ஸ்திரி புத்ர விஹீன யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் 7-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் மனைவி, பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து பிரிந்து வாழ்வார்கள்.
தீர்த்தக் யோகம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்து, அதன்மீது சுப கிரகத்தின் பார்வை இருந்தா
ஸ்திரி புத்ர விஹீன யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் 7-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் மனைவி, பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து பிரிந்து வாழ்வார்கள்.
தீர்த்தக் யோகம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்து, அதன்மீது சுப கிரகத்தின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பல புனித பயணங்களை மேற்கொள்வார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும்.
ஜல யோகம்
ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் சூரியன், கேந்திரத்தில் சந்திரன், கேந்திரத்தில் சனி இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். சாதுர்யமாக இருப்பதைப் போல வெளியே காட்டிக்கொள்வார்கள். ஆனால் பலரிடமும் ஏமாந்து விடுவார்கள்.
சோர் யோகம்
ஒரு ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் பலமான புதன், அத்துடன் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் திருடனாக இருப் பார்கள். கை- காலில் காயம் அல்லது ஊனம் இருக்கும்.
பிக்சுக் யோகம்
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் சத்ரு நவாம்சத்தில் இருந் தால், அல்லது 6-ஆம் பாவத்தில் லக்னாதிபதி நீசமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் யாசித்து வாழ்க்கையை நடத்துவார்கள். செய்யும் செயல்கள் சரியாக இருக்காது.
க்ருபன் யோகம்
ஒரு ஜாதகத்தில் மேஷ லக்னத்தில் சந்திரன் இருந்தால், அதன்மீது சனியின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் கருமியாக இருப்பார்கள். கோப குணம் இருக்கும். பணத்தை எடுத்து செலவழிப்பதற்கு யோசிப்பார்கள்.
ஸ்த்ரி சஹ பசு சனி யோகம்
ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்ந்திருந்து, சட வர்க்கத்தில் சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்குப் பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும். அவர்களின் மனைவிக்குப் பிற ஆண்களுடன் தொடர்பு இருக்கும்.
செல்: 98401 11534
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us