மகளின் காதலுக்கு மாற்று வழி கூறிய அகத்தியர்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

agathiyar

 


சென்னை அலுவலகத்திற்கு ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்'' என்றேன்.

ஐயா, "எங்கள் மகளுக்கு இருபத்தேழு வயதாகின்றது. அவளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்து, பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், எந்த இடமும் சரியாக அமையாமல் தடையாகிக்கொண்டே வருகின்றது. பெண் பார்த்து விட்டு செல்பவர்கள் மறுபடியும் எந்தப் பதிலும் சொல்வதில்லை. நாங்களும் பல ஜோதிடர்களைப் பார்த்து இதற்குக் காரணம் கேட்டோம். அவர்கள் ஏதேதோ தோஷங்களைக் கூறி பரிகாரங்களைக் கூறினார்கள். 

அவர்கள் கூறிய அனைத்து இடங்களுக்கும் சென்று, பரிகாரங்களைச் செய்தும் பலனில்லை. என் மகளின் திருமண தடைக்கு காரணத்தையும், தடைவிலகி திருமணம் நடக்க வழிகேட்டு அகத்தியரை நாடி வந்தோம்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இவர் மகளின் திருமணத்தடைக்கு இவர் கூறுவதுபோன்று கிரகமோ, செய்வினை, ஏவல், பில்லி, சூ

 


சென்னை அலுவலகத்திற்கு ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்'' என்றேன்.

ஐயா, "எங்கள் மகளுக்கு இருபத்தேழு வயதாகின்றது. அவளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்து, பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், எந்த இடமும் சரியாக அமையாமல் தடையாகிக்கொண்டே வருகின்றது. பெண் பார்த்து விட்டு செல்பவர்கள் மறுபடியும் எந்தப் பதிலும் சொல்வதில்லை. நாங்களும் பல ஜோதிடர்களைப் பார்த்து இதற்குக் காரணம் கேட்டோம். அவர்கள் ஏதேதோ தோஷங்களைக் கூறி பரிகாரங்களைக் கூறினார்கள். 

அவர்கள் கூறிய அனைத்து இடங்களுக்கும் சென்று, பரிகாரங்களைச் செய்தும் பலனில்லை. என் மகளின் திருமண தடைக்கு காரணத்தையும், தடைவிலகி திருமணம் நடக்க வழிகேட்டு அகத்தியரை நாடி வந்தோம்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இவர் மகளின் திருமணத்தடைக்கு இவர் கூறுவதுபோன்று கிரகமோ, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் காரணமில்லை. இவள் மகள்தான் காரணமே தவிர வேறு எதுவுமில்லை.

அகத்தியர் என் மகளே தன் திருமணத் தடைக்கு காரணமென்று கூறுகின்றாரே, அவள் ஏன்? எப்படி தடை செய்கின்றாள் என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை; நம்பவும் முடியவில்லை. மகளின் இந்த செயலுக்கு காரணத்தை அகத்தியர்தான் கூற வேண்டும் என்றார்.

மகளின் திருமணத்தடைக்கு காரணத்தைக் கூறுகின்றேன். இவன் தகப்பனின் உடன்பிறந்த தங்கை- அதாவது இவனின் அத்தையை தங்கள் உறவுப் பையன் ஒருவனுக்கு திருமணம் செய்ய இவன் குடும்பத்தினர் தீர்மானித்து இருந்தனர். ஆனால் அவள் அதே ஊரிலேயே ஒருவனை விரும்பி பழகிவந்தாள். இவளின் இந்த செயல் இவன் குடும்பத்தினருக்குத் தெரியாது. மகள் தாங்கள் தீர்மானிப்பவனை திருமணம் செய்துகொள்வாள் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் அவள் தான் விரும்பியவனை திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்று தெரிந்துதான் விரும்பியவனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போய் அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

இவன் அத்தையும் அவனும் திருமணத்திற்குப்பின் அந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஊரில் சென்று வசித்தார்கள். அன்றுமுதல் இவன் அத்தைக்கும் இவன் குடும்பத்திற்கும் உறவு தொடர்பு அறுந்தது. வீட்டைவிட்டு ஓடிப்போன அத்தைக்கு இரண்டு மகன்கள். அந்த மகன்களில் ஒருவனின் மகனுடன் அதாவது இவன் அத்தையின் பேரன் ஒருவனுடன் இவள் விரும்பி பழகி வருகிறாள். இவள் அவனையே திருமணம் செய்ய தீர்மானித்து இருக்கிறாள்.

