கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன் ஆவார். இவர் அந்த கன்னி ராசியிலேயே உச்சமடைவார் என்பது மிக விசேஷம். மேலும், இந்த புதன் உங்கள் கடக லக்னத்துக்கு 12-ஆம் அதிபதியும் ஆவார். எனவே வெளிநாட்டு ஒப்பந்தம் போன்ற இனங்களில் தைரியமாக இறங்கலாம். புதன் எனும் கிரகம் அறிவுகாரகர். இதனால் அறிவு தரும். செழிப்பு மிளிரும். புதன் நகைச்சுவையும், சாதுர்யமும் மிகக் கிரகம். எனவே இந்த பேச்சுத் திறமை உங்களின் நேர் மற்றும் உபரி வருமானத்துக்கு மிக உதவி செய்யும்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன்+சூரியன்
இவ்விணைவு சுபத்தன்மையோடு இருப்பின் அரசு வங்கியில் பணிபுரியலாம். வங்கியில் பணி புரிந்துகொண்டே, வரும் வாடிக்கையாளர்களிடம், நிரந்தர வைப்புத்தொகை வைக்க ஏற்பாடு செய்துவிடுவீர்கள். அரசு பள்ளி, அரசு கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க ஆவன செய்வீர்கள்.
அரசியல் பேச்சாளராகி, பெரிய பதவி வாங்கி விடுவீர்கள். அரசாங்கத்துக்கு சேரவேண்டிய சொத்துவரி போன்றவற்றை பல தடவை அலைந்து, வசூலித்துவிடுவீர்கள். அரசு அலுவலகங்களில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி, ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து, பணவரவு கணக்கு சரியாக உள்ளதா என அலசி ஆராய்வீர்கள். இவ்வகையில் சிலர், அப்படியிப்படி கணக்கை நேர்சீர் செய்து உபரி வருமானம் பார்த்துவிடுவர். இதேபோல் அரசு போக்குவரத்து துறையையும் ஆய்வுசெய்து. அதிக உபரி வருமானம் சேர்த்துவிடுவர். இவர்கள் பேசியும், சிலசமயம் மிரட்டியும், விரட்டி பிடித்தும் உபரி வருமானத் துக்கு வழி கண்டுவிடுவர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதனும் சந்திரனும்
சந்திரன் கடக லக்னத்தின் அதிபதி ஆவார். இந்த சந்திரனும், 3-ஆம் அதிபதி புதனும் சேரும்போது, அங்கு வேகமான கவிதை, பாடல் பொங்கி பிரவகிக்கும். இவர்களில் அனேகர் கதை, கவிதை, கவிஞர்களாக இருப்பர். சந்திரன் நீர் மற்றும் உணவுகாரகர். எனவே இவர்கள் வயல், தோட்டம், பண்ணைகள், தோப்புகள், மிகப்பெரிய எஸ்டேட்கள் இவற்றை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் ஆளாக பணிபுரிவர். இவர்களுக்கு ஏற்கெனவே நல்ல சாதுர்யமான பேச்சுத்திறமை இருப்பதால், இந்த தொழிலில் முதன்மையாளராக முன்னிருப்பர். இவர்களின் வேகமான சிந்தனை ஆற்றல் இவர்களை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு, சீசன் டிக்கெட் வாங்கி வைத்து பயணம் செல்லும் நிலை தரும். பெண்கள் நலன் சார்ந்து தனி பத்திரிகை தொடங்குவர். இவர்கள் ஜோதிடராக இருப்பின், ஒரே இடத்தில் அமர்ந்து ஜோதிடம் சொல்ல மாட்டார்கள். இடம்விட்டு இடம் மாறி நிறைய இடங்களில் ஜோதி டம் கூறி பணப்பெருக்கம் காண்பர். இவர்கள் அரிசி, மீன், பூ, பழங்கள் என எதை வியாபாரம் செய்தாலும் அதில் கண்டிப்பாக வெளியூர், வெளிநாடு சம்பந்தம் ஏற்படுத்தி நல்ல வருமானம் தேற்றிவிடுவர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதனும்+செவ்வாயும்
