Advertisment

ஜோதிட சந்தேகங்கள்! 21.02.26

QA


தேவகி, ஊட்டி.
sharmasara150@gmail.com

ஆரோக்கியம், ஆயுள் பற்றி கூறவும்.

4-5-1970-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. மேலும் இவருக்கு ராகு தசை, ராகு புக்தி 2026 நவம்பர்வரை. எப்போதும் சுய தசை, சுய புக்தி நல்ல பலன் கொடுக்க இயலாது. அடுத்துவரும் ராகு தசை- குரு புக்தியில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனேகமாக இவர் தற்போது காது பிரச்சினை, தலை சுற்றலில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்.இவர் ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி புதன் குருவால் பார்க்கப்படுவதால் ஆயுள் விருத்தியுண்டு. மேலும் ஆயுள்காரகன் சனி, நீசபங்க யோகமும் பெற்றுள்ளார்.இவ்விதம் சூரியன், சனி, புதன் சேர்க்கை பெற்றவர்கள், சிவனும், விஷ்ணுவும் இணைந்த தெய்வங்களை வணங்குவது சிறப்பு. 

Advertisment

சுதா, கோயம்புத்


தேவகி, ஊட்டி.
sharmasara150@gmail.com

ஆரோக்கியம், ஆயுள் பற்றி கூறவும்.

4-5-1970-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். மீன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. மேலும் இவருக்கு ராகு தசை, ராகு புக்தி 2026 நவம்பர்வரை. எப்போதும் சுய தசை, சுய புக்தி நல்ல பலன் கொடுக்க இயலாது. அடுத்துவரும் ராகு தசை- குரு புக்தியில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனேகமாக இவர் தற்போது காது பிரச்சினை, தலை சுற்றலில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்.இவர் ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி புதன் குருவால் பார்க்கப்படுவதால் ஆயுள் விருத்தியுண்டு. மேலும் ஆயுள்காரகன் சனி, நீசபங்க யோகமும் பெற்றுள்ளார்.இவ்விதம் சூரியன், சனி, புதன் சேர்க்கை பெற்றவர்கள், சிவனும், விஷ்ணுவும் இணைந்த தெய்வங்களை வணங்குவது சிறப்பு. 

Advertisment

சுதா, கோயம்புத்தூர்.
sudhap1106@gmail.com

தனது மகன் எப்போதும் போல் தன்னிடம் பேசுவது இல்லை. எப்போது பழைய படி பேசுவார் என்று கேட்டுள் ளார்.

Advertisment

மகன் 31-5-1998-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை. இதில் சனி புக்தி ஓடுகிறது. சனி நீசமாக உள்ளார். நீசபங்கம் ஆகவில்லை. மேலும் தசாநாதன் சுக்கிரனும், புக்திநாதன் சனியும் ஒரே நட்சத்திரத்தில், ஒரே ராசியில் கிரக யுத்தம்பெற்று நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.இவருக்கு குடும்பத்தில் ஏதோ மனவேற்றுமை அல்லது கடன் பிரச்சினை என இரண்டில் ஒன்றுள்ளது. உங்கள் மகனிடம் இது பற்றி கேட்டு தெரிந்துகொள்ளவும்.இவ்விதம் சனி நீசமாகி, புக்தி நடப்பவர்கள் வன்னி இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், சனி பாதிப்பு நீங்கும். 

இளமதி
kannaninsozhanorchestra@gmail.com

இவரின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

21-9-2016-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். நடப்பு சந்திர தசை. உச்சமாக உள்ளதால், ஆரம்பக் கல்வி நன்றாக அமையும். சனி ராசியில் 8-லும், அம்சத்தில் உச்சமாகவும் உள்ளார். எனவே ஆயுள் தீர்க்க ஜாதகமிது. 5, 6-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. எனவே அவ்வப்போது உஷ்ண சம்பந்த நோய் வந்து சரியாகும். மேல்படிப்பு சற்று தடங்கலுடன் கிடைக்கும். இந்தப் பெண்ணுக்கு, அம்சத்தில் புதன் உச்சம். எனவே சட்ட சம்பந்தமான கல்வியை சற்று மெதுவாக படித்து முடித்துவிடுவாள்.இவ்விதம் லக்னாதிபதி செவ்வாயாகி, கேது சாரத்தில் நிற்பவர்கள், அங்காரக சதுர்த்தியன்று, விநாயகரை விரதமிருந்து வழிபடுவது நல்லது.

செல்வராஜ், வேலூர்.

இவருக்கு கடன் சுமை அதிகமுள்ளது. எப்போது கடன் தீரும்? யார் மூலம் கடன் அடையும்.

16-10-1989-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். கடன் பற்றி குறிக்கும் வீடு 6-ஆம் ஸ்தானம். கடனை குறிக்கும் கிரகம் செவ்வாய். இவருடைய ஜாதகத்தில், 7-ஆம் வீட்டில் 7-ஆம் அதிபதி உச்சம். அவருடன் 6-ஆம் அதிபதி சூரியனும், செவ்வாயும் சேர்க்கை. இந்த கிரக கூட்டணிக்கு, சனியும் பார்வை இருக்கிறார். எனவே இவர் கடன் வாங்கினால், சீக்கிரமாக திருப்பி கொடுக்க முடியாத நிலை உண்டாகும்.தற்போது மேஷ ராசிக்கு ஏழரைச்சனி, நடப்பு ராகு தசை. அதில் சனிபுக்தி. எனவே அனைத்தும் விரயமாகும் காலம். அதனால் ராகு தசை, சனி புக்தி 2026 செப்டம்பருக்குள், தனது தந்தை அல்லது வாழ்க்கைத்துணை பெயரிலுள்ள வீட்டை விற்று கடனை அடைத்துவிடுவார்.இவ்விதம் கடன் தொல்லையுடையவர்கள் ஸ்ரீருண விமோசன லிங்கத்தை வழிபட வேண்டும். 

ஈஸ்வரன், சென்னை.

வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். விடிவு காலம் உண்டா எனக் கேட்டுள்ளார்.

19-5-1975-ல் பிறந்தவர். கன்னி லக்னாதிபதி ஓரளவு நன்றாக இருந்தால்தான், வாழ்க்கை சற்று நல்லவிதமாக ஓடும். இவருடைய லக்னாதிபதி புதன், கேது மற்றும் சனி இடையே மாட்டிக்கொண்டு பாப கர்த்தாரி யோகம் பெறுகிறார்.மேலும் கிரக யுத்த ஜாதகமாகவும் உள்ளது. எனவே எப்போதும் சற்று சிரமத்தில் உள்ளார்.நடப்பு ராகு தசை. இதில் சுக்கிர புக்தி 2026 டிசம்பர்வரை. இதில் வேலையில் இடமாற்றம் இருக்கும். அடுத்துவரும் சூரிய புக்தி, கொஞ்சம் தொலைதூர இடத்தில் வேலையில் அமரச் செய்யும்.இவருக்கு அம்சத்தில் குருவும், சனியும் நீசம். இவ்விதம் குருவும், சனியும் நீசமடைந்த ஜாதகமுடையவர்கள் குலதெய்வத்தையும், தர்ம சாஸ்தாவையும் நன்கு வணங்கவேண்டும்.

bala210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe