"வெற்றி விநாயகர் பாடல்கள் கேட்டால் இனி எல்லாம் வெற்றிதான்' என்பதற்கேற்ப முழு முதற் கடவுள் விநாயகர் பாடலை தனது அபாரமான குரல் வளத்தால் பாடி அசத்தும் சகோதரி...
விநாயகர் பாடல்கள் மட்டுமல்ல. ஹனுமன் பாடல்கள் உட்பட பல்வேறு பக்தி பாடல்களையும் பாடி பக்தர்கüன் அசத்தலான வரவேற்பையும் பெற்று வருபவர் பல்துறை வித்தகரான டாக்டர். திருமதி மேனகா நரேஷ்சென்னையில் அவர் உறவினரின் மடிப்பாக்கம் இல்லத்தில் சந்தித்து பேசினோம். அப்போதுதான் அவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வாழ்ந்துவரும் தமிழ்ப் பெண்மணி என்பதை அறிந்தோம்.
திருமதி மேனகா நரேஷ் தனது சாதனைகளை "ஓம் சரவணபவ' வாசகர்கüடம் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்.
"சிறுவயதுமுதல் தினமும் காலையில் எழுந்தவுட

"சிறுவயதுமுதல் தினமும் காலையில் எழுந்தவுடன் எங்கள் குலதெய்வம் மயிலம் முருகனுக்கும் மற்றும் எனது இஷ்ட தெய்வமான சீரடி சாய்பாபாவுக்கும் மற்ற அனைத்து தெய்வ சக்திகளுக்கும் கைகூப்பி நன்றி கூறுவது என் வழக்கம். என் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளுக்கும் தெய்வ சக்தியே காரணம் என மனதார நம்புகிறேன். அதுபோல் உறங்கச் செல்லும்முன்பும் விடியும் அடுத்த நாள் வெற்றிகரமாக அமைய பிரார்த்தனையும் செய்வேன்.
இயன்முறை மருத்துவர் எனும் பிசியோதெரபிஸ்ட் டாக்டராக, பாடகராக, எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவு பேச்சாளர், க்ரோச்செட் கலைஞர், ஆசிரியர், இதழாளர் என பன்முக திறமை களோடு நான் ஜொலிக்க மயிலம் முருகப் பெருமான் பேரருள்தான் காரணம் என்பதை முழுமையாக அறிந்திருக்கிறேன்..
சீரடி சாய்பாபா பக்தை என்பதால் என் ஒரே மகளுக்கு "சாயிசஞ்சனா நரேஷ்' என்று பெயர் சூட்டி உள்ளேன். "சாயி குருகுலம்' என்ற இசைப்பள்ளியை அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2018-ஆம் ஆண்டில் துவங்கி பல மாணவ- மாணவிகளுக்கு கர்நாடக இசையை கற்பித்து வருகிறேன். குறிப்பாக தெய்வ பக்தியை கர்நாடக இசைமூலம் பரவச் செய்துவருகிறேன்.
பிசியோதெரபியில் இளங்கலை பட்டம், உளவியலில் முதுகலை பட்டம், மாண்டிசேரி கல்வியில் அட்வான்ஸ்டு டிப்ளமோ முடித்துள்ளேன். தற்போது கர்நாடக இசையில் எம்.ஏ படிப்பை தொடர்கிறேன்.
"க்ரோசெட்' எனப்படும் பின்னல் கலையில் 2019, 2024, 2025 ஆண்டுகளில் க்ரோசெட் திட்டங்களுக்கு நான் செய்த பங்களிப்புகளுக்காக மூன்று கின்னஸ் உலகசாதனை சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.
அமெரிக்காவில் "ப்ளைன்ஸ்போரோ' எனும் தமிழ்ப் பள்ளியில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினேன். இந்தப்பள்ளி 2022 ஆண்டு நடத்திய திருக்குறள் முற்றோத லில் 1,330 குறள்களையும் வாசித்த பெருமை பெற்றேன்.
தஞ்சாவூர் ஓவியம், பட்டசித்ரா, கோண்ட், மதுபனி, வார்- போன்ற பாரம்பரிய இந்திய ஓவியங்கள் வரைவதில் பயிற்சி பெற்றுள்ளேன்.
என் குடும்பமே தெய்வ அருளால் புகழ் பெற்றது. 2017 ஆண்டில் இந்தியா ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவி இஸ்ரோ சாதனை படைத்தபோது என் தந்தை சுரேந்திரன் அந்த ராக்கெட்டிற்கான எரிபொருள் கலன் வடிவமைப்பு குழு தலைவராக திகழ்ந்தவர்.
என் சகோதரர் ஜெயசந்திரன் பரத நாட்டியத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்று "ஆட்டம்' எனும் பரத நாட்டிய கலையை பயில்விக்கும் கருவியை உருவாக்கி காப்புரிமை பெற்ற "முதல் இந்தியர்' என்ற முத்திரை பதித்தவர். அம்மா நாகராஜி என்னை ஊக்குவித்து சாதனை புரியவைக்கிறார்.
என் கணவர் நரேஷ்குமார் ஐ.டி துறையில் பணிபுரியும் அபார திறமைசாலி. எங்கள் ஒரே மகள் சாயிசஞ்சனா படித்துவருகிறார். பல்கலை வித்தகராகவும் திகழ்கிறார்.
பல்வேறு கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும் நான், மதுரையில் இருந்து வெüவரும் "சக்தி' இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறேன்.
இதுபோல் இன்னும் ஏராளமான நற்பணிகளில் அயராமல் செயலாற்றி வருகிறேன். அதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளேன்.
நம்மை வியக்கவைத்த டாக்டர். மேனகா நரேஷ் மென்மேலும் பல வெற்றி சிகரங் களை தொட வாழ்த்தி விடைபெற்றோம்.
சகோதரி டாக்டர். மேனகா நரேஷ் அவர் களை பாராட்ட, வாழ்த்த தொடர்பு எண்: +17326661743 (மநஆ)
-பேட்டி, படங்கள்: எஸ்.ரெங்கனாதன்