Advertisment

அருங்கலைகளில்  தேர்ந்திட வைக்கும் அகத்தீஸ்வரர் மோ கணேஷ்

இயல், இசை, நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தம் பெற்ற ஊரே புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும்

siva

 

"தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர் 
பன்னூர் புக்குறையும் பரமர்க்கு இடம் பாய்நலம்  
என்னூர் எங்கள்பிரான் உறையும் திருத்தேவனூர் 
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டு புரிசையே.''

Advertisment

இயல், இசை, நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தம் பெற்ற ஊரே புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும் கலைஞர்கள் அதிகமாக உள்ள இந்த ஊரை சுந்தரரும் மறக்காமல் நினைவில் வைத்து தனது திருநாட்டுத் தொகையில் வைப்புத் தலமாகப் பாடிப் பரவியுள்ளார்.

கல் தூணிலோ அல்லது கற்சுவரிலோ சிற்பங்கள் வடிப்பதைப் புடைப்புச் சிற்பம் என்பர். 

அவ்வாறு புடைக்கும் வழக்கம் பல்லவர் களிட மிருந்து மற்ற மன்னர் பரம்பரையினருக்கு வந்தது. பாண்டியர் கள், விஜயநகர மன்னர்கள், ஹொய்சாளர் கள், நாயக்க மன்னர்கள் என பலரும் இக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்றபோதி லும், சோழர்களின் பாணியே தனிதான். இந்த புடைப்புக் கலையில் புராண நிகழ்வுகளை தத்

 

"தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர் 
பன்னூர் புக்குறையும் பரமர்க்கு இடம் பாய்நலம்  
என்னூர் எங்கள்பிரான் உறையும் திருத்தேவனூர் 
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டு புரிசையே.''

Advertisment

இயல், இசை, நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தம் பெற்ற ஊரே புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும் கலைஞர்கள் அதிகமாக உள்ள இந்த ஊரை சுந்தரரும் மறக்காமல் நினைவில் வைத்து தனது திருநாட்டுத் தொகையில் வைப்புத் தலமாகப் பாடிப் பரவியுள்ளார்.

கல் தூணிலோ அல்லது கற்சுவரிலோ சிற்பங்கள் வடிப்பதைப் புடைப்புச் சிற்பம் என்பர். 

அவ்வாறு புடைக்கும் வழக்கம் பல்லவர் களிட மிருந்து மற்ற மன்னர் பரம்பரையினருக்கு வந்தது. பாண்டியர் கள், விஜயநகர மன்னர்கள், ஹொய்சாளர் கள், நாயக்க மன்னர்கள் என பலரும் இக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்றபோதி லும், சோழர்களின் பாணியே தனிதான். இந்த புடைப்புக் கலையில் புராண நிகழ்வுகளை தத்துரூபமாக வடிக்கும் சோழர்கால கலைஞர்கள் இங்கே (புரிசை) அறுபத்து மூவரது வரலாற்றினை மகாமண்டபத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் எண்ணிக்கையில் அடங்காதவண்ணம் நூற்றுக்கணக்கில் புடைத்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தின் அனேக சிவாலயங்களில் காணக்கிடைக்காத அதியற்புதமான இந்தப் புடைப்புச் சிற்பங்களைக் காணக் காண ஆச்சர்யம் மேலிடுகின்றது. இருப்பினும் காலத்தால் சிதைவுகள் காணப்படுகின்றது.

சுவர்களில் கல்வெட்டுச் செய்திகளுக்கு பதிலாக இந்த புடைப்புச் சிற்பங்களே அதிகம் காணப் படுகின்றன.

பிற்கால சோழர்களே இந்த அற்புத புடைப்புச் சிற்பங்களை படைத்தி ருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

சோழ மண்டலத்தின் வெண்குன்ற கூற்றத்திற்கு (கோட் டம்) உட்பட்டதாக இந்த புரிசை திகழ்ந் துள்ளது.
இத்தல சிவாலயத்தினை அகத்தியர் பூஜித்து வழிபட்டுள் ளார். அதற்குச் சான் றாக நந்திதேவருக்கு முன்னே சாளரத்தின் இடப்புறம் அகத்திய மகரிஷியின் புடைப்புச் சிற்பம் அழகுற வடிக்கப் பட்டுள்ளது.

சிறந்த மகாபாரத சொற்பொழிவாளரும், இலக்கிய அறிஞரு மாகவும் திகழ்ந்த பு.சு. முருகேச முதலியார் இவ்வூரைச் சேர்ந்தவர் ஆவார்.

முதலில் மேற்கு நோக்கிய மூன்று நிலைகள்கொண்ட சிறிய இராஜகோபுரம். படிகள் ஏறி உள்ளே செல்ல... நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம். சாளரத்தின் வாயிலாக சுவாமியை தரிசிக்கலாம்.

சாளரத்தின் பக்கச் சுவற்றில் அகத்திய மகரிஷி ஈசனை பூஜிக்கும் புடைப்புச் சிற்பம் தல வரலாற்றுக்கு சான்றாக உள்ளது.

இடப்புறம் தல கணபதி தனிச் சந்நிதி கொண்டுள்ளார். தென்முக வாயிலின் முன்பு முகமண்டபம் தூண்கள் கொண்டுள்ளது. 

உள்ளே மகாமண்டபம். இங்கே நடராஜர்- சிவகாமியுடன் ஏனைய உற்சவத் திருமேனிகளும் வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபச் சுவற்றின் உள்ளும், வெளியுமாக சிற்சிறு புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக வடிக்கப்பெற்றுள்ளன. 

அடுத்ததாக அந்த் ராளம், கருவறை. கருவறையுள் கருணை வடிவாய் அருட்காட்சியளிக் கின்றார் ஸ்ரீ அகத்தீஸ்வரர். மேற்கே திருமுகம் காட்டி அருள் புரியும் பெருமான் திருத்தாள் பணிந்து ஆலய வலம் வருகின்றோம்.

நந்திமண்டபத்தின் இடப்புறம் அம்பாளின் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையாக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நின்றவண்ணம் எழில் சிந்துகின்றாள். 

siva1

இறைவனும்-  இறைவியும் இங்கு எதிரெதிரே மாலை மாற்றும் கோலத்தில் வீற்றருளுவதால் திருமண வரமருளும் திருத் தலமாக திகழ்கின்றது.

அம்பாள் சன்னிதிக்கு பக்கத்தில் கந்தன் தனது துணைவியரோடு திருவருள் புரிகின்றார். ஆலய ஈசான பாகத்தில் பைரவர் அற்புதமாக காட்சி நல்குகின்றார். 

கிழக்கு பாகத் தில் நவகிரக சன்னிதி உள்ளது. அக்னி திசையில் தல விருட்சமான வில்வமரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. 

அருகே சமய குரவர்கள் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர்.

சிறிய ஆலயம் எனினும், சீருடன் திகழ்கின்றது.

ஆலயத்தின் இடப்பக்கத்தில் தல தீர்த்தமான அகத்திய தீர்த்தம் அற்புதமாக உள்ளது.

தினசரி இரண்டுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 7.00 மணி முதல் 10.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.

 பிரதி சோமவார பூஜை, பிரதோ ஷங்களோடு சிவராத்திரி, நவராத்திரி, சஷ்டி, ஆரூத்ரா, கார்த் திகை தீபம், குரு பூஜைகள் ஆகியன சிறப்புற நடத்தப்படு கின்றன.

பங்குனி உத்தி ரம் தொடங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசை யாக அனுஷ்டிக்கப் படுகின்றன.

கலைத்துறையில் சிறந்திடவும், கல்வியில் மந்தநிலை மாறிடவும், தள்ளிக்கொண்டே போகும் கல்யாணம் விரைவில் முடியவும் இங்கு சுவாமி- அம்பாளுக்கு சுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்ய சிறந்த பலனுண்டு என்பது பக்தர் களின் அனுபவ வாக்காகும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்திலுள்ள இந்த ஊர் செய்யாறு, வந்தவாசி பேருந்து சாலையில் பத்து கிலோமீட்டர் தொலை வில் மையமாக அமைந்துள்ளது.

 

OM010725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe