Advertisment

எங்கும் எதிலும் வெற்றி தரும் அக்னி தரிசன வழிபாடு!  -கே. குமார சிவாச்சாரியார்

agni

 


ரு ஊரில் பத்து குழந்தைகள் நன்றாகத் தேர்வெழுதி வெற்றிபெற்று அவரவர் மனவிருப்பத்திற்கு ஏற்றாற்போல பொறியா ளராக, டாக்டராக, ஆசிரிய ராக, கடைநிலை ஊழியராக,கஷ்டப்படும் கூலியாகவும் வளர்ந்து நிற்கின்றனர்.

Advertisment

அவர்கள்அனைவரும் ஒரு திருமண விழாவில் மீண்டும் சந்திக்கின்றபோது என் தலைவிதி இப்படி உள்ளது. நீ நல்லா கவனமாகப் படித்தாய். இன்று கலெக்டராக இருக்கே! நான் பில் கலெக்டராக  மட்டுமே இருக்கிறேன் என்றார்கள். இதற்கு புக்திகாரகன் என அழைக்கப்படும் சந்திரனின் நிலைதான் காரணம்.

அனைவரும் சொல்லும் பொதுவான வார்த்தை "என் தலைவிதி' என்று தான். அதைத்தான் வானவியல்- கோள்களின் ஆராய்ச்சி யாளர்கள் "ஜோதிடவிதி' என்று எழுதியுள்ளார்கள். இந்த விதிகளை அறிந்து அதில் சொல்லப்படும் பரிகார விதிகளை நம் வாழ்வில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயரலாம்.

அக்னி தரிசனம்:

காலையில் எழுந்ததும் கீழ்வானத்தில் சிவந்த மேனியால் வெளிவரும் அக்னி வட்டத்தைக் கண்டு ஆஹா, பொழுது விடிந்து விட்டது என்கிறோம். 

ஆனால் அது சூரியன் என்னும் கடவுளின் வடிவம்.

Advertisment

மனிதர்களுக்கு எல்லாப் பொழுதும் நன்றாக விடிய காலையில் ஐஸ்வர்ய வடிவமான செங்கதிரோனை வணங்கவேண்டும். கொடை வள்ளல் கர்ணன் சூரிய பகவானை தினமும் முதலில் கண்டு வணங்கியதாலேயே உயிர் உள்ளவரை தானம் செய்யும் அளவுக்குப் பணமும் பொன்னும் பொருளும் குவித்து வைத்திருந்தான்.

வருடம் ஒன்றில் சராசரியாக இருபது திருமணம் பத்து சீமந்தம்,  ஐந்து பிறந்தநாள் விழா, நான்கு ஆலய விழாக்களுக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்து ஒருசில நிமிடங்களில் எழுந்து பரிமாறும் இடத்திற்குச் சென்று அடுப்பில் எரியும் அக்னியைக் கண்டு "ஆச்சாப்பா எல்லாம்' சாப்பிடலாமா என்கிறோம். ஆனால் விழா மேடையில் எரியும் அக்னியை வணங்கவேண்டும். அதன் பலன் என்ன என்பதை நாம் அறிய ஆர்வம் காட்டுவதில்லை.

இனியாவது அறிந்துகொள்வோம். ஒரு நல்ல குடும்பம் வேதம் பயின்ற பண்டிதரின் துணையால் அக்னியை உண்டாக்கி வேத மந்திரங

 


ரு ஊரில் பத்து குழந்தைகள் நன்றாகத் தேர்வெழுதி வெற்றிபெற்று அவரவர் மனவிருப்பத்திற்கு ஏற்றாற்போல பொறியா ளராக, டாக்டராக, ஆசிரிய ராக, கடைநிலை ஊழியராக,கஷ்டப்படும் கூலியாகவும் வளர்ந்து நிற்கின்றனர்.

Advertisment

அவர்கள்அனைவரும் ஒரு திருமண விழாவில் மீண்டும் சந்திக்கின்றபோது என் தலைவிதி இப்படி உள்ளது. நீ நல்லா கவனமாகப் படித்தாய். இன்று கலெக்டராக இருக்கே! நான் பில் கலெக்டராக  மட்டுமே இருக்கிறேன் என்றார்கள். இதற்கு புக்திகாரகன் என அழைக்கப்படும் சந்திரனின் நிலைதான் காரணம்.

அனைவரும் சொல்லும் பொதுவான வார்த்தை "என் தலைவிதி' என்று தான். அதைத்தான் வானவியல்- கோள்களின் ஆராய்ச்சி யாளர்கள் "ஜோதிடவிதி' என்று எழுதியுள்ளார்கள். இந்த விதிகளை அறிந்து அதில் சொல்லப்படும் பரிகார விதிகளை நம் வாழ்வில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயரலாம்.

