Advertisment

வக்ர நிவர்த்தியாகும் கும்ப சனி! - ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன் சென்ற இதழ் தொடர்ச்சி...

saturn

துலாம்

துலா ராசியினரான உங்களுக்கு சுகாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான சனி, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வக்ரநிவர்த்தியாகி ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலம் உங்கள் வாழ்க்கையில் படிப்பினைகளை சந்தித்திடக்கூடிய காலமாகும். உங்கள் வேலைகளில் இடையூறுகள், இன்னல்கள் உண்டாவதுடன், குடும்பத்திலும் பிரச்சினைகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். செய்து வரும் தொழி-ல் நஷ்டம், தடைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியிடம் விரோதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்காமல் போகும். நண்பர்கள்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வரவைவிட செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கடும் தொல்லைகள், வழக்குகளில் எதிர்மறையான பலன், பிள்ளைகளால் மனம் வருந்தவேண்டிய நிலை, கல்வியில் தடை, மேற்படிப்பையும் கடுமையான சிரமத்தின்மீது தொடர வேண்டிய சூழல், விவசாயத்தில் செலவு அதிகம் வரவு குறைவு என்ற நிலை, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்கவேண்டிய நிலையும், குலதெய்வம் குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்ல வேண்டிய வழியும் உண்டாகும். ஒருசிலர் பொருந்தா காத-ல் சிக்கி அவதிக்கும் ஆளாவீர்கள். நிலையான எண்ணமும் திடபுத்தியும் இல்லாத நிலையில் இருப்பீர்கள். இவையெல்லாம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, துலா ராசியினரான உங்களுக்கு, அவரே சுகாதிபதியாகவும் இருப்பதால் இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். சந்தோஷமான நிலை உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

Advertisment

ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் இடத்திற்கு உண்டாவதால், வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகலாம். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்படலாம். துணையின் வழியே பிரச்சினைகள் உருவாகலாம். வாய்ப்பேச்சும் வில்லங்கத்தை உருவாக்கலாம். கூட்டுத் தொழில்புரிபவர்கள் இக்காலத்தில் கூட்டாளிகளிடம் மனக்கசப்பை காணலாம். அதனால்  தொழில் தள்ளாடலாம். காதல் விவகாரங்களும் எதிர்பார்த்த நன்மையை அளிக்காமல் தகராறு, வம்பு, தும்பு என்று மாறலாம். ஒருசிலர் சிறு சிறு விபத்துகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இவையெல்லாம் ஏழாம் இடத்தை சனி பார்ப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்பதால் இக்காலத்தில் நிதானம் மிக மிக அவசியம். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில திருமணம் நடத்தாமல் இருப்பது நல்லது. எதிர்பா-னரிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.

Advertisment

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் லாப ஸ்தானமான 11-ஆம் இடத்திற்கு உண்டாவதால், செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். மூத்த சகோதரர்கள் ஆதரவும், பெரியோரின் உதவியும் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் லாபமாகும். ஒருசிலருக்கு வாழ்க்கைத் துணைக்கும் அப்பால் ஒரு உறவு உண்டாகும். மனம் பல வழிகளிலும் செல்லும். அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். ஒருசிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரக்கூடிய நிலையும் உருவாகும். இக்காலத்தில் மகிழ்ச்சியை மட்டுமே மனம் எதிர்பார்த்து அதற்கேற்பவே செயல்படுவீர்கள் என்பதால் உடல் நிலையில் சில சங்கடங் கள் தோன்றலாம். எனவே நோய் வந்தவுடன் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வது நன்மையாகும்.

சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பண விவகாரங்களில் நெருக்கடி ஏற்படுவதுடன் உங்கள் எதிர்பார்ப்பும் இழுபறியாகும். பண நெருக்கடியால் மனம் குழப்பமடையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். நெருக்கடியின் காரணமாக என்ன பேசுவது, ஏது பேசுவது என்று சிந்திக்காமல் கோபமாக பேசி எதிர்ப்பையும் சம்பாதிப்பீர்கள். கண் பார்வையில் இக்காலத்தில் குறைபாடு ஏற்படும் என்பதால்  கண்ணில் பிரச்சினை வந்ததும் அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

இவையெல்லாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்கள் என்பதால், இக்காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவதும், பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். பொருந்தா காதலால் குடும்பத்தில் புயல்வீசக்கூடிய வாய்ப்பிருப்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.


விருச்சிகம்

விருச்சிக ராசியினரான உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதியும் சுக ஸ்தானாதிபதியுமான சனி, நான்காம் இடமான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தை அர்த்தாஷ்டம சனியின் காலம் என்று சொல்வோம். அஷ்டம சனியாக சஞ்சரித்து வழங்கும் பலன்களில் ஐம்பது சதவிகித பலன்களை அர்த்தாஷ்டம சனி வழங்குவார். உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு சனி பாதகமானவர் என்பதுடன் அவர் இக்காலத்தில் வக்ரநிவர்த்தியாகி ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும்போது, இடையூறுகள். அலைக்கழிப்பு. குடும்பத்தில் வீண் விரோதம். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை. பெற்ற தாயின் உடல்ந

துலாம்

துலா ராசியினரான உங்களுக்கு சுகாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான சனி, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வக்ரநிவர்த்தியாகி ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலம் உங்கள் வாழ்க்கையில் படிப்பினைகளை சந்தித்திடக்கூடிய காலமாகும். உங்கள் வேலைகளில் இடையூறுகள், இன்னல்கள் உண்டாவதுடன், குடும்பத்திலும் பிரச்சினைகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். செய்து வரும் தொழி-ல் நஷ்டம், தடைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியிடம் விரோதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்காமல் போகும். நண்பர்கள்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வரவைவிட செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கடும் தொல்லைகள், வழக்குகளில் எதிர்மறையான பலன், பிள்ளைகளால் மனம் வருந்தவேண்டிய நிலை, கல்வியில் தடை, மேற்படிப்பையும் கடுமையான சிரமத்தின்மீது தொடர வேண்டிய சூழல், விவசாயத்தில் செலவு அதிகம் வரவு குறைவு என்ற நிலை, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்கவேண்டிய நிலையும், குலதெய்வம் குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்ல வேண்டிய வழியும் உண்டாகும். ஒருசிலர் பொருந்தா காத-ல் சிக்கி அவதிக்கும் ஆளாவீர்கள். நிலையான எண்ணமும் திடபுத்தியும் இல்லாத நிலையில் இருப்பீர்கள். இவையெல்லாம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, துலா ராசியினரான உங்களுக்கு, அவரே சுகாதிபதியாகவும் இருப்பதால் இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். சந்தோஷமான நிலை உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

Advertisment

ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் இடத்திற்கு உண்டாவதால், வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகலாம். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்படலாம். துணையின் வழியே பிரச்சினைகள் உருவாகலாம். வாய்ப்பேச்சும் வில்லங்கத்தை உருவாக்கலாம். கூட்டுத் தொழில்புரிபவர்கள் இக்காலத்தில் கூட்டாளிகளிடம் மனக்கசப்பை காணலாம். அதனால்  தொழில் தள்ளாடலாம். காதல் விவகாரங்களும் எதிர்பார்த்த நன்மையை அளிக்காமல் தகராறு, வம்பு, தும்பு என்று மாறலாம். ஒருசிலர் சிறு சிறு விபத்துகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இவையெல்லாம் ஏழாம் இடத்தை சனி பார்ப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்பதால் இக்காலத்தில் நிதானம் மிக மிக அவசியம். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில திருமணம் நடத்தாமல் இருப்பது நல்லது. எதிர்பா-னரிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும்.

Advertisment

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் லாப ஸ்தானமான 11-ஆம் இடத்திற்கு உண்டாவதால், செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். மூத்த சகோதரர்கள் ஆதரவும், பெரியோரின் உதவியும் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் லாபமாகும். ஒருசிலருக்கு வாழ்க்கைத் துணைக்கும் அப்பால் ஒரு உறவு உண்டாகும். மனம் பல வழிகளிலும் செல்லும். அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். ஒருசிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரக்கூடிய நிலையும் உருவாகும். இக்காலத்தில் மகிழ்ச்சியை மட்டுமே மனம் எதிர்பார்த்து அதற்கேற்பவே செயல்படுவீர்கள் என்பதால் உடல் நிலையில் சில சங்கடங் கள் தோன்றலாம். எனவே நோய் வந்தவுடன் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வது நன்மையாகும்.

சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பண விவகாரங்களில் நெருக்கடி ஏற்படுவதுடன் உங்கள் எதிர்பார்ப்பும் இழுபறியாகும். பண நெருக்கடியால் மனம் குழப்பமடையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவீர்கள். நெருக்கடியின் காரணமாக என்ன பேசுவது, ஏது பேசுவது என்று சிந்திக்காமல் கோபமாக பேசி எதிர்ப்பையும் சம்பாதிப்பீர்கள். கண் பார்வையில் இக்காலத்தில் குறைபாடு ஏற்படும் என்பதால்  கண்ணில் பிரச்சினை வந்ததும் அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

இவையெல்லாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்கள் என்பதால், இக்காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவதும், பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். பொருந்தா காதலால் குடும்பத்தில் புயல்வீசக்கூடிய வாய்ப்பிருப்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.


விருச்சிகம்

விருச்சிக ராசியினரான உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதியும் சுக ஸ்தானாதிபதியுமான சனி, நான்காம் இடமான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தை அர்த்தாஷ்டம சனியின் காலம் என்று சொல்வோம். அஷ்டம சனியாக சஞ்சரித்து வழங்கும் பலன்களில் ஐம்பது சதவிகித பலன்களை அர்த்தாஷ்டம சனி வழங்குவார். உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு சனி பாதகமானவர் என்பதுடன் அவர் இக்காலத்தில் வக்ரநிவர்த்தியாகி ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும்போது, இடையூறுகள். அலைக்கழிப்பு. குடும்பத்தில் வீண் விரோதம். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை. பெற்ற தாயின் உடல்நிலையில் பாதிப்பு. ஒருசிலருக்கு தாயுடனும், தாய்வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்பட்டு அவர்களை விட்டு விலகும் நிலை. வீடு சொத்து வாகனத்தால் தொல்லைகள். உற்றார்- உறவினர்களுடன  பகை, செய்துவரும் தொழி-லும் பார்க்கும் உத்யோகத்திலும் சங்கடங்கள். பிரச்சனைகள் என்று உண்டாகும். ஒருசிலருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டு சுகத்திற்கு பாதிப்புண்டாகும். அடிக்கடி மருத்துவரை நாடவேண்டிய நிலையும் உண்டாகும். விருச்சிக ராசியினரான உங்களுக்கு நான்கில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் இத்தகைய பலன்கள் உண்டாகும் என்பது பொதுவான விதி. சுய ஜாதகம் பலம் பெற்றவர்களுக்கும், நட்பான தசா புக்தி நடப்பவர்களுக்கும் இப்பலன்கள் மாறுபடும்.

சனி நான்காம் இடத்தில் சஞ்சரிப்பது பற்றி ஒரு பழம் பாட-ல்... "கண்டங்கள் நான்கே ழெட்டில் கருதிய சனி- சேய்வரின் தெண்டங்கள் மிகவுண்டாகும். திரவியம் நாசமாகும்.கொண்டதோர் மனைவி வேறாம்.  குறித்திடுஞ் செட்டு நட்டம் பண்டுள நாடுவிட்டுப் பரதேசம் போவான் பாரே..'' என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.சனியும், செவ்வாயும் நான்கு ஏழு எட்டாம் இடங்களில் சஞ்சரிக்கும்போது, வீண் செலவு. கையிலுள்ள பொருட்கள் எல்லாம் தவறான வழியில் செல்வது. கணவன்- மனைவிக்குள் கருத்து வேற்றுமையுடன  பிரிவினையும் ஏற்படும். இருந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு சென்று வசிக்க வேண்டிய நிலையும் வரும். செல்வாக்கு சரியும். சொல்வாக்கு தவறும். நல்லதோர் நிலையும் மாறிப்போகும் என்று சொல்- வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.இவையெல்லாம் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, விருச்சிக ராசியினரான உங்களுக்கு அவரே சகாய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் எப்போதும் தைரியமும் தன்னம்பிக்கையும், பிறரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற திறமையும் உங்களிடம் இருக்கும். எல்லாவற்றிலும் வேகமாக செயல்படுவீர்கள். உங்களிடம் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். நினைத்ததை உங்களால் சாதித்துக் கொள்ளமுடியும்.

விருச்சிக ராசியினரான உங்களுக்கு சனி எதிர்மறையான பலன்களை வழங்கிடக்கூடியவர் என்றாலும், அவர் அவர்களின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கிடும் சனி நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில், அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் மூன்றாம் பார்வை உங்கள் சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு உண்டாவதால் எதற்காகவும் பின் வாங்க மாட்டீர்கள். கௌரவத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். வம்பு, வழக்கு, பிரச்சினை என்று எது வந்தாலும் அதில் வெற்றிபெறுவீர்கள். உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவத்தால் அவை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். விரோதிகள் பலவீனம் அடைவர். எதிர்ப்பு என்று வரும்போது துணிச்சலாக நின்று வெற்றி அடைவீர்கள். கடன் தொல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். செய்துவரும் தொழிலை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு கடும் முயற்சிக்குப்பின் வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு எதிர்பாராத இடத்தி-ருந்து வரும். உடல்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள் என்றாலும் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மையாகும்.

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால், செய்துவரும் தொழி-ல் முழுமையான கவனத்தை செலுத்தவேண்டும். கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும் முக்கியமான காரியங்களில் நீங்களே உங்களுக்கு தோல்வியை தேடிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு என்பதை இக்காலத்தில் எதிர்பார்க்க முடியாது. உங்கள் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இக்காலத்தில் பலவகைகளில் சோதனை உண்டாகும். இக்காலம் உங்களுக்கு நெருப்பில் நீந்தி வெளியில் வருவதுபோல் இருக்கும். சில நேரங்களில் அவசர செலவிற்கும் இக்காலத்தில் சிரமம் ஏற்படலாம். அதனால் மனச்சோர்வு, உடல் சோர்வு, டென்ஷன் என்ற நிலை உருவாகலாம்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ஜென்ம ராசிக்கே உண்டாவதால், அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். சோதனை அதிகரிக்கும். உறவினர்களாலும் எந்தவிதமான நன்மையும் உண்டாகாமல் போகும். வேலையின் காரணமாக ஒருசிலர் வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையும், குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டிய சூழலும் உருவாகும். உடல்நிலையில் குறிப்பாக- வயிற்றில் எதிர்பாராத பாதிப்பு ஏற்பட்டு உங்களை அச்சுறுத்தும். ஒருசில பெண்களுக்கு கர்ப்பப் பையை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். எதையோ இழந்துவிட்டதுபோல் மனம் வேதனைப்படும். தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகும். எடுத்துக் கொண்ட வேலைகளை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே இக்காலத்தில் செய்துவரும் தொழி-ல், பார்த்துவரும் வேலையில் மிக மிக கவனம் தேவை. இவையெல்லாம் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியாலும் அவருடைய பார்வைகளாலும் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும். இக்கால நிலை யறிந்து ஒவ்வொரு வேலையிலும் கவனமாகவும் எச்சரிக்கை யாகவும் நடந்துகொள்வது நன்மையாகும்.


தனுசு

தனுசு ராசியினரான உங்களுக்கு தன, குடும்ப, வாக்கியதிபதியும், சகோதர, தைரிய, சகாய ஸ்தானாதிபதியுமான சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவராவார். உங்களுக்கு யோகம் கொடுப்பவரும் சனிதான். சகோதர தைரிய ஸ்தானத்தில் வக்ரநிவர்த்தியாகி ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். போடும் திட்டங்கள் லாபமாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஆரோக்கியம் சீராகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். செய்துவரும் தொழில் சிறப்படையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துவந்த எதிரிகளை அடக்கி வெற்றியடையும் ஆற்றல் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடந்து அதற்காக செலவழிக்க நேரும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கி கைக்கு வரும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.இவையெல்லாம் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பொதுப் பலன்களாகும். சுய ஜாதகம் பலம் பெற்றவர்களுக்கும், நட்பான தசா புக்தி நடப்பவர்களுக்கும், போன ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களுக்கும் இப்பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும்.

மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு உண்டாவதால், புத்திர- புத்திரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். ஒருசிலருக்கு அவர்களால் தங்கள் விருப்பத்திற்கு தடையேற்படும். அவர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டிய நிலை உண்டாகும். இந்த நேரத்தில் பிள்ளைகளின் செயல் ஒருசிலருக்கு மன உளைச்சலை உண்டாக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகளும் இந்த நேரத்தில் ஏற்படலாம். பூர்வீக சொத்தில் ஏதேனும் வில்லங்கம் உண்டாகலாம். ஒருசிலருக்கு குழப்பமான நிலை உண்டாகி மனம் பெரிதும் அவதியுறும் என்பதால் இக்காலத்தில் எந்த ஒன்றிலும் நிதானம் மிக மிக அவசியம்.

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு பாக்கிய மற்றும் பித்ரு, காரிய சகாய ஸ்தானத்திற்கு உண்டாவதால் தந்தையின் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஒருசிலர் தந்தையை இழக்கவும் நேரும். இந்த நேரத்தில் தந்தைவழி உறவுகளுடனும் பகை, பிரச்சினை என்று ஏற்படும். ஒருசிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேருவதுடன் மனதிற்குப் பிடித்தமானவர் உறவை நாட நேரும். செய்துவரும் தொழி-ல் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உங்கள் மனநிலை மாறும்.  வசிக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு சென்று வசிக்கும் நிலையும் ஒருசிலருக்கு உருவாகும். ஆலய வேண்டுதல்களை நிறைவேற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு அயன சயன, விரய ஸ்தானமான 12-ஆம் இடத்திற்கு உண்டாவதால், படுத்தாலும் தூக்கமில்லை, பஞ்சனையும் இனிக்கவில்லை என்ற நிலை உண்டாகும். பல வழிகளிலும் பணம் விரயம் ஆகும். கையிருப்பு கரைய ஆரம்பிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். நினைத்த வேலைகள் நடைபெறாமல், காரியம் கைகூடாமல் போகும். மன உளைச்சல் அதிகரிக்கும். எதிரிகளால் இடையூறும், மதிப்பு கௌரவத்திற்கு பங்கமும் ஏற்படும். ஒருசிலர் கையில் இருக்கும் இடம், நிலம் ஆகியவற்றை விற்று நிலைமைகளை சமாளிப்பீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

இவையெல்லாம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பொதுப் பலன்களாகும். இக்காலம் உங்களுக்கு ஒரு பக்கம் யோகமாகவும், மறுபக்கம் சில நெருக்கடிகளை உண்டாக்குவதாகவும் இருப்பதால் நேரம் காலம் அறிந்து செயல்படுவதும், தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும், பெரியோரின் வார்த்தைகளை ஏற்று செயல்படுவதும் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும்.


மகரம்

மகர ராசியினரான உங்களுக்கு ராசிநாதனும், தன குடும்ப வாக்காதிபதியுமான சனி, உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் வக்ரநிவர்த்தியடைந்து ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், சனி உங்கள் ராசிநாதனாக இருந்தாலும் அவர் அவர்களின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால் இக்காலத்தில் ஏதேனும் ஒருவகையில் உங்கள் பூர்வபுண்ணிய பலனுக்கேற்ப நெருக்கடிக்கு ஆட்படுவீர்கள். எடுத்த வேலைகள் இழுபறியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருசிலருக்கு குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் நேரும். கையிருப்பு ஏதேனும் ஒருவகையில் கரையும். பொருட்கள் களவு போகும். பொருளாதார இழப்பு ஏற்படும். பேச்சில் நிலையான தன்மை இல்லாமல் இருக்கும். கொடுத்த வாக்கை தவற நேரும். வருமானம் தடைப்படும். எதிலும் நாட்டமற்ற நிலை உருவாகும். உற்றார்- உறவினரின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேரும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சமும் மனதில் குடிகொள்ளும். உடல்நிலை பாதிக்கப்பட்டு சுகமற்ற நிலை உருவாகக்கூடும். இவையெல்லாம் உங்களுக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, உங்கள் குடும்பாதிபதியும் தனாதிபதியும் அவரே என்பதால் இவற்றில் சோதனைகளை உண்டாக்கு வாரே ஒழிய கடும் நெருக்கடிக்கு ஆளாக்க மாட்டார்.

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் மூன்றாம் பார்வை உங்களுக்கு சுகம் மற்றும் மாதுர் ஸ்தானத்திற்கு உண்டாவதால், பெற்ற தாயிருப்பின் அவருடைய ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும். அல்லது தாயாரை விட்டுப் பிரிய நேரும். தாய்வழி உறவுகளுடன் பகைமை ஏற்படும். வீடு சொத்து வாகனம் இருந்தால் அவற்றில் மாற்றம் செய்வது அல்லது விற்றுவிட்டு வேறு வாங்குவது, ஆடம்பரத்திற்காக செலவுகள் செய்வது என்ற நிலை ஏற்படும். அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல், உறங்க முடியாமல் போகும். மொத்தத்தில் இந்த நேரத்தில் ஏதாவது ஒருவகையில் உங்கள் நிம்மதி கெடும். சுகத்திற்கு கேடு உண்டாகும். சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் கஷ்டம், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, உறவினர்களிடம் மனக்கசப்பு, முயற்சிகளில் தடை, ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, ஆரோக்கியத்தில் பாதிப்பு, விபத்து, வேறு பெண்களுடன் தொடர்பு, நெருங்கிய உறவினர்களின் பிரிவு என்ற நிலை உருவாகும். சமூகத்தினரின் அவமதிப்பிற்கு ஆளாக நேரும். தொழி-ல் சிரமம் உண்டாகும். பெண்களுக்கு கூடுதலாக கணவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். 

சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு உண்டாவதால், எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். ஏதாகிலும் ஒருவகையில் உங்கள் தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சிறக்கும். எதிர்பாராத வாய்ப்புகளால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.  எதிர்பா-னரால் இந்த நேரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வசதியும் வாய்ப்பும் அதிகரிக்கும். அரசு துறைகளால் நன்மை உண்டாகும். நெருக்கடிகள் ஒரு பக்கம் உண்டானாலும் உங்களிடம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும். ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படும்.

இவையெல்லாம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பொதுப்பலன் ஆகும். இந்த நேரத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடைபெற்றால், உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். நெருக்கடிகள் குறையும் என்றாலும், பண விவகாரத்திலும் புதிய நட்புகளிடமும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.


கும்பம்

கும்ப ராசியினரான உங்களுக்கு விரயாதிபதியும், ராசியாதிபதியுமான சனி, ஜென்ம ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிக்கும் இக்காலத்தில், உங்களுக்கு ஏழரைச்சனியின் மத்திம காலமாகும். ஒரு ஜாதகருக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் முதல் சுற்றில் மட்டுமே அவருக்கு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். இரண்டாம் சுற்றில் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும் என்பது பொது விதி. இதை..."பண்ணறிய ஏழரை நாட்டுச் சனி வருங்காலத்தில் பகருவேன் ஜாதகருக்குப் பலனைத்தானே; முன்தடவை ஜாதகருக்குக் கஷ்டமாகும். முயற்சிகள் செய்தாலும் துன்பம் மாறாதப்பா! தன்பிதா சுகப்பலனை அனுபவிப்பான்! ரெண்டாம் தடவையில் ஜாதகன் சுகமாய் இருப்பான். வன்மையாய் மூன்றாந்தடவை மரணமென்று எழுத்துவீர்! ஜாதகருக்கு ஜோதிட வல்லோரே....''என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதை நாம் பொது விதியாக எடுத்துக்கொண்டாலும், ஜென்ம ராசிக்குள் சனி சஞ்சரிக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பெண்களுக்கு கர்ப்பப்பையில் சங்கடத்தை உண்டாக்குவார். பணத்தட்டுப்பாட்டை அதிகமாக்குவார். துணிச்சலாக செயல்பட முடியாத அளவிற்கு சங்கடங்களை ஏற்படுத்துவார். நல்ல முறையில் பழகி வந்தவர்களையும் உங்களைவிட்டு விலகிச் செல்ல வைப்பார். செய்துவரும் தொழி-ல் பாதிப்பையும் அதனால் வருமானக் குறைவையும் ஏற்படுத்துவார். கூட்டாளிகள் பிரிந்து சென்று தனித்து செயல்படக்கூடிய நிலையினையும் இந்த நேரத்தில் உண்டாக்குவார். மனதில் இனம்புரியாத பயத்தை தோற்றுவிப்பார். அளவிற்கு மீறிய சங்கடங்களை அனுபவிக்க வைப்பார். நண்பர்களையும் உறவினர்களையும் பகையாளியாக மாற்றுவார். குடும்பத்தில் எதிர்மறையான நிலையினை ஏற்படுத்துவார். மனதில் ஒருவித பயத்தை அதிகரிப்பார். கல்வி கற்போருக்கு கல்வியில் தடையையும், மந்த நிலையையும் ஏற்படுத்துவார். பொன், பொருட்களில் குறைவை உண்டாக்குவார். பொதுவில் ஜென்ம சனி உங்களை எழ முடியாத அளவிற்கு கட்டிப்போடும் என்றாலும், உங்கள் ராசியாதிபதி அவரே என்பதால் பெருமளவில் அவர் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த மாட்டார்.கும்ப ராசியினருக்கு ஜென்ம சனி காலத்தில் எதிர்மறையான பலன்களை வழங்கிடக்கூடியவர் என்றாலும், அவரே உங்களுக்கு விரயாதிபதியாகவும் இருப்பதால் செலவுகள் வழியே உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். நிம்மதியாக உறங்கும் அளவிற்கு சூழ்நிலைகளை சாதகமாக்குவார்.இவையெல்லாம் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திற்கு உண்டாவதால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் இருக்கும். பலவித சாதனைகளை நிகழ்த்தக்கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொறுப்புள்ள பதவி உங்களைத் தேடிவரும். அரசிய-ல் ஈடுபாடு உடையவர்களுக்கு நல்ல எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். விரும்பிய வாகனம் வாங்க முடியும். கட்டடப் பணிகளில் இருந்துவந்த குறைபாடு விலகும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை உருவாகும். சகோதர வழியில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். எடுத்த காரியத்தில் வெற்றியும் தொழி-ல் முன்னேற்றமும் உண்டாகும். உங்கள் அறிவும் வீரமும் இக்காலத்தில் பளிச்சிடும். சிறப்பும் புகழும் உண்டாகும் செழிப்பும் சந்தோஷமும் தோன்றும்.

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர மற்றும் நட்பு ஸ்தானத்திற்கு உண்டாவதால், தீயோர் சேர்க்கைக்கு உங்களை ஆளாக்குவார். கெட்ட நடத்தை உடையவர்களின் தொடர்பை ஏற்படுத்துவார். எதிர்பா-னர் வலையில் விழுந்து எழ முடியாத நிலையினை ஒருசிலருக்கு ஏற்படுத்துவார். அதனால் தொல்லை, நோய், அவமானம், பொருள்சேதம், வீண் கவலை என்ற நிலையை உண்டாக்குவார். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினைகளையும் பிரிவையும் ஏற்படுத்துவார். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் கவலை அளிப்பார். ஒருசில குடும்பத்தை விட்டுவிலக வேண்டிய நிலையையும் உண்டாக்குவார். கல்வி கற்போர் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி அடையமுடியும் என்ற நிலையை தோற்றுவிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு பல்வேறு நெருக்கடிகளை அளிப்பார். அடிக்கடி வெளியூர் பயணத்தை உண்டாக்குவார். வயிறு மார்பு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துவார்.

சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு உண்டாவதால், தொழி-ல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கையும் கௌரவத்தையும் அதிகரிப்பார். தெய்வ அனுகூலத்தை உண்டாக்குவார். எந்தநிலை வந்தாலும் அதை சமாளித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் சக்தியை அதிகரிப்பார். தொழி-ல் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார். பட்டம், பதவி என்ற கனவை நனவாக்குவார். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். ஒருசிலருக்கு இடமாற்றத்தை உண்டாக்குவார்.

பொதுவில் இக்காலத்தில் ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறுபக்கம் நெருக்கடியும் நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் மிக கவனமாகவும் பிறரை அனுசரித்துச் சென்றும் குலதெய்வ வழிபாட்டிலும், இஷ்ட தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவதன் வழியாக உங்களால் நன்மைகள் காணமுடியும். சுய ஜாதகம் பலமாகவும், நடக்கும் தசாபுக்தி சாதகமாகவும் இருந்தால் தலைக்கு வரும் பாதிப்பு தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும்.

