னித குலம் நிகழ்த்தும் சாதனைகள் ஆயிரம் என்றாலும், ஜோதிடம் நிகழ்த்தும் அற்புதங்கள் கோடிக்கணக்கானவை அதன் வழியில் தாத்பரியமாக நம் தமிழர் மரபில் தத்து கொடுக்கும் நிகழ்வு இயல்பாகவே இருந்து வந்துள்ளது.

Advertisment

 வழக்கு மொழியில் தவிட்டுக்கு வாங்கிய குழந்தை என்பார்கள். இன்றைய சூழலில் கால சுழற்சியின் வேகத்தில் இவையனைத்தும் மறைந்து போயிற்று. 

Advertisment

அப்படி மறந்த மறைந்த நிகழ்வுகளால் மீண்டும் மனித வாழ்வில் எப்படி வெளிச்சம் பெறுவது என்றும் இதனால் பலனடைந்த ஜாதகத்தையும் காணலாம். 

தனிப்பட்ட ஜாதகத்தில் ஒரு குழந்தைக்கு நான்கு மற்றும் ஒன்பதாம் பாவங்களும் அதன் அதிபதிகளும், சூரியன், சந்திரன் என்கின்ற காரக கிரகங்களும், பலமிழப்பது அந்த தாய்- தந்தையின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை அளிப்ப தோடு, உயிர் சார்ந்த பயத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.

Advertisment

இதனை எதிர்கொள்ளும் ஆயுதம்தான் தத்து கொடுப்பது. இதில் குறிப்பாக குரு ஒரு சுற்று அதாவது- 12 வயதுக்குள் தத்து கொடுத்து வாங்குவது மிகச் சிறப்பு என்று கூறப் பட்டுள்ளது. 

பலமிழக்கும் தன்மை என்று கூறியதும் நீசம் மட்டுமே என்கின்ற எண்ணம் தேவை யில்லை. உள்ளார்ந்த விஷயங்களான அஸ்தங்கம், வர்க்க சக்கரங்களில் இதன் ஆய்வு, இதனுடன் சேர்த்து பாவ கிரகங்களின் இணைவு என்று தொடர்ந்து நீசத்தையும் கையாள வேண்டும்.

சரி; ஒரு தத்து கொடுத்து வாங்கிவிடுவதனால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப் போகின்றது என்கின்ற இன்றைய நாகரீக ஞானம் நம்மை கேள்வி கேட்கும். 

இதற்கு சில ஜாதகங்களின் ஆய்வை உங்களுக்கு சமர்ப்பிக்கின் றேன். 

27-6-2002-ல் பிறந்த பெண் ஜாதகர் மிதுன லக்னம் லக்னத்தில் சூரியன், செவ்வாய், குரு. 

இந்த இணைவானது மேலோட்ட மாக பார்க்கும்பொழுது புதன் வீட்டில் செவ்வாய் என்கின்ற கணக்கின்படி A+O+  போன்ற இரத்த பிரிவு அமைந்திருக்கவேண்டும். ஆனால் காம ராசியான மிதுனத்தில் சூரியனுடன் செவ்வாய் அஸ்தங்கமாகும் தன்மையானது இந்த ஜாதகருக்கு இ- வகை ரத்தத்தை அனுமதித்துள்ளது. 

இந்த ஜாதகருடன் இணைத்த கணவனின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாகி அமர்ந்துள்ளது. 

இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை யின் ஜாதகம். 

மிதுன லக்னம் லக்னத்தில் மாந்தி கடக ராசி ஆக இரண்டில் சந்திரன், ஆறில் கேது, ஏழில் செவ்வாய் சுக்கிரன் எட்டாம் இடத்தில், புதன் மற்றும் சனி ஒன்பதில், சூரியன் மற்றும் குரு இந்த கிரக அடைவுகளுடன் பிறந்த குழந்தைக்கு அடுத்தாற்படியாக ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. 

இது 14-12-2024 அன்று பிறந்து அன்றே இறந்துவிட்டது. 

அதற்கு அடுத்ததாக 4-11-2025 அன்று மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் உடல்நிலையும் சிறப்பாக இல்லாத காரணத்தினால் நமது கைக்கு கிட்டிய ஜாதகம் இது. 

முதல் குழந்தையின் ஜாதகத்தில் இளைய சகோதரத்தின் தன்மை என்ன என்பதை காணலாம். மூன்றாம் பாவக அதிபதி சூரியன் 9-ஆமிடத்தில் குருவுடன் அமர்ந்தது சிறப்புதான் என்றாலும், அவிட்டம் மூன்றாம் பாதத்தில் அமரும் சூரிய நவாம்சத்தில் நீசம் பெறுவது மறைமுகமாக தனக்கு அடுத்தாற்படியாக ஒரு கருவை இந்த ஜாதகம் வளரவிடாது. 