அக்னி தரிசனம்:

காலையில் எழுந்ததும் கீழ்வானத்தில் சிவந்த மேனியால் வெளிவரும் அக்னி வட்டத்தைக் கண்டு ஆஹா, பொழுது விடிந்து விட்டது என்கிறோம். 

ஆனால் அது சூரியன் என்னும் கடவுளின் வடிவம்.

Advertisment

மனிதர்களுக்கு எல்லாப் பொழுதும் நன்றாக விடிய காலையில் ஐஸ்வர்ய வடிவமான செங்கதிரோனை வணங்கவேண்டும். கொடை வள்ளல் கர்ணன் சூரிய பகவானை தினமும் முதலில் கண்டு வணங்கியதாலேயே உயிர் உள்ளவரை தானம் செய்யும் அளவுக்குப் பணமும் பொன்னும் பொருளும் குவித்து வைத்திருந்தான்.

வருடம் ஒன்றில் சராசரியாக இருபது திருமணம் பத்து சீமந்தம்,  ஐந்து பிறந்தநாள் விழா, நான்கு ஆலய விழாக்களுக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்து ஒருசில நிமிடங்களில் எழுந்து பரிமாறும் இடத்திற்குச் சென்று அடுப்பில் எரியும் அக்னியைக் கண்டு "ஆச்சாப்பா எல்லாம்' சாப்பிடலாமா என்கிறோம். ஆனால் விழா மேடையில் எரியும் அக்னியை வணங்கவேண்டும். அதன் பலன் என்ன என்பதை நாம் அறிய ஆர்வம் காட்டுவதில்லை.

இனியாவது அறிந்துகொள்வோம். ஒரு நல்ல குடும்பம் வேதம் பயின்ற பண்டிதரின் துணையால் அக்னியை உண்டாக்கி வேத மந்திரங்களை ஓதி அதற்கு உணவு (அவிர்பாகம்) தந்து பிரார்த் தனை செய்யும்போது நாம் எல்லாரும் மனம் லயித்து கைகூப்பி வணங்கவேண்டும்.

விழா நடக்கும் நேரங்களில் எரியும் அக்னியில் பொருட்களை இடுவது அக்னிப் பரிட்சை செய்தல் என்றாகிறது.

கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் சொல்லும்போதே "நான் தினமும் அக்னி பூஜை செய்பவனையும் அன்னமிடு பவனையும் தெய்வமாக வணங்குவேன்' என்று உரைத்தார். நீங்கள் தினமும் அக்னி வளர்த்து வணங்காவிட்டாலும் விழா நடக்கின்ற இடங்களுக்குச் செல்லும்போதாவது வழிபடுங்கள்.

அக்னி இல்லாவிட்டால் உணவும், பணியும், ஜீவனும் இல்லாது இந்த உலகமே இருண்டு போய்விடும். இதையே அக்னிபூஜை செய்யாதவர்கள் "என் வாழ்க்கையே இருட்டாகி விட்டது' என்பார்கள்.

யக்ஞம் எனும் அக்னிப் பரிட்சை

இந்த உலகில் வேதம் படித்த பண்டிதர்கள் மட்டும்தான் அக்னி வழிபாடு என்ற யக்ஞத்தைச் செய்யமுடியும் என்று தவறான சிந்தனையில் பலர் வாழ்ந்துகொண்டு, எங்கும் எதிலும் வெற்றி இல்லையென்று புலம்புகிறார்கள். யக்ஞம், அக்னி பூஜை, யாகம், வேள்வி, தீ வளர்த்தல் என்ற சொற்களால், அனைவரின் வாழ்வும் உயர்ந்த நிலையை எட்டச் செய்யவே இவ்வழிபாடு செய்யப்படுகிறது. வேதங்கள் இந்த ரகசியத்தைப் "பஞ்சமகா யக்ஞம்' என்னும் அக்னிப் பரிட்சையை ஒவ்வொரு ஆன்மாவும் செய்தல்வேண்டும். இதனால் ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் சேருமென்று சொல்லி மனித இனம் உயர்வாக வாழ அறிவுறுத்துகிறது.

தேவ யக்ஞம்

தெய்வங்களை நினைத்து அக்னி ஹோமம் செய்வது. இல்லத்தில் ஒரு வெற்றி கிடைக்கவேண்டி பரிகார ஹோமம் நடத்துவது, ஆலய மகா மண்டபங்களிலும் இந்த ஹோமத்தை நடத்தலாம். 

தெய்வங்கள் வைக்கும் அக்னிப் பரிட்சைபிதுர் யக்ஞம்: சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்யும் காலங்களில் முன்னோர்களுக்குச் செய்வது பிள்ளைகளுக்கு பெற்றோர் வைக்கும் அக்னிப் பரிட்சை.