அகத்தியர் கூறுவது ஆச்சரியாக உள்ளது. என் அத்தை வீட்டை விட்டு, எப்போது  ஓடிப்போனாளோ, அன்றுமுதல் அவளுடன் எந்த உறவும் தொடர்புமில்லை. பேச்சு வார்த்தையுமில்லை. என் மகள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதுமில்லை. அவர்களைப் பார்த்ததுமில்லை. ஆனால் அகத்தியர் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது என்றார்.

இவன் குடும்பத்தினர் தொடர்பு இல்லை. ஆனால் மகள் உறவு வைத்து இருக்கிறாள். இவனின் உறவுகள் வீட்டு விசேஷங்களுக்கு மகள் செல்லும்போது, அந்த குடும்பத்தினர் இவளிடம் பாசமாக பேசி பழகினார்கள். 

அந்தக் குடும்பத்தினரை சந்திக்கும் சூழ்நிலை அமைந்தது. அந்த வீட்டுப் பையன் இவளை நெருங்கினான். நல்லவன் போல் நடித்தான். இவள் எங்கு? எப்போது செல்கின்றாள் என்பதை இவளின் தோழிமூலம் அறிந்துகொண்டு, அவனும் எதேச்சையாக வருவதுபோல் வந்து சந்திப்பான். பருவ வயது கோளாறு, உறவு இருவருக்கும் பாசத்தை உண்டாக்கிவிட்டது. இவர்கள் பழகுவது அந்தப் பையன் வீட்டிற்குத் தெரியும், அவர்கள் ஆதரவு இவர்களுக்கு உண்டு.

மகளை யார் பெண் பார்க்க வந்தாலும் அந்தப் பையன் அவர்கள் வீட்டிற்குச் சென்று தங்கள் குடும்ப உறவு பற்றியும், இவர்கள் இருவரின் பழக்கம் பற்றியும் கூறிவிடுவான். சில பையன்களின் வீட்டிற்கு இவன் மகளே அந்தப் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தகவல் சொல்லிவிடுவாள். அதனால்தான் பெண் பார்த்து செல்பவர்கள் மறுபடியும் வருவதில்லை, எந்தத் தகவலும் கூறுவதில்லை. இப்போது புரிகின்றதா? இவன் மகள் திருமணத்திற்கு, மகளே தடையாக இருக்கின்றாள் என்று.

அகத்தியர் கூறியதைக்கேட்டு அந்த தம்பதியினர் அதிர்ந்துதான் போனார்கள். எங்கள் மகளே எங்கள் குடும்பத்திற்கு எதிராகச் செயல்படுகின்றாள் என்பதைத் தெரிந்துகொண்டோம். இந்தப் பிரச்சினையில் இருந்து என் மகளும், எங்கள் குடும்பமும் பாதிக்காத வழியை அகத்தியர்தான் கூறவேண்டும் என்றார்.

மகள் விரும்பும் உறவுப் பையன் நல்லவன் இல்லை. அவள் விருப்பம்போல் அவனைத் திருமணம் செய்தால், அவளுக்கு குடும்ப வாழ்க்கை நிலைக்காது. இவனின் அத்தை அவளின் விரும்பம்போல, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்ததால் அவளுக்கு சீர்வரிசை, சொத்து என எதையும் தரவில்லை. இப்போது இவன் மகளைத் திருமணம் செய்து சொத்துகளை அபகரிக்க திட்டம் போட்டுள்ளார்கள்.

இவன் மகள் அவனை மறந்து விலகவும், இவர்கள் சொல்லும் பையனை திருமணம் செய்துகொள்ளவும், நான் கூறுவதுபோல் செய்யுங்கள் என்று கூறியவர், சில வழிமுறைகளைக் கூறிவிட்டு அவளுக்கு கணவனாக வரப் போகின்றவனைப் பற்றிய விவரங்களை கூறிவிட்டு, ஓலையில் இருந்து மறைந்தார்.

கணவன்- மனைவி இருவரும் அகத்தியர் எங்கள் குடும்பத்திற்கு வரவிருந்த அவமானத்தை தடுத்து, என் மகள் நல்ல வாழ்க்கையை அடைய வழிகாட்டினார் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

கிரகங்களால் திருமணம் தடையாவ தில்லை. சிலரின் செயலாலும் விருப்பத் தாலும் திருமணம் தடையாகின்றது என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267

bala090825
இதையும் படியுங்கள்
Subscribe