மேலும் செவ்வாயின் ஆய்வும் மிக முக்கியமானது. 

இந்த ஜாதகத்தில் செவ்வாய் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் அமர்வது இளைய சகோதரத்திற்கு பெரும் பாதிப்பை நிச்சயமாக அளிக்கும்.

எனவே, சனி தசை புதன் புக்தி செவ்வாயின் அந்தரத்தில் இந்த ஜாதகருக்கு இளைய சகோதரமான ஆண் குழந்தையை வளர விடாமல் செய்தது. 

இந்த குழந்தையை தத்து கொடுத்து வாங்கிய இரண்டு தினங்களில் பிறந்த குழந்தையின் உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் கண்டு இன்று அந்த குழந்தை சீரும் சிறப்பு மாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. 

அனேக ஜாதகங்கள் இதன் அடிப்படையில் தனது பலனை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கின்றது. சிம்ம லக்னம் செவ்வாய் நீசமாகி அஸ்தங்கமும் ஆகும் சூழலில் இருந்த ஒரு ஜாதகம் மேலும் விருச்சிக ராசி அங்கு சந்திரனும் நீசம். இந்த ஜாதகத்தை எவ்வாறு எளிதில் கடந்து செல்லமுடியும். 

நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதி நீசம் தாயார் குறிக்கும் காரகம் சந்திரனும் நீசம் இந்தக் குழந்தையின் தந்தை 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் 12-9-2024 அன்று மர்மமான முறையில் இறந்த சூழலில் இந்த ஜாதகம் என் கைவசம் கிட்டியது. 

ஆழ்ந்த கணிதம் தேவையில்லை என்றாலும் பார்க்கும்பொழுதே தாய்க்கும் தந்தைக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜாதகம் இது என்பது ஒவ்வொரு ஜாதக காரரும் மிக எளிதில் கணித்துவிட முடியும். இதுபோன்ற ஜாதகங்களை நிச்சயமாக தத்துகொடுத்து வாங்குவதன்மூலம் பெரும் பழியும், பேராபத்தும், நம்மைவிட்டு விலக வாய்ப்புகள் அதிகம். 

தத்து கொடுக்கும் முறை

பழமையான ஒரு சிவன் ஆலயத்தில் குழந்தையை தத்து கொடுத்து வாங்க வேண்டும். 

அந்த கோவிலில் நிச்சயமாக தாயார் சன்னதியும் இருக்க வேண்டும்.

 ஒரு படி தவிடு, அந்தக் குழந்தையின் வயதிற்கு ஏற்ற பச்சரிசி, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், ஊதுவத்தி, கற்பூரம் போன்றவையும் இதனுள் அடங்கி இருக்கவேண்டும். 

அந்தக் கோவிலின் அர்ச்சகர் இடம் இதை அனைத்தையும் கொடுத்து குழந்தையை தத்து கொடுத்து வாங்கி கொடுங்கள் என்று கூறினால் அவர்கள் சிறப்பாக செய்து கொடுப்பார்கள் .

எடுத்துக் காட்டாக மூலவர் ஆட்சீஸ்வரர் தாயார் இளங்கிணி அம்மன் என்று வைத்துக்கொள்வோம். 

குழந்தையின் தந்தை அருண், தாய் பிரவீனா என்று வைத்துக் கொள்வோம். 

அருண் மற்றும் பிரவீனா ஆகியோரின் குழந்தையான வர்ஷினியை ஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளி அம்மன் ஆகிய தம்பதிக்கு தத்தாக வழங்குகின்றேன் என்று குழந்தையின் கரத்தை அர்ச்சகர் இடம் பிடித்துக் கொடுக்கவேண்டும்.

பிறகு ஆட்சீஸ்வரர் இளங்கிளி அம்மன் ஆகிய தம்பதியின் குழந்தையை நாங்கள் எங்கள் குழந்தையாக வளர்த்து வருகின்றோம் என்று கூறி தவிடு மற்றும் பச்சரிசி ஆகியவற்றை அர்ச்சகர் இடம் ஒப்படைக்க வேண்டும். 

இதன்மூலம் குழந்தையின் ஜாதகத்தில் சில தோஷங்கள் அமையப்பெற்று இருந்தாலும் அவை யனைத்தையும் ஆளும் இறைவன் கைகொண்டு குழந்தையையும், குடும்பத்தையும் வளமாக வாழவைக்கும் சூழல் அமையும். 

செல்: 80563 79988