அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை
மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்குள் வருவீர்கள். உங்கள் ராசி அதிபர் செவ்வாய். உங்களின் அதிர்ஷ்ட திசைகள் கிழக்கு மற்றும் தெற்கு ஆகும். இந்த மாதம், உங்களில் அனேகம் பேருக்கு திருமணம் உறுதியாகும். சில பிரிந்திருந்த தம்பதிகள் அல்லது காதலர்கள் மீண்டும் ஒன்றுசேரும் மாதமிது. பணவரவுகள் சில தடைகளுக்குப்பின் வந்துசேரும். வாக்கில் கவனம் தேவை. உங்கள் இளைய உடன்பிறப்புகளுடன் சண்டை வந்து பின் சரியாகும். சில பணியாளர்கள் கோபித்துக்கொண்டு, வேலைக்கு வராமல் இருந்து பின் வந்துசேர்வர். வீடு மாறும்போது முத-ல் சில தொல்லை வந்தாலும், பின் நல்ல வீடு கிடைக்கும். சிலர் வீட்டில் முதலீடு செய்யும் வாய்ப்புண்டு. சிலர் வயல், தோட்டம் அல்லது பள்ளி கட்டடத்தில் முதலீடு செய்வீர்கள். தம்பதிகள் பேச்சை குறைப்பது நல்லது. இந்த மாதம் பிறந்த குழந்தைகளின் தந்தை, ஒரு அதிர்ஷ்ட நிகழ்வை பெறுவார். சிலர் ஆன்மிக யாத்திரை மேற்கொள்வர்.
பரிகாரம்: அருகிலுள்ள நரசிம்மர் சன்னதிக்கும், குல தெய்வத்திற்கும் விளக்கு ஏற்றி வழிபடவும். உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களின் பிணிக்கு மருந்தை வாங்கிக் கொடுங்கள்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். உங்களின் அதிர்ஷ்ட திசைகள் தெற்கு, தென் கிழக்கு ஆகும். இந்த மாதம் ஒரு வேலையை ஆரம்பித்தோமா, முடித்தோமா என்று இருக்காது. நூறு தடைகளை தாண்டி முடிக்க வேண்டியிருக்கும். எனினும் கடைசியில் வேலை வெற்றிகரமாக முடிந்துவிடும். அரசுப் பணியில், ஒழுங்காக சம்பளம் வாங்குபவர்களுக்கும்கூட, கொஞ்சம் தட்டு தடுமாறித்தான் சம்பளம் வரும். மற்ற தனியார் சம்பளக்காரர்களைப் பற்றி என்னத்தைச் சொல்ல' இந்த மாதம் எண்ணியதை நிறைவேற்றியே தீர வேண்டும் எனும் மனோதைரியம் மிக அதிகமாகும். வேலை செய்யும் தொழிலாளர்களை, நிறைய ஆசைகாட்டி, வேலைக்கு சேர்த்துக்கொள்வீர்கள். உங்கள் வீட்டில் பழுதுபார்க்கும் செலவுண்டு. வாடகை வீட்டில் குடியிருப்போர் பண விஷயமாக வீட்டு உரிமையாளரிடம் கருத்து வேற்றுமை கொள்ள நேரிடும். உங்கள் தாயாருக்கு உடல்நிலை சீர் கெட்டு பின் சரியாகும். உங்கள் பெண் வாரிசுகளுடன், குதர்க்கமான விவாதம் நடக்கும். இந்த மாதம் உங்களில் நிறைய பேர் கடனை அடைத்துவிடுவர். வேலையில் மாற்றம் பெறுவர்.
பரிகாரம்: நரசிம்மரையும், குலதெய்வத்தையும் பானகம் வைத்து வழிபடவும். உங்களிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களின், பயண செலவுக்கு கொடுத்து உதவுங்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்குள் வருவர். ராசி அதிபதி புதன். உங்களின் அதிர்ஷ்ட திசை மேற்கு மற்றும் வடக்கு ஆகும். இந்த மாதம் பணவரவு வெகு செழிப்பாக வரும். அது தொழில் லாபமாகவும் இருக்கலாம். அல்லது திருமண சம்பந்தமாகவும், வியாபார விருதியாகவும் இருக்கலாம். பண செழிப்பு, கொஞ்சம் தெம்பைத் தரும். தெம்பு, வாய் வார்த்தையை கடுமையாக்கும். கடுமையான வார்த்தை பணியிடத்தில் சண்டையை இழுத்துவிடும். சிலசமயம் உங்கள் இளைய சகோதரன் அல்லது வேலை செய்யும் ஆட்களிடம் பகை கொள்வீர்கள். வீடு, அடுக்கு மாடி முதலீடு சம்பந்தமாக முத-ல் பின்னடைவு ஏற்பட்டு பின் சரியாகும். சிலரின் வாரிசுகள் வீடு வாங்கி தருவர். அல்லது வாகனம் வாங்கித் தருவர். உங்கள் பெற்றோரிடம் கடுமையாக நடந்துகொள்வீர்கள். உங்கள் பயணத்தில், இளம் பெண்களை அதிகம் பக்கத்தில் சேர்க்கவேண்டாம். ரோடு ஷோவில், ஏதாவது பெண்ணின் கன்னத்தை தொட, அது பெரிய பிரச்சினை ஆகிவிடும். உங்கள் மூத்த சகோதரர் ஒரு அவதூறை சந்திப்பார். உங்களில் சிலர், கைவிட்டுப்போன அரசுப் பணி அல்லது கடன் கிடைக்கப் பெறுவீர்கள். இளம் பெண்கள் கூடியமட்டும் வெகுதூரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வாகன ஓட்டுனர்களால் தொல்லை ஏற்ட வாய்ப்புண்டு.
பரிகாரம்: நரசிம்மரை, துளசி மற்றும் பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபடவும். குலதெய்வக் கோவில் பணியாளருக்கு, பயண சீட்டும், வாங்கி கொடுக்கவும். வீடு கட்டும் பெண் பணியாளருக்கு, ஆரோக்கியம் சம்பந்த செலவுக்கு பணம் உதவி கொடுக்கவும்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கடக ராசிக்குள் வருவர். இவர் ராசி அதிபதி சந்திரன் ஆவார். இவர்களின் அதிர்ஷ்ட திசைகள் வடக்கு, வடமேற்கு ஆகும். இந்த மாதம் உங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அதுவும் நீங்கள் எதிர்பார்த்த ரொம்ப விரும்பிய வேலை கிடைக்கும். சரி வேலை கிடைத்தாச்சு, சம்பளம் உடனடியாக அள்ளி தருவார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். காசு விஷயம் கொஞ்சம் மெதுவாகத்தான் வரும். உங்கள் பேச்சில் கவனமாக இருக்கவேண்டும். வீடு மாறுவது, வீட்டு முதலீடு, வாகனம் வாங்குவது இவை சம்பந்தமான சூழ்நிலை இருக்கிறது. கூடவே இதன் டாக்குமெண்ட்களில் கவனமான பரிசீ-னை தேவை. உங்களில் சிலர் வீடு, மனை, வாகனம் இவற்றை கொடுத்துவிட்டு, வேறு புதிதாக வாங்குவீர்கள். உங்கள் வாரிசுகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். திருமண ஏற்பாடுகள் சுறு சுறுப்பாகும். திருமணமான தம்பதியர் கருத்து வேறுபாடு கொள்வர். தொழில் செய்பவர்கள் தங்களின் தொழில் தேவைக்கு சொந்த மனை வாங்குவர். மூத்த சகோதரி விஷயத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டு பின் சரியாகும். நீண்ட தூரப் பயணங்களில் கவனம் தேவை. உங்கள் மாமனாரும், மாமியாரும் சேர்ந்து, பண விஷயத்தில் உங்களை நோகடிப்பர். அனைவரின் முயற்சியும், லட்சியமும் சிறிது தாமதப்பட்டு பின் சரியாகும்.
பரிகாரம்: நரசிம்மரின் அபிஷேகத்திற்கு, உரிய பொருட்களை காணிக்கை செலுத்தவும். குலதெய்வக் கோவி-ல் மின் கட்டணம் செலுத்த உதவவும். உங்களிடம் பணிபுரியும் பெண்களின் கைபேசி கட்டண தொகை கட்ட உதவுங்கள்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்குள் வருவர். இவர் ராசி அதிபதி சூரியன். உங்களின் அதிர்ஷ்ட திசைகள் தென்கிழக்கு, கிழக்கு ஆகும். இந்த மாதம் எல்லா செயல்களும், ஒருவித திகைப்பையும், தடையையும் கொடுத்து, பின் சரியான பலனைக் கொடுக்கும். குடும்பத்தி-ருந்து பிரியும் நிலை ஏற்படும். அது தொழில் மாற்றம், இடமாற்றம் என்பதால் அமையும். வீடு மாறுவது கண்டிப்பாக உண்டு. சிலரின் பெற்றோர், உங்கள் இளைய சகோதரியுடன் செல்லக்கூடும். வாரிசுகள் வகையில், எதிர்பாராத சுபச் செலவுகள் வரும். சிலரின் வேலை மாற்றம் கொடுக்கும். எதிர்பாராத அறிவு சார்ந்த பெரிய நன்மை கிடைக்கும். கைபேசி அதிர்ஷ்டம் கொண்டுவரும். தொழில் சார்ந்த வரவுகள், சற்று நிதானித்து உங்களை டென்ஷன் செய்துவிட்டு பின் கிடைக்கும். முன்பு கல்வியை கைவிட்டவர்கள், மறுபடியும் கல்வி கற்க இயலும். திருமண விஷயங்கள் சற்று சண்டையுடன் முடிவாகும். சில தம்பதிகள் மனப்பேதம் கொள்வர். கர்ப்பஸ்திரிகள் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மாமனார், மாமியார் சிலபல வேண்டாத வார்த்தைகளை உதிர்த்து சண்டையை கிளப்பிவிடுவர்.
பரிகாரம்: நரசிம்மருக்கு தீபமேற்றி வணங்கவும். குலதெய்வத்துக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும். சமையல் வேலை செய்யும் பெண்களுக்கு பயண தேவை சம்பந்த உதவிகளை தேவைக் கேட்டறிந்து செய்யவும்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கன்னி ராசிக்குள் வருவர். இவரின் அதிபதி புதன் ஆவார். இவர்களின் அதிர்ஷ்ட திசை தெற்கு, தென்மேற்கு ஆகும். இந்த மாதம் தொழில் நன்றாக நடந்தாலும், பணவரவு மட்டும் மெதுவாக இழுத்தடித்து வரும். உங்களில் சிலர் புதிய வியாபாரம் தொடங்க, முயற்சிக்கும்போது, இந்த தடைப்பட்ட பணவரவு சற்று சிக்கலை கொடுக்கும். எனினும் அவசர நேரத்திற்கு கடன் வாங்கி சமாளித்து விடுவீர்கள். அல்லது உங்கள் வாரிசு, உங்கள் மருமகன் அல்லது மூத்த சகோதரர் உதவியால், வணிக மேன்மை காண்பீர்கள். இதே நிலை, நீங்கள் வீடு, வாகனம் வாங்கும்போது ஏற்படும். இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும் அரசு சார்ந்த ஒப்பந்தங்களில், மிக கவனமாக இருக்கவேண்டும். கூடியமட்டும் ஒரு மாதம் தள்ளிவைப்பது நல்லது. அது தோதுபடாவிட்டால், அருகிலுள்ள முருகர் கோவி-ல், முருகருக்கு பச்சை வஸ்திரம் சார்த்தி நெய் விளக்கு ஏற்றிவிட்டு பின் ஆரம்பிக்கவும். உங்களின் நிறைய பேரின் வாரிசுகள் தனியார் வேலை பெறுவர். உங்களில் நிறைய ஜாதகர்கள், திருமண வாய்ப்பை, மிக சிறப்பாக, நினைத்தது மாதிரி பெறுவீர்கள். உங்கள் தந்தை, எங்காவது சறுக்கி விழுந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். ஆன்மிக தரிசனத்தில், ஒரு இடையூறு வந்து நீங்கும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு, நல்ல பெரிய துளசி மாலை வாங்கி சாற்றி வழிபடவும். குலதெய்வத்துக்கு அபிஷேகத்துக்கு ஆவன செய்யவும். உங்கள் குடும்பத்தில் காசு இல்லாமல், மிக கஷ்டப்படும் பெண்ணின் தேவை கேட்டறிந்து பண உதவி செய்யவும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் துலா ராசிக்குள் வருவர். இவரின் அதிபதி சுக்கிரன். உங்களின் அதிர்ஷ்ட திசைகள் மேற்கு, வடமேற்கு ஆகும். இந்த மாதம் உங்களின் எல்லா செயல்களும், பூதாரமாக பயமுறுத்தி, பின் சரியாகிவிடும். நிறைய வேண்டாத செலவுகள், ஏற்பட்டு பின் தடுக்கப்படும். சிலர் வீடுகளில், உங்கள் வாழ்க்கைத் துணையும், உங்கள் தந்தையும் நாய், பேய்போல சண்டையிடும் நிலை ஏற்படும். இந்த மாதம் உங்களில் அனேகருக்கு செய்தி துறை, பத்திரபதிவு, டி.வி., சிறு தூர போக்குவரத்து இவை சார்ந்த மற்றும் கல்வி சார்ந்த வேலை கண்டிப்பாக கிடைக்கும். தொழில் துறை சார்ந்தவர்கள், நல்ல வேலையாட்கள், திறமையான தொழிலாளர்கள் கிடைக்கப்பெறுவர். கைபேசிமூலம் தொழில்புரிவோர் மிக உயர்ந்த நன்மை பெறுவர்.நல்ல வாடகை வீடு கிடைக்கும். இப்போது வீடு விற்றால் நல்ல விலைக்கு போகும். இப்போது, வெளிநாட்டு பயணம் சார்ந்த எதிர்பாராத யோகம் ஒன்று, ஒரு தடைக்குப்பின் கிடைக்கும். வியாபாரம் தொடங்க விரும்புவோர், இந்த மாதம் ஆரம்பிக்கும்முன் முடிவும், முயற்சியும் தொடங்கவும். உங்கள் மூத்த சகோதரனிடம் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: நரசிம்மரை, நல்ல மலர் மாலைகள்கொண்டு வணங்கவும். குலதெய்வத்தை இனிப்புடன் வணங்குங்கள். பெண் ஆட்டோ ஓட்டுனர் போன்று பயணம் சம்பந்தமாக வேலை பார்க்கும் பெண்களின் தேவை அறிந்து உதவுங்கள்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்குள் வருவர். அதிபர் செவ்வாய் ஆவார். உங்களின் அதிர்ஷ்ட திசைகள் வடக்கு, வடகிழக்கு ஆகும். நீங்கள் எந்தவிதமான வேலையில் இருந்தாலும் சரி, அது அரசு வேலை, தனியார் வேலை என எதுவாகவும் இருக்கட்டும். அதில் மாற்றம் கண்டிப்பாக உண்டு. இந்த வேலை மாற்றம் பண அதிர்ஷ்டத்தை கொட்டும். சிலருக்கு இந்த அதிக பணவரவு, வாரிசுகள்மூலம் கிடைக்கும். திருமணங்கள் சில இடையூறுகளை கடந்து நடக்கும். மறுமணம் நடக்க காத்திருப்போர், செலவுகளுக்கு பின் நடக்க காண்பர். அரசு சம்பந்த தண்டனைகள், வசூல் விஷயங்கள் இவை நீங்கள் பயந்த அளவிற்கு இல்லாமல், நீர்த்து போய்விடும். தொழில்புரிவோர். அரசு சார்ந்த செலவு செய்ய வேண்டி யிருக்கும். அரசியல்வாதிகள் ஒரு அவமானத்தை சந்தித்து, பின் அதி-ருந்து மீள்வர். இந்த மீட்சி, அரசியல்வாதி களை முதன்மைக்கு கொண்டு வந்துவிடும். உங்கள் முதலீடுகள், ஒரு சரிவை சந்தித்து, பின் லாபம் தரும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு, முடிந்தால் செம்பு பாத்திரம் காணிக்கை அல்லது பானகம் வைத்து வழிபடவும். குல தெய்வத்திற்கு, முடிந்த காணிக்கை செலுத்தி, சென்று வணங்கவும். மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்களின் தேவை கேட்டறிந்து உதவவும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் தனுசு ராசிக்குள் வருவர். இவர் ராசி அதிபதி குரு ஆவார். இவர்களின் அதிர்ஷ்ட திசைகள் கிழக்கு, தென்கிழக்கு ஆகும். இந்த மாதம் நல்ல மாதமா, கெட்ட மாதமா என பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு அமையும். உங்கள் பெயருக்கு பெரிய தொகை வரும்போது, அது கையில் கிடைக்கும் நேரத்தில் "ஸார் அதிலே ஒரு சின்ன தப்பு இருக்கிறது. அதை சரி பண்ணிவிட்டு பின் தருகிறோம்' என நிறுத்திவிடுவர். கைபேசியில் உங்களைப் பற்றி கன்னா பின்னாவென்று செய்தி வந்து, நீங்கள் கலங்கி நிற்க பின் அது ஒரு பொய் செய்தி என தெரியவரும். வீடு, வாகன விஷயங்களின் போது பெரிய கெடுதல் கூடவே ஒட்டிக் கொண்டுவரும். உங்கள் வீட்டுக்கு மருமகன் வந்து சேரும்போது, அவரின் தந்தை பற்றிய ஏதோ ஒரு செய்தி வந்து, பின் சரியாகும். உங்கள் உடல்நிலை நீர் சம்பந்த குற்றத்தால் சிறிது சரியில்லாமல் ஆகும்; பின் சரியாகி விடும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு குலதெய்வத்துக்கும் நல்ல வஸ்திரம் வாங்கி வணங்கவும். நோய்வாய்ப்பட்ட கணவரையுடைய பெண்ணுக்கு தேவை கேட்டறிந்து உதவவும்.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்குள் வருவர். அதிபதி சனி ஆவார். இவர்களின் அதிர்ஷ்ட திசைகள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஆகும். இந்த மாதம் உங்களில் நிறைய பேருக்கு திருமணம் நடக்கும். மற்றும் சிலருக்கு வெளிநாட்டு யோகம் கிடைக்கும். மேலும் சிலர் வியாபார முதலீடு செய்வர். இன்னும் சிலர் ஒரு வீட்டை நல்ல விலைக்கு விற்று, வேறுவீடு வாங்குவர். வெளியிடங்களி-ருந்து, நல்ல வேலையாள் கிடைப்பர். உங்கள் இளைய சகோதரம் மிக மேன்மை அடைவார். வாரிசுகள் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டு பின் சரியாகிவிடுவர். கலைஞர்கள் சிறு உடல்நலக்குறைவு அல்லது சண்டைக்கு பின் சகஜநிலைக்கு வருவர். உங்கள் வேலையில், உங்கள் முதலாளி, சற்று முரண்பட்டு, பின் நிலைமை சீராகும். உங்களில் சிலருக்கு அரசு வேலை பறிபோக, கைவிட்டுப்போக இருந்து, பின் அரசுப்பணி ஆர்டரை கையில் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருங்கள். தொழில்புரிபவர்கள் தொழில் செய்யும் இடத்தில், வேறுபாடான நிகழ்வை சந்தித்து, பின் மீளமுடியும். இதனால் தொழில் சார்ந்த அதிர்ஷ்டமும், லாபமும் ஒரு பின்னடவை சந்தித்து பின் மீண்டும் சரியாகும்; கவனம் தேவை. தொழி-ல், அரசு அதிகாரிகளிடம் எந்த வம்பும், பிரச்சினையும் வைத்துக்கொள்ளக்கூடாது. கூடியமட்டும் சுமுகமாக செல்லவும். மாமியாரிடம் வெகு கவனமாக இருக்கவேண்டும். இது உங்களின் நன்மை பொருட்டு கூறப்படுகிறது.
பரிகாரம்: நரசிம்மரை எள் எண்ணெய் தீபமேற்றி வணங்கவும். குலதெய்வத்துக்கு முடிந்தால் விளக்கும் இல்லாவிடில் விளக்கெரிக்க எண்ணெயும் வாங்கிக்கொடுங்கள். மாமியாரிடம் பதவிசாக நடந்து கொள்ளவும். அதுவே பரிகாரம் ஆகும்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்குள் வருவர். அதிபதி சனி ஆவார். அதிர்ஷ்ட திசைகள் மேற்கு, வடமேற்கு ஆகும். இந்த மாதம் மாத சம்பளம் வாங்குபவர்கள், நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருந்தாலும், பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு இரண்டும் கண்டிப்பாக கிடைக்கும். வேலை சரியாக கிடைக்காதவர்கள் உங்களின் எண்ணப்படி, இஷ்டப்படி வேலை தேடுவோருக்கு, இந்த மாதம் அவ்விதமே நல்ல நிறைவான வேலை கிடைக்கும். உங்கள் இளைய சகோதரன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களின் காதல் களேபரமாகி, காவல் நிலையம் சென்று திரும்ப வேண்டி இருக்கும். கல்யாணமும் கலாட்டா கலந்திருக்கும். திருமணமான தம்பதிகள் அடித்துக்கொள்ளும் வாய்ப்புண்டு. இளம் பெண்களிடம் தூர இருந்து பேசவும். உங்கள் முதலாளிகள், பாஸ், ஹெச், ஆர்.ஓ இவர்களிடம் தாமரை இலை தண்ணீராக பட்டும், படாமலும் நடந்துகொண்டால் பிழைத்தீர்கள். தொழில் நடத்துபவர்கள் அரசு சார்ந்த வரி, வட்டி, கட்டணம் என இவை போன்றவற்றில் முன்கூட்டியே செலுத்திவிடுங்கள். இதனால், நல்ல பெயர், புகழ் கூடவே நல்ல வருமானமும் பெற்று, இவர்களைப் பற்றிய பெருமையான பேச்சு எங்கும் பரவுமாறு செய்துவிடுவர். வேலை, சேவை, இவை சார்ந்த அலைச்சல் அதிகரிக்கும். நல்ல வாடகை வீடு கிடைக்கும். இந்த மாதம் சினிமா, டி.வி. கலைஞர்கள் கண்டிப்பாக, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். காதல் மற்றும் நீங்கள் சந்தித்து பேசும் மனிதர்களிடம் வெகு கவனமாக இருப்பது அவசியம். உங்கள் மாமியார், உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்குமிடையே சண்டை இழுத்துவிட வாய்ப்புண்டு. உயர்கல்வி மாணவர்கள் கவனமாக இருங்கள்.
பரிகாரம்: நரசிம்மருக்கு தீபமேற்றி வணங்குவதும், கோவிலை வலம்வந்து வணங்குவதும் நல்லது. விபத்தில் சிக்கிக் கொண்டர்களுக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். குலதெய்வத்திற்கு முடிந்தால் விளக்கு அல்லது
விளக்கெரிக்க எண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்குள் வருவர். அதிபதி குரு ஆவார். இவர்களின் அதிர்ஷ்ட திசைகள் வடக்கு, வடகிழக்கு ஆகும். இந்த மாதம் உங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் பெறும். அதுபோல் பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் செல்லும். பூர்வீகம் நல்ல செய்தி தரும். வாரிசுகள் மிக கௌரவம் தருவர். இதெல்லாம் நல்ல நிகழ்வுகள்தான். ஆனால், பண விஷயம், காசு ரொட்டேஷன் எங்கோ போய் ஒளிந்துகொள்ளும். வரவேண்டிய பணம், ஒரு இடத்தில் தேங்கி நின்றுவிடும். அக்கவுண்டில் பண வர வாய்ப்பு வரிசைகட்டி நின்றாலும், ஏனோ நடப்புக்கு வராமல் நின்றுவிடும். இதற்கு உங்கள் அலுவலகத்தில், சில பணியாளர்கள் செய்த தவறும், தப்பான தரவுகளும் ஒரு காரணமாகிவிடும். உங்களில் ஒருசிலருக்கு வேலை போக இருந்து, கடைசியில் தப்பித்துவிடும். அரசு பணியாளர்கள், இந்த மாதம் பிறந்தவர்கள் சும்மா கிடைக்காமல், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம், தோஷம் போடுவது என்றால், வேலை போய்விடும். போயே போயிற்று. அப்புறம் வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். அதுபோல் உடல்நிலையில் சின்ன சுணக்கம் தென்பட்டாலும், உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். கடன் சம்பந்தமாக தெனாவட்டு பேச்சு வேண்டாம். அடக்கி வாசிக்கவும். இந்த மாதம் திருமண பேச்சுக்களை பேச்சோடு வைத்துக்கொள்ளவும். முடிவு பிறகு எடுக்கலாம். உங்கள் பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. அரசியல்வாதிகள், தங்கள் பூர்வீக இடத்தில் பெரும் கௌரவம் பெறுவர். உங்கள் மாமியார், தனது பூர்வீக சொத்து பெறுவார்.
பரிகாரம்: நரசிம்மரை, வஸ்திரமும், மஞ்சள் பூக்கள்+துளசி சேர்த்து மாலை கட்டி வணங்கவும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றமும், திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிற்கு, தேவை கேட்டு உதவவும்.
-------------------
____________________
ஐப்பசி மாத கிரக நிலைகள்
சூரியன்
எல்லா வருடமும், ஐப்பசி மாதம் சூரியன், துலா ராசியில் தான் இருப்பார். அங்கு, சூரியன் நீசமடைவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூரியன் நீசமாவதால்தான் ஐப்பசி அதாவது அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பெருமழை பொழிந்து, அரசு மற்றும் அரசு அதிகாரிகளை அல்லாடச் செய்கிறார் போலும். சில வருடங்களில், சூரியன் நீச பங்கமாகும் வாய்ப்பு ஏற்படும். இந்த வருடமும், குரு பகவான் மிதுனத்தில் இருந்தால், சூரியன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பார். சோதனையாக, இந்த ஐப்பசி மாதம் முழுக்க, குரு கடகத்திற்கு நகன்று அமர்வதால், சூரியன் நீசபங்கம் பெறமுடியாமல் போய்விட்டது எனில் எவ்வித பலன் ஆகும். அரசாங்கமும், அரசு அதிகாரி களும், நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு, அதனை சமாளிக்க முடியாமல் திண்டாடுவர். சூரியனுடன் அமர்ந்த புதன், கூட்டணி கட்சியைக் குறிக்கும் சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்துள்ளார். இதனால் அரசு இயந்திரத்தை, ஆளும் கட்சி ஒரு திசையில் இயக்க முயல, எதிர்கட்சி, கூட்டணி கட்சியினரின் பேச்சைக் கேட்டு, எதிர்திசையில் இயக்க முயல்வர். இந்த நச்சுபிடித்த அரசியல்வாதிகளால் நிறைய அரசு உயர் அதிகாரிகள், சைலண்ட் மோடுக்கு போய்விடுவர். சில புத்திசா- அதிகாரிகள் ஆளும், எதிரி, கூட்டணி கட்சி என எந்த கட்சியையும் பகைத்துக்கொள்ளாமல், சமநிலை பார்வையோடு செல்வர். மேலும் இயற்கை சீற்றங்களும் அரசு அதிகாரிகளை பந்தாடிவிடும்.
செவ்வாய்
இவர் ஆளும் கட்சியைக் குறிப்பார். இவர் ஆளும் கட்சியின் பொறுப்பான அரசு கிரகம் சூரியனுடன் சேர்க்கை. இந்த சூரியனின் நீச நிலையால், ஆளும் கட்சி அல்லாடும் நிலை ஏற்படும். கூடவே எதிர் கட்சியைக் குறிக்கும் புதனும் உள்ளார். இவர் சுக்கிரனின் பரிவர்த்தனையால், சொந்த ராசி நிலையை குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். எனவே எதிர் கட்சிகள், ஆளும் கட்சியை கிழித்துத் தொங்கவிடும். இதன் முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயலற்ற தன்மையும், அரசு அதிகாரிகளின் முட்டாள்தனமான செயலும் காரணமாகும். எனவே ஆளுங்கட்சி. முழியாய் முழிக்கும். பதில் சொல்லமுடியாத சூழ்நிலை உருவாகும். இதனை சமாளிக்கும் விதமாக, தண்ணீர் பற்றிய குறைபாடுகளை முத--யே சரி பண்ணிக் கொள்ளவேண்டும். சுக்கிரன் நீசமாவதால் கண்டிப்பாக நீர் சார்ந்த நிகழ்வுகள் கொடுமையாக இருக்கும். நீசபங்கம் ஆவதால், சரியான முன்னெடுப்புக்கள் ஆளுங்கட்சியைக் காப்பாற்றிவிடும்.
புதன்
இவர் எதிர்கட்சிகளைக் குறிப்பார். இவர் இந்த மாதம் ஆளும் கட்சி கிரகம் செவ்வாயுடன், செயலற்ற அரசைக் குறிக்கும் நீச சூரியனுடனும் உள்ளார். இந்த மாதம் எதிர்க்கட்சிகளின் மாதம் என்றே சொல்லலாம். அரசாங்கத்தின் தூக்கமும், கூட்டணி கட்சிகளின் கண்ணாமூச்சி விளையாட்டும் ஆளும் கட்சியின் பரிதவிப்பும் சேர்ந்து எதிர்கட்சிகளுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போன்று உத்வேகமும் உற்சாகமும் கலந்து, சந்தோஷக் கூத்தாடுவர். மேலும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் நம்மோடுதான் வருவர் என்ற நூறு சதவிகித நம்பிக்கையும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும்.
குரு
தற்போதைய கோட்சாரப்படி மிதுனத்தில் இருந்த குரு, சும்மா ஒரு இரண்டு மாசத்துக்கு, கடகத்திற்கு போய் என்னன்னு பார்த்துட்டு வரலாம் எனக் கிளம்பிவிட்டார். அங்கு இவர் உச்சநிலை பெறுவார். எனவே ஆன்மிகம் சம்பந்த விஷயங்கள் மேன்மை பெறும். குரு, தனது சுய சாரத்தில் செல்வது மட்டுமல்ல, உச்ச வர்க்கோத்தமும் பெறுகிறார். ராசி, அம்சம் இரண்டிலும் உச்சம் பெறுவது உச்ச வர்க்கோத்தமம் ஆகும். இந்த மாதம் வெளிநாட்டு சிக்கல்கள் கண்டிப்பாக சரியாகிவிடும். கல்வி விஷயங்கள் மிக மேன்மை பெறும். தண்ணீர், நீலம், கல்வி, போக்குவரத்து, வெளிநாடு, ஆன்மிகம், உணவு, முதியவர்கள் என இவை சார்ந்த நல்ல முக்கியமான தீர்ப்புகளை நீதிமன்றம் வெளியிடும். ஆசிரியர்கள், பசு, விளைபொருட்கள், ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடுகளும் மேன்மையும் நடைமுறைக்கு வரும். வங்கிகள் தங்கள் அணுகுமுறையை எளிமைப்படுத்தும். இந்த மாதம் குருபகவானுக்கு எந்தவித பாபக் கிரகங்களின் பார்வை சம்பந்தம் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன்
சுக்கிரன் கூட்டணிக் கட்சிகளைக் குறிப்பார். இந்த மாதம் இவர் நீசமாகி, புதன் பரிவர்த்தனையால் நீசபங்க நிலையில் உள்ளார். எனவே கூட்டணி கட்சிகள், ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிளுக்கும் இடையே ஆட்டம் காட்டும். கூட்டணி கட்சிகளின் கீழ்மைதன்மை தெரியவரும். இது நீச நிலையால் வரும் பாதிப்பு. இவர்கள் யாருடனும் சண்டையிடவும், வாக்கு வாதம் செய்யவும் துளியும் தயங்க மாட்டார்கள். நம்முடைய வெற்றியும், மேன்மையும்தான் முக்கியம் என எதற்கும் கவலைப்படாமல் இறங்கி அடிப்பர். சுக்கிரன் எனும் கூட்டணியை குறிக்கும் கிரகம், காலபுருஷனின் 2-ஆம் அதிபதி. எனவே பண விஷயங்களின் முக்கிய காரணமாக, இவர்களின் மட்டமான செயல்களுக்கு காரணமாக இருக்கும். ஊஸ்ங்ழ்ற்ட்ண்ய்ஞ் ண்ள் ச்ஹண்ழ் ண்ய் ஜ்ஹழ் ஹய்க் ப்ர்ஸ்ங் என விஞ்ஞான பேசுவர்.சனிபகவான், இப்போது தான் எந்த வீட்டில் இருக்கிறேன் என்பதை சொல்லாமல், கும்ப ராசி, மீன ராசி என இரண்டு கட்டத்திலும் நிற்கிறார். உண்மை என்னவெனில் எந்த கட்டத்தில் இருந்தாலும் மக்களுக்கு இம்சைதான்.
ராகு
கும்பத்தில், ராகுவுடன் சனி நிற்கிறார். சனி உச்ச குரு சாரத்தில் நகர்வதால் அரசிய-ல் ரொம்ப கெடுக்க வேண்டுமா என யோசிப்பார். ஆனாலும் உடனிருக்கும் ராகு, அதெல்லாம் செல்லவே செல்லாது என அடம்பிடித்து, அரசியலை அதகளம் செய்வார். உள்ளூர் அரசியல்வாதிகளை குழப்பி அடித்தும் திருப்தியடையாமல், வெளிநாட்டு அரசியல்வாதிக்கும், நம்ம நாட்டு அரசியல்வாதிக்கும் இடையே கோள்மூட்டி, சண்டை இழுத்து, அதனை பார்த்து, ராகு வெகு ஆனந்தப்படுவார். ராகு, அரசியலை குறிக்கும் 11-ஆமிடத்தில், சுயசாரம் பெற்று செல்வதால் இவ்விதம் நடக்கும்.
கேது
கேது, சிம்ம ராசியில், சுக்கிர சாரம் பெற்று செல்கிறார்.
சுக்கிரன் நீச நிலையில் உள்ளார். எனவே இந்த மாதம், கேது குறிப்பிடும் மனிதர்களான மருத்துவர்கள், ஜோதிடர்கள், வக்கில்கள், தையல் தொழில் நடத்துவோர், நூல் சம்பந்தப்பட்டோர், மத போதனை செய்பவர்கள், நல்ல சாமியார், ப்ராடு சாமியார்கள், பிச்சைக்காரர்கள், மாந்திரிகம் செய்வோர், தியானம், யோகா சொல்-க் கொடுப்போர், துப்புரவு தொழிலாளர்கள் என இந்த அனைத்து மனிதர்களும் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு நீசமான இளம் பெண்மூலம், நீங்கள் அடி வாங்கவும், வழக்குகளில் சிக்கவும், சிறைக்கு செல்லவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் கண்டிப்பாக நேரிடும்.
