Advertisment

அன்புச்சோலை திட்டம்

cm-caram

மிழ்நாடு அரசு, சமூக நலத்துறை சார்ப்பில் மூத்த குடிமக்களின் நலனையும், அவர்களின் மனநிலையையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கி யுள்ளது தான் ‘அன்புச் சோலை’ எனும்மக்கள் நல்வாழ்வுத் திட்டம். இந்ததிட்டம் மூலமாக, குடும்பங்களில் தனிமையாகவும், மனச்சோர்வுடன் வாழும் முதியோருக்கு ஊக்கம் அளித்து, அவர்களின் வாழ்க்கையை உயிர்ப்புடன் மாற்றும் சமூக மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

Advertisment

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்

வயதான குடிமக்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தே இருந்தாலும், நாள்தோறும் மன உற்சாகம் பெறும் ஒரு இடத்தை உருவாக்குவது. அன்புச் சோலை மையங்கள் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் இணைக்கு

மிழ்நாடு அரசு, சமூக நலத்துறை சார்ப்பில் மூத்த குடிமக்களின் நலனையும், அவர்களின் மனநிலையையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கி யுள்ளது தான் ‘அன்புச் சோலை’ எனும்மக்கள் நல்வாழ்வுத் திட்டம். இந்ததிட்டம் மூலமாக, குடும்பங்களில் தனிமையாகவும், மனச்சோர்வுடன் வாழும் முதியோருக்கு ஊக்கம் அளித்து, அவர்களின் வாழ்க்கையை உயிர்ப்புடன் மாற்றும் சமூக மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

Advertisment

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்

வயதான குடிமக்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தே இருந்தாலும், நாள்தோறும் மன உற்சாகம் பெறும் ஒரு இடத்தை உருவாக்குவது. அன்புச் சோலை மையங்கள் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் இணைக்கும் வகையில் செயல்படும். இங்கு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், யோகா, நூலக வசதி, கலாச்சார நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு வகுப்புகள், ஆரோக்கிய ஆலோசனைகள்போன்றவை வழங்கப்படும்.

Advertisment

நவீன வசதிகளுடன் வடிவமைப்பு ஒவ்வொரு மையமும் குறைந்தது 50 மூத்த குடிமக்களுக்கு பயன்படும் வகையில் போதுமான உட்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், மையங்கள் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படுவதால், குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படாமல், முதியோர் ஆரோக்கியமான சமூக உறவுகளை உருவாக்க முடியும்.

முதற்கட்டமாக 25 அன்புச் சோலை மையங்கள் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 25 அன்புச்சோலை மையங்கள் தொடங்கப் படுகின்றன. மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும் அன்புச்சோலை மையங்களுக்கு வரும் முதியவர்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். மேலும், தகுதியான பராமரிப்பாளர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க வழிகாட்டுவார்கள்.

cm1

அன்புச்சோலை திட்டம், முதியோர்கள் மதிக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிப-லிக்கிறது. குடும்பங்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களாகத் தொடர்வதற்கு அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் துணைபுரிகிறதுமுதியோர் சமூக உறவுகளை பரிமாறும் இடமாகவும், புதிய நண்பர்களை உருவாக்கும் சூழலாகவும் இம்மையங்கள் விளங்கும். இது அவர்களுக்கு தனிமை நீக்கும் மனச்சாந்தி அளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு முடிந்த பின்னர், பலர் குடும்பங்களில் புறக்கணிப்பு, தனிமை, மனச்சோர்வு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

அத்தகைய சூழ-லில், அன்புச்சோலை மையங்கள் மனநல நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும் மீட்டெடுக்கும் முக்கியமான தளமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-லின் காணொ-லி மூலம் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். 

பணிக்குச் செல்லும் பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களை அன்புச்சோலை திட்டம் செயல்படும் வளாகங்களில் விட்டுச் செல்லலாம். நாள்தோறும் காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த வளாகங்கள் செயல்படும் என சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

gk011225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe