ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் அமைப்பு!
பொதுவாக திருக்கோவில் திருச்சுற்றை வலம்வருதல் என்பது புனிதப் பயணம் மேற்கொள்வதற்குச் சமம். இறைவன் உறைந்திருக்கும் கருவறையைச் சுற்றி எடுக்கப் பெற்றிருக்கும் திருச்சுற்றுக்கள் மூன்று, ஐந்து என்ற எண்ணிக்கையில் அமையும். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் ஏழு திருச்சுற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் சுற்றைத் தவிர மற்ற அனைத்து திருச்சுற்றுக்களும் நன் நிலையில் மக்களின் பயன்பாட்டில் இன்றும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் ஏழு திருச்சுற்றுக்களுடன் அமைந்த ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ஆகும். மனித உடம்பு ஏழு தாதுப் பொருட்களால் ஆனது. அவற்றைக் குறிப்பதாக இச் சுற்றுகள் உள்ளன என்பர். திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில், நான்கு கிலோமீட்டர் தொலைவில் 156 ஏக்கர் பரப்பளவில், காவிரி, கொள்ளிடம் என்னும் இரண்டு பெரிய ஆறுகளுக்கு இடையில் ஸ்ரீரங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. முதலாம் ராசேந்திரச் சோழன் கி.பி. 1025-ஆம் ஆண்டில் இலங்கை மீது போர் தொடுத்து வென்று, சிங்களவர்களை சிறைபிடித்து வந்து இக்கோவில் திருச்சுற்றைக் கட்டினான் என்ற செய்தியும் நிலவுகிறது என்றாலும் இதற்கு முறையான சான்றுகள் இல்லை. இக்கோவிலின் ஏழு திருச்சுற்றுக்களில், நடுவில் பிரம்மாண்டமான கோபுரங்கள் தனித்தன்மைகளுடன் விளங்குகின்றன. கருவறையில் இருக்கும் பள்ளிகொண்ட அரங்கநாதன் கைகளை தலைக்கு அணையாகக் கொண்டு தென்திசையை நோக்கியவண்ணம் உள்ளார். தான் வீடணனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காக்க, தெற்கு நோக்கி இலங்கையை பார்த்தவண்ணம் பள்ளி கொண்டு உள்ளார்.
ஸ்ரீரங்க விமானத்தின் அமைப்பு
ஸ்ரீரங்க விமானத்தின் அமைப்பினை ஸ்ரீரங்க மஹாத்மியம் என்னும் நூல் 16 ஸ்லோகங்களில் விவரிக்கிறது. ஸ்ரீரங்க ராஜஸ்தவம் என்னும் நூலை இயற்றிய பராசர பட்டர், நிலமகள் திருவரங்க விமானத்தை வழிபடுவதற்காக தன் பரிவாரங்களுடன் இங்குவந்து சேர்ந்தாள் என்று கூறுவார். சுந்தரபாண்டிய மன்னன் தன் காலத்தில் விமானத்திற்குப் பொன் வேய்ந்தான் என்ற குறிப்பு கோவில் ஒழுகு நூலில் உள்ளது. முதல் திருச்சுற்று தர்மா வர்மா திருவீதி என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் மையப் பகுதியான மூலஸ்தானம் எனப் படும் கருவறையில் பெரிய பெருமாளாகிய அரங்கநாதன், ஆதிசேஷன் ஆகிய அரவணைமீது, கிடந்த கோலத்தில், 15 அடி நீளத்தில் சேவை சாதிக்கிறார். இத்திரு உருவம் சுதையாலானது. இத்திருஉருவத்திற்கு புனுகுச் சட்டம் என்ற பொருள் பூசப்பட்டு தைலக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. தைலக்காப்பு நாட்களில் பொதுமக்கள் பெரிய பெருமாளை சேவிக்க இயலாது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத் திருநாள், ஆவணி மாதம் திருப்பவித்திர திருநாள் ஆகிய இரு நாட்களும் இத்தைலக்காப்பு, திருமேனி முழுவதும் நிகழ்த்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பெரிய பெருமாளின் இரு கண்ணப் பகுதி யில் புனுகுச் சட்டம் பூசப்படுகிறது. இறைத் திருமேனியை இப்புனுகுச்சட்டம் காக்கும் என்பதை அறிவியலாளர்களும் ஏற்கின்றனர்.
கருவறையிலுள்ள மூலவருக்கு அழகிய மணவாளர் என்பது திருப்பெயர். இவரைத் தவிர கருவறையில் உற்சவர் அரங்கநாதர் எழுந்தருளி இருப்பார். இவருக்கு நம் பெருமாள் என்று பெயர். இவர்களைத் தவிர யாகபேரர் எனப்படும் திருவரங்க மாளிகையார். தீர்த்த பேரர் எனப்படும் சின்ன பெருமாள் பேரர், ஸ்நபன பேரர் எனப்படும் நித்திய உற்சவர், பலி பேரர் எனப்படும் செல்வர், சயனபேரர் எனப்படும் செல்வர் என ஏழு பேர் கருவறையில் எழுந்தருளி உள்ளனர்.
ப்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/aravanai-2026-01-30-15-31-30.jpg)