மீனம்

மீன ராசியினரான உங்களுக்கு லாபாதிபதியும் சனியே, விரயாதிபதியும் சனியே. மோட்ச ராசியினரான உங்களுக்கு லாப ஸ்தானத்திற்கும் அயன சயன ஸ்தானத்திற்கும் சனியே ஆதாரமாக இருப்பதால்தான் உங்கள் விருப்பப்படி வாழக்கூடிய நிலையும், தேவை யானதை அடையக்கூடிய வாய்ப்புகளையும் சனி உங்களுக்கு வழங்கிவருகிறார். விரய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் இக்காலத்தில்,  செய்துவரும் வேலைகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். காரியத்தில் தேக்கமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். வருமானம் வந்தாலும் வந்த வேகத்திலேயே அதில் குறைவு ஏற்படும். பொன், பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் என்று ஏற்படும். உங்கள் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் உண்டாகும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு பிரிவு என்ற நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும். எதிரிகளால் இடையூறு, தீய வழியில் செல்லக்கூடிய நிலையும் உண்டாகும். ஒருசிலர் உடல் சுகத்தை எதிர்பார்த்து நடைபோடுவீர்கள். புதிய நட்பை உருவாக்கிக்கொள்வீர்கள்.

இவையெல்லாம் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் உண்டாகும் பலன்களாக இருக்க, மீன ராசியினரான உங்களுக்கு அவரே லாபாதிபதியாகவும் இருப்பதால், இக்காலத்தில் உங்களுக்கு வரவிற்கு குறைவு இருக்காது. சந்தோஷத்திற்கு தடை இருக்காது. செல்வாக்கிற்கு பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்ததை அடைவதுடன், உங்கள் விருப்பப்படி வாழக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும்.விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி தரும் பலன்கள் இப்படி இருக்க அவருடைய 3, 7, 10-ஆம் பார்வைகளில் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு உண்டாவதால், குடும்பத்திற்குள் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். ஒருசிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படும். பேச்சில் நிலையற்ற தன்மை உண்டாகும். வாக்குத்தவற நேரும். சந்தோஷம் நிம்மதி என்பது இல்லாமல் போகும். கொடுக்கல், வாங்க-ல் பிரச்சினை ஏற்படும். பொருட்கள் களவு போகும். பொருளாதாரநிலை என்பது ஏற்றம் இறக்கமாக இருக்கும். வருமானம் தடைப்படும். செலவு அதிகமாகும். குடும்பத்தினர் நடவடிக்கையால் மனம் புண்படும். அவர்களால் உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் வாழவேண்டிய முடிவும் வரும்.

சனியின் 7-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு உண்டாவதால், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். படுத்த படுக்கையாக இருந்தவர்களும் தேர்ச்சி அடைந்து சகஜமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், தொல்லைகள், அவமானங்கள், நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வம்பு, வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளான நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். தடைப்பட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் உண்டாகும். மனம் துணிச்சலடையும். எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்திடக் கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும்.

சனியின் 10-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு உண்டாவதால், தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருசிலர் தந்தையை இழக்க வேண்டிய நிலையும் உண்டாகும். தந்தைவழி உறவுகளிடம் பிரச்சினை, வம்பு என்றும் ஏற்படும். தம்மைவிட மூத்தவர் மற்றும் நெருங்கியவர்களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேரும். உங்கள் ஜீவன ஸ்தானத் திற்கு இது விரய ஸ்தானம் என்பதால் செய்துவரும் தொழி-ல் தடையும் வருமானத்தில் முடக்கமும் உண்டாகும். உத்தியோகத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். திக்கற்றவர் களுக்கு தெய்வமே துணை என்ற எண்ணம் மேலோங்கி வேண்டுதல்களோடு அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.இவையெல்லாம் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் சஞ்சரிக் கும் சனியால் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும். இக்கால நிலையறிந்து ஒவ்வொன்றிலும் நிதானமாக செயல் படுவதால் சங்கடங்கள் விலகும். நெருக்கடிகள் நீங்கும். இந்த நேரத்தில் புதிய முயற்சிகளிலும், வரவு- செலவிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருந்துவிட்டால் உங்கள் கௌரவம் சிறக்கும்.

செல்: 94443 93717

bala221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe