Advertisment

இறைவன் அருளால் பெற்ற சாதனைகள்!

god


"அவனின்றி ஓர் அணுவும் அசையாது. தெய்வ அருள் பாதுகாப்பு இல்லை என்றால் எந்த மனிதனும் ஒரு நொடிகூட பூமியில் உயிரோடு வாழவே முடியாது. பக்திதான் மனிதனுக்கு சக்தி. கடவுள் நம்பிக்கை மட்டுமே நம்மை கைவிடாது.

Advertisment

சத்தியம், ஒழுக்கம், நேர்மை, தர்ம சிந்தனை, தீய பழக்கங்கள் இல்லாமை, நியாயம், மனித நேயம் இவை மட்டுமே மனிதனுக்கு பாதுகாப்பு கவசங்களாக இருக்கும்.

Advertisment

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இவை மூன்றும் உண்மையான ஆழ்ந்த தீவிரமான தெய்வ பக்தியால் மட்டுமே எவராலும் நிலையாக பெற்று நிறைவான, மகிழ்வான, குறையில்லாத வாழ்க்கை வாழ முடியும்.

பக்தி வழிபாடுகளால்தான் முப்பது வருடத்திற்கும் மேலாக முன்னேற்


"அவனின்றி ஓர் அணுவும் அசையாது. தெய்வ அருள் பாதுகாப்பு இல்லை என்றால் எந்த மனிதனும் ஒரு நொடிகூட பூமியில் உயிரோடு வாழவே முடியாது. பக்திதான் மனிதனுக்கு சக்தி. கடவுள் நம்பிக்கை மட்டுமே நம்மை கைவிடாது.

Advertisment

சத்தியம், ஒழுக்கம், நேர்மை, தர்ம சிந்தனை, தீய பழக்கங்கள் இல்லாமை, நியாயம், மனித நேயம் இவை மட்டுமே மனிதனுக்கு பாதுகாப்பு கவசங்களாக இருக்கும்.

Advertisment

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இவை மூன்றும் உண்மையான ஆழ்ந்த தீவிரமான தெய்வ பக்தியால் மட்டுமே எவராலும் நிலையாக பெற்று நிறைவான, மகிழ்வான, குறையில்லாத வாழ்க்கை வாழ முடியும்.

பக்தி வழிபாடுகளால்தான் முப்பது வருடத்திற்கும் மேலாக முன்னேற்றப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார் பாலாஜி அண்ட் அசோசியேட்ஸ் மேனேஜிங் டைரக்டர் உழ். எல்.பாலாஜி 29 வயதிலேயே நான் "பேங்கிங் பினான்சியல் இன்ஸ்ட் டியூசன்" என்ற டிவிஎஸ்சின் உபாசனா பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்னையை தவிர மற்ற ஊர்களுக்கு வால்யுவராக இருந்த பெருமை பெற்றவர்.

இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டில் கால் பதிந்து இந்தியா முழுக்க வால்யுவராக காஸ்ட் ஆப் கன்ஸ்ட்ரட்சன், கேப்பிடல் கெயின் இவற்றை இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செய்துவருகிறோம்.

முப்பதிற்கும் மேற்பட்ட எனது குழுவினருடன் வெற்றிகரமாக செய்துவருவதற்கு மாமதுரை அன்னை மீனாட்சி அருளும், புனேயில் இருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்மார்த்தாண்ட பைரவர் அருளும், இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையான் அருளும், காவல் தெய்வமான புன்னை நல்லூர் மாரியம்மன் அருளும், கரூர் அருகிலுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அருளும் முக்கிய காரணங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊரிலுள்ள கோவிலுக்கு சென்று காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை வழிபட்டுவருவது எனது பலவருட பக்தி பழக்கமாகும்.

காலபைரவர்மீது அதீத பக்தி எனக்கு உண்டு. நம் எந்த பணிகளுக்கும் காலத்தை நிர்ணயிக்கும் பைரவர்தான் காலபைரவர். வாரணாசி காசி யிலுள்ள காலபைரவருக்கு இரவு 12.00 மணிமுதல் 2.00 மணிவரை உடுக்கு அடித்து அபிஷேகம் நடத்தியதில்  பாக்கியம்.

என் சாதனைகளுக்கு என் தாய்- தந்தையர்  வளர்ப்பும், வழிகாட்டுதலும், ஆசியும், வாழ்த்தும்தான் இன்றும் உறுதுணையாய் இருக்கிறது.

வேல்யூவேஷன் துறையில் போட்டிகள் அதிகம். அதில் நான் உலகப் புகழ்பெற்று முதலிடம் பெற்றுத்திகழ பெற்றோர் மற்றும் என் துணைவியார் காரணமாய் இருக்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள ஆயிரம் திருக் கோவில்கள்மேல் சென்று வழிபட்டு வந்துள்ளேன். 

1976-ஆம் ஆண்டில் திருத்துறைபூண்டியிலுள்ள சிவன் கோவில் ஸ்படிகலிங் கம் ஒளி என்மீது பட்டதால் சிவபக்தன் ஆகிவிட்டேன்.

தெய்வ அருளோடு எனது பணிகள் சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள் பலவற்றில் சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றிவருகிறேன்.

குறிப்பாக கல்லூரிகள் சென்று மாணவர்கள்- மாணவிகள் சிறந்த பொறியாளர்கள், வால்யுவர் ஆகவும் வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு எப்படி தடைகளை மீறி வெற்றி காணவேண்டும் என்ற "மோட்டிவேஷன் ஸ்பீச்' தந்து வருகிறேன்.

நூல்கள் வாசிப்பது எனக்கு பிடித்த விஷயம். இன்றும் பல புதிய நூல்கள் வந்ததும் என்னை "அப்டேட்' செய்து கொள்ள படித்துக் கொண்டே இருக்கிறேன்.

சோதனைகள் வரும்போது நானும் மனைவியும்  குலதெய்வம் கோவில் சென்று வழிபட்டாலே போதும்; சோதனைகள் எல்லாம் சாதனைகளாக மாறிவிடும் என ஆன்மிகத்துக்கு நம்பிக்கை ஒü ஏற்றினார் பாலாஜி.

டாக்டர். எல். பாலாஜி அவர்களின் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

தொலைபேசி: 98428 68351

பேட்டி, படங்கள்:
விஜயா கண்ணன்

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe