Advertisment

கல்யாணத் தடைக்கு காரணம் கூறிய அகத்தியர்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

agathiyar

 

சுமார் 65 வயதுடைய ஒருவர், நாடியில் பலனறிய வந்திருந்தார்.  அவரை அமரவைத்து "என்ன விஷயமாகப் பலன், தெரிந்துகொள்ள வந்தீர்கள்'' என்றேன்.

Advertisment

"மூன்று வருடங்களுக்குமுன்பு, என் மகள் திருமணம் பற்றி தங்களிடம் நாடி படிக்கவந்தேன். ஜீவநாடி ஓலையைப் படித்து, நீங்களும், வம்ச பாவ- சாப நிகழ்வுகளையும், பலன்களையும், திருமணத்தடைக்கு காரணத்தைக் கூறி, சில பிரார்த்தனைகளையும் கூறினீர்கள். எல்லாவற்றையும் செய்தேன். ஆனால் அகத்தியர் கூறியதுபோன்று திருமணம் நடக்காமல் தடையாகிக்கொண்டே வருகின்றது. அதனால்தான் மறுபடியும் தங்களை நாடிவந்தேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர், எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.  

மகள் திருமண விதியையும், திருமணத் தடைக்கு காரணத்தையும், தடை நீங்க வழிமுறைகளையும், கணவனாக வரப் போகின்றவனைப் பற்றிய விவரங்களையும், எப்படி திருமணம் செய்யவேண்டும், திருமணத்திற்குப்பிறகு, நிம்மதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய வாழ்வியல் வழிமுறைகளையும், வம்சத்தில் உண்டான பாவ- சாப- பதிவுகள் நிவர்த்திய

 

சுமார் 65 வயதுடைய ஒருவர், நாடியில் பலனறிய வந்திருந்தார்.  அவரை அமரவைத்து "என்ன விஷயமாகப் பலன், தெரிந்துகொள்ள வந்தீர்கள்'' என்றேன்.

Advertisment

"மூன்று வருடங்களுக்குமுன்பு, என் மகள் திருமணம் பற்றி தங்களிடம் நாடி படிக்கவந்தேன். ஜீவநாடி ஓலையைப் படித்து, நீங்களும், வம்ச பாவ- சாப நிகழ்வுகளையும், பலன்களையும், திருமணத்தடைக்கு காரணத்தைக் கூறி, சில பிரார்த்தனைகளையும் கூறினீர்கள். எல்லாவற்றையும் செய்தேன். ஆனால் அகத்தியர் கூறியதுபோன்று திருமணம் நடக்காமல் தடையாகிக்கொண்டே வருகின்றது. அதனால்தான் மறுபடியும் தங்களை நாடிவந்தேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர், எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.  

மகள் திருமண விதியையும், திருமணத் தடைக்கு காரணத்தையும், தடை நீங்க வழிமுறைகளையும், கணவனாக வரப் போகின்றவனைப் பற்றிய விவரங்களையும், எப்படி திருமணம் செய்யவேண்டும், திருமணத்திற்குப்பிறகு, நிம்மதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய வாழ்வியல் வழிமுறைகளையும், வம்சத்தில் உண்டான பாவ- சாப- பதிவுகள் நிவர்த்தியாக பிரார்த்தனை முறைகளையும், மூன்று வருடங்களுக்குமுன்பே கூறினேன். ஆனால் அகத்தியன் கூறிய அனைத்தையும், முறையாகச் செய்யாமல், அகத்தியன் கூறியபடி மகளுக்கு திருமணம் நடக்கவில்லை என்று, என்மீது குற்றம் சுமத்துகின்றான்.

Advertisment

இவன் வம்ச முன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்துகளை, அனுபவித்து வாழ்ந்துவருகின்றான். இவன் சுயமாக எதுவும் சம்பாதிக்கவில்லை. ஆனால், எல்லாம் எனக்குத் தெரியும். தான் சொல்வதை, நினைப்பதைத்தான் செய்யவேண்டும் என்பான். பிறர் கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டான். வீட்டில் பெண்களை மதிக்கமாட்டான். ஆணவம், அகங்காரம், ஆனாதிக்கக் குணம் கொண்டவன்.

(இவன் மகளின் திருமணத்தடைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் இவன்தான். அடுத்து இவனின் ஜோதிட நம்பிக்கை இவைதான்.  பெண் கேட்டு மாப்பிள்ளைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.  ஆனால் இவன் தன் மனதில், தன் மகளுக்கு கணவனாக வரவேண்டியவன், மாப்பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்துள்ளான்.  இவன் எதிர் பார்ப்புப் படி இதுவரை மாப்பிள்ளை அமைய வில்லை).

(பெண் கேட்டு வருபவர்களிடம், தேவையில்லாத கேள்விகளைக்கேட்டு அவர்களே பெண் வேண்டாம் என்று கூறும்படி செய்துவிடுகின்றான்.  இவன் விருப்பத்திற்கு, இவனுக்கு பிடித்த மாப்பிள்ளை தேடிவருகின்றானே தவிர தன் மகள் விருப்பத்திற்கு, அவளுக்கு பிடித்தபடி மாப்பிள்ளை தேடவில்லை.  மகளின் திருமண விதி கணக்கு தெரியாமல், திருமணத்தடையை இவனே ஏற்படுத்தி வருகின்றான்.  இவன் எண்ணத்தை விடுத்து, தன் மகள் விருப்பத்திற்கு அவளுக்கு பிடித்தமான வரணைக்கேட்டு, அவள் கூறுபவனுக்கு இவன் திருமணம் செய்ய சம்மதித்தால், மகளின் திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும்.

இவன் மகளை, பெண் கேட்டு நிறைய வரன்கள் வருகின்றார்கள்.  இவனுக்கு மாப்பிள்ளை பிடிக்காமல் இவனே சிலவற்றை ஒதுக்கிவிடுகிறான். இன்னும் சிலர், பெண் பிடிக்கவில்லை என்று, மாப்பிள்ளை வீட்டாரே ஒதுக்கி சென்றுவிடுகின்றார்கள்.  இவன் ஜோதிடத்தின்மீது அதிக நம்பிக்கையுள்ளவன்.  பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் இரு குடும்பத்தினருக்கும் பிடித்து, பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்து ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்கச் சென்றால், அந்த ஜோதிடர்கள் இருவரின் ஜாதகங்களும் பொருந்தவில்லை. நட்சத்திரப் பொருத்தம் பத்துப் பொருத்தம் குறைவாக உள்ளது. முக்கியமான பொருத்தங்களான ரச்சு பொருத்தம், யோனி பொருத்தம், வசியப் பொருத்தம் இல்லை என்று ஏதாவது கூறி திருமணத்தை தடுத்து விடுகின்றார்கள்.  மகள் திருமணம் ஜோதிடம்மூலமும் தடையாகின்றது. ஜோதிடம் பார்த்து, பொருத்தம் இருந்தால்தான், திருமணம் செய்துவைப்பேன் என்ற பிடிவாதத்தை இவன் விட்டுவிட வேண்டும்.

பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்து, ஜோதிடம் பார்க்காமல் மாப்பிள்ளை நல்லவனா  என்றும், அவன் குடும்பத்தினர் நல்லவர்களா?  கௌரவமான குடும்பமா  என்பதை நன்கு விசாரித்து நல்லவர்கள் என்று அறிந்து, அந்த மாப்பிள்ளைக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கவேண்டும். 

இவன் மகள் ஜாதகத்தில் "கால சர்ப்ப தோஷம்' உள்ளது. அதனால் அதேபோன்று, தோஷமுள்ள மாப்பிள்ளைக்குத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளார்கள்.  அதனால் ராகு- கேது தோஷமுள்ள மாப்பிள்ளையாக தேடிவருகின்றான்.  உண்மையில் ராகு- கேது தோஷம் எந்த மனிதனின் வாழ்க்கையையும் பாதிக்காது என்பதே உண்மை.

இவன் மகளுக்கு உண்மையில் "கால சர்ப்ப தோஷம்' இல்லை. "கால சர்ப்ப யோகம்'  இவள் திருமணத்திற்குப்பின்பு, கணவனுக்கு நீண்ட ஆயுளையும், இல்லற வாழ்வில், பெருஞ்ச் செல்வத்திற்கு அதிபதியாகி, ஆஸ்தி, அந்தஸ்துடன் நல்ல குடும்பத் தலைவியாக வாழ்வாள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக் கேட்டீர்களா? இதைத்தான் மூன்று வருடத்திற்குமுன்பு கூறினார். இதை செய்யாமல் அகத்தியரை குற்றம் கூறுகின்றீர்கள்.  உங்கள் விருப்பம், ஜோதிட நம்பிக்கையை விடுத்து, மகளின் மனம்போல் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வையுங்கள் என்றேன்.

ஐந்து மாப்பிள்ளைகள் ஜாதகம் கொண்டு வந்துள்ளேன். இவர்கள் என் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றார்கள். என் திருப்திக்காக இதில் ஒரு நல்ல ஜாதகத்தைப் பார்த்துக் கூறுங்கள்.

 ஐந்து ஜாதகங்களையும் ஓலையில் பலன்கேட்டு, அதில் இரண்டு ஜாதகங்களை தேர்வுசெய்து, இந்த இரண்டு ஜாதகங்களில் உங்கள் மகள், எந்தப் பையனைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றாளோ அவனுக்கு திருமணம் செய்துகொடுங்கள். உங்கள் மகள் மண விருப்பமே திருமணத்திற்கு முக்கியம் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

செல்: 99441 13267

bala060925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe