சென்னை திருவல்லிக்கேணியில், இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண் துப்பறியும் நிபுணராக 1998-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட, ஆல்பா டிடெக்டிவ் சர்வீசஸ் நிறுவன மேனேஜிங் டைரக்டர் கீதா பார்த்தி பன் அவர்களைச் சந்தித்து அவரின் பக்தி ஈடுபாடுகள், ஆல்பா டிடெக்டிவ் சர்வீசஸ் நிறுவனம் மூலமாக ஆண்டவன் பரிபூரண அருளோடு அவர் ஆற்றிவரும் 27 வருட பணி அனுபவ சாதனைகள் பற்றி கேட்டோம். கம்பீரமான தோற்றமுள்ள சகோதரி கீதா பார்த்திபன் நம்மிடம் சரளமாக, விரிவாகக் கூறிய சுவையான,  பக்திமயமான தகவல்கள் இதோ...

Advertisment

"நான் பிறந்தது திருநெல்வேலி. அப்பா தாசில்தார் தங்கசாமி. அம்மா அன்பு. அரசு ஊழியர். தூத்துக்குடியில் B.Sc., ஹோம் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். திருமணத்திற்கு பிறகு M.A சோஷி யாலஜி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றேன். அதன்பிறகு M.A சைக்காலஜி பட்ட மும் பெற்றேன். நான் சிறுவயது முதலே யாருக்கும் அஞ்சாத, தைரியமான பெண்ணாகத்தான் வளர்ந்தேன்.

Advertisment

எங்கள் குடும்பம் தெய்வ நம்பிக்கையில் தீவிரமாக உள்ள குடும்பம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள் நாங்கள்.

அதனால் தான் கடந்த 27 வருடங்களாக, தொடர்ந்து தளராமல், தயங்காமல் பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகüல் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து எங்களது ஆல்பா டிடெக்டிவ் சர்வீசஸ் நிறுவனம் மூலம் உன்னத பணி ஆற்றிவருகிறோம். "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று எங்கள் சாதனை வெற்றிகளை சமர்ப்பித்தும் வருகிறோம்.

Advertisment

எங்களைத் தேடி வருபவர்கள், தங்களது குடும்ப கௌரவ பிரச்சினைகளை, ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை எங்களை முழுமையாக நம்பி எதையும் மறைக்காமல் சொல்வார்கள். நாங்கள் அவர்களுக்கு தைரியம் கூறி, நம்பிக்கை தந்து அவர்களுக்காக தீவிர தெய்வ வழிபாடு களையும் செய்து விட்டுத்தான் துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு எங்களின் திறமை, அறிவாற்றல், சுறுசுறுப்பு மிக்க குழுவினரோடு காவல் துறையின் முழுமையான ஒத்துழைப்புடன் உண்மைகளைக் கண்டறிகிறோம். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று எங்கள் சாதனை வெற்றிகளை சமர்பித்தும் வருகிறோம்.

சங்கரன்கோவில் அருகிலுள்ள உக்கிரன்கோட்டை அணைத்தலை அய்யனார்தான் எங்கள் குலதெய்வம். திருச்செந்தூர் முருகப்பெருமான் எங்கள் மனதில் என்றும் வீற்றிருக்கும் இஷ்ட தெய்வம். திருப்போரூர் முருகன் கோவிலில் என் ஒரே மகன் திருமணம் நடந்து முருகன் அருளை முழுமையாகப் பெற்றுள்ளோம்.

கணவர் பார்த்திபன் பிசினஸ்மேன். மகன் கௌதம் சுந்தர் அட்வகேட். மருமகள் மோனிகா ஸ்ரீதேவி ஆர்கிடெக்ட். ஒரு பேத்தி முதல் வகுப்பு படிக்கிறாள். 

நாங்கள் எல்லாருமே தினமும் பூஜையறையில் தமிழ்ப் பாடல்களைப் பாடி, எங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கிய பிறகு தான் எங்கள்அன்றாடப் பணிகளைத் துவங்கு வோம்.

geetha1

திருமணத்திற்கு முன் மணமகன் பற்றியோ, மணமகள் பற்றியோ அவர்கள் குடும்பம் பற்றிய முழு விவரமோ, தவறான தொடர்புகள். பழக்கவழக்கங்கள் இருக்கிறதா, அவர்கள் தந்த தகவலின் உண்மைத்தன்மை, இவற்றை மிக எச்சரிக்கையுடன் மணமகன், மணமகள் வீட்டார் அறியாதபடி ரகசியமாக துப்பறிந்து கண்டறிந்து தந்து தவறான திருமணங்கள் நடந்துவிடாமல் தகவல்களை திருமணத்திற்கு முன்னதாகவே தந்து பேருதவி செய்துவருகிறோம்.

டீன் ஏஜ், ஆண்- பெண்களின் ரகசிய செயல்பாடுகள் நடவடிக்கைகள் பற்றி கவலைப்படும் பெற்றோர் எங்களை அணுகுவார்கள். அவர்களுக்கு தகுந்த தீர்வைத் தேடித் தருகிறோம். காணாமல் போனவர்களை, கடத்தப்படுபவர் களை கண்டுபிடித்துத் தரும் உயிருக்கு ஆபத்தான பணியி லும் காவல்துறை உதவியோடு செயல்பட்டு தீர்வு தருகிறோம்.

தவறுகள் எங்கிருந்தாலும், யார் செய் தாலும் கண்டறிந்து அவர்களை திருந்தி வாழவைக்க தேவையான கவுன்சிலிங் தந்து வருவதில் ஆத்ம திருப்தி அடைகிறோம்.

SHADOWING, SURVEILLANCE, PARENTAL CARE ON TEENAGERS, POLITICAL ANALYSIS என்று பல்வேறு துப்பறியும் பணிகளில் எங்கள் திறமையை பளிச்சிட வைப்பது தெய்வ சக்திகளின் பரிபூரண அருள் என்றே நம்புகிறோம்.

பக்தியே மனிதனுக்கான சக்தி என்று தீர்க்கமாக திடமாக நம்புகிறோம்.

ஆண்டவன் அருளோடு அபார சாதனைகள் செய்துவரும் சகோதரி கீதா பார்த்திபன் மென்மேலும் துப்பறியும் பணியில் சாதனைகள் புரிந்திட வாழ்த்தி விடைபெற்றோம்.

திருமதி. கீதா பார்த்திபன் தொடர்பு கைபேசி எண்கள்:

97873 72007 / 99620 80071

https://alphadetectiveservice.com

[email protected] mail:[email protected]

-பேட்டி படங்கள் :விஜயா கண்ணன்