பிரம்ம யக்ஞம்: மனிதர்கள் வாழ்க்கையில் வி.ஐ.பி ஆக, அமைச்சராக, பதவி உயர்வுபெற, உயர்ந்த அந்தஸ்துகொண்ட நாற்காலிகளில் அமர, ஜோதிட உலகம் வேதங்கள் வழி காட்டலில் தெய்வங்கள் நடத்தும் வாழ்க்கைக் கால தசையின்படி வைக்கும் அக்னிப் பரிட்சைகள்.

மனித யக்ஞம்: பொதுமக்கள் நலன்பொருட்டு உதவிகள் செய்வது. இதுவும் இறைவன் செல்வந்தரைக் குறிபார்த்து வைக்கும் அக்னி பரிட்சை என்று எல்லாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். உதாரணத்திற்குச் சனி தசை சுயபுக்தி, ராகு தசை, சனி புக்தி காலங்களில் அதல பாதாளத்தில் விழுந்துவிடப்போகும் மனிதனுக்குச் சொல்லும் பரிகார எச்சரிக்கையாக நவகிரக யக்ஞம், பசுதானம், அன்னதானம், திலாயக்ஞம் எனும் அக்னிப் பரிட்சை விதி.

பூத யக்ஞம்: உயர்ந்தவர்- தாழ்ந்தவர், ஏழை- பணக்காரன், விலங்குகள் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைத்து ஜீவராசிகளும் "இவ்வுலகில் வாழப் பிறந்த ஆன்மாக்கள் என்று நல்ல மனதோடு நின்று உணவு, இடம் தந்து உதவுதல் எனும் யக்ஞம் எனும் அக்னிப் பரிட்சை.

இந்தப் பரிட்சைகளை நமக்குப் பட்டிய லிட்டுக் கொடுத்து, உரிய காலத்தில் செய்துவிடல் வேண்டும் என்று அறிவுரை கூறி விட்டன. அதில் முதல் பரிட்சை ஆயுஷ்ய ஹோமம். வாழ்நாள் நிறைவடைந்தபிறகு வருவது சதாபிஷேகம்.

தோல்விகளை விரட்டும் வேள்விகள்

பொதுவாழ்வில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் பிறந்ததுமுதல் 10-ஆம் வகுப்பு முடித்து டிகிரி வாங்கியபிறகு 100-க்குமேல் பரிட்சை எழுதியாச்சு. ஆனால் அதற்குத் தகுந்த பலன்தான் கிடைக்கவில்லை. சாதாரண மனிதனாகவே வாழ்கிறேன் என்பார். ஆனால் அவர் தர்ம சாஸ்திரத்தின்படி செய்யவேண்டிய 96 பரிட்சைகளை விட்டிருப்பார். அமாவாசை- 12, மாதப் பிறப்பு- 12, மாளயம்- 16, யுகாதிகள்- 4, வியதீபாதம்- 13, வைதிருதி- 13, அஷ்டகா- 12, மன்வாதி-14. இங்கே- 96, பெரிதா- 100 பெரிதா எனக் கேட்டால் தர்ம சாஸ்திரப்படி 96-ஐ செய்யாமல் விட்டதுதான் பெரிது என்று சொல்லத் தோன்றுகிறது.

பிறருக்கு சிறு உதவிகள் செய்வதும் தானம் செய்வதும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வதும் ஒருவித யக்ஞமே. இதனால் நமக்கு வாழ்க்கை உயரத் தொடங்கும்.

நமது சிந்தனைகள் எல்லாம் கேளிக்கை பாடல்களில் சென்று வாழ்வில் தோல்விகள் வருவதற்குக் காரணம் அந்தந்த காலகட்டங்களில் வரும் கிரண நிலைகள்தான் என்று உணர்ந்து பொறிகள் ஐந்தையும் யக்ஞங்கள் எனும் நற்பணிகளில் செயல்பட வேண்டும்.

"என் பொறி ஐந்தும் உன்னிடத்தன்றி
உண்ணும் இரை மாற்றவேண்டும்
இதுவே என் விண்ணப்பம் என் அப்பனே!''

என்று அழகிய மணவாள தாசர் கூறுகிறார்.

மனம்போன போக்கெல்லாம் போகக் கூடாது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளும் தோல்வியைச் சந்திக்கும் செயல்களில் கொண்டுபோய் விட்டுவிடும். இதனால் மூன்று எடுகோள்களான-

1. ஐம்பொறி ஆட்சி செய், 2. மனதை அடக்கு. 3. மனதை அடக்கிவிட்டால் ஜகத்தை அடக்கலாம் உள்ளங்கையில் என்ற சொல் மொழிகள் தோன்றின.

நமது ஐம்பொறிகளை அடக்கி இறையக்ஞம் செய்துவந்தால் ஐஸ்வர்யமே எளிதில் நம்மை நெருங்கிவரும்.

அப்பர் பெருமான் தன்னுடைய தேவாரப் பதிகத்தில்-
"புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டும்
பூமாலை புனைந்தேத்தில் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா! சயபோற்றி போற்றி யென்றும்

அலை புனல் சேர் செஞ்சடை யெம் ஆதி' என்று பாடி தினமும் மனம் அடக்கி செய்ய வேண்டிய இறைவனுக்கான மனம் ஒருமித்த வேள்விதனைச் செய்யவேண்டும் என்றார்.

தசையும் கிரகங்களின் விசையும்

மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு செல்வந்தருக்கு உடல்நலிவு திடீரென ஏற்பட்டுவிடுகிறது. அவருக்கு துர்கிரக தசை தொடங்கி அவரை படுக்கையில் வீழ்த்துகிறது என்று பொருள். அழகான புள்ளிமான் காட்டில் நிற்கும்போது வேடன்விட்ட அம்பின் விசை அதனைச் செயல் இழக்கச் செய்வதுபோல நவகிரகங்கள் தனது தசை தொடங்கும்முன்னே விசையை நம் உடலில் காட்டிவிடும் என்ற கிரக சார ரகசியம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

உதாரணத்திற்கு: ஒரு ஜாதகருக்குக் குரு தசை பதினாறு வருஷம் நடக்கப்போகிறது என்றால் அவர் ராகு தசைக்கு முடிவான கடைசி 1 1/2 வருடத்திற்குமுன்பே தனது விசையைக் காட்டத் தொடங்கி விடுவார். குரு புக்தி யில் இரண்டு வருடம் ஒருமாத காலத்திற்கு நல்லதே நடக்கும். அடுத்ததாக செவ்வாய் புக்தி, ராகு புக்தி, கேது ஆகிய புக்திகள் விரோதங்களும், விரயங்களும் வரக்கூடும். அந்த நேரத்தில் எனக்குதான் குருவும் செவ்வாயும் சேர்ந்துள்ளார்களே குருமங்கள யோகம் நன்மைகளையே வாரிவழங்கும் என்று மகிழ்ந்திருக்க இயலாது. குருபகவான் நல்விசையை உங்கள்மேல் தந்தாலும் சில சக்தி ஊட்டுகிற அக்னி வேள்விகளை இது நாம் செய்யவேண்டிய அக்னிப் பரிட்சை என்று செய்தாக வேண்டும்.

நம் ஆயுட்காலத்தில் சுக்கிர தசை மட்டுமே இருபது ஆண்டுகள் என அதிகமாக அவருக்கு மட்டும் விசையைச் செலுத்த கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் சுக்கிரன் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் பெண்ணின் குணநலன்களும் இரக்க குணமும், குரு மற்றும் ஆச்சார்ய தத்துவங்களை அடக்கிய கிரகம். சூரிய புக்தியில் கடன் தொல்லை, மனைவி- மக்கள் பிரிவு, செவ்வாய் புக்தியில் நண்பர் பகை, ராகு புக்தியில் புத்திரக்கலகம், வீண் அலைச்சல், சனி புக்தியில் உடலில் சிலகாலம் நோய்களும், கேது புக்தியில் மனைவி வழிப்பகையும் ஏற்படலாம். அப்படியானால் சுக்கிரன் நம்மீது செலுத்தும் விசைகள் அனைத்தும் கிடைக்காதா என்றால் கிடைப்பதற்கு நாம் அவர் தொடர்பாக உள்ள அக்னி வேள்வி ப்ரயோக விதிகளைச் செய்து அக்னிப் பரிட்சைக்கு ஆளாகவேண்டும்.

இதேபோல ஒன்பது கிரகங்களின் விசை செலுத்தும் காலங்களை அறிந்து செயல்படுங்கள்.    

இரண்டே வரிகளில் சொல்லவேண்டு மென்றால் ஒரு வயதுள்ள குழந்தையாக இருக்கும்போது, ஆயுஷ்ய ஹோமம், மனைவிக்கு ஒரு வயதில் நவசக்தி பூஜையும், புது வீடு கட்டி குடிபுகும்போது கணபதி நவகிரகம் லட்சுமி, வாஸ்து பகவானை அழைத்து அக்னிப் பூஜை நடத்தி அவிர்பாகம் கொடுத்தலும் 59, 60 வயதுகளில் விருந்துடன் பரிகார வேள்வியும் நடத்திவிடுகிறோம்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையாவது அக்னிப் பரிட்சை என்னும் வேள்வி விதியைச் செய்துவந்தால் (அட்டவணை 28-ஆம் பக்கம் காண்க...) அக்னிபகவான் சாட்சியாக இருந்து நமக்கு ஒளி பொருந்திய வாழ்க்கையைத் தர ஆதரவாக நிற்பார்.

table

 

செல்: 95511 84326

 

bala130925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe