அன்பு சார்ந்த இனிய "பாலஜோதிடம்' வாசகர்களுக்கு இதுவரை நம்மைப் பற்றிய ஆன்ம அறிவின் பதிவுகளை பார்த்தோம். இனி சில வானியல் தகவல்களை பார்ப்போம்!
மழை புயல் பற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறுவர்.
அண்டவியல் பற்றி விஞ்ஞானிகள் கூறுவர்.
கிரகங்களின் ராசி பெயர்ச்சி மற்றும் பலன்கள் பரிகாரம் பற்றி ஜோதிடர் சொல்வார்கள். அதன் சாதகம் வானியல் பற்றி சொல்லும்போது இருக்காது.
ஜோதிடர்களுக்கு முதல் பாடமே வானியல் அறிவுதான்.
அது தெளிவாக இல்லையெனில் பலன் சொல்லும் அறிவு சரியாக கிடைக்காது!
வானியல் தெரியாதவர் ஜோதிட பலன்கள் கூறமுடியாதா?
அதற்கு பெயர் ஜோதிடம் இல்லை. அருள்வாக்கு அல்லது வாய் (பொய்)வாக்கு. (ஒருசிலர் இரண்டு வரி பலன்களை எதோ சூத்திரம் சொல்வதுபோல் பத்து நிமிடம் மூச்சை பிடித்துகொண்டு இழு இழுவென இழுத்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதை கைபேசியில் பார்க்கலாம்) கோள்களின் இருப்பு, நகர்வு, இணைவு, பிரிவு, நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் தோன்றி மறைதல். இவையெல்லாமே வானியல் கணிதங்கள். இது இல்லாமல் பலன் கிடைக்காது!
ஆன்மிகம், வானியல், கணிதம், ஜோதிடப்பலன்கள் இவை மூன்றும் ஒன்றா?
உங்கள் கருத்தில் சம்பந்தமில்லாத இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி சொல்வதே ஜோதிடம் எனும் தொழிலாகும்.
பலன்கள் என்பது மனித குலத்திற்கு பின்னர் வந்த ஆசிரியர்கள் அளித்த கருத்தியல் பாடம் ஆகும். இது வேதத்திலோ- வானியல் விஞ்ஞானத்திலோ கிடையாது. இந்த பலன்களை கூறும் வகையில் மாறுபடுவதே ஜோதிடம் மற்றும் ஜோதிடத்தின் இகழ்ச்சிக்கு காரண மாகிறது. காலத்தை கணிப்பது மட்டுமே ஜோதிடம் இதனையே முதலில் ஆரியபட்டர் அளித்தார். பின்னர் அந்த ஒளியின் பலன்கள் எவ்வாறு அமையும் என்பதன் கருத்துக்களை வராகமிகிரர் அளித்தார்.
அவருக்கு துல்லியமாக பலன்கள் கணிக்கும் அறிவு. வாக்கு பலம் இருந்தது. இதுவே மூலங்களின் அடிப்படையாகும். இத்தொடரின் நோக்கமே இவற்றை தனித்தனியே ஆய்வுசெய்து எதனெதனை எந்தெந்த வகையில் ஜோதிடத்தில் இணைத்து தொகுத்து கூறுகிறோம் என்பதே.
வானியல் என்பது அண்டவியல் மற்றும் கணிதவியல். இந்த விஞ்ஞான அறிவு இது இல்லையேல் ஜோதிடம் எனும் பாடம் இல்லை.
இதில் பலன்கள் உபரியாக வருவது. ஆனால் பலன்கள் மட்டுமே சாஸ்திரம் ஆகாது.
வேதங்களை தொகுத்த வியாசரின் மேற்படி 18. ஆன்மிக இதிகாச புராணங்களைக் கொண்டே கிரக பலன்களின் கருத்தியல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றையும் மூல ஜோதிட சாஸ்திரத்தையும் வேத புராண இதிகாசங்களையும் அறிந்தால் புரியும்!
