காலத்தை வெல்லுவர்!
"காலனுக்கு உரைத்தல்!' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதரைப்போல வேலாயுதத்தை மனதில் இறுத்தி எமனுக்குச் சவால் விடுகிறார்.
(பல்லவி)
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்- அட (காலா)
(சரணம்- 1)
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்; என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன்- ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே- நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, மூடனே? அட (காலா)
(சரணம்- 2)
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்- தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்- இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன்- ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்- அட (காலா)
(பாரதியாரின் ஞானப் பாடல்கள்: பாடல்- 7)
மிக எளிய வர்த்தைகளிலேயே பாரதியார் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதில் மார்க்கண்டேயனைக் காக்க எமனை சிவன் வதைத்த புராணக் கதையையும், முதலையிடம் சிக்கிய கஜேந்திரன் யானைக்கு விஷ்ணு மோட்சம் அளித்த புராணக் கதையையும் குறிப்பிட்டிருக்கிறார்.
"பாகவத புராணம்' நூ-ல் கஜேந்திர மோட்சம் கதை சொல்லப்
பட்டுள்ளது. அதை முத-ல் சுருக்கமாகப் பார்ப்போம்...
கந்தர்வ உலகத்தைச் சேர்ந்தவர்கள் மிக அழகிய வடிவுடையவர்களாக இருப்பார்கள். அவ்வுலகத்தைச் சேர்ந்த குகூ எனும் காந்தர்வன் மகரிஷி தேவலரால் "நீ முதலை ஆவாய்' என சாபம் பெற்றான்.
(உலக மக்களுக்கு ஆடைகளை உருவாக்கவும் நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் இதயத்தி-ருந்து உருவானவர் தேவலர்).
இந்திரத்யும்னன் எனும் பாண்டிய மன்னன் துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டு, விஷ்ணுவை பூஜித்து வந்தான்.
அந்தச் சமயம் அகத்திய முனி, தன் சீடர்களுடன் அந்த ஆசிரமத்திற்கு வ
காலத்தை வெல்லுவர்!
"காலனுக்கு உரைத்தல்!' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதரைப்போல வேலாயுதத்தை மனதில் இறுத்தி எமனுக்குச் சவால் விடுகிறார்.
(பல்லவி)
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்- அட (காலா)
(சரணம்- 1)
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்; என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன்- ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே- நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, மூடனே? அட (காலா)
(சரணம்- 2)
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்- தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்- இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன்- ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்- அட (காலா)
(பாரதியாரின் ஞானப் பாடல்கள்: பாடல்- 7)
மிக எளிய வர்த்தைகளிலேயே பாரதியார் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதில் மார்க்கண்டேயனைக் காக்க எமனை சிவன் வதைத்த புராணக் கதையையும், முதலையிடம் சிக்கிய கஜேந்திரன் யானைக்கு விஷ்ணு மோட்சம் அளித்த புராணக் கதையையும் குறிப்பிட்டிருக்கிறார்.
"பாகவத புராணம்' நூ-ல் கஜேந்திர மோட்சம் கதை சொல்லப்
பட்டுள்ளது. அதை முத-ல் சுருக்கமாகப் பார்ப்போம்...
கந்தர்வ உலகத்தைச் சேர்ந்தவர்கள் மிக அழகிய வடிவுடையவர்களாக இருப்பார்கள். அவ்வுலகத்தைச் சேர்ந்த குகூ எனும் காந்தர்வன் மகரிஷி தேவலரால் "நீ முதலை ஆவாய்' என சாபம் பெற்றான்.
(உலக மக்களுக்கு ஆடைகளை உருவாக்கவும் நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் இதயத்தி-ருந்து உருவானவர் தேவலர்).
இந்திரத்யும்னன் எனும் பாண்டிய மன்னன் துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டு, விஷ்ணுவை பூஜித்து வந்தான்.
அந்தச் சமயம் அகத்திய முனி, தன் சீடர்களுடன் அந்த ஆசிரமத்திற்கு வந்தனர்.
ஆனால் இந்திரயுத்மனன் பூஜையில் கவனமாக இருந்ததால் அகத்தியரை வரவேற்று உபசரிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட குறுமுனி, "நீ யானையாக பிறப்பாய்' என சாபமிட்டுவிட்டுப் போனார்.
அதன்படியே குகூ முதலையாகவும் இந்திரத் யானையாகவும் பிறந்தனர்.