இவ்விணைவு, சுபத் தன்மையுடன் இருந்தால், கண்டிப்பாக இவர்கள் விளையாட்டுதுறை சார்ந்த தொழில்களில் ஒப்பந்தம் எடுப்பர். சிலர் விளையாட்டு அணிகளை குத்தகைக்கு எடுத்து நல்ல வருமானம் பார்த்துவிடுவர். சிலருக்கு, சினிமா, டி.வி போன்ற கலைத்துறையில், செட்டிங் போடும் ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு பத்திரம் வாங்கிவிற்கும் ஏஜெண்டாக இருப்பர். மல்யுத்தம் போன்ற ஆவேச போட்டிகளை நடத்தும் ஒப்பந்தம் பெறுவர். இவர்களே, தன்னிச்சையாக வீரமான சாகஸமான செயல்களை செய்வார்கள். குழந்தைகளின் திறமையை வெளிக் கொணரும் நிகழ்ச்சிகளில் பொறுப்பாளராக இருப்பர். மற்றும் பள்ளி குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஒப்பந்தம் பெறுவர். சினிமா துறையில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் யூனியன் சார்ந்த ஒப்பந்தம் பெறுவர். விவசாய நிலம், தோட்டம் இவற்றின் செழுமைக்கு அறிவுரை கூறும் பொறுப்பு வகிப்பர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதனும்+குருவும்
இந்த இணைவு சுபத்தன்மை பெற்றால் பல்கலைக்கழகங்களில், பணியாற்ற ஆட்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருப்பர். அறநிலையத்துறை சார்ந்த வழக்கு களை கையாளும் ஒப்பந்தம் பெறுவர். உயர் அந்தஸ்த்திலுள்ள மனிதர்களின் உடல்நலம் பேணும் வகையில் மருத்துவ யோசனை, யோகா, உடற்பயிற்சி என இவை சார்ந்து நிறுவனம் நடத்துவர். இதனை அடிப்படையாகக்கொண்டு, அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வர். அரசியல் தலைவர்கள். பெரிய மத போதகர்கள், வங்கிகள் இவற்றின் செய்தி தொடர்பாளராக பணியாற்றுவர். கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடுகளிலிருந்து வாடகை வசூலிக்கும் குத்தகை பெறுவர். மிகப்பெரும் தொகையை கடன் வாங்கிக்கொடுக்கும் ஏஜெண்டாக இருப்பர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன்+சுக்கிரன்
இந்த இணைவு சுபத்தன்மை பெற்றிருந்தால், அனேகமாக விடுதிகள், திரையரங்கம், பெரிய அழகான வீடுகள், வாகன டீலர்கள், மாளிகைகள் கட்டித்தரும் ரியல் எஸ்டேட் சம்பந்தம், பெரிய பண்ணை வீடுகள், மிகப்பெரிய எஸ்டேட்கள் என இதுபோன்று பெரிய பெத்த இனங்களின் சொந்தக்காரராக இருப்பர். அட சொந்தமாக இல்லாவிட்டாலும், குத்தகை, ஒப்பந்தமாக எடுத்து அனுபவிப்பர். அரசியலில் விரைவில் வெற்றிபெற, தேவையான யோசனைகள் வழங்கும் ஆலோசகராக இருப்பர்.
அரசியல் கூட்டத்துக்கு, பெண்கள் அதிக அளவில் அழைத்து வரும் ஏஜெண்டாக பணிபுரிவர். பெண்களுக்கான அழகு கலை வகுப்புகள் எடுப்பர். நகை கடையில், வெள்ளி பொருட்களை ஆபரணங்களை மொத்தமாக செய்து கொடுக்கும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வர். மது பானங்களுடன்கூடிய பெரிய விருந்து நடத்தும் பொறுப்பாளராக இருப்பர். சினிமா ஷுட்டிங் சம்பந்த, வெளிநாட்டு படப்பிடிப்பு ஏற்பாடு செய்யும் ஒப்பந்தகாரராக இருப்பர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன்+சனி
இந்த இணைவு சுபமாக இருந்தால் திருமணமான தம்பதியரின் சண்டையை தீர்த்துவைக்க முயலும் கவுன்சிலிங் செய்வராக இருப்பார். விவாகரத்து பெற்றுத்தரும் வக்கீலாக இருப்பர். தோல் சம்பந்த பொருட்களை, ஏற்றுமதி செய்பவர்களின் ஏஜெண்ட்டாக பணிபுரிவார். கொலை, திருட்டு வழக்குகளில் துப்பு துலக்க உதவும் உளவாளியாக யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். பழைய இரும்பு பொருட்களின் விற்பனை ஒப்பந்தம் பெறுவார். மரணம் சம்பந்த சர்டிபிகேட் வழங்கும் இடத்தில் வேலை செய்வார். முடிவெட்டும் கடைகளில், முடி சேகரிப்பாளராகவும், முடிகளை ஏற்றுமதி செய்யும் நபராகவும் இருப்பார். ஆக- இந்த அமைப்பு பழைய பொருட்களை, ஏற்றுமதி- இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் செய்ய வைத்து உபரி வருமானத்துக்கு வழிவகுக்கும்.
கடக லக்ன புதன்+ராகு
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன், ராகுவுடன் இணைந்து சுபமாக இருப்பின், புத்தக பதிப்பகங்கள், புத்தக வெளியீடுகளை உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் நடத்துவர். தாய் நாட்டில் இருந்துகொண்டே, வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு, பாட பயிற்சி, மொழி பயிற்சி என இவற்றை கற்று கொடுத்து உபரி பணம் சம்பாதிப்பர். உள்நாட்டிலும், கணினி, கைபேசிமூலம் பாடம் நடத்துவர். வாகனம் ஓட்ட கற்றுத்தரும் பயிற்சியாளராக பணிபுரிவர். பத்திரிகையில் கிசுகிசு எழுதுபவராக இருப்பார்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி புதன்+கேது
இவ்விணைவு, சுபத்தன்மையுடன் இருப்பின் வெளிநாட்டு பயணிகள், சுற்றுலா வருபவர்களின் வழிகாட்டியாக பணிபுரிவார். சிலர் இதனை முழு நேர தொழில் அல்லது பகுதி நேர தொழிலாளாக அமைத்துக்கொள்வர். காற்றாலைகளில் பரிசோதிக்கும் அதிகாரியாக வேலை செய்வர். முதியவர்களை கவனித்துக்கொள்ளும் வேலை செய்வர். முதியவர்களின் ஞாபக மறதிக்கு மருந்து கொடுப்பர். குழந்தைகளின் சைக்கிள் டீலராக இருப்பர். சிலர் பலூன் சம்பந்த பணி மற்றும் பாரசூட் வேலை செய்வர். சிலர் பட்டம் விடும் திருவிழாவை நடத்தும் பொறுப்பாளராக இருப்பர்.
கடக லக்ன 3-ஆம் அதிபதி உச்சம் பெற்றால் இவர்கள் முடிவுகள் தீர்க்கமாக, ஸ்திரமாக இருக்கும். மிக உறுதியானவர்கள். வெளிபார்வைக்கு சற்று விளையாட்டுத் தனமாக தெரிந்தாலும், செயல்களில் மனச்சார்பு, மனத்திண்மை உடையவர்கள். ஒரு தடவை ஒரு முடிவு எடுத்துவிட்டால், இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். வியாபார நிபுணர்களாக இருப்பர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/kadagam-2026-01-28-15-53-18.jpg)