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.இவ்விதம், ஜாதகத்தில் செவ்வாய்+கேது இவர்களை சனி+ராகு பார்க்கும்போது அவர்களும் 5, 7-ஆம் அதிபதிகளாக அமையும்போது, இயற்கைக்கு மாறான தொடர்புகளே ஏற்படும். இது முன்ஜென்ம விதிப்பயன் என்றே சொல்லலாம். மகிஷாசுரமர்த்தினியை வணங்கவும். சிவப்பு நூல் சேலை, செம்பருத்தி மலர்கள், சிவப்பு, குங்குமம் கொண்டு வணங்கவும்.
கே. செந்தில், நாமக்கல். [email protected]
இந்த ஜாதகருக்கு எப்போது விடியல் என்று கேட்டுள்ளார்.
26-6-1969-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். இவருடைய வாழ்க்கையில் விடியல் இல்லாததற்கு இரண்டு காரணம் உள்ளது. இவருடைய 9-ஆம் அதிபதி சந்திரன், இரு பாபர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு, பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். இதனால் வாழ்வு வளம் குறைவாக உள்ளது.இன்னொன்று, இவ்வளவு நாளும் வந்த தசைகளின் சார நாதர்கள் மறைந்திருந்தனர். அதனால், சுப பலன்களை நிறைவாக தர இயலவில்லை.நடப்பு சுக்கிர தசையில் சுக்கிர புக்தி 2027 ஏப்ரல்வரை. இந்த சுக்கிர தசை உங்களுக்கு விபரீத ராஜயோகம் எனும் அமைப்பில், வாழ்வின் விடியலைத் தரும்.இவ்விதம், வாழ்நாளில் விடியலை நோக்கி, காத்திருப்பவர்கள், அமாவாசையன்று, பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுங்கள்.
விராஜ் வகாடியா. [email protected]
வாழ்நாள் முழுவதும் கஷ்டம், வேலை, தொழில் என எதுவும் சரிப்படவில்லை. திருமணம் பற்றியும் கூறுமாறு கேட்டுள்ளார்.
23-9-1991-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில், மாத சம்பள 6-ஆம் அதிபதியும், சொந்தத் தொழில் 10-ஆம் அதிபதியும், விரயாதிபதி சாரத்தில் உள்ளனர். அதனால் உங்களுக்கு சொந்தத் தொழிலும் சரிப்படாது; மாத சம்பளத்திலும் ஒழுங்காக இருக்க இயலாது. அப்படியெனில் சாப்பாட்டுக்கு இந்த ஜாதகர் என்னதான் செய்வார். இவர் எந்த வேலையையும், ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்யவேண்டும். காண்ட்ராக்ட் லேபர் எனும் வழிதான் இந்த ஜாதகருக்கு சரியாக வரும். வேலையில் அலைச்சல் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும். லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் இணைந்திருப்பதால், கண்டிப்பாக திருமணம் நடக்கும். பிறந்த இடம் விட்டு வேறிடத்தில் திருமணம் நடக்கும். சற்று கலப்பு மணமாக இருக்கும்.நடப்பு புதன் தசையில் சுக்கிரபுக்தி 2026 டிசம்பர்வரை. அதற்குள் ஒரு வேலையும் கிடைக்கும். திருமணமும் ஆகிவிடும். இவ்விதம் நிறைய கஷ்டங்கள் அனுபவித்து வருபவர்கள், வளர்பிறை அஷ்டமியில், பைரவரை வணங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/qa-2026-02-27-18-06-33.jpg)