சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பாக, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி அவர்களின் 91-ஆவது பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்க சிந்தனையாளர் திருச்சி செல்வேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1 லட்ச ரூபாய் விருதுத்தொகை யும் வழங்கப்பட்டது. இவ்விழாவின் தொடக்கமாக மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களை சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளையின் நிறுவனரான நக்கீரன் ஆசிரியர் வரவேற்றார். சின்ன குத்தூசி அறக்கட்டளை செயலாளர் கௌரா ராஜசேகர் முன்னிலை வகிக்க, அறங்காவலர் அருள்செல்வன் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளையின் தலைவரும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளருமான க.திருநாவுக்கரசு தனது தலைமையுரையில், "சின்ன குத்தூசி அவர்களுடைய அறை ஒரு மாநாடுபோல் இருக்கும். அங்கே கருத்தரங்கம் நடக்கும், விவாதங்கள் நடக்கும், சண்டை நடக்கும், எல்லாவற்றையும் மிக அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருப்பார். 11 மணி வரை சின்ன குத்தூசியின் பேச்சுக்கடை திறந்திருக்கும். கோபண்ணா, பாலகிருஷ்ணன், ஆவுடையப்பன், ஜீவசுந்தரி, அப்பண்ணசாமி, எஸ்.பன்னீர்செல்வம், கல்கி ப்ரியன், ஹிண்டு கோலப்பன் உள்ளிட்ட பல தோழர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். இப்படி அருமையான கருத்தரங்கை நாள்தோறும் நடத்திக்கொண்டிருந்தவர் சின்ன குத்தூசி. அவர் மத்தியஸ்தராகவும் விளங்கியிருக்கிறார்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை கலைஞரிடமிருந்து வெளியேறவேண்டிய கட்டம் எனக்கு வந்தது. அடுத்த நாள் என்னைப் பார்க்கிறபோது, என்ன நடந்ததென்று கேட்டார். கலைஞர் என்னிடம் பராசக்தி படம் குறித்து கேட்டபோது, 'நல்லா எழுதியிருக்கீங்க. ஆனா அதுல ஒரு வருத்தம் என்னன்
சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பாக, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி அவர்களின் 91-ஆவது பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்க சிந்தனையாளர் திருச்சி செல்வேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1 லட்ச ரூபாய் விருதுத்தொகை யும் வழங்கப்பட்டது. இவ்விழாவின் தொடக்கமாக மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களை சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளையின் நிறுவனரான நக்கீரன் ஆசிரியர் வரவேற்றார். சின்ன குத்தூசி அறக்கட்டளை செயலாளர் கௌரா ராஜசேகர் முன்னிலை வகிக்க, அறங்காவலர் அருள்செல்வன் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளையின் தலைவரும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளருமான க.திருநாவுக்கரசு தனது தலைமையுரையில், "சின்ன குத்தூசி அவர்களுடைய அறை ஒரு மாநாடுபோல் இருக்கும். அங்கே கருத்தரங்கம் நடக்கும், விவாதங்கள் நடக்கும், சண்டை நடக்கும், எல்லாவற்றையும் மிக அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருப்பார். 11 மணி வரை சின்ன குத்தூசியின் பேச்சுக்கடை திறந்திருக்கும். கோபண்ணா, பாலகிருஷ்ணன், ஆவுடையப்பன், ஜீவசுந்தரி, அப்பண்ணசாமி, எஸ்.பன்னீர்செல்வம், கல்கி ப்ரியன், ஹிண்டு கோலப்பன் உள்ளிட்ட பல தோழர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். இப்படி அருமையான கருத்தரங்கை நாள்தோறும் நடத்திக்கொண்டிருந்தவர் சின்ன குத்தூசி. அவர் மத்தியஸ்தராகவும் விளங்கியிருக்கிறார்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை கலைஞரிடமிருந்து வெளியேறவேண்டிய கட்டம் எனக்கு வந்தது. அடுத்த நாள் என்னைப் பார்க்கிறபோது, என்ன நடந்ததென்று கேட்டார். கலைஞர் என்னிடம் பராசக்தி படம் குறித்து கேட்டபோது, 'நல்லா எழுதியிருக்கீங்க. ஆனா அதுல ஒரு வருத்தம் என்னன்னா, டைட்டில் கார்டுல போடும்போது மூலக்கதை எம்.எஸ்.பாலசுந்தரம்னு போட்டிருக்காங்க. எம்.எஸ்.பாலசுந்தரம்னா யாருக்கு தெரியும்? பாவலர் பாலசுந்தரம்னு போடக்கூடாதா? இதல்லாம் நீங்க இருந்து சொல்லியிருக்கணும்'னு சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டார். ஒரு வாரம் என்னைக் கூப்பிடவும் இல்ல, பேசவும் இல்லன்னு சின்ன குத்தூசியிடம் நடந்ததை சொன்னேன். 'கலைஞரிடம் நீங்க ஏன் அதுமாதிரி சொன்னீங்க? வேற மாதிரி சொல்லியிருக்கணும்'னார். அப்புறம் கலைஞர் சமாதானமாயிட்டார். இவரு என்ன போய் சொன்னாரு, எப்டி அவர் பேசத்தொடங்குனாருன்னு நமக்கு தெரியாது. நம்மகிட்டயும் அதப்பத்தி சொல்லமாட்டார். அதுதான் அவரோட சிறப்பு.