வரலாறு கூறுகிறது கடந்த 1,500 ஆண்டு களுக்குமுன் ஜோதிட சாஸ்திரத்திலுள்ள பஞ்சாங்க கணிதம் எனும் வானியல் அற்புத விஞ்ஞானத்தை தனது நுட்பமான அறிவின் மூலமாக மட்டும் கணித்து கணிதத்தை வெளியிட்டவர் இந்திய வானவியல் கணிதத் தின் தந்தை மகா குருவான ஆரியபட்டர் அதே காலகட்டத்தில் அவரிடம் சிஷ்யராக இருந்து இந்த அற்புதமான பஞ்சாங்க ஒளியின் அறிவை பெற்று ஜோதிட சாஸ்திரம் மற்றும் பலன்களை கணித்து அளித்தவர் மற்றொரு சிறந்த மகா குருவானவர் வராகமிகிரர் ஆவார்.
இந்த இருவருக்கும் பின்னர் காலத்தில்தான் அனைத்து உலக ஆசிரியர்களையும் வரலாறு குறிப்பிடுகிறது. இவர்கள்தான் இந்திய வரலாற்று வானியல். ஜோதிட முன்னோடிகள்!
கணிதம் இல்லையேல் பஞ்சாங்கம் இல்லை. பஞ்சாங்கம் இல்லையேல் ஜோதிடம் இல்லை அதன் பலன்களும் இல்லை.
ஆகவே, பலன்களை மட்டுமே தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வலர்கள் அதன் அடிப்படையான ஆதாரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்!
இவர்களின் காலத்துக்கு முன்பாக ஜோதிட ஆசிரியர்கள் இல்லையா?
இருந்தார்கள்.
அது வேத காலம் எனப்படுகிறது.
அந்தகால சுவடிகளில் வேத காலத்திற்கான ஜோதிட ஆதாரங்களாக ரிக் வேதத்தில் லகாதா என்பவரால் எழுதப்பட்டது அதில் வானியல் புராண குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஆனால் அந்த வேதத்தில் ஜாதகம் பலன்கள் எதுவும் குறிப்பிடவில்லை. பருவ காலங்களின் அடிப்படையில் உள்ளது.
வேத காலத்து ஆசிரியர்கள் காலம் அனுமானத்தில் இருப்பதால் ஆதாரம் இல்லை!
அப்படியானால் வேத காலத்திற்கு பிறகு முதன்மையான ஜோதிட ஆசிரியர்கள் ஆரியபட்டர்- வராகமிகிரர் இவர்கள்தானா?
ஆம். பல்கலைக்கழகம் அப்படித்தான் குறிப்பிடுகிறது!
அது எந்த பல்கலைக்கழகம்?
ஆரியபட்டர் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் (ஒமஈஆஆ) புனேயில் உள்ளது மற்றும் அங்கு ஆரிய பட்டரின் சிலையும் காணலாம்.
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும்.
வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது- எகிப்து மற்றும் அரேபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர் களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன.
மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடை வேளைகளில் விண்வெளியை அவதானித் துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது.
ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப் பாக இருந்தது.
ஆனால் இது ஆரியபட்டர் காலத்தில் இல்லை. இந்த கருவி இல்லாமலே தனது நுட்பமான அறிவில் கூறினார் வரலாற்றுபூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது;
வான்பொருளியக்க அளவியல் (ஆள்ற்ழ்ர்ம்ங்ற்ழ்ஹ்), விண்- தெரிமுறை செலுத்து நெறி (ஈங்ப்ங்ள்ற்ண்ஹப் சஹஸ்ண்ஞ்ஹற்ண்ர்ய்), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை.
வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில் முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது.
20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவ தானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இருதுறைகளாகப் பிரிந்தது.
விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது அவதானிப்பு வானியல் ஆகும்.
விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது கருத்தியல் வானியல் ஆகும்.
இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக்கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
விழைஞர்கள் இன்னும் முக்கியப் பங்குவகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்றாகும்.
விசேடமாக மாறுகின்ற தோற்றப் பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்துவருவதிலும் அவர்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றுகின்றனர்.
இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.
அதாவது- ஜோதிட பலன்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை இது தனி அறிவியல் பாடமாக இருந்தாலும் இது இல்லாமல் ஜோதிடம் இல்லை!
-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/jothidam-2026-02-27-16-30-08.jpg)