பண்டிட் எம்.ஜி.பி

"மாந்தி பகவான்'' ஜோதிட உலகத்தில் மாந்தி பகவான் இராமாயண காலத்திற்கு முன்பு இல்லை இராமாயண காலத்திற்கு பின்புதான் உருவாக்கப்பட்டார்.

அதாவது இராவணனின் மகன் இந்திரஜித் எனும் மேகநாதன் பிறக்கும் போதுதான் மாந்தி என்ற கிரகம் உருவானது.

Advertisment

ஏனென்றால் இராவணன் ஈரேழு உலகங்களையும் அடக்கி ஆளும் வரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றதால் இராவணன் மகன் இந்திரஜித் (மேகநாதன்) பிறக்கும்போது 9 நவகிரகங்களையும் ஒரே லக்னத்தில் இருக்கும்படி இராவணன் நவகிரகங்களுக்கு ஆணையிடுவார். அப்படி ஒரே லக்னத்தில் இந்திரஜித் ஜாதகத்தில் நவகிரகங்களும் இருந்தால் அவனுக்கு மரணமே இல்லாமல் போய்விடும்.

இராவணன் இட்ட கட்டளையை நவக்கிரகங்களால் நிராகரிக்க முடியாது. இராவணன் என்ன சொன்னாலும் நவகிரங்களில் கேட்டே ஆக வேண்டும். இதனை உணர்ந்த நவகிரகங்களும் இந்திரஜித்திற்க்கு மோட்சத்தை தரக்கூடிய ஒரு திட்டத்தை தீட்டினர்.

அந்தத் திட்டம் என்னவென்றால் சனிபகவான் தன்னுடைய உடம்பில் இருக்கும் இறந்துபோன செல்களை அதாவது தன் உடம்பில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பிண்டம் போல ஒரு உருவத்தை உருவாக்கினார். அந்த உருவத்தின் மீது குருபகவான் பார்வை பட்டு உருவானவர்தான் மாந்தி பகவான் அதனால்தான் மாந்தியை சனிபகவானின் மகன் என்று சொல்கிறார்கள்.

Advertisment

மாந்தி பகவான் பிறந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம் ஆகும் அபிஜித் நட்சத்திரம் என்பது 28-ஆவது நட்சத்திரமாகும். அதாவது உத்திராடம் நட்சத்திரத்தின் 3 மற்றும் 4-ஆம் பாதமும் திருவோணம் நட்சத்திரத்தின் 1 மற்றும் 2-ஆம் பாதமும் கலந்த நட்சத்திரம் தான் இந்த அபிஜித் நட்சத்திரமாகும்.

அபிஜித் நட்சத்திரம் என்பது நம் உடலில் இருக்கும் ஏழு ஆத்ம சக்கரங்களில் சஹஸ்ராரம் சக்கரம் எனும் தலைப் பகுதியில் இருக்கும் உச்சிப்பகுதியை குறிக்கக்கூடிய சக்கரம் தான் இந்த அபிஜித் நட்சத்திரம் ஆகும். 

இந்த அபிஜித் நட்சத்திரம் எனும் சஹஸ்ராரம் சக்கரம் தான் மாந்தியை குறிக்கும் சக்கரமாகும்.

இந்தப் பிரபஞ்சத்தையும் நம்முடைய உடலையும் இணைக்கக் கூடிய சக்கரம் இந்த சஹஸ்ராரம் சக்கரம் ஆகும். இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை ஏற்படுத்துவதே இந்த அபிஜித் நட்சத்திரம் ஆகும். இந்த அபிஜித் நட்சத்திரம் மாந்தி பகவானுடைய நட்சத்திரமாகும்.

அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு 48 நாள் வரை உச்சந்தலை பகுதி மிக மென்மையாக இருக்கும் ஏனென்றால் 48 நாட்கள் கழித்துதான் சகஸ்ரார சக்கரம் எனும் துரிய சக்கரம் இந்த பிரபஞ்சத்திற்கும் நம்முடைய உடலுக்கும் தொடர்பு ஏற்படுத்தும்.

அந்தத் தொடர்பை ஏற்படுத்துபவர்தான் இந்த மாந்தி பகவானாவார்.

அதனால்தான் பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் இதுபோன்ற செயல்கள் செய்பவர்கள் உச்சந்தலை தலைமுடியை வைத்து செய்கிறார்கள். உச்சந்தலை முடியை கேட்கிறார்கள் என்றால் உச்சந்தலை முடிதான் சஹஸ்ராரம் சக்கரம்.

அதாவது இந்த பிரபஞ்சத்திற்கும் நம்முடைய உடலுக்கும் நம்முடைய ஆத்மாவுக்கும் இருக்கக்கூடிய தொடர்பை நீக்குவதற்கு தான் அவர்கள் உச்சந்தலை முடியை கேட்கிறார்கள்.

அதனால்தான் பில்லி சூனியம் ஏவல் மாந்திரீகம் செய்வினை இதுபோன்ற விஷயங்களைச் செய்பவர்கள் மாந்தி பகவானை வணங்குகிறார்கள் மாந்தி பகவானை வைத்துதான் இவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஏனென்றால் சஹஸ்ராரம் சக்கரம் அபிஜித் நட்சத்திரம் மாந்தி பகவானுக்கு சொந்தமாகும்.

மாந்திபகவான் அமானுஷம், ஆன்மிகம், அஷ்டமாசித்துக்கள், தெய்வ வழிபாடு, ஆன்மிக உபாசனைகள், கண்கட்டி வித்தை (க்ஷப்ஹஸ்ரீந் ம்ஹஞ்ண்ஸ்ரீ), இதற்கு வழி வகுக்கக் கூடிய ஒரு கிரகம் ஆகும்.

அதனால்தான் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யும்போதும் தெய்வ சிலைகளை நிறுவும் போதும் யாகங்கள் செய்யும்போதும் வேள்விகள் செய்யும்போதும், அபிஜித் முகூர்த்தத்தில் செய்கிறார்கள். அபிஜித் முகூர்த்தத்தில் செய்தால்தான் இந்த பிரபஞ்சத்திடம் இருந்து கோவிலில் இருக்கும் கருவறைக்கு பிரபஞ்ச சக்தி வந்து சேரும்.

அதனால்தான் எல்லா ஆன்மிக சார்ந்த விஷயங்களையும் அபிஜித் முகூர்த்தத்தில் செய்கிறார்கள்.

அபிஜித் நட்சத்திரம் மாந்திக்கு சொந்தமான நட்சத்திரமாகும்.

அதேபோன்று ஏவல், சூனியம், செய்வினை தாந்திரீகம் செய்பவர்களும் அபிஜித் முகூர்த்தத்தில்தான் இது போன்ற விஷயங்களைச் செய்வார்கள்.

இதற்கும் மாந்திதான் காரகத்துவம்.

அதாவது ஆன்மிகத்தில் நல்ல ஆன்மிகம் கெட்ட ஆன்மிகம் இந்த இரண்டையும் குறிக்கக்கூடிய கிரகம் மாந்திதான்.

அமானுஷ்யம், பில்லி, சூனியம் செய்வினை ஏவல் மாந்திரீகம், தாந்திரீகம் இவை அனைத்தும் ராகுவுக்கும் மாந்திக்கும் பொதுவான காரகத்துவமாக வரும்.

இப்போது மாந்தி பகவான் ஜாதகத்தில் எப்படி வேலை செய்வார் என்று பார்க்கலாம். 

அதாவது இயற்கையாகவோ, செயற்கையாகவோ திடீரென்று ஒருவரின் வாழ்க்கையில் நம்பவே முடியாத அசாதாரணமான எதிர்பார்க்கவே முடியாத ஒரு நல்ல விஷயமோ அல்லது கெட்ட விஷயமோ நடக்கிறது என்றால் அதனை சுட்டிக் காட்டக் கூடியவர் மாந்தி பகவான்தான்.

அதாவது நம் கண் முன்னாடியே நம்பமுடியாத ஒரு அமானுஷ்யமான செயல்கள் நடக்கிறது அல்லது ஒரு சித்தர்களின் தரிசனம் அல்லது ஞானிகளின் தரிசனம் மகான்களின் தரிசனம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அதற்கு மாந்தி பகவான் தான் காரணம்.

யாருக்காவது சித்தர்களின் தரிசனம், தெய்வங்களின் தரிசனம், மகான்களின் தரிசனம் கிடைத்து. அவர்களின் வாழ்க்கையே மாறி இருக்கிறது என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு மாந்தியின் தொடர்பு இருக்கும். 

மிக அடி மட்டத்தில் இருந்தவர்கள் சித்தர்கள் அல்லது மகான்களின் தரிசனம் மூலமாக மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டிருப்பார்கள்.

இப்படி சித்தர்கள் மகான்கள் ஞானிகள் தெய்வ சக்தியின் மூலம் தங்களுடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்பவர்களின் ஜாதகத்தில் கண்டிப்பாக லக்னத்தில் மாந்தி அல்லது லக்னாதிபதியுடன் மாந்தி சேர்க்கை இருக்கும் அல்லது மாந்தி பகவானின் பார்வையில் லக்னம் அல்லது லக்னாதிபதியும் மீதி இருக்கும்.

மாந்தி பகவானுக்கு 2, 7, 12 என்ற மூன்று பார்வை இருக்கிறது.

அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் மாந்தி அல்லது லக்னாதிபதியுடன் மாந்தி அல்லது 2, 7, 12-ஆம் பாவத்தில் மாந்தி இருந்தால் அவர்கள் நிச்சயமாக தங்களுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது அமானுஷ்யமான விஷயங்களை அல்லது நிகழ்வுகளை தொட்டே ஆக வேண்டும் அல்லது பார்த்தே ஆக வேண்டும்.

இது போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சித்தர்களின் தரிசனம், ஞானிகளின் தரிசனம், மகான்களின் தரிசனமும், தெய்வ உபாசனைகள் சார்ந்த தரிசனமும், அஷ்டமாசித்துக்கள், தாந்திரீகம், அமானுஷ்யம் இது சார்ந்த விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த அமானுஷ்யம் சார்ந்த விஷயங்கள்மூலம், இவர்களுக்கு நல்லது நடக்குமா அல்லது கெட்டது நடக்குமா என்பது இவர்கள் கையில்தான் இருக்கிறது.

நான் பார்த்த மிகப்பெரிய புகழ்பெற்ற ஜோதிடர்கள் ஆன்மிகவாதிகள் தாந்த்ரீகவாதிகள் ஜாதகத்தில் லக்னத்துடன் மாந்தி பகவான் தொடர்பு இருக்கிறது. ஆன்மிக துறையில், ஜோதிடத் துறையில், அமானுஷ்ய கலைகளில் ஒருவர் ஜெயிக்கவேண்டும் சாதிக்கவேண்டும் மிகப்பெரிய பேர் புகழ் உச்சம் அடைய வேண்டும் என்றால் அவர்கள் ஜாதகத்தில் இதுபோன்ற மாந்தியுடைய தொடர்பு லக்னத்திற்கு இருந்தே ஆக வேண்டும்.

மூன்றாவது கண்ணை இயக்கவேண்டும் குண்டலினி சக்தியை அடையவேண்டும். மிகப்பெரிய அமானுஷ்ய சக்தியை அடைய வேண்டும், சிவ பக்தராக இருக்கவேண்டும் என்ற ஆசை  எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்று லக்னத்துடன் மாந்தி தொடர்பு கண்டிப்பாக இருக்கும்.

நான் பார்த்த மிகப்பெரிய சிவபக்தர்கள் ஜாதகத்தில் லக்னத்துடன் மாந்தி தொடர்பு இருக்கின்றது. ஞானிகள், தவசிகள் சப்தரிஷிகள், குருமார்கள், சித்தர்கள் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆக வேண்டும் என்றா லும் லக்னத்துடன் மாந்தி பகவான் தொடர்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

மேலும் யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்துடன் மாந்தி பகவான் தொடர்பு இருக்கின்றதோ அவர்களுக்கு வாழ்க்கையில் ஜோதிடம், சித்தர்கள், ஞானிகள் ஜீவசமாதிகள், இதிகாசக் கதைகள் புராதன, கதைகள், ஆன்மிக நாட்டங்கள் கடவுள் நம்பிக்கை இதன் மீது விருப்பங்கள், ஆசைகள் நம்பிக்கைகள், ஈடுபாடுகள் மிக மிக அதிகமாக இருக்கும் மேலும் லக்னத்தில் மாந்தி இருப்பவர்கள் அல்லது லக்னத்தில் மாந்தி தொடர்புகொள்பவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்கள் சந்திக்கக்கூடிய அனுபவங்களை அல்லது நிகழ்வுகளை வெளி உலகத்தில் யாரிடமும் இவர்களால் சொல்லமுடியாது.

இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை நிர்மாணித்துக்கொண்டு அதற்குள்ளே இவர்கள் இருப்பார்கள்.

அதாவது லக்னத்தில் மாந்தி லக்னாதிபதியுடன் மாந்தி அல்லது மாந்தி பகவானின் பார்வை லக்னம் அல்லது லக்னாதிபதிமீது இருந்தால் இவர்களை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது.

 செல்: 89035 51587