திருப்பாற்கட-ன் நடுவிலுள்ள திரிகூடம் மலை. அதில் ஒரு அடர்ந்த காடு. கஜேந்திரன் எனும் யானை தன் யானைக் கூட்டத்துடன் அங்கு வசித்துவந்தது. அங்கே ஒரு அழகிய நீர் நிலை. சுத்தமான தெளிவான நீர் நிரம்பிய பெரிய நீர்நிலை. அதில் தண்ணீர் குடிக்க கஜேந்திர யானையும் மற்ற யானைகளெல்லாம் வந்தன. நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும்போது தண்ணீரில் இருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்வியது.
"யானைக்கு தரையில பலம்; முதலைக்கு தண்னியில பலம்' என்பதற்கேற்ப, அந்த முதலைப் பிடியி-ருந்து கஜேந்திரனால் மீள முடியவில்லை. பிற யானைகள் சேர்ந்து கஜேந் திரனை மீட்க போராடியும் முடியவில்லை. கஜேந்திரன் பிளிறி, பகவானை வேண்டியது. உடனே நாராயணர் அங்கு தோன்றி தன் விஷ்ணுச் சக்கரத்தால், முதலையின் வாயைப் பிளந்து கஜேந்திரனை மீட்டார்.
விஷ்ணுவின் கருணையால் முதலையாக இருந்த குகூ மீண்டும் அழகிய கந்தர்வனாகி, கந்தர்வலோகம் சென்றான். கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்து தன் தொண்டனாக ஆக்கிக்
கொண்டார் விஷ்ணு.
****
மயிலாடுதுறை- தரங்கம்பாடி மார்க்கத்திலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில்தான் மார்க்கண்டேயனுக்காக எமனை சிவன் தாக்கிய ஸ்தலம் எனப்படுகிறது. அதற்கேற்ப அங்குள்ள -ங்கத்தில் எமன் வீசிய கயிறுபட்ட தடம் இருக்கிறது. மார்க்கண்டேயன் கதையை சுருக்கமாகப் பார்ப்போம்...
முனிவர் மிருகண்டு, மருத்துவவதி தம்பதிக்கு திருமணமாகி நீண்டகாலமாகியும் குழந்தைப்பேறு இல்லாததால், காசி சென்று சிவனை வழிபாடு செய்தனர். சிவனருளால் ஆண் குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். அறிவுச் செல்வமாக விளங்கிய மார்க்கண்டேயன், தீவிரமான சிவ பக்தனாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு பதினாறு வயது வரைதான் ஆயுள் என ஜோதிடம் சொல்-யது.
பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பெற்றோரின் வேதனையை அறிந்து மார்க்கண்டேயன் விசாரிக்க, தயக்கத்துடன் காரணத்தைச் சொன்னார்கள். சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தார்.
பதினாறு வயதை எட்டிய மார்க்கண்டே யர், சிவனை பூஜித்துக் கொண்டிருந்தார்.
அவரது உயிரை எடுக்கவந்த எமதூதர்களால் மார்கண்டேயனை நெருங்கமுடியவில்லை. ஒருகட்டத்தில் எமதர்மனே தன் வாகனமான எருமைமீது அமர்ந்துவந்தார். "நான் மரணத்திற்கு அஞ்சவில்லை; நான் சிவபக்தன், சிவலோகம் செல்லவே விரும்புகிறேன். எமலோகத்திற்கு வரமாட்டேன்' எனச் சொல்-ய மார்க்கண்டேயர், சிவ-ங்கத்தைக் இறுகக் கட்டிக்கொண்டார். எமன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீதும், -ங்கத்தின்மீதும் விழ, பெருங்கோபம் கொண்ட சிவன், ருத்ர ரூபத்தில் தோன்றி, எமனை எட்டி உதைக்க, எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார்.
இந்த பூமியில் உயிர்களின் நிலை பிறப்பு- இறப்பு என சமநிலையில் இருந்தால்தானே பூமியால் சுமையை தாங்க முடியும்? அதனால் பூமாதேவி, "எமதர்மனை உயிர்ப்பிக்க'' வேண்டினாள். இதனால் எமதர்மனை சிவன் மன்னித்து உசுப்பிவிடுகிறார்.
என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக வாழ மார்க்கண்டேயனை ஆசிர்வத்துவிட்டுச் சென்றார் சிவன்.
இந்த இரு புராணக் கதைகளையும்தான் தன் பாட்டில் சொன்னார் பாரதியார்.
அந்தகா! (எமனே) உன்னை ஞானவாளால் வெட்டி வீழ்த்துவேன்
- என அருணகிரிநாதர் சொன்னதும்...
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
-என திருநாவுக்கரசர் சொன்னதும்....
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
-என மாணிக்கவாசகர் சொன்னதும்....
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்
-என பாரதியார் சொன்னதும்...
எமதர்மராஜனை இழிவுபடுத்துவதற்காக அல்ல. அது ஒரு குறியீடு!
"மரணத்திற்கு அஞ்சமாட்டோம்!' என்கிற உறுதியின் வெளிப்பாடு.
அருணகிரியார் "தான் முருகப் பெருமானின் தொண்டன்' என்கிற துணிவில் அப்படிச் சொன்னார்.
திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும் தாங்கள் சிவபெருமானின் தொண்டர்கள் என்கிற துணிவில் அப்படிச் சொன்னார்கள்.
பாரதியார் தான் முருகனின் வேலாயுத விருத்தத்தினை நெஞ்சில் நிறுத்திய துணிவில் அப்படிச் சொன்னார்.
ஜனனத்தில் தொடங்கும் வாழ்க்கை மரணத்தில் முடிந்துதானே ஆகவேண்டும். இதுதானே படைப்பின் நியதி என்பது அந்த ஞானஸ்தர்களுக்குத் தெரியாதா என்ன!
காலத்தை வெல்லுவர்!
பாடல்: 26
"நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்
சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப் பார்மரிப் பார்வெறுங் கர்மிகளே.'
பொருள்: நீல வண்ணம் கொண்ட மயி-ன்
மீது ஏறுகின்ற முருகப்பெருமான், அழகு
பொருந்தி காட்சிதரும் குறமகளான வள்ளி
யுடன் எப்போது வேண்டுமானலும் எழுந்
தருளுவான்; எனது குருநாதன் முருகன்
அருளிய சீலமாகிய மௌன நிலையை, ஒழுக்கநிலையை, மெய்ஞானத்தின் பொருளை உணர்ந்துகொண்ட சிவயோகிகள் மட்டுமே காலங்கடந்து நிற்பர்; பிறப்பற்றவர்களாக ஆவர்; கடவுளின் காலடி கலப்பர். உணராத வெறும் கர்மயோகிகள் சாதாரண மரணத்தையே அடைவர்.
வானகமே வசப்படும்!
மெய்யறிவை தெளிவற உணர்ந்தால் "வானகம் வசப்படும்' என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
"பொருளல் லவற்றைப் பொருளென்று உணரும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு.'' (குறள்- 351)
மெய்ப்பொருள் எதுவென்று தெளிவு பெறாதவர்கள் மெய்ப்பொருளாக இல்லாத ஒன்றை "இறைவன்' என்று தவறாக உணர்ந்து விடும்பட்சத்தில் பிறப்பறுத்தல் போய், இன்னும் கீழான பிறவி வந்துவிடும்.
"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீக்கி
மாசறு காட்சி யவர்க்கு.'' (குறள்- 352)
குற்றமில்லாத வழியில் சென்று, பெய்ப்பொருளை கண்டுணர்பவர்களுக்கு இருள் எனும் மருள் நீங்கி, பிறப்பில்லாப் பேரின்பம் கிட்டும்.
"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.'' (குறள்-353)
சந்தேகத்திற்கிடமில்லாமல் பெய்ப்பொருளை தெளிவுற தெளிந்தவர்களுக்கு, அடுத்தடுத்து பிறவிகளைத் தரும் வையகத்தைவிட; பிறவாமை தரக்கூடிய வனகமே எளிதில் வசப்படும்.
"பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.'' (குறள்- 358)
பிறப்பு என்கிற அறியாமை விலகவேண்டு மானால், அறிந்த பொருள்களிலெல்லாம் சிறந்த பொருளாகிய; பிறவாமைக்குக் காரணமான மெய்ப்பொருளை கண்டறிவதே அறிவு.
"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.'' (குறள்- 359)
அடைய விரும்புகிற இடமாகிய மெய்ப் பொருளை தெளிந்து, அதன்பிறகு ஏற்கெனவே இருக்கின்ற பற்றுகளும், இனி ஏற்படப்போகிற பற்றுகளும் அறுந்துவிழுவதற்கேற்ற ஒழுக்கத்துடன் நடந்துகொண்டால்; அடுத்தடுத்த பிறப்புகளுக்கு காரணமாக விளங்குகின்ற வினைகள் மறுபடியும் அண்டாது.
-இவ்வாறு மெய்ப் பொருள் குறித்துப் பேசுகிறது திருக்குறள்.
"சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறுங் கர்மிகளே.''
"மெய்ப் பொருள் உணர்ந்தவர்களே காலத்தை வென்றவராக இருப்பார்; உணராதோர் மரணிப்பர். வையகத்தில் மரணமென்றால் மறுபடி ஒரு பிறப்பிற்கு வழிவகுக்கும். மெய்ப் பொருளைச் சரண டைந்தால் பிறவித்துயர் எனும் பெருங்கட--ருந்து கரையேறலாம்' என்கிறார் அருண கிரியார்.