சனி
இவர் மீனத்தில், திருக்கணிதப்படி செல்கிறார்.
எனவே இவர், வெளிநாடு சம்பந்தமாக பெரிய மாற்றம் தருவார். வெளிநாட்டில் இருந்துவரும் தொந்தரவு, சங்கடங்களை சுருக்குவார். இவர் விரயத்தை சுருக்குவதால், வெளிநாட்டு அதிக வரிவிதிப்பு தடுக்கப்பட்டு விடும்.
வானிலை
ஐப்பசி 1, 2-ஆம் தேதி அக்டோபர் 18, 19-ஆம் தேதிகளில்
சந்திரன் சிம்ம ராசியில் செல்கிறார். அங்குள்ள கேது என்ற காற்று கிரகத்துடன் ஜாயின் ஆகிறார். சிம்மம் ஒரு நெருப்பு ராசி. எனவே காற்றில் மிதமான வெப்பம் கலந்திருக்கும்.ஐப்பசி 2, 3, 4-ஆம் தேதி அக்டோபர் 19, 20, 21-ஆம் தேதிகளில், கன்னி எனும் நில ராசியில், நீச சுக்கிரனுடன் சந்திரன் பயணம். இந்நாட்களில் இருவிதமான பலன்கள் நடக்கக்கூடும். ஒன்று வெகு மழை கொட்டித் தீர்க்கும். அல்லது நிலத்தில் ஆங்காங்கே வெடிப்பு அல்லது பிளவுகள் தோன்றும். சனி மீன ராசியிலும், திருக்கணிதப்படி சஞ்சரிக்கிறார் எனும் கணக்கில் இவ்விதம் நிகழ வாய்ப்புள்ளது.
ஐப்பசி 4, 5, 6-ஆம் தேதி அக்டோபர் 21, 22, 23-ஆம் தேதிகள் சந்திரன் துலா ராசியில் ஓட்டம். அங்கு நீச சூரியன், புதன், செவ்வாய் இக்கிரகங்கள் அமர்ந்துள்ளனர்.
துலாம் ஒரு காற்று ராசி. மற்றும் மேற்கு திசையை குறிக்கும் ராசி.
எனவே உலகின் மேற்கு பகுதிகளில் தண்ணீர், காற்று என இவை பெருமழை, மே வெடிப்பு, வெகு வெள்ளம் என இப்பாதிப்புகளை கொடுக்கும் வாய்ப்புள்ளது.ஐப்பசி 6, 7, 8-ஆம் அக்டோபர் 23, 24, 25 தேதிகளில், சந்திரன், நீர் ராசியான விருச்சிகத்தில், குரு பார்வையுடன் நகர்வார். அப்போது நல்ல மழை பெய்யும் நிலை உண்டு.
ஐப்பசி 12, 13, 14 அக்டோபர் 29, 30, 31-ஆம் தேதிகளில்
மகர ராசி எனும் நில ராசியில் குரு பார்வையிலும், செவ்வாய் பார்வையிலும் ஓட்டம். எனவே மழைக்கு வாய்ப்புண்டு. ஐப்பசி 14, 15, 16 அக்டோபர் 31 நவம்பர் 1, 2-ஆம் தேதிகளில், கும்ப ராசியில் சந்திரன் நகர்வு. அங்குள்ள சனி, ராகுவுடன் சேர்க்கை. இந்நாட்களில் குளிரான காற்று அல்லது பனி கட்டிகளின் தாக்கம் இருக்கும். ஐப்பசி 16, 17, 18 நவம்பர் 2, 3, 4-ஆம் தேதிகளில், மீன ராசியில் சனியுடனும், நீச சுக்கிரனின் பார்வையிலும், சந்திரன் செல்கிறார். இந்நாட்களில் மக்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும். மழை, புயல், வெள்ளம், கடல் சார்ந்த பாதிப்புகள் கடுமையாக இருக்கும். அதுவும் வடக்கு, தெற்கு திசைகள் அதிகம் பாதிக்கும்.
ஐப்பசி 19, 20, 21 நவம்பர் 5, 6, 7 தேதிகளில், சந்திரன்
மேஷ ராசியில் நெருப்பு ராசியில் சூரியன், புதன், செவ்வாய் கிரகங்களின் பார்வையில் நகர்வு. எனவே வறட்சி காணப்படும்.
ஐப்பசி 24, 25, 26 நவம்பர் 10, 11, 12 சந்திரன், கடக ராசியில், உச்ச குருவுடன் ஓடுகிறார். இது பெரு மழையையும் தரலாம். அல்லது சின்ன தூறலையும் கொடுக்கலாம். அல்லது அணைகள், நீர் நிலைகளை இவை நிரம்பும் அளவிற்கும், அளவான பாதுகாப்பான மழை பொழிவையும் தரலாம். இது குரு சந்திரனின் இஷ்டமாகும்.