இரண்டாவது, நான் எழுதிய கட்டுரை காரணமாக, முரசொலியிலிருந்து நானே வெளியேறிட்டேன். அப்படி வெளியேறியபோது எனக்கு எதாவது பண்ணணும்னு நினைச்சார் சின்னகுத்தூசி. அதுல பாலகிருஷ்ணன், நக்கீரன் கோபால் அவங்களுக்கெல்லாம் பங்குண்டு. எனக்கு பத்திரிகையாளருக்கான பென்சன் வாங்கித்தரணும்னு சின்னகுத்தூசிக்கு ஆசை. இதுபற்றி கோபாலை கேட்டிருப்பாங்க போலிருக்கு. ஒருநாள் நக்கீரன் கோபால் தொலைபேசியில் என்னிடம், 'அண்ணே, கொஞ்சம் நம்ம ஆபீசுக்கு வந்து போங்களேன்'ன்னு கூப்பிட்டார். ஆபீசுக்கு போனேன். போனதும் ஒரு லெட்டர் ஹெட்ல நாலு வரி எழுதியிருந்துச்சு. இதுல ஒரு கையெழுத்துப் போடுங்கன்னார். பார்த்தால், பென்சன் நான் கேட்கறது சம்பந்தமா முதல்வருக்கு ஒரு கோரிக்கை. சரின்னு கையெழுத்து போட்டுட்டேன். அதைக் கொண்டுபோய் கலைஞர்ட்ட சின்ன குத்தூசி குடுக்க, கலைஞர் கையெழுத்து போட்டுட்டார். இப்ப நான் பென்சன் வாங்கிட்டு இருக்கேன். கலைஞர் கையெழுத்து போட்டப்ப 'உங்க நண்பர் என்ன நினைக்கிறாரு? எதாவது என்னைப்பத்தி சொன்னாரா?'ன்னு கேட்டாராம். ஒண்ணும் சொல்லலைங்கற மாதிரி தலையாட்டுனாராம். 'ஓஹோ, இதுக்குக்கூட ஒண்ணும் பேசமாட்டாரா?' அப்டீன்னு சொன்னாராம்.
இதைப்போல மத்தியஸ்தராக இருந்து, எப்படி சமாதானம் செய்தாரென்பதுகூட தெரியாதபடி செய்யக்கூடிய உயர்ந்த பண்பாளர் சின்ன குத்தூசி. நமக்கெல்லாம் ஒரு ரோல் மாடலாக இருந்தவர் சின்னகுத்தூசி.
திருச்சி செல்வேந்திரனுக்குத்தான் ஐயா நெடுமாறன் சாதனையாளர் விருது வழங்கவிருக்கிறார். இந்த விருதை தருவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர். பெரியார் செய்த அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் பற்றி மூன்று தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார் திருச்சி செல்வேந்திரன். அந்த நூல் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதற்கு ஏற்புடையது என்பதோடு, மூன்று வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை இவருக்கு வழங்கவேண்டும்! அவ்வளவு சிறப்பான பணியை அவர் செய்துள்ளார்" என்று பாராட்டினார்.
பின்னர் திருச்சி செல்வேந்திரன் அவர்களின் திராவிட இயக்கப் பங்களிப்புகள் குறித்த விவரக்குறிப்புகளை அறங்காவலர் அருள்செல்வன் வாசித்தார். அதன்பின்னர், திருச்சி செல்வேந்திரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பழ.நெடுமாறன் வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக்கொண்டபின் ஏற்புரை நிகழ்த்திய திருச்சி செல்வேந்திரன், "தந்தை பெரியாரோடு 20 ஆண்டுகள் இணைந்து தொண்டாற்றியிருக்கிறேன். அவர் மறைவுக்கு பிறகும் 20 ஆண்டுகள் திராவிடர் கழகத்திலே இருந்திருக்கிறேன். பின்னர் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றிவருகிறேன். தொடர்ந்து இதேபோல் பணியாற்ற ஆயத்தமாக இருக்கிறேன். அதற்கு ஊன்றுகோலாக, உத்வேகமளிப்பதாக இந்த விருதை நினைக்கிறேன். நக்கீரன் கோபால் இந்த சின்னகுத்தூசி விழாவைத் தொடர்ந்து நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன். அன்னை இந்திரா காந்தியவர்கள், என்னுடைய மகன் என்று பாராட்டுகிற அளவுக்கு பெருமைக்குரிய தலைவர் நெடுமாறன் எனக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.
பின்பு தி.மு.க. செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவரான கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி வழங்கிய வாழ்த்துரையின்போது, "நான் எவ்வளவோ மேடைகளில் பேசியிருந்தாலும் இந்த மேடை எனக்கு நடுக்கத்தைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், மேடையில் வீற்றிருக்கும் அத்தனை பேரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிகரமாக இருப்பவர்கள். இவர்களையெல்லாம் பார்க்கமாட்டேனா என்ற பரிதவிப்பு எனக்கு எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட ஏக்கத்தை தீர்த்திருக்கின்ற ஒரு நாளாக இந்த நாளை நான் நினைக்கிறேன்.
எல்லாரையும் ஆதரிக்கின்ற ஒரு சடையப்ப வள்ளலாக நமக்கு வாய்த்திருக்கிறார் நமது நக்கீரன் கோபால் என்பதை மற்றவர்கள் பேசுவதிலிருந்து நம்மால் உணர முடிகிறது! தமிழ் நிலத்தையும் சுயமரியாதையையும் நிமிரவைக்கத் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தியவர்கள் ஐயா நெடுமாறன், திருநாவுக்கரசு, செல்வேந்திரன் போன்றவர்கள். இன்றைய சூழலில், தமிழ் மண்ணுக்கு சின்ன குத்தூசி ஐயா போன்ற எழுத்தாற்றலும் சிந்தனையும் கொண்ட ஒருவரல்ல, நூறு பேர் வேண்டும்!" எனக் கூறினார்.
அடுத்ததாக மேடையேறிய கோபண்ணா, பழ.நெடுமாறனின் தொடக்க கால அரசியல் மற்றும் சின்ன குத்தூசியின் நினைவுகள் குறித்தெல்லாம் நட்புரீதியாக சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக பழ.நெடுமாறன் பேசியபோது, "இன்றைக்கு நண்பர் செல்வேந்திரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதினை சின்ன குத்தூசியின் பெயரிலே அமைக்கப்பட்டிருக்கிற அறக்கட்டளை வழங்கியிருக்கிறது. எல்லா வகையிலும் இந்த விருதுக்கு பொருத்தமானவர் அவர் என்பதில் ஐயமில்லை. பெரியார் அவர்களின் வழியில் நம்முடைய தமிழகம் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து பட்டிதொட்டியெங்கும் பெரியாரின் கருத்துக்களை பரவச்செய்த பெருமைக்குரியவர் செல்வேந்திரன் என்று சொன்னால் மிகையாகாது. அந்த நாளில் எதையும் எதிர்பார்க்காமல் ஊர் ஊராகச்சென்று பெரியார் கருத்துக்களை பிரச்சாரம் செய்வது என்றால், முதலில் துணிவு வேண்டும். இரண்டாவது, பெரியார் கருத்துக்களைப்பற்றி தெளிவான பார்வை வேண்டும். ஏனென்று சொன்னால், பெரியார் பேசும்போதே சில கூட்டங்களில் அவருக்கு எதிராக சில செயல்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன. பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டுபோனால் என்னாகுமோவென்ற நிலையெல்லாம் இருந்த காலகட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் ஊர் ஊரச்சென்று அவருடைய கொள்கைகளைப் பரப்பிய பெருமைக்குரியவர் செல்வேந்திரன் என்று சொன்னால் மிகையாகாது.
நண்பர் செல்வேந்திரன் அன்றும் சரி, இன்றும் சரி, அவருடைய லட்சியத்தில் உறுதியோடு இருப்பவர் என்பதோடு மட்டுமல்ல, மற்றவர்களையும் அந்த மாதிரி இருக்கச்செய்துகொண்டே இருக்கிறார்.
. சின்ன குத்தூசி அவர்களானாலும் சரி, திராவிட இயக்கத்தின் ஒரு களஞ்சியமாகத் திகழ்கிற நண்பர் திருநாவுக்கரசு ஆனாலும் சரி, செல்வேந்திரன் ஆனாலும் சரி, கோபண்ணா அவர்களானாலும் சரி, எங்களுக்குள் பல விஷயங்களில் கருத்துவேறுபாடு உண்டு. ஆனால் நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒருவரையொருவர் மதிப்பதற்கு கற்றுக்கொண்டிருக்கிறோம். அதுதான் எங்கள் நட்பு!
இதேபோல் தமிழகத்தில் சென்ற தலைமுறை தலைவர்களான காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. போன்றோர்,
ஒருவரோடொருவர் கடுமையான எதிர்க்கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் தமிழ்நாடு, தமிழர், தமிழ் மொழிக்கான பிரச்சனை என்றால் ஒன்றிணைந்துவிடுவார்கள்! பெரியாரால் உருவாக்கப்பட்ட செல்வேந்திரனுக்கு இந்த அறக்கட்டளை கொடுத்த விருது, தமிழக மக்களே கொடுத்ததற்கு சமம்! இந்த விருதை என் கையால் வழங்கியதை நான் செய்த செயல்களில் சிறந்த செயலாகக் கருதுகிறேன்" எனக்கூறி நிறைவுசெய்தார். இறுதியாக சின்ன குத்தூசி வசித்துவந்த மேன்சனின் உரிமையாளரான ராயப்பன் நன்றியுரை நல்கினார்.
சின்னகுத்தூசி விழா, சிந்தனைப் பெருக்கோடு நிறைவடைந்தது.
சின்னகுத்தூசி நினைவு விருது பெற்ற மறுநாள், திருச்சி செல்வேந்திரன் தனது குடும்பத்தினரோடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
-ஆதவன்