கி.பி.1323-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1331-ஆம் ஆண்டுவரை முகமது பின் துக்ளக் ஆட்சியில் இருந்தார். இவர், ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் இஸ்லாமியர்களைக் குடியேற்றம் செய்தார் என்ற செய்தி "கோயில் ஒழுகு' நூலில் காணப்படுகிறது. இஸ்லாமியர்களின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்துகொண்ட வைணவ அடியார்கள், துணிச்சலுடன் கோவிலிலிருந்து விலை உயர்ந்த அணிகலன்கள், புழங்கு பொருள்கள் ஆகியவற்றை திருமலை திருப்பதிக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் குறிப் புள்ளது. கிபி 1371-ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை வென்று விஜயநகர பேரரசு நிறுவப்பட்டது. இதன்பின்னர் திருப்பதியில் இருந்து கடவுள் சிலை, ஆபரணங்கள், பொருட்கள் ஆகியன மீண்டும் ஸ்ரீரங்கத் திற்கு கொண்டுவரப்பட்டன. அரங்கனின் திருவுரு
கி.பி.1323-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1331-ஆம் ஆண்டுவரை முகமது பின் துக்ளக் ஆட்சியில் இருந்தார். இவர், ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் இஸ்லாமியர்களைக் குடியேற்றம் செய்தார் என்ற செய்தி "கோயில் ஒழுகு' நூலில் காணப்படுகிறது. இஸ்லாமியர்களின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்துகொண்ட வைணவ அடியார்கள், துணிச்சலுடன் கோவிலிலிருந்து விலை உயர்ந்த அணிகலன்கள், புழங்கு பொருள்கள் ஆகியவற்றை திருமலை திருப்பதிக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் குறிப் புள்ளது. கிபி 1371-ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை வென்று விஜயநகர பேரரசு நிறுவப்பட்டது. இதன்பின்னர் திருப்பதியில் இருந்து கடவுள் சிலை, ஆபரணங்கள், பொருட்கள் ஆகியன மீண்டும் ஸ்ரீரங்கத் திற்கு கொண்டுவரப்பட்டன. அரங்கனின் திருவுருவம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிபி 15, 16-ஆம் நூற் றாண்டு அளவில் இக்கோவில் நடைமுறைகள் முற்றிலும் மாற்றம் பெற்றன. இட்சுவாகு குலதனமான ஸ்ரீரங்க விமானம் பழுதுபார்க்கப்பட்டது.
விசய நகர பேரரசருக்கு ஒத்துப் போகக் கூடியவர்கள் மட்டும் திருக்கோவிலின் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட னர். அவர்கள் கிபி ஆயிரமாம் ஆண்டுவாக்கில் இராமானுஜர் வகுத்த நடைமுறைகள் அனைத்தையும் மாற்றினர். கோவில் நிர்வாகத்தில் வரிப்பணம் வசூலித்தல் தொடங்கி பல விதங்களில் முறைகேடுகள் நடந்தன. இவற்றைக் கண்டு பொறுக்கமுடியாத பலரும் கோவிலின் கிழக்குப் பக்கத்திலுள்ள வெள்ளை கோபுரத் தின்மீது ஏறி தற்கொலை செய்துகொண்டதாகவும் கோவில் ஒழுகு நூல் குறிப்பிடுகிறது. விஜயநகர மன்னர்களுக்குப் பின்னர், நாயக்கர்களின் ஆட்சி இப்பகுதியில் அமைந்தது. இவர்கள் திருக்கோவிலின் பழைய இடிந்த கட்டிடங்களை சரி செய்தனர். கோவிலின் வருமானத்தைப் பெருக்குவதற்காக புதிய புதிய அறக்கட்டளைகளை நிறுவினர். சொல்லப்போனால் சொக்கநாத நாயக்கர் காலத்தில் இக்கோவில் மீண்டும் பொலிவு பெற்றது. இன்றும் இக்கோவிலில் நாயக்க மன்னர்களின் கலைச்சுவடுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. குறிப்பாக விசயரங்க சொக்கநாதர் என்னும் நாயக்க மன்னர், மதுரையில் இருந்து தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கனை தரிசிக்கவந்து இங்கேயே தங்கியதற்கு அடையாளமாக, கோவிலின் ரண்டாம் திருச்சுற்றில் சொக்கநாத நாயக்கர் குடும்ப உறுப்பினர்களுடன் சிலையாக காட்சி அளிக்கின்றார்.
அதற்குப்பின் ஆங்கிலேயர்களின் ஊடுருவலின்போது ஆற்காடு நவாப் புகள் இக்கோவிலின் நிர்வாகத்தைக் கைப்பற்றினர். பின்னர் கிபி 1700-களில் மராட்டிய மன்னர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. அவர்களை ஹைதராபாத் நிஜாம் வெற்றி கண்டார். பின்னர் சந்தா சாகிப் என்பவர் ஆற்காட்டு நவாப்பை யும், ஆங்கிலேயர்களையும் ஒருசேர எதிர்த்தார். பிரஞ்சுப் படை ஒன்றைக் கொண்டு திருச்சிராப்பள்ளி கோட்டையிலும், ஸ்ரீரங்கம் கோவில் திருச்சுற்றுக்களிலும் ஒளிந்துகொண்டு, இவர் தம்மைப் பாதுகாத்துக் கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன. மைசூர் படை உதவியுடன் பலரும் இக்கோவிலைத் தங்கள் குடியிருப்புப் பகுதியாகவும் மாற்றிக்கொண்டுள்ளனர். கி.பி. 1781-ஆம் ஆண்டு ஹைதர் அலி என்ற மன்ன னால் இக்கோயில் தாக்கப்பட்டது. இவர் மகன் திப்பு சுல்தான் இக்கோவிலின்மீது படையெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. திருவரங்கம் கோவிலின் வரலாற்றுரீதியான தகவல்களைத் தந்தமைக்காக நாம் ஒருவருக்கு நன்றி கூறவேண்டும் என்றால் அவர் வேல்ஸ் என்ற ஆங்கிலேயர்தான். இவர் திருச்சிராப் பள்ளியின் மாவட்ட ஆட்சியராக இருந்து மிகப்பெரும் இலக்கியப் பணி ஒன்றை கிபி 1801-ஆம் ஆண்டில் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் சிதறி கிடந்த வரலாறுகளைத் தொகுத்தார். இதன் பிரதி ஒன்றைக் கோவிலின் முக்கியமான இடத்தில் மறைவாக வைத்துப் பாதுகாத்தார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கோவிலில் குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் நிகழவில்லை. கோவில் நிர்வாகத்தில் ஒரு நிலைத்த தன்மை ஏற்பட்டது.
அந்நிலை இன்றுவரை தொடர்ந்து நீடித்துவருகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us