எஸ்.டி. தியாகராஜன், கோயம்புத்தூர்.

தன் தம்பி மகன் திருமணம் எப்போது நடக்குமென்று கேட்டுள்ளார்.

எஸ்.டி. தனபால் குப்தா. 17-11-1981-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். ராசியில் ராகு. 7-ல் கேது. நாக மற்றும்  கால சர்ப்ப தோஷ ஜாதகம். ராசியில் 5, 7-ஆம் அதிபதிகள் பரி வர்த்தனை. முன்பே ஒரு காதல் திருமண ஏற்பாடு நடந்து முறிந்திருக்கும். தற்போது, சுக்கிர தசையில் சனிபுக்தி. இதில் 2026 ஜூன் மாதத்திற்குள், வாழ்வில் சிரமம் அனுபவித்து,  மீண்டுவந்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். இவருடைய ஜாதகத்தில் 7, 8-ஆம் அதிபதிகள் அம்சத்தில் நீசம். எனவே நேர் சீரான திருமணத்திற்கு வாய்ப்பில்லை.உங்கள் ஊரிலுள்ள கார்த்திக்கேயனை செவ்வரளி மாலை மற்றும் தீபமேற்றியும் வழிபடுங்கள்.

Advertisment

ஹேமா ரேக்கா, சேலம். 

தன்னுடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, வேலை, திருமணம், உடல்நலம் என அனைத்தையும் கேட்டுள்ளார்.

Advertisment

11-2-2006-ல் பிறந்துள்ளார். மேஷ லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவரது ராசியில் சனி, சந்திரன் இணைவு. புனர்பூ யோகம் பெறுகிறார். அம்சத்தில் செவ்வாய், சனி உச்சம். இருவரும் ஒரே நட்சத்திர சாரத்தில் உள்ளனர்.புதன் தசை பாதிப்பு இருக்காது. புதன் தசை ராகு புக்தியில் வெளியூரில் வேலை கிடைக்கும். புதன் தசை, குரு புக்தியில் திருமணம் நடக்கும். கேது பகவான், சனியின் பார்வை பெறுகிறார். அதனால் சற்று உடல் நிலை பாதிப்பு உண்டு.குரு, சுக்கிரன் பரிவர்த்தனை காரகோ பாவ நாஸ்தி கொடுக்காது.

சு. அனந்த சுப்பிரமணியன்

நிறைய ஆட்களிடம் நிறைய பணம் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த தேதி, நேரம், இருப்பிடம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கட்டம் மட்டும் அனுப்பி யுள்ளார். கும்ப லக்னம், விருச்சிக ராசி. கேட்டை நட்சத்திரம். உங்களின், பணவரவைக் குறிக்கும். குரு 5-ஆமிடத்தில் அமர்ந்திருந்தாலும், அவரின் சாரம் வாங்கியவர். 12-ல் உச்சம். இதனால்தான் உங்கள் பணம், தொழில் செய்யும் இடத்திலும், இளைய சகோதரனாலும் விரயமாகி உள்ளது.நீங்கள் யாருக்காவது, கடன் கொடுத்தாலும், அது கண்டிப்பாக திரும்பி வராது. உங்களின் 6-ஆம் அதிபதி நீசமாகி, 8-ஆம் அதிபதியுடன் உள்ளார்.வீடு உங்கள் பெயரில் வாங்க வேண்டாம். வழக் கம்போல் அதையும் பிடுங்கி கொள்வார்கள்.எல்லா ஜாதகத்திலும் 5-ஆமிடம் மார்பு பகுதியை குறிக்கும். உங்கள் 5-ஆம் அதிபதி நீச சந்திரன், கேது வுடன் உள்ளதால், மார்பு சம்பந்த வ- இருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கேது தோல் நோயையும், புதன் நரம்பு சம்பந்த பிரச்சினையையும் தருவார்.உங்கள் பிறப்பு நேரம் பற்றிய தகவல்கள் இல்லாத தால், தசா புக்தி பலன் சொல்ல இயலாது.

Advertisment

ஆர்.வி. ஜெகதீசன், மதுரை.

தன்னுடைய இளைய மகனுக்கு கடந்த சில வருடங்களாக வயிற்றில் அல்சர் வ- உள்ளது. எப்போது சரியாகும் என்று கேட்டுள்ளார்.

ஆர்.ஜே. அபிஷேக் 25-11-2003-ல் பிறந்தவர். துலா லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை. இந்த சுக்கிர தசை ஆரம்பித்தி-ருந்தே இவருக்கு ஏதாவது உடல் நோய் வந்திருக்கும். ஏனெனில் சுக்கிரன் இவருக்கு 8-ஆம் அதிபதியாகி, வக்ரசனியின் பார்வையில் இருப்பதால், ரொம்ப சிரமப்படுகிறார். மேலும் உணவுக்குரிய இடத்தில் நீச சந்திரன், பாதகாதிபதி சூரியனும் புதனும் உள்ளனர். இதனால் இவருக்கு உணவே, உடல்நல சிக்கலை உண்டாக்குகிறது. இன்னும் சில வருடங்கள் சித்த வைத்திய மருந்துகளை எடுத்து கொள்ளச் சொல்லவும். திருச்செந்தூர் முருகனை அவ்வப்போது தரிசிக்கவும். வயதான தம்பதி களுக்கு, அரிசி நொய் கஞ்சிவைத்து கொடுங்கள். குலதெய்வத்துக்கும் படையல் போடுவதாக வேண்டிக் கொள்ளவும். 

ஒரு வாசகர், மதுரை.

அவருடைய மகனின் வேலை பற்றி கேட்டுள்ளார்.

ஆர்.ஜே. அர்விந்த பாபு, 26-5-1998-ல் பிறந்தவர். கடக லக்னம், ரிஷப ராசி. ரோகிணி நட்சத்திரம். இந்த ஜாதகரின் வேலை ஸ்தான குரு. 8-ல் மறைவு. 6-ஆமிடத்தை சனி பார்வை. ஒரு வேலை கிடைத்து விட்டுவிட்டால், அடுத்த வேலை கிடைக்க வெகு தாமதமாகிவிடும்.அரசு வேலை பற்றி கேட்டிருக் கிறார். அரசு வேலையைக் கொடுக் கும் சூரியன் 11-ஆமிடத்தில் நிறைய கிரகங்களோடும், சனி பார்வையிலும் உள்ளார். இதனால் இவருக்கு முழுமையான அரசு பணி இல்லாமல், அரசு சார்ந்த பணி கிடைக்கும்.நடப்பு ராகு தசை. இதில் சுக்கிர புக்தி 2026 மார்ச்வரை. சுக்கிரன், சனி, செவ்வாய்க்கு இடையே மாட்டிக்கொண்டு, பாப கார்த்தாரி யோகம் பெற்றுள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டாம். அடுத்து வரும் சூரிய புக்தி நல்ல வேலை தரும். இந்த ஜாதகருக்கு எப்போதும் வேலை சிறப்பாக இருக்க, ஏதாவது சித்திரை வணங்கவேண்டும்.

திருமதி மீனாகுமாரி, விருதுநகர்.

தன் பெண் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

கே. விஜயலட்சுமி 15-10-1992-ல் பிறந்தவர்.  ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் கேது, 7-ல் ராகு. நாகதோஷம் உண்டு. ராசிக்கு 2-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷமும் உள்ளது. இவருடைய குடும்ப ஸ்தானத்தையும், சுக்கிரனையும், சனி பார்ப்பதால் திருமணம் தாமதமாகிறது. நடப்பு குரு தசையில், சனி புக்தி. இதில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் பெண்ணுக்கு திருமணமாகிவிடும். இந்தப் பெண்ணிற்கு, கணவர் வீடு சிறு தூரப் பயணத்தில் அமையும். எனினும் கணவரோடு வெளியூர், வெளிநாடு செல்வாள்.சிவனுக்கு நெய்தீபமேற்றி வணங்கவும். ஏற்கெனவே செய்த பரிகாரம் போதுமானது.

திருமூர்த்தி, சேலம்

தனது பேரனின் திருமணத்தை பார்க்க இயலுமா என்று கேட்டுள்ளார்.

8-6-1949-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். இவருடைய லக்னாதிபதி புதனை, சனி குரு இருவரும் பார்த்ததால் நிறைய ஆயுள் ஜாதகமாக உள்ளது. நடப்பு சுக்கிர தசை விரயாதிபதி தசை. இதில் குரு புக்தி 2026 பிப்ரவரிவரை.ஆயுள் விஷயம் மட்டும் இறைவனின் கைகளில் உள்ளது. தெய்வம் அனுமதி கொடுத்தால், உங்கள் பேரன் திருமணத்தை பார்க்க இயலும். திருக்கடையூர் சென்று வேண்டிக் கொள்ளவும்.

தங்கவேல்

தன் பெண்ணின் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

பெண் 4-8-2002-ல் பிறந்துள்ளார். மிதுன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் ராகு- 7-ல் கேது, நாகதோஷம் உள்ளது. லக்னத்துக்கு 2-ல் செவ்வாய் தோஷம் உண்டு. களஸ்த்திரகாரகன் சுக்கிரன் நீசம்.இந்தப் பெண் ஜாதகப்படி, நீங்கள் பார்க்கும் வரன்களில், அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்வாள்.நடப்பு ராகு தசையில் புதன் புக்தி 2026 பிப்ரவரிவரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும்.திருமணம் முடிந்தவுடன், திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்வதாக வேண்டிக் கொள்ளவும்.

ஒரு வாசகர், ஈரோடு.

தன் மகன் அரசு வங்கியில் சேர முடியுமா, திருமணம் எப்போது என்று கேட்டுள்ளார்.

மகன் 10-4-1999-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாகதோஷ ஜாதகம். 7-ஆம் அதிபதி சனி நீசம். பின் நீசபங்கம். செவ்வாய், சனி பார்வை. எனவே இஷ்ட திருமணம். நடப்பு ராகு தசையில் குரு புக்தி 2026 மே வரை. எனவே அதற்குள் திருமணம் முடிந்துவிடும். 6-ஆம் அதிபதி சனி, சூரிய சம்பந்தம் பெறவில்லை. எனவே அரசு வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். மேலும் சூரியன் 8-ஆமிடத்தில் மறைவு. அரசு வேலை வாய்ப்பு இல்லை.நடப்பு ராகு தசைக்கு அருகிலுள்ள ரங்கநாதப் பெருமாளை வணங்கவும்.